PDA

View Full Version : டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...



நூர்
21-09-2009, 02:17 AM
டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...
----------------------
செப்டம்பர் 20,2009

இணையத் தேடலில் வெப்சைட் முகவரியை முழுவதுமாக டைப் செய்யத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக www.dinamalar.com என இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் அடிக்க வேண்டுமா?

முழுவதும் அடிக்க வேண்டாம். ஜஸ்ட் தினமலர் என அடித்து கண்ட்ரோல் அழுத்தி என்டர் தட்டினால் போதும். முழு முகவரியினை எக்ஸ்புளோரர் தொகுப்பு உங்களுக்காக அமைத்திடும். இது .com என்று முடியும் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.


டீபக்கிங் சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த சொல் அடிக்கடி பயன்படுகிறது. புரோகிராம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி செம்மைப் படுத்துவதனை இந்த சொல் குறிக்கிறது.

இதனைக் கண்டறியவும் டீ பக் டூல் என அழைக்கப்படும் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன. இந்த டீ பக் டூல் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் கோட் வரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் காட்டும்.


டூயல் பூட்

கம்ப்யூட்டர் ஒன்றை இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வழியாக பூட் செய்யும் திறனை இது குறிப்பிடுகிறது. லினக்ஸ் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில் பலரும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குவதனைக் காணலாம்.


மவுஸ் பாய்ண்ட்டர்

இதுதான் நீங்கள் மவுஸை நகர்த்துகையில் அங்கும் இங்கும் அலையும் பாய்ண்ட்டர். வழக்கமாக மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன.

உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம். ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி தேவையில்லாமல் காலியாகும். மேலும் அம்புக்குறியில் உள்ள தெளிவு, சுட்டிக் காட்டும் தன்மை இவற்றில் இருக்காது.


ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் வைத்து ட்ரேயைத் தள்ளியவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் ஆட்டோ ரன் செட் செய்தபடி அது இயங்கத் தொடங்குகிறது.

ஆனால் உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லை. ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும்.

ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.


வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும்.

இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே


ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.


WMA:

இது: Windows Media Audio என்பதன் சுருக்கம். சுருக்கப்பட்ட டிஜிட்டல் மியூசிக் பார்மட். இதனை மைக்ரோசாப்ட் உருவாக்கி தன்னுடைய விண்டோஸ் மீடியா பிளேயரில் பயன்படுத்துகிறது.

பாதுகாப்பாக மியூசிக் ட்ரேக்கைப் பயன்படுத்த இது உதவுகிறது. இருந்தாலும் எம்பி3 பார்மட் பயன்படும் அளவிற்கு இது பிரபலமாக வில்லை. இதே போல வீடியோவிற்கும் மைக்ரோசாப்ட் WMV என்ற ஒரு பார்மட்டை உருவாக்கித் தந்துள்ளது.


கேஷ் மெமரி:

அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகையினை இது குறிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது. இதனை Cache என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

நன்றி.தினமலர்.