PDA

View Full Version : நிர்வாகத்தினருக்கு ஒரு ஆலோசனை.வியாசன்
20-09-2009, 08:02 AM
வணக்கம். தமிழ்மன்றம் இணையத்தில் பதிவு செய்துவிட்டு எமது பதிவை பதிப்பதற்கு பலநாட்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. இதனால் சோர்வு ஏற்படுகின்றது. இது இந்த இணையத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை. ஆதலால் நீங்கள் ஏதாவது மாற்றுவழி செய்யமுடியாதா?

இதை யாராவது இங்கு முறைப்பாடு செய்திருக்கலாம். இதுபற்றி நீங்கள் ஏதாவது ஆலோசனை செய்யமுடியுமா?

praveen
20-09-2009, 10:56 AM
நண்பரே, ஒரு தளத்தை நிர்வகிப்பவர் அனைத்தும் அறிந்தே எதுவும் செய்கின்றனர். இங்கேயும் அது போலத்தான்.

உடனே அனுமதி வழங்க, இங்கே நிர்வாக உறுப்பினர் யாரும் முழுநேரப்பனியாளர் இல்லை. நம்மைப்போன்ற ஒருவரே இங்கே நமக்காக இந்த தளத்தை நடத்துகிறார். இந்த தளம் லாபநோக்கமில்லாமல் தமிழுக்கென்று நடத்தப்படும் ஒரு தளம். மற்ற தளத்தோடு இதனை எந்த விதத்திலும் ஒத்துப்பார்க்காதீர்கள்.

மற்ற தளத்தில் கானும் விளம்பரம் இங்கே எங்காவது கண்டிருக்கிறீர்களா?. ஆரம்பத்தில் பதிபவர் அனைவருக்கும் உடனே அனுமதி தானே கிடைப்பது போலவே இருந்திருக்கிறது, இனையத்தில் சுற்றும் சில வெளிநாட்டு வம்பர்கள், இம்மாதிரி பாரங்களில் பதிந்து பின் பல திரிகளை ஆரம்பித்து ஆங்கிலத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து மற்றும் விசயங்களை விளம்பரம் செய்வது போல இருந்ததால் நிர்வாகி அவர்கள் மட்டுமே, உறுப்பினர் அனுமதி கேட்டு பதிபவர்களை கண்டு பின் அனுமதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடனுக்குடன் அனுமதி தரப்படுகிறது, உங்கள் விசயத்தில் ஏனோ சற்று காலதாமதமாகி விட்டது.
நிர்வாகி அவர்களும் மனிதர் தானே, ஏதோ சற்று தாமதம் ஆகியிருக்கலாம். இதற்கு அவர் சார்பில் நான் மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


சரி உங்களை வேடிக்கைக்காக கேட்கிறேன், சில தினங்கள் தாமதமானது என்று வருந்துகிறீர்களே, இத்தனை நாளாய் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், எங்கே போயிருந்தீர்கள். நண்பர்கள் எங்களை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்பதற்கு விரைந்து பதில் சொல்லுங்கள்.

வியாசன்
20-09-2009, 12:30 PM
உங்கள் விளக்கத்துக்கு நன்றி பிரவீன். இத்தனை நாட்களாக வரமுடியவில்லை. காரணம் தமிழ்மன்றத்தை பற்றி தெரியாமல் இருந்தது. நேரமின்மை , பாடல்கள் சேகரிப்பதில் என் நேரத்தை அதிகம் செலவு பண்ணிவிடுவேன். சில இணையங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்கள். ..................
தற்போதுதான் நேரம் கிடைத்திருக்கின்றது
எதற்கும் ஒருகாலம் உண்டு பொறுத்திரு மகளே................. பாடலை கேட்டிருக்கின்றீர்கள்தானே. பாருங்கள் நான் பதிவு செய்தும் சிலதினங்கள் காத்திருக்கவேண்டியிருந்துதானே. இன்றைக்குத்தான் அந்த நேரம் முதல் பதிவை பதிப்பதற்கு என்றால்...........
இனிமேல் கும்மாளம்தான்......... சரி உங்களைப்பற்றி சொல்லுஞ்களேன்.

ஓவியன்
20-09-2009, 12:49 PM
அன்பான வியாசன்,

உங்கள் எண்ணம் நியாயமானதே, ஆனால் என்ன செய்வது இதனை நடைமுறைப் படுத்துவதில் பிரவின் கூறியது போல சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன, முக்கியமாக உடனடியாக மன்ற அனுமதி பெற்ற பலர் தம் விளம்பரத் தளமாகவும், தம் இச்சைகளைத் தீர்க்க முயலும் இடமாகவும் பாவனை செய்ய முற்பட்டபின்னரே மன்ற அனுமதியில் இது போல ஓரளவு இறுக்கமான நடைமுறைகள் கையாளப் படுகின்றன....

ஆனால் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் தொழினுட்ப வசதிகளால் இது போன்ற விடயங்கள் எதுவுமே நிரந்தரமானவையல்ல....

அதாவது, இதனிலும் வேகமான, பாதுகாப்பான அனுமதி முறைகள் உபயோகப்படுத்தப்படும் நிலை கிடைத்தால் அதுபோன்ற நடைமுறைகளைப் பரிட்சித்துப் பார்க்க மன்ற நிர்வாகம் தயார் நிலையிலேயே இருக்கும்.

அறிஞர்
20-09-2009, 01:10 PM
அன்பு நண்பரே.. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தினமும் இரண்டு, மூன்று முறை புதிய உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.

அதில் விளம்பரத்திற்கு என வரும் வியாபார முகவரிகள், திருட்டு (பாட்ஸ்) முகவரிகளை இனம் கண்டு அனுமதித்து வருகிறேன்.

வார விடுமுறை, சில பயண நாட்களில் காலதாமதம் ஏற்படுகிறது.

இனி முடிந்தவரை உடனே.. அனுமதியளிக்க முயற்சிக்கிறேன்.

வியாசன்
20-09-2009, 01:25 PM
அன்பு நண்பரே.. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தினமும் இரண்டு, மூன்று முறை புதிய உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.

அதில் விளம்பரத்திற்கு என வரும் வியாபார முகவரிகள், திருட்டு (பாட்ஸ்) முகவரிகளை இனம் கண்டு அனுமதித்து வருகிறேன்.

வார விடுமுறை, சில பயண நாட்களில் காலதாமதம் ஏற்படுகிறது.

இனி முடிந்தவரை உடனே.. அனுமதியளிக்க முயற்சிக்கிறேன்.

அனைவரினது விளக்கத்திற்கு நன்றிகள். நானும் பார்த்திருக்கின்றேன். ரஷ்யா செக் போன்ற நாடுகளிலிருந்து விளம்பரங்களையும், ஆபாச படங்களையும்,வயாகரா விளம்பரங்களையும் அள்ளிக்கொண்டு வருகின்றார்கள். இதனால் களத்துக்கு வருபவர்கள் வெறுப்படைந்து வராமல் விட்டுவிடுகின்றார்கள்.

ஒரு சிறிய யோசனை இவர்களுக்கு தமிழ்தெரியாது. அதனால் நீங்கள் களத்தில் இணைவதற்கான நிபந்தனைகளில் பதிவுப்பெயரை தமிழில் (ஆங்கிலத்தில் எழுதினாலும் பெயர் தமிழாக இருக்கவேண்டும் )என்ற நிபந்தனையை வைத்துவிட்டால் மொழிதெரியாதவர்களை சுலபமாக ஒதுக்கிவிடலாம். அவர்கள் மற்றையபடி தமிழர்கள் இணைந்துவிட்டு வம்பு செய்தால் மட்டுறுத்துனர்கள் அந்த பதிவுகளை அகற்றிவிடலாம்.

பாரதி
20-09-2009, 01:54 PM
சோதித்த பின்னர் அனுமதி அளிக்கும் இப்போதைய முறையே சிறந்தது. கடந்த கால அனுபவங்கள் அதை உறுதி செய்கின்றன. மன்ற நண்பர்கள் கூறியது போல முழு நேர பணியாளர்கள் இல்லாத நிலையில் இந்த சிறிய தாமதம் தவிர்க்கவியலாதது என்பதை உறுப்பினர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.

aren
20-09-2009, 02:59 PM
இப்பொழுது இருக்கும் முறையே சரியானது.

நண்பரே, இங்கே அனுமதி கிடைக்க சில நாட்கள் ஆகலாம் ஆனால் அனுமதி கிடைத்தவுடன் அனைவரும் இங்கே ஒன்றே. ஆகையால் கொஞ்சம் நாட்கள் நிர்வாகிகள் எடுத்துக்கொண்டாலும் இப்பொழுது இருக்கும் முறையே சிறப்பானது என்பதை நாங்கள் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறோம்.

உங்களுடைய பங்களிப்புகளைக்காண ஆவலுடன் இருக்கிறோம்.

தொடங்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்