PDA

View Full Version : குடும்பம்!!!

aren
28-09-2009, 07:26 AM
குடும்பம்!!!

வீடு களேபரபட்டது. காமினி பள்ளிக்குச் செல்ல ஆயத்தம் என்ற பெயரில் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள். ஸ்கூல் யூனிபாஃர்ம் அயர்ன் பண்ணவில்லை என்று ஒரே அழுகை. அம்மா ருக்மணி, கொடு நான் அயர்ன் செய்துகொடுக்கிறேன் என்று வாங்கி செய்துகொடுக்கிறாள்.

பையன் நரேஷோ, பள்ளி இருப்பது பற்றியே கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தான். அவனை கிளப்பி குளியல் அறைக்குள் அனுப்பிவிட்டு ருக்மணி சமையறைக்குள் வந்து அவர்களுக்கு காலை டிபனும், மதிய உணவிற்கு டிபனும் செய்து அதை பாக் செய்துவிட்டு, இவர் என்ன செய்கிறார் என்று கணவரைப் பார்க்கவந்தாள் படுக்கையறைக்கு.

கணவர் எழுந்து பாத்ரூமில் ஷேவ் செய்துகொண்டிருந்தார். உங்களுக்கு பிரேக்ஃபாஃஸ்ட் என்ன செய்யட்டும் என்றாள். கணவர் ரகு, எது இருக்கிறதோ அதையே கொடு என்று சொல்லி தன் காரியத்தில் கண்ணாயிருந்தார்.

சரி, இவர் என்றைக்கு முடிவு எடுத்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே ருக்மணி சமையறை நோக்கி நடந்தாள்.

கடந்த ஒரு வார காலமாகவே அவள் தன் கணவரை கவனித்து வருகிறார். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. எது கேட்டாலும் ஒரு பிடி கொடுக்காமல் பதில் சொல்கிறார். என்னவாயிற்று இவருக்கு. ஆபிஸில் ஏதாவது பிரச்சனையா, ஏன் மனுஷன் இப்படியிருக்கிறார் என்று தனக்குள்ளேயே நினைத்துகொண்டாளேயொழிய தன் கணவரிடம் இதுபற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ரகுவும் குளித்து ரெடியாகி கொடுத்த காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு உணவை ஒரு டிபன் பாக்ஸில் எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானான். அப்பொழுதும் ருக்மணி ரகுவின் முகத்தைப் பார்த்தாள், ஏதோ பிரச்சனை என்று நன்றாகத் தெரிந்தது. அப்பொழுது என்னவென்று கேட்கவில்லை.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. பிள்ளைகள் இந்த வருடம் லீவிற்கு மாமா வீட்டிற்குப் போகலாமா என்று கேட்டபோதும் ரகு ஒன்னும் சரியாக சொல்லவில்லை, ஏதோ சொல்லி மழுப்பினதை ருக்மணி கவனித்தாள். அப்பொழுதும் அவள் வாய் திறக்கவில்லை.

சந்தேகம் மேலும் வலுத்தது. என்ன செய்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்தாள். கல்யாணமான இந்த 12 வருடங்களில் தன் கணவன் இப்படி இருந்து பார்த்ததில்லை.

வார இறுதி முடிந்து திங்கட்கிழமை எப்பொழுதும் போல ரகு வேலைக்கு கிளம்பினான். வாசலுக்கு வந்து கொஞ்சம் நடந்து பஸ் ஸ்டாண்டிற்கு வந்தான், வந்து 12பி பஸ்ஸுல் ஏறினான், கண்டக்டரிடம் பனகல்பார்க் போக டிக்கெட் வாங்கினான்.

பனகல்பார்க்கில் இறங்கி நேராக அங்கே இருக்கும் பனகல்பார்க்கினுள் சென்றான், ஒரு சரியான இடத்தைப் பார்த்து அங்கே உட்கார்ந்துகொண்டன். உட்கார்ந்து தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு வேலை போன விஷயம் அவன் குடும்பத்தாருக்குத் தெரியாது. ஆபிஸில் இரண்டுமாத சம்பளம் கொடுத்தார்கள். அதை வீட்டில் கொடுத்து இந்த இரண்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு வேலை தேடிக்கொண்டு பின்னர் வீட்டில் சொல்லலாம் என்றிருந்தான், ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தால் மிகவும் மனதிற்கு கஷ்டப்படுவார்கள் என்ற காரணத்தால்.

ஆனால் அவனுடைய விதி இந்த இரண்டு மாதத்தில் அவனால் வேறு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளமுடியவில்லை, வீட்டிலும் உண்மையைச் சொல்லமுடியவில்லை. இருதலைக்கொள்ளி எரும்பாக மிகவும் கஷ்டப்பட்டான்.

ஒரு சில நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான், அவர்களும் எப்படியும் வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை இப்படியே தினமும் வந்துவிட்டுப் போகலாம்.

புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும்பொழுது பக்கத்தில் ஏதோ நிழலாடுவது போலிருந்தது. பார்த்தால் அங்கே ருக்குவும், காமினி, நரேஷ் ஆகியோரும் இருந்தார்கள். ரகுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ருக்மணி ரகுவின் அருகில் அமர்ந்து, கொஞ்ச நாட்களாகவே கவனித்துவருகிறேன், நீங்கள் பழைய நிலையில் இல்லை என்று தெரிந்தது, ஆனால் எப்படி பேசுவது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

இதைக் கேட்டவுடன் ரகுவின் கண்களிலிருந்து தண்ணீர் அருவியாகக் கொட்டியது, வேலை போய்விட்டது என்று எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியாமல் இந்த இரண்டு மாதங்களாக முழித்துக்கொண்டிருக்கிறேன், குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றான்.

ருக்குவும் பிள்ளைகளும் ரகுவின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்கள். ருக்கு ரகுவிடம் நாங்கள் இருக்கிறோம், இந்த வேலை போனால் இன்னொரு வேலை கிடைக்காமலா போய்விடும், கவலைப்படவேண்டாம், வீட்டிற்கு வாங்க என்று ரகுவின் கையைப்பிடித்தாள்.

பிள்ளைகள் இருவரும், அப்பா இந்த வருஷ லீவிற்கு எங்கேயும் போகவேண்டாம் வீட்டிலேயே இருக்கலாம் என்றார்கள்.

ரகு ருக்கு மற்றும் பிள்ளைகளைப் பார்த்தான், அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது.

கா.ரமேஷ்
29-09-2009, 06:04 AM
மனைவி அமைவதெல்லாம் என இதைவைத்துதான் சொன்னார்களோ..? குறிப்பறிந்து குடும்பத்தை நடத்தும் தலைவியும்,குடும்பத்திற்காக கவலைப்படும் தலைவனும் பெற்றோரை புரிந்து கொள்ளும் பிள்ளைகளும் அமைந்தால் கண்டிப்பாய் அது இன்பமயமான குடும்பமே....
வாழ்த்துக்கள் தோழரெ...

அமரன்
29-09-2009, 07:58 AM
நல்லதொரு குடுப்பம் பல்கலைக் கழகம் என்று சும்மாவா சொன்னான் கவிஞன்.

சரி, இவர் என்றைக்கு முடிவு எடுத்திருக்கிறார் என்று காமினி வாயால் நீங்கள் கதைக்கிறீர்கள். உங்களுக்கே உரித்தான் அழகான நையாண்டி துள்ளுது பாருங்களேன்.

இடைவெளி இல்லாமல் தாங்கண்ணா.

samuthraselvam
29-09-2009, 10:12 AM
அரேன் அண்ணா நீங்கள் கதையெல்லாம் எழுதுவீங்களா? குடும்பம் என்பதே ஒருவரை ஒருவர் தாங்குவது தானே... அதை அழகாகவும் அனைவரும் உணரும்படியும் சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள் அண்ணா...

aren
29-09-2009, 05:08 PM
மனைவி அமைவதெல்லாம் என இதைவைத்துதான் சொன்னார்களோ..? குறிப்பறிந்து குடும்பத்தை நடத்தும் தலைவியும்,குடும்பத்திற்காக கவலைப்படும் தலைவனும் பெற்றோரை புரிந்து கொள்ளும் பிள்ளைகளும் அமைந்தால் கண்டிப்பாய் அது இன்பமயமான குடும்பமே....
வாழ்த்துக்கள் தோழரெ...

நன்றி ரமேஷ் அவர்களே.

இதுதான் நான் எழுதிய முதல் சிறுகதை. இதைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதியதற்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
29-09-2009, 05:09 PM
நல்லதொரு குடுப்பம் பல்கலைக் கழகம் என்று சும்மாவா சொன்னான் கவிஞன்.

சரி, இவர் என்றைக்கு முடிவு எடுத்திருக்கிறார் என்று காமினி வாயால் நீங்கள் கதைக்கிறீர்கள். உங்களுக்கே உரித்தான் அழகான நையாண்டி துள்ளுது பாருங்களேன்.

இடைவெளி இல்லாமல் தாங்கண்ணா.

நன்றி அமரன் அவர்களே.

காமினிக்கு பதில் ருக்மணி என்றிருக்கவேண்டும்.

பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் இன்னும் எழுதுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
29-09-2009, 05:11 PM
அரேன் அண்ணா நீங்கள் கதையெல்லாம் எழுதுவீங்களா? குடும்பம் என்பதே ஒருவரை ஒருவர் தாங்குவது தானே... அதை அழகாகவும் அனைவரும் உணரும்படியும் சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள் அண்ணா...

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்பீர்கள், இப்பொழுது நிஜத்தில் பார்க்கிறீர்கள். எல்லோரும் எழுதுகிறார்களே என்று நானும் எழுதினேன். பாவம் நீங்களெல்லாம், இதை படிக்கவேண்டும் என்பது உங்கள் விதி போலும்.

நன்றி வணக்கம்
ஆரென்

மஞ்சுபாஷிணி
29-09-2009, 05:54 PM
அருமையான கதை ஆரென்.. நல்ல முயற்சி.... அழகான கதை...

வேலை போன விஷயத்தை சொல்லமுடியாமல் தவிக்கும் கணவர்...

கணவரின் சோகம் முகத்தில் தேங்கி இருப்பதை கண்டுபிடித்து அதற்கு தீர்வு காணமுயலும் மனைவி....

அப்பாவின் துன்பம் கண்டு தோள் கொடுக்கும் பிள்ளை என அருமையாக முடிச்சிருக்கீங்க ஆரென்.

இன்னும் நிறைய எழுதுங்க.. யார் சொன்னது இது தான் உங்க முதல் கதைன்னு?

கதையை படிச்சப்ப எனக்கு அப்டி தெரியலையேப்பா... வாழ்த்துக்கள் ஆரென்...

மஞ்சுபாஷிணி
29-09-2009, 05:57 PM
புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்பீர்கள், இப்பொழுது நிஜத்தில் பார்க்கிறீர்கள். எல்லோரும் எழுதுகிறார்களே என்று நானும் எழுதினேன். பாவம் நீங்களெல்லாம், இதை படிக்கவேண்டும் என்பது உங்கள் விதி போலும்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆரென் உங்க படைப்புகளை தாழ்த்தி சொல்லாதீங்கப்பா.. உங்க படைப்புகள் என்பது உங்க சிந்தனை, உங்க எண்ணங்கள். உங்க குழந்தை போல. அதனால் நீங்க ரசிச்சு எழுதின கதையை தானே எங்களுக்கும் கொடுத்தீங்க.... நல்லா இருந்திச்சு கதை.. இன்னமும் தொடர்ந்து தாங்க சரியா?

சிவா.ஜி
29-09-2009, 06:07 PM
ஆஹா ஆரெனின் முதல் கதையா?....இப்படித்தான் நான் கவிதையே எழுதியதில்லை என்று சொல்லிவிட்டு கவிதைகளில் அசத்தினீர்கள். இப்போது கதைக் களத்துக்கும் வந்து அசத்துங்கள்.

சிறிய கருதான்....ஆனால் அழகான அர்த்தம் பொதிந்த கதை. ஒருவருக்கொருவர் ஆறுதல், ஒவ்வொருவரின் புரிந்துணர்வு இவைதானே குடும்பத்தை சந்தோஷமாக வழிநடத்தும் காரணிகள். அதை அழகாய் சொல்லிவிட்டீர்கள் ஆரென்.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

aren
30-09-2009, 12:27 AM
அருமையான கதை ஆரென்.. நல்ல முயற்சி.... அழகான கதை...

கதையை படிச்சப்ப எனக்கு அப்டி தெரியலையேப்பா... வாழ்த்துக்கள் ஆரென்...

என் கதையைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதியதற்கு நன்றி மஞ்சுபாஷிணி அவர்களே.

எனக்கு சிறுகதை எழுதி பழக்கமில்லை, ஆகையால் அதை எப்படி எழுதவேண்டும் எவ்வாறு முடிக்கவேண்டும் என்று தெரியாது. பழகப் பழக சரியாகும் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-09-2009, 12:29 AM
ஆஹா ஆரெனின் முதல் கதையா?....இப்படித்தான் நான் கவிதையே எழுதியதில்லை என்று சொல்லிவிட்டு கவிதைகளில் அசத்தினீர்கள். இப்போது கதைக் களத்துக்கும் வந்து அசத்துங்கள்.

சிறிய கருதான்....ஆனால் அழகான அர்த்தம் பொதிந்த கதை. ஒருவருக்கொருவர் ஆறுதல், ஒவ்வொருவரின் புரிந்துணர்வு இவைதானே குடும்பத்தை சந்தோஷமாக வழிநடத்தும் காரணிகள். அதை அழகாய் சொல்லிவிட்டீர்கள் ஆரென்.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

நன்றி சிவாஜி அவர்களே. நான் கவிதைப் பகுதியில் பதித்ததால் அதையெல்லாம் கவிதை என்கிறீர்களா?

இந்தக் கரு என் மனதில் பல வருடங்களாக இருந்தது அதற்கு நேற்றுதான் எழுத்துவடிவம் கொடுக்கமுடிந்தது. உங்களுக்கு பிடித்திருப்பதுகண்டு சந்தோஷம்.

தொடர்ந்து எழுதுகிறேன், ஆனால் படிக்கும் உங்களுக்குத்தான் கஷ்டம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அன்புரசிகன்
30-09-2009, 01:12 AM
அண்மைக்காலங்களில் கண்ட நிஜங்கள். அனுபவங்களும் அதிகம். வீட்டிற்கு வந்தாலோ மரணவீடு போன்ற நிலமை. பறிகொடுத்தவர்கள் சிலர் கொடுக்கப்போகிறவர்கள் சிலர் என்று அமீரகத்தில் சில காலம் பைத்தியம் போல இருந்தோம். சில நாட்க்களில் அதுவே பழகிவிட்டது.

இதுவே திருமணமானவர்களின் நிலையை படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள் அண்ணா...

வாழ்த்துக்கள்.

கீதம்
30-09-2009, 04:34 AM
நல்ல கதைக்கு பாராட்டு நண்பரே. இப்படிப்பட்ட அன்பான, புரிந்துகொள்ளக்கூடிய மனைவியிடம், எதையும் மறைக்காமல் முன்பே கணவர் கூறியிருந்தால் இரண்டு மாத மன உளைச்சல் மிச்சமாகியிருக்கும்.

பா.ராஜேஷ்
30-09-2009, 11:56 AM
முதல் கதையையே கலக்கல் கதையாய்! பாராட்டுக்கள்... மேலும் பல சிறந்த கதைகளை தர வாழ்த்துகள்!!!

aren
30-09-2009, 02:49 PM
ஆரென் உங்க படைப்புகளை தாழ்த்தி சொல்லாதீங்கப்பா.. உங்க படைப்புகள் என்பது உங்க சிந்தனை, உங்க எண்ணங்கள். உங்க குழந்தை போல. அதனால் நீங்க ரசிச்சு எழுதின கதையை தானே எங்களுக்கும் கொடுத்தீங்க.... நல்லா இருந்திச்சு கதை.. இன்னமும் தொடர்ந்து தாங்க சரியா?

நன்றி மஞ்சுபாஷிணி.

என்னுடைய குழந்தையானதால் அதை பெரிதுபடுத்திப் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அகங்காரம்தான் மேலோக்கி நிற்குமே ஒழிய குறைகள் எதுவும் தெரியாது. நிறை குறை அறிந்து பேசவேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவன் நான். அதனால் அப்படி எழுதினேன்.

இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-09-2009, 02:52 PM
அண்மைக்காலங்களில் கண்ட நிஜங்கள். அனுபவங்களும் அதிகம். வீட்டிற்கு வந்தாலோ மரணவீடு போன்ற நிலமை. பறிகொடுத்தவர்கள் சிலர் கொடுக்கப்போகிறவர்கள் சிலர் என்று அமீரகத்தில் சில காலம் பைத்தியம் போல இருந்தோம். சில நாட்க்களில் அதுவே பழகிவிட்டது.

இதுவே திருமணமானவர்களின் நிலையை படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள் அண்ணா...

வாழ்த்துக்கள்.

நன்றி அன்புரசிகன்.

இந்த பிரச்சனை துபாயில்மட்டுமில்லை, அனைத்து இடங்களிலும் இதே நிலைதான். எனக்குத் தெரிந்து பலர் அவர்களுக்கு வேலை போனவிஷயத்தை இன்னும் வெளியே சொல்லாமல் வேறு வேலை கிடைக்குமா என்று இன்னும் முயற்சிசெய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்வது. இதுதான் இன்றைய வாழ்க்கை என்பதாகிவிட்டது பலருக்கு.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-09-2009, 02:54 PM
நல்ல கதைக்கு பாராட்டு நண்பரே. இப்படிப்பட்ட அன்பான, புரிந்துகொள்ளக்கூடிய மனைவியிடம், எதையும் மறைக்காமல் முன்பே கணவர் கூறியிருந்தால் இரண்டு மாத மன உளைச்சல் மிச்சமாகியிருக்கும்.

நன்றி கீதம் அவர்களே.

சில சமயங்களில் இந்த மாதிரி விஷயங்கள் கதைகளில் மட்டும்தான் நடக்குமா என்று நினைக்கும் அளவிற்கு நிஜவாழ்க்கையில் பல விஷயங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
30-09-2009, 02:55 PM
முதல் கதையையே கலக்கல் கதையாய்! பாராட்டுக்கள்... மேலும் பல சிறந்த கதைகளை தர வாழ்த்துகள்!!!

நன்றி ராஜேஷ் அவர்களே. நிச்சயம் இன்னும் எழுதுகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
30-09-2009, 07:41 PM
குறிப்பறிதல், எம்பதி, ஒருவருக்கொருவர் புரிதல், விட்டுக்கொடுத்தல்..

நல்ல குடும்பத்துக்கான அஸ்திவாரம், சுவர், கூரை, கதவு.... இவை.

அனைத்தும் அமைந்த நல்ல இல்லம் சொல்லும் கதை..

எளிமை, இனிமை, அழகு ததும்பிய கதை..

அன்பின் ஆரெனின் முதல் மன்றச் சிறுகதை!

வாழ்த்தும், பாராட்டும், ஊக்கமும்!

அறிஞர்
30-09-2009, 09:03 PM
சிறிய கதையில் ஆழமான உறவுகள்.....

அருமை ஆரென்...

aren
02-10-2009, 03:58 AM
குறிப்பறிதல், எம்பதி, ஒருவருக்கொருவர் புரிதல், விட்டுக்கொடுத்தல்..

நல்ல குடும்பத்துக்கான அஸ்திவாரம், சுவர், கூரை, கதவு.... இவை.

அனைத்தும் அமைந்த நல்ல இல்லம் சொல்லும் கதை..

எளிமை, இனிமை, அழகு ததும்பிய கதை..

அன்பின் ஆரெனின் முதல் மன்றச் சிறுகதை!

வாழ்த்தும், பாராட்டும், ஊக்கமும்!

நன்றி இளசு அவர்களே.

எல்லோரும் அழகாக எழுதுகிறார்களே நாமும் ஏதாவது எழுதலாமே என்று நினைத்ததால் வந்த விணை இது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
02-10-2009, 04:00 AM
சிறிய கதையில் ஆழமான உறவுகள்.....

அருமை ஆரென்...

நன்றி அறிஞர் அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்

KAMAKSHE
23-10-2009, 10:00 AM
மனதைத்தொட்டது உங்கள் கதை. வாழ்த்துக்கள். திரும்பி பார்த்தபோது குழைந்தைகள் இருந்தார்களே அப்போது, பிறகு கடைசி வரி... இவைதான் மனதை தொட்ட தருணங்கள்.

aren
25-10-2009, 04:51 AM
மனதைத்தொட்டது உங்கள் கதை. வாழ்த்துக்கள். திரும்பி பார்த்தபோது குழைந்தைகள் இருந்தார்களே அப்போது, பிறகு கடைசி வரி... இவைதான் மனதை தொட்ட தருணங்கள்.

என் கதையைப் படித்துவிட்டு விமரசனம் எழுதியதற்கு நன்றி காமாட்சி அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்