PDA

View Full Version : சன் டிவியில் காண்பித்த பன்றிக்காய்ச்சல் எதிர்ப்பு லேகியம்...



மஞ்சுபாஷிணி
22-09-2009, 05:24 PM
கொஞ்சம் நாள் முன்னாடி பன்றிக்காய்ச்சலுக்கான லேகியம் எப்படி செய்றதுன்னு காமிசாங்க சன் டிவியில்.... ரெண்டு வாரமும் காமிச்சாங்க ஆஹா என்ன ருசி என்ற பகுதியில்... எனக்கு ஞாபகம் இருக்கும்வரை அதை இங்க தரேன். பிரயோஜனப்படுத்திக்கலாம் தானே?

அன்னாசிப்பூ, லவங்கம், மிளகு, பூண்டு, மஞ்சள், சின்ன வெங்காயம், வேப்பிலை, துளசி இதெல்லாம் நல்லா அம்மியிலோ இல்ல மிக்சியிலோ (டிவில அம்மியில் தான் அரைச்சு காட்டினாங்கப்பா) அரைச்சு நல்லெண்ணை ஊற்றி இதை நல்லா லேகியம் போல கிண்டி அதை தினமும் சாப்பிடனுமாம். கசக்குமா? தெரியலை... ஆனால் நான் தினமும் சமையலில் அன்னாசி பூ, லவங்கம் பூண்டு வெங்காயம் நிறைய சேர்த்துக்கிறேன்.

நன்றி சன் டிவி ஆஹா என்ன ருசி....

ஓவியன்
22-09-2009, 05:50 PM
பன்றிக் காச்சல் போக ஸ்லோகம்னு கூட ஒரு வார சஞ்சிகையில் விளம்பரம் பார்த்தேன் :D, ஆனால் இவையெல்லாம் விஞ்ஞான ரீதியாக எந்தளவுக்கு உண்மைனு தெரியலையே.....

எனக்கு என்னவோ நம்ம மன்மி சொல்லுற மாதிரி...

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மீதேறி நின்றால்,
வென்றிடலாம் பன்றிக் காச்சல்..!! :icon_b:

என்பதுதான் சரியாக வரும்னு தோணுது...!! :icon_rollout:

பால்ராஜ்
23-09-2009, 08:04 AM
எனது நண்பன் ஒருவன் ஹோமியோபதியில் இதற்கு மருந்து இருக்கிறது என்று கூறுகிறான்...

என்னைப் பொறுத்தவரை ... எனது 'மருந்தே' சிறந்த மருந்து என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்