PDA

View Full Version : ஊழல் அதிகாரிகள் பெயர் வெளியீடு



அறிஞர்
18-09-2009, 02:11 PM
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதிரடி ஊழல் அதிகாரிகள் பெயர் முதல்முறையாக வெளியீடு


தண்டனைக்கு பரிந்துரை


புதுடெல்லி, செப். 18: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முதல்முறையாக 123 ஊழல் அதிகாரிகளின் பெயர்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது வழக்கு தொடரவும், அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்சத்தை ஒழிப்பதில் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரிகளின் விவரங்களை தனது இணையதளத்தில் மாதந்தோறும் அது வெளியிடுவது வழக்கம். அதில், ஊழல் அதிகாரிகளின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல், அவர்களின் பணியாளர் எண் மற்றும் பணியாற்றும் துறைகளின் விவரங்களை மட்டுமே கொடுக்கும்.

ஆனால், கடந்த ஜூலை மாதத்துக்கான அறிக்கையில், ஊழல் அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் பணியாற்றும் துறை மற்றும் அவர்கள் மீது எடுக்கும்படி பரிந்துரை செய்யப்பட்ட தண்டனைகளின் விவரங்களை முதல் முறையாக வெளிப்படையாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 123 அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களில் 101 பேருக்கு பெரிய தொகையை அபராதம் விதிக்கும்படி பரிந்துரை செய்துள்ளது. இந்த 101 பேரில் 17 பேர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், 13 பேர் டெல்லி வளர்ச்சி குழுமத்திலும், 11 பேர் டெல்லி மாநகராட்சியிலும் பணிபுரிகிறார்கள்.

அதோடு, 22 அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 7 பேர் மத்திய உள்துறையை சேர்ந்தவர்கள். 4 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகள். 7 பேர் மத்திய நேரடி வரித்துறையையும் 4 பேர் மத்திய வனத்துறையையும் சேர்ந்தவர்கள்.

ரயில்வே இலாகாவை சேர்ந்த 9 பேருக்கும், நியூ இந்தியா அஷ்யூரன்சை சேர்ந்த 9 பேருக்கும், எண்ணெய் இயற்கை எரிவாயு (ஒ.என்.ஜி.சி.) நிறுவனத்தை சேர்ந்த 11 பேருக்கும் பெரிய தொகையை அபராதமாக விதிக்கும்படி லஞ்ச ஒழிப்பு ஆணையம் பரிந்துரை செய்து இருக்கிறது.
நன்றி-தினகரன்

பெயர் விவரம்
http://www.cvc.nic.in/maadvise0709.pdf
(http://www.cvc.nic.in/ma)

ஓவியன்
18-09-2009, 02:17 PM
இந்தமாதிரியான நடவடிக்கைகள் ஊழலை ஒழிக்க உபயோகப்படுமெனின் இந்தவகை நடைவடிக்கைகள் தொடரட்டும், ஆனால் ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் மாட்டாமல் ஊழல் செய்து வருபவர்களை களையெடுப்பது எப்படியென்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்...

அக்னி
18-09-2009, 04:03 PM
இந்த லிஸ்டில பெயர் வராம இருக்க,
எத்தனை பேரு லஞ்சம் கொடுத்திருப்பாங்களோ... :cool:

அந்த லிஸ்ட் வந்தாத்தான் தெரியும்... :rolleyes:

ஓவியன்
18-09-2009, 04:15 PM
இந்த லிஸ்டில பெயர் வராம இருக்க,
எத்தனை பேரு லஞ்சம் கொடுத்திருப்பாங்களோ... :cool:

:lachen001: :lachen001:

இந்த லிஸ்டில தங்களுக்குப் பிடிக்காதவங்க பெயர் வாறதுக்கு எத்தனை பேர் லஞ்சம் கொடுத்தாங்களோ...?? :eek:

(நம்ம பங்குக்கு நாமளும் கொஞ்சம் குட்டையைக் குழப்பியாச்சு..!! :icon_rollout:)

பாரதி
18-09-2009, 11:17 PM
நல்ல முயற்சியாகவே படுகிறது. ஆனாலும் இப்போதெல்லாம் கையூட்டுப்பெற்றதாக கைது செய்யப்படும் அதிகாரிகள் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்பதைத்தான் செய்தித்தாள்களும், தொலைகாட்சிகளும் புலப்படுத்துகின்றன.

ஒரு வகையில் பாவம் அந்த அதிகாரிகள்..! சில அரசியல்வாதிகள் தங்களது பெயர்கள் கூட செய்தித்தாள்களில் வராமல் இருக்க வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அதைப்போன்று செய்ய இவர்களுக்கு தெரியவில்லையே..?

Ranjitham
19-09-2009, 12:58 AM
இளிச்சவாய் அதிகாரிகளின் பெயர் வெளியீட்டால் சரியாயிடுமா? திறமைசாளி அரசியல்வாதிகளின் பன்மடங்கு ஊழல் பற்றி ஆட்சியாளருக்கும் கவலை இல்லை ஏன் மக்களே மறந்துவிடுகின்றார்களே.
நன்றியுடன்
இரன்சிதம்.

கா.ரமேஷ்
19-09-2009, 05:15 AM
அதிகாரிகள் சரி... அப்போ அரசியல்வாதிகள் பெயரை எப்போது வெளியிட போகிறீர்கள்?(ஆவலுடன் காத்திருக்கிறோம்...):confused::confused:

இதிலும் இவர்கள் எப்படி விளையாடுவார்கள் தெரியுமா:icon_ush:? தங்கள் கட்சிக்கு யார் சாதகம் இல்லாமல் இருந்து கொள்ளை அடித்தார்களோ அவர்கள் பெயர்,குறிப்பாக எதிர்கட்சிக்கு ஆதரவு அளித்தவர் பெயர்கள் வந்திருக்கும்:eek:... தங்கள் கட்சிக்கு ஆதரவு,அரசியல் தொடர்பு உள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு:).அடுத்து மாற்று ஆட்சி அமைந்தால் இதற்கு எதிர் மாறாக நடக்கும்...

எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு பெரிய நாட்டில் 123 பேர்தான் ஊழல் செய்தார்களா இல்லை இவ்வளவு பேர்தான் தெரியாமல் மாட்டிக்கொண்டார்களா?:D:D


அய்யோ கொடுமை இதிலும் ஊழல்(இந்த இணைப்பில் 101 பேர் பட்டியல்தான் இருக்கிறது)............?????:frown:
மிச்சமுள்ள்வர்களை ஏன் பட்டியலிடவில்லை....ஊழல் என்று வந்தாச்சு அதில் என்ன அதிகம் குறைவு?

samuthraselvam
19-09-2009, 07:25 AM
இளிச்சவாய் அதிகாரிகளின் பெயர் வெளியீட்டால் சரியாயிடுமா? திறமைசாளி அரசியல்வாதிகளின் பன்மடங்கு ஊழல் பற்றி ஆட்சியாளருக்கும் கவலை இல்லை ஏன் மக்களே மறந்துவிடுகின்றார்களே.
நன்றியுடன்
இரன்சிதம்.

இதே தான் நான் சொல்ல நினைத்ததும்...:icon_b:

அமரன்
19-09-2009, 08:09 AM
முதலடியாக நினைத்துப் பாராட்டுகிறேன்.

நேசம்
19-09-2009, 08:45 AM
இதனால் என்ன பலன் கிட்ட போகிறது என்று தெரிய வில்லை.

ஓவியன்
19-09-2009, 09:14 AM
எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு பெரிய நாட்டில் 123 பேர்தான் ஊழல் செய்தார்களா இல்லை இவ்வளவு பேர்தான் தெரியாமல் மாட்டிக்கொண்டார்களா?:D:D

இவ்வளவு பெரிய நாட்டில 123 பேர் தான் ஊழல் செய்தாங்கனு சந்தோசப் படுறத விட்டிட்டு... :D:D:lachen001:

இங்கே ஒன்றைக் கவனிச்சீங்களா...??
இந்த நாட்டில ஊழல் பண்ணுறவங்க,
ஏதோ ஒண்ணு (1), இரண்டு (2), மூன்று (3) பேர் தாங்க...!! ;):rolleyes:

அதுதான் 123..!! :icon_b:

அக்னி
19-09-2009, 08:25 PM
திறமைசாளி அரசியல்வாதிகளின்
பெருஞ்சாளி என்று சொல்ற மாதிரியே இருக்கு... :cool:


இந்த நாட்டில ஊழல் பண்ணுறவங்க,
ஏதோ ஒண்ணு (1), இரண்டு (2), மூன்று (3) பேர் தாங்க...!! ;):rolleyes:

:lachen001: :lachen001: :lachen001:
பிளாட் :icon_drunk: போட்டு யோசிப்பாங்களோ...

aren
21-09-2009, 02:10 AM
ஏதாவது ஒரு அதிகாரியைப் பார்க்கவேண்டுமென்றால் அவர் எப்படி பட்டவர் என்று தெரிந்துகொள்ள அங்கே இருக்கும் பியூனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து தெரிந்துகொள்ளவேண்டும்.

இனிமேல் இந்த இணையத்திற்கு சென்று அவருடைய பெயர் இருக்கிறதா என்று தெரிந்துகொண்டு பின்னர் அனுகலாம். அவர் பெயர் இங்கே இருந்தால் நம் வேலை சுலபமாக முடிந்துவிடும்.

அய்யா
21-09-2009, 12:25 PM
அடிமட்டம்முதல் உச்சபீடம்வரை வலைப்பின்னலமைத்து ஊழல்புரியும் அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படுவதென்பது இயலாத ஒன்று. இவர்கள் கிஸ்தி கட்டாத கட்டபொம்மர்களாக இருந்திருக்கவேண்டும். வலைக்கயிற்றில் தூக்கிடப்பட்டுவிட்டனர்.