PDA

View Full Version : தொலைந்து போன காதல்கீதம்
24-09-2009, 11:48 AM
தொலைபேசி வாழ்க்கையிலே
தொலைந்து போனதோ
நம் அந்தரங்கம்?
நம் மெளனங்களை
மொழிபெயர்க்கத் தெரியாமல்
மெளனமாகவே அதுவும்!
விடிய விடியப் பேசிய நாம்
இன்று வினாடிகளில்
பேசி முடிக்கிறோம்.
நமக்குள் பேச ஒன்றுமில்லையா என்ன?

எதிரெதிரே அமர்ந்துகொண்டு
எதையெதையோ பேசி,
எதற்காகவோ சிரித்துக்கொண்டு
எப்படியெல்லாம் இருந்தோம்?
எப்போது விழுந்தது
இந்த இடைவெளி?
நலம் விசாரிப்புகளோடு
நமது சம்பாஷனைகள்
நித்தமும் முடிவுபெற,
வேறென்ன செய்தி என்கிறாய்;
ஒன்றுமில்லை என்கிறேன் நான்!

தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட,
நாளையேனும்
நம் காதலை உயிர்ப்பிக்க வெண்டுமென
உறுதி பூண்கிறேன் நான்!

கா.ரமேஷ்
24-09-2009, 01:09 PM
ஆனால் இப்பொழுது உள்ள வாழ்க்கைமுறையில் தொடர்புகளுக்கு அலைபேசியே சிறந்த ஊடகமாக உள்ளது அதிலும் குறிப்பாக காதலர்களுக்கு(பல்கிப்போன தொலைத்தொடர்பு நிறுவணங்களே சாட்சி)... என்னதான் இருந்தாலும் விழிபார்த்து சந்திக்கும் சந்திப்புக்கு ஈடு இணை இருக்காது என சொல்கிறீர்கள்..

வாழ்த்துக்கள் உயிர்ப்பிக்கப்படும் காதலுக்கும்...
அருமையான கவிதைக்கும்..

கீதம்
30-09-2009, 04:22 AM
விமர்சனத்திற்கு மிக்க நன்றி, கா. ரமேஷ் அவர்களே. நீங்கள் சொல்வது போல் அலைபேசியால் காதல் வளர்வது உண்மைதான். ஆனால் அக்காதல் திருமணம் என்கிற கட்டுக்குள் வந்தபிறகு, பொறுப்புகளும், பிரச்சனைகளும் பெருகி, காதலைத் திணறச்செய்துவிடுகின்றன. இந்நிலையில் பிரிவும் (பொருள் தேடும் நிமித்தம்)உண்டாயின் பெரும்பாலும் தொலைபேசி உரையாடல்கள் இப்படிதான் முடிந்துவிடுகின்றன, அவ்வப்பொழுது காதலைப் பிழைக்கவைக்க உயிர்த்தண்ணீர் ஊற்றிக்கொண்டிராதவரை.

மஞ்சுபாஷிணி
30-09-2009, 04:27 AM
அழகான கவிதை சொல்லும் கதைகள் அதிகம்..

எல்லார் குடும்பத்திலுமே இப்படி தான் போல...

அருமையான விளக்கமான பின்னூட்டமும் அருமை கீதம்... வாழ்த்துக்கள்... தொடருங்கள் கவிதை..

சரண்யா
30-09-2009, 06:28 AM
தொலைந்து போன காதல்
காதல் தொலைந்து போகவில்லை...
நேரமின்றி வார்த்தைகள் தொலைந்திருக்கலாம்....

கவிதை நன்றாக இருக்கிறது...
சொந்த அனுபவமோ....geetham அவர்களே

அமரன்
30-09-2009, 09:21 AM
அவன் அழைப்பு அறிந்து
விழிப்புத் தவம் கலைக்கிறது
அவள் காதல் மனசு.

இருவரும்
சொற்களின் வாயால்..
மாற்றிக் கொள்கிறார்கள்
இருதயத் துடிப்புகளை

சடுதியில்
சொற்கள் மோதிக்கொள்கின்றன...

அற்றைப் பொழுதில்
இருவர் கண்களின் மொழிபெயர்ப்பில்
மூண்டு நூர்ந்த சொற்களின் சண்டை
இற்றைப் பொழுதிலும்..

அன்றை விட இன்று
அதிகம் கோரமான யுத்தம்..

பூப் பூக்கும் டெசிபலில்
சந்தம் கொட்டுகின்றன
யுத்த சொற்கள்..

மனிதர் உணரவியலா
அந்த அநாகத நாதவெளியில்
காதல் கரைந்து போகிறது.
அவர்கள் தொலைந்து போகிறார்கள்....

பா.ராஜேஷ்
30-09-2009, 12:30 PM
நவீன யுகத்தின்
நாகரீக காதல் சில
நான்கு நிமிடத்திலும் - பல
யுகங்களும் பயனிக்கின்றன!!

கீதம்
01-10-2009, 11:40 AM
பாராட்டியும் விமர்சித்தும் பின்னூட்டமிட்ட நண்பர்கள் மஞ்சுபாஷிணி, சரண்யா, அமரன் மற்றும் பா.ராஜேஷ் அனைவருக்கும் என் நன்றிகள். அமரன் அவர்களின் அதி அற்புதக் கவிதைக்கு மற்றுமொரு நன்றி. அன்புடன் கீதம்.

aren
08-10-2009, 03:41 PM
காதலில் உண்மை குறைந்துவிட்டதோ என்று சில சமயங்களில் எனக்கும் தோன்றுவது உண்டு.

உங்கள் காதலில் மீண்டும் உயிரூட்டம் வரும், அதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்துக்கொள்ளுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

கீதம்
12-10-2009, 09:47 PM
மிக்க நன்றி ஆரென் அவர்களே