PDA

View Full Version : மனம் திறந்து உங்களோடு - 2அறிஞர்
24-09-2009, 02:33 PM
மனம் திறந்து உங்களோடு - 2
(பதிவுகள் பற்றி)

இணையதளங்கள் இன்று பெருகிவிட்டது. அதில் பல எழுத்தாளர்கள் உருவெடுத்துள்ளனர் என்பது தமிழ் எழுத்து உலகிற்கு மகிழ்ச்சியே... எழுத்தாளர் அனைவருக்கும், எங்கும் பாராட்டு கிடைக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நிலையை யோசித்து பார்ப்பதில்லை. அது பற்றி, சில வரிகள்....

1. நம் பதிவுகளுக்கு கருத்துக்களை எதிர்பார்க்கும் நாம், மற்றவர்களின் பதிவுக்கும் கருத்துக் கொடுக்கிறோமா.. என யோசிக்கவேண்டும். நாம் மற்றவரை பாராட்டும்பொழுது.. நம்மையும் அவர்கள் பாராட்ட தயங்குவதில்லை. ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி.. அனைவரும் இணைய உலகில் வளரலாமே...

2. ஆரம்ப கால எழுத்தாளர் பலர் மன்றம் வந்தவுடன், மன்றத்தில் சிலர் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அதை அவர்கள் சரியாக எடுத்துக்கொண்டு... தவறுகளை திருத்தி வெற்றிக் கண்டுள்ளனர். பொதுவாக பல எழுத்தாளர்களுக்கு குறை கூறினால் பிடிக்காது. குறையை நிறையாக்க முயன்றால் வெற்றிதான். எதையும் பாஸிடிவாக சிந்திப்போம்... வெற்றி பெறுவோம்.

3. இணைய தளங்கள் பல உள்ளது. பலர் பல இடங்களில் எழுதுகிறார்கள். மற்றொரு தளத்தில் ஏற்படும் மனச்சங்கடங்கள்.. இங்கும் சில நேரம் பிரதிபலிக்கின்றது.

4. சிலர், மன்ற நண்பர்களைப் பற்றி வெளியே தரக்குறைவாக பேச முற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு எழுத்தில் வீரியத்தை காட்டுகிறது (தனிப்பட்ட முறையில் அதை தவறு என்பேன்). முடிந்தவரை ஒருத்தரை ஒருத்தர்... மேன்மையான சொல்ல முயற்சிப்போம்.

5. மன்றம் நல்ல எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. சில சிறப்பாக எழுதி அனைவரையும் கவருகிறார்கள். அவர்கள் வளர்ச்சியில் மன்றம் பெருமைக் கொள்கிறது. சிலர் அதை தவறாக எடுத்துக்கொண்டு இவர்கள் மன்றத்தை ஆக்கிரமிக்கிறார்கள் எனக் குறை கூறுகின்றனர். ஒவ்வொருத்தரும் எழுதி.. புகழ் பெற வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம். தாங்களும் எழுதுங்கள்.. புகழ் பெறுங்கள்.. மன்றம் என்றும் துணையாக இருக்கும்.

மன்றத்தில் இணைந்து, ஒவ்வொருவரின் வளர்ச்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட்டு அனைவரும் உயருவோம்...

aren
24-09-2009, 02:41 PM
நல்ல செய்தி அறிஞர் அவர்களே.

நாம் நிச்சயம் உங்கள் அறிவுரைபடி நடந்துகொள்கிறோம்.

மதி
24-09-2009, 02:44 PM
சரியான விஷயங்கள். அனைவரும் இதன்படி நடப்போம்..

சிவா.ஜி
24-09-2009, 04:27 PM
கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் களைந்து, ஒன்றுபட்டிருப்போம். எழுத்தில் மென்மையைக் கடைபிடிப்போம்.

நன்றி அறிஞர்.

கா.ரமேஷ்
25-09-2009, 06:47 AM
உண்மை... படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.. அதே நேரத்தில் கருத்துகளை எடுத்து கூறும்போதும் பண்புடனே நடந்து கொள்ள வேண்டும்,தவறுகளை மனம் நோகாதபடி சொல்லவேண்டும்.இவையெல்லாம் மன்றத்திற்க்கு மட்டுமல்லாமல் தமிழுக்கு நாம் சேர்க்கும் பெருமை....

நன்றி அறிஞர் அவர்களே எல்லோரும் கண்டிப்பாக கடைபிடிக்க* வேண்டிய கருத்துக்கள்..

அன்புரசிகன்
25-09-2009, 08:28 AM
நீங்கள் சொன்ன அனைத்தும் நம் மன்ற விதிகளில் ஏற்கனவே உள்ளவையே... நம் மன்றவிதியினை முறைப்படி கடைப்பிடித்தால் நிச்சயம் நம் மன்றமும் நாமும் மேன்மைபெறலாம்...

நம் மன்றம் மேன்மை பெற என்னவேண்டும் ஆனாலும் செய்யலாம்...

நேசம்
25-09-2009, 11:48 AM
மன்ற விதிகளாகா அறிஞர் அவர்கள் சோன்னதை கடைப்பிடித்தால் மன்ற உறவுகளின் உறவு மேன்மை சிறப்படையும்

மஞ்சுபாஷிணி
25-09-2009, 11:57 AM
கண்டிப்பாக அறிஞர் அவர்களே... குறைகளை களைந்து நிறைகளை கண்டு வாழ்த்தி ஒற்றுமையோடு வலம் வருவோம் மன்றத்தை... நன்றி அறிஞர் அவர்களே...

வியாசன்
25-09-2009, 07:42 PM
கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம். உங்கள் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்கின்றேன்.

வானதிதேவி
26-09-2009, 02:31 PM
ம்ம்ம் நல்ல கருத்து.வாக்கினில் இனிமை வேண்டும் என்ற பாரதியின் வரிகள் உணர்த்தப்பட்ட விதம் நிறைவைத் தருகிறது.நன்றி அறிஞர்க்கு.

ஆர்.ஈஸ்வரன்
29-01-2010, 09:36 AM
நல்ல கருத்து. இது அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.

பா.சங்கீதா
07-05-2010, 06:17 AM
கண்டிப்பாக கடைபிடிப்போம்.

ramanan4u
17-05-2010, 04:08 AM
நன்றி
மனித சமுதாயத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய சிலவற்றை நாம் மன்றத்தில் இருந்து தொடங்குவோம்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று