PDA

View Full Version : ஞாபகம் ஒரு வியாதியா?



தாமரை
22-09-2009, 06:22 AM
http://blogs.static.mentalfloss.com/blogs/archives/34971.html

இந்தத் தகவல் அப்படித்தாங்க சொல்லுது..

அதி அற்புத ஞாபக சக்தி கொண்ட 4 பேர் கலிஃபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள் ஆய்வுக்கு ஒத்துகிட்டு இருக்காங்களாம்.

ஞாபகம் இருந்தா, என்ன ஆராய்ட்சி முடிவு என்பதை அவர்கள் சொல்லும் பொழுது இங்கேயே பதிகிறேன். :icon_b::eek::sprachlos020:

நேசம்
22-09-2009, 06:25 AM
அண்ணா கொஞ்சம் சிரமம் பார்க்கமால் தமிழில் தந்தால் நல்லா இருக்கும்.

அமரன்
22-09-2009, 08:45 AM
அய்யோ....அய்யோ....

பால்ராஜ்
22-09-2009, 02:36 PM
சில விஷயங்களில் ஞாபக மறதி நல்லதே..

அதி தீவிர ஞாபகம் இருந்தால் அரசியல்வாதிகளின் கதி...??

மஞ்சுபாஷிணி
22-09-2009, 05:19 PM
அய்யோ....அய்யோ....

என்னத்துக்கு அமரன் அய்யோ அய்யோ ?

மதி
23-09-2009, 06:44 AM
ரொம்ப கஷ்டம்... ஞாபகம் ஒரு வியாதி தான்.... :)

ஓவியன்
23-09-2009, 08:27 AM
வியாதி உள்ளவங்க தான், அந்தந்த வியாதிகளைப் பற்றிய விடயங்களைப் படிக்கிறாங்க போல...!! :rolleyes:

நல்ல வேளை நம்மளுக்கு இந்த வியாதி இல்லை...!! :icon_rollout:

மதி
23-09-2009, 09:20 AM
வியாதி உள்ளவங்க தான், அந்தந்த வியாதிகளைப் பற்றிய விடயங்களைப் படிக்கிறாங்க போல...!! :rolleyes:

நல்ல வேளை நம்மளுக்கு இந்த வியாதி இல்லை...!! :icon_rollout:
இதை நான் முழுமையாக ஆ"மோதிக்கறேன்" :D:D

அமரன்
23-09-2009, 09:22 AM
நான் ஏன் அய்யோ என்றேன் என்று மஞ்சுக்காவுக்கு இப்போ புரிஞ்சிருக்குமே..

தாமரை
23-09-2009, 11:11 AM
1990 ல் என்னோட முதல் முதலாளி கண்ணன் சொல்வாரு..

எல்லா டேட்டாவும் தன் மூளையில் வச்சுக்கணும்னு நினைக்கக் கூடாது.

எந்தத் தகவல் எங்கே கிடைக்கும், அதை எப்படி எடுக்கணும் என்று தெரிந்தால் மட்டும் போதும்.. அதனால எது எது எங்க கிடைக்கும், எப்படி தேடியெடுக்கணும்னு மட்டும் தெரிஞ்சுக்கோ, அது மட்டும் போதும்னு..

எக்கச்சக்கமான தகவல் மூட்டைகளை சந்திக்கிற இந்தக் காலத்தில் எல்லாத்தையும் நினைவில் வச்சுக்க முயற்சி செய்வதை விட அதை அதை அதுக்கு உரிய இடத்தில் போட்டு வச்சுட்டம்னா போதும்..

எப்படித் தேடுவது என்பது ஒரு கலை... அதையும் கத்துகிட்டா போதும்...

மத்தபடி வல்லாரை லேகியமெல்லாம் வேணாம்..

சரிதானே!!

நேசம்
23-09-2009, 11:12 AM
நான் ஏன் அய்யோ என்றேன் என்று மஞ்சுக்காவுக்கு இப்போ புரிஞ்சிருக்குமே..
அப்ப நான் தப்பிச்சுட்டனா அமரன்