PDA

View Full Version : சபாஷ் ! இப்படித்தான் வீரம் பொங்க வேண்டும் ! துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதியை சுட்ட பெண் !



கா.ரமேஷ்
29-09-2009, 07:12 AM
நன்றி : தினமலர் .

ஜம்மு: இளம் பெண்ணை கடத்த வந்த பயங்கரவாதிகளை அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டு ஒட. ஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்கள் வீரம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரசூரி மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு குடும்பத்தினருடன் இருந்த இளம் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஆனால் பெற்றோர்கள் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பெற்றோர்களை அடித்து தாக்கினர்.

தலைதெறிக்க ஓட்டம் : மகனுக்கு கோடாரியால் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து கொதித்துப்போன இளம்பெண் ரக்சனா கவுசார் ஒரு பயங்கரவாதி மீது பாய்ந்து அவரை சுவர் மீது தள்ளி விட்டாள். தொடர்ந்து அந்த பயங்கரவாதியின் ஏ.கே., 47 ரக துப்பாக்கியை பிடுங்கினார். உடனடியாக பயங்கரவாதிகளை நோக்கி சுட்டார். இதில் ஒரு பயங்கரவாதி இறந்தார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓடினர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



எப்போதும் ஆபத்து வரலாம் : ஒரு இளம் பெண் பயங்கராவதிகளிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி விரட்டியது குறித்து அப்பகுதி மக்கள் இந்த பெண்ணை பாராட்டினர். இருப்பினும் இந்த பயங்கரவாதிகளால் எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம். எனவே அருகில் உள்ள போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த பெண்ணின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.


கிராம பாதுகாப்பு கமிட்டியின் பயிற்சி : இந்தசம்பவம் குறித்து இளம்பெண் ரக்சனா கூறியதாவது; பயங்கராவதியிடம் பறித்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டேன். எனக்கு கிராம பாதுகாப்பு கமிட்டியினர் கொடுத்த துப்பாக்கி சுடும் பயிற்சி இந்நேரத்தில் உதவியது. இது தான் என்னையும், என் குடும்பத்தினரையும் காப்பாற்றியது என்றார்.

அமரன்
29-09-2009, 07:22 AM
அறிய இனிக்குது.

அய்யா
29-09-2009, 08:19 AM
அக்குடும்பத்துக்கு தீவிர பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.

தன் குடும்பத்துக்கு ஊறு ஏற்பட்டவேளையில் ஏற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு எனினும் இம்மனப்பாங்கு பரவவேண்டுமாயின் தொடர்புடைய குடும்பத்தின் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு தடுக்க முன்வரவேண்டும்.

நேசம்
29-09-2009, 01:48 PM
அபெண்னின் துணிச்சல் பாரட்டுகுரியது.இதனால் கோபமடைந்த தீவிரவாதிகள் மிண்டும் தாக்க வரலாம்.உரிய பாதுகாப்பு அளிப்பது காவல் துறையின் பொறுப்பாக இருக்கும்

அன்புரசிகன்
30-09-2009, 01:00 AM
பாராட்டுக்குரிய விடையம். பெண் தனது கடமையை சிறப்பாக காட்டியுள்ளார். காவல்துறையும் தனது கடமையை சிறப்பாக செய்யவேண்டும்.

தூயவன்
30-09-2009, 03:48 AM
சூப்பர்.. பாராட்ட வேண்டிய விடயம்.

மஞ்சுபாஷிணி
30-09-2009, 04:43 AM
படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்தகுடும்பத்துக்கு திரும்ப தீவிரவாதி கும்பலால் எந்த ஆபத்தும் வந்துட கூடாது பகவானே...

வியாசன்
30-09-2009, 05:34 AM
அந்த பெண்ணின் வீரம் பாராட்டத்தக்கது.
பாருங்கள் பயங்கரவாதம் என்ற சொல் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. மக்களை ஆயுதமுனையில் துன்புறுத்துவனும் பயங்கரவாதி. ஆயுதம் கொண்டு தன் இனத்துக்காக போராடுபவனும் பயங்கரவாதி. பயங்கரவாதம் என்ற சொல் ஆட்சியாளர்களால் தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது.
அமைதிப்படை என்று சென்ற இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் பொதுவைத்தியசாலையில் கடமையாற்றிய டாக்டரையும் தாதிகளையும் காரணமில்லாமல் சுட்டுக்கொன்றது. இதை எந்தவகையில் சேர்ப்பது.

கா.ரமேஷ்
30-09-2009, 05:49 AM
அந்த பெண்ணின் வீரம் பாராட்டத்தக்கது.
பாருங்கள் பயங்கரவாதம் என்ற சொல் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. மக்களை ஆயுதமுனையில் துன்புறுத்துவனும் பயங்கரவாதி. ஆயுதம் கொண்டு தன் இனத்துக்காக போராடுபவனும் பயங்கரவாதி. பயங்கரவாதம் என்ற சொல் ஆட்சியாளர்களால் தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது..

இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டு விடுதலை பெறும் வரை எந்த ஒரு போராட்டமும் சரியான பாதை என்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, விடுதலை பெற்றுவிட்டால் அந்த போராட்டங்களே வேதம்... ஒருநாள் இந்த இன போராட்டங்களும் வேதமாகும்...

அமைதிப்படை என்று சென்ற இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் பொதுவைத்தியசாலையில் கடமையாற்றிய டாக்டரையும் தாதிகளையும் காரணமில்லாமல் சுட்டுக்கொன்றது. இதை எந்தவகையில் சேர்ப்பது.

அங்கே நடந்தது நடப்பது எல்லாமே "அரச பயங்ங்கரவாதம்". அரசுகள் என்ற பெயரில் கூட்டு சேர்ந்து கொண்டு செய்த பயங்கரவாதங்கள்...

கா.ரமேஷ்
30-09-2009, 06:26 AM
கடைசி நேர செய்திகள்...
நன்றி: யூத்புல் விகடன்

தனி ஒருத்தியாக, பயங்கரவாதியை கொன்றதோடு, எஞ்சியவர்களை ஓட ஓட விரட்டிய ருக்சானாவின் வீரச் செயலை தனமண்டி கிராமம் மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீர் மாநிலமே வியந்து பாராட்டி வருகிறது.

எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதிகளால் ஆபத்து வரலாம் என்பதால் ருக்சானா குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ருக்சானா மற்றும் அவரது தம்பி அஜாஸ்சின் தீரச் செயலை வெகுவாகப் பாராட்டிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவ்விருவருக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளுக்கான பணியை வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

அமரன்
30-09-2009, 08:25 AM
திசைமாறாதிருக்கட்டும் தீரமங்கை.

எல்லைப்புற ஊடுருவலைத் தடுப்பதே அரசு செய்யவேண்டிய உகந்த செய்கை.

இந்த மாதிரி ஒவ்வொரு நங்கையும் போர்ச் சதங்கை கட்டினால் வீட்டுக்கொரு வீரரை நாடு நிறுத்த வேண்டி வரும்.

samuthraselvam
02-10-2009, 09:20 AM
பாராட்டப்படவேண்டிய பெண்மணி அவர்.... உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பினால் சீறாமல் இருக்குமா என்ன? ஆணென்ன பெண்ணென்ன எல்லோரிடமும் அந்த சிங்கம் இருக்கும்.... சமயத்தில் எழும்பி கடித்து குதறிவிடும்... அவருக்கு எந்த ஆபத்தும் வராது....

மன்மதன்
02-10-2009, 10:31 AM
சபாஷ்..........!!