PDA

View Full Version : ஒரு மனைவியின் ஆதங்கம்



Ravee
24-09-2009, 01:53 AM
என்னை போல ஒரு நாயை வாங்கினாயே

நாயை பேர் சொல்லி அழைக்கிறாய்

என்னை மட்டும்

" ஏய் , இந்தா " என்று அழைப்பது ஏன் ???


:traurig001: :traurig001: :traurig001:

ஓவியன்
24-09-2009, 04:02 AM
அதுதானே, அன்பாக மனைவியின் பெயரைச் சொல்லியோ அல்லது செல்லமாக ஒரு பெயர் வைத்தோ அழைத்துப் பார்த்திருக்கலாமே....

நாயை வளர்க்க வாங்கினோம், மனைவியுடன் வாழ வந்திருக்கிறோமென்பதை நாம் மறக்கக் கூடாதே....

இறைநேசன்
24-09-2009, 04:03 AM
என்னை போல ஒரு நாயை வாங்கினாயே

நாயை பேர் சொல்லி அழைக்கிறாய்
என்னை மட்டும்
" ஏய் , இந்தா " என்று அழைப்பது ஏன் ???

:traurig001: :traurig001: :traurig001:


"ஏய்" "இந்தா" "வாடி, போடி" என்றெல்லாம் மனைவியை அழைப்பது ஒரு அன்பின் வெளிப்பாடு.

அதை ரசிக்க தெரியாமல் இப்படி வருத்தப்பட்டு நாயோடு மனைவி தன்னை ஒப்பிட்டால் எப்படி?

வாழ்த்துக்கள்!

கண்மணி
24-09-2009, 04:41 AM
மனைவி கணவன் பேரைச் சொல்லாட்டா அது மரியாதை
கண்வன் மனைவி பேரைச் சொல்லாட்டா அது "அவ(ள்)"மரியாதையா?

ஒண்ணு மட்டும் புரியலைங்காணும்..

நாயை காசு குடுத்து வாங்கினார்.. அது நாயின் மதிப்பு..
மனைவியை காசு வாங்கிகிட்டு கட்டினாராம். அப்ப மனைவியின் மதிப்பு என்ன?...

எங்களைப் பெத்தவங்களுக்கு தட்சணை கொடுத்து கட்டிகிட்டா

ஏய், இந்தா, வாடி, போடி அப்படின்னு கூப்பிட்டா..

கண்டிப்பா இப்படி புலம்ப மாட்டோம்.

அறிஞர்
24-09-2009, 03:21 PM
நாயை விட கூட விலை கொடுத்து வாங்கியதால் மரியாதை குறைகிறதோ என்னவோ???/

Ravee
24-09-2009, 05:58 PM
"ஏய்" "இந்தா" "வாடி, போடி" என்றெல்லாம் மனைவியை அழைப்பது ஒரு அன்பின் வெளிப்பாடு.

அதை ரசிக்க தெரியாமல் இப்படி வருத்தப்பட்டு நாயோடு மனைவி தன்னை ஒப்பிட்டால் எப்படி?

வாழ்த்துக்கள்!


ஆகா இறைநேசன் அண்ணா அண்ணி காதில் கேட்க்கப்போகுது
:lachen001: :icon_b: :lachen001: