PDA

View Full Version : மனம் திறந்து உங்களோடு....1அறிஞர்
22-09-2009, 01:51 PM
மனம் திறந்து உங்களோடு......
(மற்றவருடைய பதிவுகள்)

அன்பு மன்ற உறவுகளே,

இணைய உலகில், "தமிழ் மன்றம்" 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் ஒன்றுப்பட்டு, தனித்தமிழில் பேசி, மகிழ உருவாக்க தளம் இது. இன்றைக்கு 6500 மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டுவருகிறது.

பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கியது இந்த மன்றம்.

உண்மையான படைப்பாளிகள்... இனம் காணப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு.. எழுத்து உலகில் சிறக்க வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம்.

இன்றைய எழுத்து உலகில், இணைய வளர்ச்சியால் உண்மையான படைப்பாளியை கண்டுபிடிப்பது அரிதாகி விட்டது. ஒரிடத்திலிருந்து எடுத்து, மற்றொரு இடத்தில் தங்கள் பதிப்பாக பதிவிடும் கயவர் கூட்டம் அதிகமாகிவிட்டது. இது மாதிரியான செயல்களை மன்றம் ஆதரிப்பதில்லை.

பதிவுகளுக்கு வரும் பாராட்டுகள் உண்மையான படைப்பாளியை சென்று சேரவேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம்.

அதனால், மற்றத்தளங்களில் இருந்து பதியப்படும் பதிவுகளை "படித்ததில் பிடித்தது" என்ற பகுதியில் பதிய அறிவுறுத்துகிறோம்.

சிரிப்புப்பகுதியில் வரும் பல பதிவுகளுக்கு உண்மையான படைப்பாளியை கண்டறிவது இயலாத காரியமாகிவிட்டது. ஒரே சிரிப்பு பல இடங்களில் இருக்கிறது. அதனால் மற்ற இடங்களிலிருந்து எடுத்து கொடுத்தால், எடுத்த தளத்திற்கு நன்றி சொல்ல அறிவுறுத்துகிறோம்.

மன்றத்தின் நன்மைக்காக சில நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கவேண்டியது அவசியமாகிறது.

மாற்றான் படைப்புகளை தம் சொந்தப் படைப்புப் போல மன்றத்தில் கொடுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மடல் கொடுக்கப்படும். அவர்களின் பதில் வராவிட்டாலும், விரும்பத்தகாத இச்செயலை தொடர்ந்து செய்தாலும் மன்றத்திலிருந்து தடை செய்யப்படுவர். தவறாக பதித்த பதிவும் குப்பைக்கு நகர்த்தப்படும்.

சில தளங்கள் பதிவுகளை அதிகரிக்கும் நோக்கத்தில், திருட்டு பதிவுகளை அனுமதிக்கலாம். "தமிழ் மன்றத்தின்" நோக்கம் அது அல்ல..

தரமான பதிவுகளை கொடுங்கள்....
உண்மையான படைப்பாளியை பாராட்டுங்கள்...

அன்புடன்,
அறிஞர்

மஞ்சுபாஷிணி
22-09-2009, 02:15 PM
உங்களின் இந்த பதிவு கண்டிப்பாக எல்லோருக்கும் அறிய உதவும்.. நன்றி அறிஞரே...

சிவா.ஜி
22-09-2009, 04:45 PM
மிக மிகத் தேவையான அறிவிப்பு, தேவையான நேரத்தில் விடுக்கப்பட்டுள்ளது. நண்பர் பிரவீண் அவர்களும் அடிக்கடி இதனையே பதிவர்களுக்கு சொல்லுவார். இருந்தும், எடுத்த தளங்களுக்கு நன்றி சொல்லாத பல பதிவுகளை மன்றத்தில் காணும்போது வருத்தமாகத்தான் உள்ளது.

நிர்வாகியின் வேண்டுகோள்படி அனைத்து உறவுகளும் பின்பற்றினால் நமது தளம் தனிச்சிறப்புடன் திகழும்.

ஓவியன்
22-09-2009, 05:11 PM
தமக்கு உரிமையானவைக்கு பிறர் சொந்தம் கொண்டாடுவது,
என்றுமே ஜீரணிக்க முடியாத விடயமே....

நல்ல அறிவிப்பு, நடைமுறைப்படுத்த எல்லோருமே சேர்ந்து உழைப்போம்..!!

மஞ்சுபாஷிணி
22-09-2009, 05:17 PM
கண்டிப்பாக ஓவியன்...

கீதம்
22-09-2009, 09:53 PM
புகழுக்கு மயங்காத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் அப்புகழும் பாராட்டும் உண்மையிலேயே தம் திறமையால் பெற்ற பரிசாய் இருந்தால்தான் காலத்திற்கும் நிம்மதி கொடுக்கும். குற்றமுள்ள நெஞ்சு வெளியில் தெரியாவிடினும் உள்ளுக்குள் குறுகுறுத்துக் கொண்டிருக்கும் அல்லவா? எனவே நம் மனசாட்சியை சாட்சி வைத்து நேர்மையான முறையில் படைப்புகளைப் பதித்து மன்றத்தின் வளர்ச்சிக்கு உதவுவோம். அன்புடன் கீதம்.

நேசம்
23-09-2009, 04:40 AM
நிர்வாகியின் வேண்டுகோலை மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்

samuthraselvam
23-09-2009, 04:56 AM
சமீபத்தில் அந்த மாதிரி பதிவுகள் வந்தவண்ணம் இருக்கிறது... சரியான நேரத்தில் தான் இப்பதிவை எச்சரிக்கையாக கொடுத்திருக்கீங்க அண்ணா...

கா.ரமேஷ்
23-09-2009, 05:52 AM
தேவையான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள்,
இதை மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்...

மன்மதன்
23-09-2009, 08:17 AM
சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு.
நன்றி அறிஞரே..

அன்புரசிகன்
23-09-2009, 03:25 PM
இந்தவிடையம் அமுலுக்கு கட்டாயம் வரவேண்டியவொன்று...

பாலகன்
23-09-2009, 06:41 PM
உண்மையிலேயே வரவேற்க வேன்டிய விசயம் தான்.

aren
24-09-2009, 02:38 PM
உண்மைதான் அறிஞரே. நிச்சயம் நம் மக்கள் இதை பின்பற்றுவார்கள் என்றே நம்புகிறேன்.

leomohan
24-09-2009, 03:30 PM
அவசியமான பதிவு சரியான நேரத்தில் வந்த அறிவிப்பும் கூட. சுயமாக எழுதவும் அதை படித்து மற்றவர்கள் கருத்திட்டு அதனால் தம் எழுத்தை மெருகேற்றவும் தான் இந்த மன்றத்தின் நோக்கமும் பயனும் கூட.

நல்ல விஷயங்களை பிற இடத்திலிருந்து எடுத்து தருவதில் தவறில்லை. அதே நேரத்தில் உரிய படைப்பாளிக்கு நன்றி தெரிவிப்பதும் மிகவும் அவசியம்.

நான் அலுவலக நேரத்தில் சில சமயம் மன்றத்தில் இருந்தால் நண்பர்களே கேட்பார்கள் என்ன செய்கிறாய் என்று. நான் சொல்வேன் மன்றம் இணையத்தின் index. இங்கு அனைத்தும் கிடைக்கும் இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், நகைச்சுவை, செய்திகள், மென்பொருட்களை பற்றி தகவல்கள், அரிய புகைப்படங்கள், மென்பொருட்கள், புதிய மின்னனு இயந்திரங்களை பற்றி தகவல் பரிமாற்றம் என்று.

இதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமென்று கோரிக்கைவிட்டவர்களின் பட்டியலில் என் பெயரும் இருக்கும்.

நன்றி.

arun
25-09-2009, 07:07 AM
தக்க நேரத்தில் சரியான அறிவிப்பு அனைவரும் செவி மடுத்து கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்வோம்

ஜெயாஸ்தா
27-09-2009, 10:24 AM
நாமே சுயமாய் இரண்டு வரி எழுதி.... அதற்கு நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பின்னூட்டங்களை (பாராட்டியோ அல்லது திட்டியோ..) படிக்கும்போது எழும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...! மன்ற விதிகளை அனைவரும் மதித்து நடந்தால் மன்றமும் நாமும் செழிப்புறுவோம் என்பதில் ஐயமில்லை...! (ஆமா... ரொம்ப நாளா மனறத்திற்கு வராததால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை...!)

ஓவியன்
27-09-2009, 01:10 PM
வாங்க ஜெயாஸ்தா, எங்கே உங்களது ஆழமான பின்னூட்டங்களையும் கவிதைகளையும் காணவில்லையே என்று காத்திருந்தோம்..!!

அது இருக்கட்டும் - வந்திட்டீங்க இல்லே, இனிக் கலக்கிடலாம்..!! :icon_b:

சூரியன்
29-10-2009, 03:28 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றம் வந்ததும்
இது போன்ற ஒரு செய்தி வருத்தம் அளிக்கின்றது.
மன்றத்தில் வீண் குப்பைகள் சேர்வதை தடுப்போம்.
தரமான பதிகளை தர முயற்சி செய்வோம்.

veenaa
29-10-2009, 04:33 PM
வணக்கம். தங்களின் மனம் திறந்த மடல் புதியவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியதே!
சரியான சமயத்தில் நிறைவான பதிவு.

அமரன்
29-10-2009, 10:53 PM
வணக்கம். தங்களின் மனம் திறந்த மடல் புதியவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியதே!
சரியான சமயத்தில் நிறைவான பதிவு.
வணக்கம் வீணா..
உறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்துகொள்ளலாமே.

aren
30-10-2009, 05:03 PM
வணக்கம். தங்களின் மனம் திறந்த மடல் புதியவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியதே!
சரியான சமயத்தில் நிறைவான பதிவு.

வாங்க வீணா. முதல் பதிவே அழகான தமிழில் இருக்கிறது. உங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் ஒரு இரண்டு வரிகள் எழுதுங்களேன்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

வியாசன்
30-10-2009, 05:53 PM
சுயகட்டுப்பாடு இருந்தால் அறிஞரின் இந்த வேண்டுகோள் தேவையற்றதாகியிருக்கும்.. சிலர் வேறு இடங்களிலிருந்து சுட்டுக்கொண்டு வந்து தங்களுடைய பதிவுபோல் பெயர்வாங்க நினைக்கும் சின்னத்தனத்தை என்னவென்று சொல்வது.

உங்களுடைய நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்றேன்.