PDA

View Full Version : உன்னை போல் ஒருவன் - விமர்சனம்



Honeytamil
18-09-2009, 01:56 PM
http://i28.tinypic.com/168yaad.jpg

வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்து, நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம்.

சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சி வசனம், சூப்பர்ப்.. ஆங்கில வசனங்களின் ஆளுமை ஆங்காங்கே தலைகாட்டினாலும் இயல்பாகவே இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் கீழே யாருக்கும் புரியாது என்று இயல்பாய் வசனம் பேச முடியாமல் தவிப்பது.

நடிப்பு என்று வரும் போது படத்தில் நடித்த, கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் பரத் ரெட்டி, அபியும்,நானும் கணேஷ், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல என்பதால் எதை சொல்லி பாராட்டுவது என்றெ தெரியவில்லை. பல இடங்களில் சின்ன சின்ன உடல் மொழிகளீன் மூலம் அவரின் விருப்பு, வெறுப்புகளை வெளிபடுத்துவதும், க்ளைமாக்ஸ் காட்சியில் தான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கும் காட்சியில் அவரின் செய்கைக்கான ஞாயத்தை சொல்லும் இடம் ஆஹா.. ஸ்பெல்பவுண்ட் என்றால் அது மிகையில்லை.. சமூகத்தின் மேல் உள்ள கோபம், ஆத்திரம், இயலாமை, துக்கம், அழுகை, பின்பு அதை மென்று விழுங்கி மீண்டும் ஆளுமையான குரலில் பேசும் அந்த காட்சி அற்புதம். பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதும், ஹாட்ஸ் ஆப் கமல்.

அதே போல் மோகன்லால், மிகவும் சப்டூயூட் ஆக்டிங்.. இவரும் தன்னுடய உணர்வுகளை மிக அழகாய் தன் உடல் மொழியிலேயே வெளிபடுத்துகிறார். சில இடங்களில் அவரை மடக்கும் சீப் செக்கரட்டரி லஷ்மியை எதிர்க்கும் நேரத்தில் காட்டும் கண்ட்ரோல்ட் அரகன்ஸ் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். தன் கீழே வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளிடம் ஆர்டர் போடும் போதும், காட்டும் அதிகாரம், பின்பு அவர்களிடம் காட்டும் பரிவை கூட தன்னுடய் குரல் மாடுலேஷனில் வெளிப்படுத்தும் அழகு அருமை.

அதே போல் போலீஸ் ஆபீசராய் வரும் டூயூட்டி பவுண்ட் பரத் ரெட்டியும், அதிரடி போலீஸ் காரனாய் வரும் கணேஷும், சரியாய் பொருந்தியிருக்கிறார்கள்.

முதல்மைச்சரின் வீட்டுக்கு, நம்முடய முதலமைச்சரின் வீட்டையும், குரலுக்கு அவரது குரலை போலவே மிமிக்ரி குரலை உபயோகித்து இருப்பது காண்ட்ரவர்ஸியை உருவாக்கலாம்.

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு அருமை. அதிலும், ரெட் ஒன்னின் 4கே துல்லியம் படத்தில் எலலா இடஙக்ளில் தெரிகிறது. படத்தின் மூடுக்கேற்ற ஒளிப்பதிவு.

ஸ்ருதிஹாசனின் பிண்ணனி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஆப்டாக அமைந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் கிடையாது ஆங்காங்கே சின்ன, சின்ன இடங்களில் பிண்ணனி இசையில் ஆர்.ஆராக உபயோகபடுத்தியிருக்கிறார். எங்கெங்கே பிண்ணனி இசை தேவையில்லை என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கும் ஸ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

படத்தில் கமல், மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்களால லார்ஜர் தென் லைப் கேரக்டர்களிலேயே பார்த்து பழகி போன மக்களுக்கு இவர்களின் நடிப்பு அப்படியே தோன்றும். ஆனால் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அதையெல்லாம் மறக்கடிக்கும் திரைக்கதையுடன் நாமும் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

ஒரிஜினல் படத்திலிருந்து,க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் சொல்லும் காரணத்தை தவிர பெரிய மாற்றம் எதையும் செய்யாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலெட்டி..

படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது.. ஆங்காங்கே.. சின்ன, சின்ன இடங்களில் அதையெல்லாம் பார்த்தால் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று காத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

உன்னை போல் ஒருவன் – நம்மில் ஒருவன்.

நன்றி : ஷங்கர்

பா.ராஜேஷ்
18-09-2009, 02:15 PM
ஹிந்தியில் வெளி வந்த A Wednesday படத்தின் கதைதானா!!!! ஹிந்தியிலும் கூட மிக அருமையாக எடுத்து இருந்தார்கள். பாராட்டிற்குரிய கதை.

பாடலே இல்லை என்கிறீர்களே, பிறகு என்ன ஒலி நாடா வெளியிட்டார்கள்!??? ;)

Honeytamil
18-09-2009, 02:25 PM
ஹிந்தியில் வெளி வந்த A Wednesday படத்தின் கதைதானா!!!! ஹிந்தியிலும் கூட மிக அருமையாக எடுத்து இருந்தார்கள். பாராட்டிற்குரிய கதை.

பாடலே இல்லை என்கிறீர்களே, பிறகு என்ன ஒலி நாடா வெளியிட்டார்கள்!??? ;)

பாடல்கள் இருக்கின்றன. மொத்தம் நான்கு பாடல்கள் அனைத்துமே திரைக்கதையோட்டத்தோடு அமைக்கப்பட்டிருகின்றன.

தயவு செய்து இந்தி படத்தையும், இதையும் கம்பேர் செய்து பார்க்காதீர்கள்.. நான் ஏற்கனவே இந்தியில் 2 முறை பார்த்தும், புதிதாய்தான் இருந்தது இந்த படம். நஸ்ரூதீன் ஷா, அனுபம் கேர் போன்ற சிறந்த நடிகர்கள் இருந்தும் பத்திரிக்கைகளின் பாராட்டுகள் பெற்றாலும் கூட பெரிய அளவில் மக்களீடையே ரீச் ஆகவில்லை.. அதை இம்மாதிரியான பெரிய நடிகர்கள் நடிக்கையில் எல்லோருக்கு ரீச் ஆகும் நல்ல விஷயம் நடக்கிறதால்.. மேலும் நல்ல படங்கள் வரும். கமலை காமன் மேனாக ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறும் விமர்சகர்களுக்காக..

ஸ்ரீதர்
18-09-2009, 02:29 PM
நல்ல விமர்சனம்

கமல் படம் என்பதால் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என நினைத்திருந்தேன். விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுவதாக உள்ளது. சீக்கிரம் பார்த்துவிட வேண்டியதுதான்

பா.ராஜேஷ்
18-09-2009, 02:44 PM
ஹிந்தி ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ய நல்ல பாட்டு, கவர்ச்சி, வன்முறை சண்டை வேண்டும். இந்த படத்தில்தான் அதெல்லாம் கிடையாதே. மொழி மாற்றம் செய்யப் படும் போது இன்னும் கருத்துக்கள் சேர்க்கப் படுவதால் மிக நன்றாகவே இருக்கும். கமலை பற்றி கூறுவதற்கு இல்லை. (அதிகம் சொன்னால் தக்ஸ் கோபித்து கொள்ள போகிறார்!). இந்த படம் சிறப்பாக வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தங்களது விமர்சனமும் மிக நன்று.

பாரதி
18-09-2009, 03:25 PM
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
பல வலைப்பூக்களிலும் இணையத்தளங்களிலும் இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். படமும் நன்றாக இருந்து, நன்றாக வசூலும் நடந்தால் அது இன்னும் நல்ல படங்கள் எதிர்காலத்தில் வெளிவருவதற்கு வழிகாட்டியாக அமையும்.

ஓவியன்
19-09-2009, 09:34 AM
இன்று திரையில் பார்ப்பதாக திட்டம், திட்டம் வெற்றியடைந்தால் நாளை படத்தினைப் பற்றிக் கூறுகிறேன்...

aren
19-09-2009, 10:55 AM
வாவ்!!! படம் வெளிவந்துவிட்டதா.

நிச்சயம் தியேட்டர் சென்று பார்த்துவிடவேண்டும் டிக்கெட் கிடைத்தால்.

படம் சிறந்த வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்.

மதி
19-09-2009, 02:36 PM
பார்த்தாச்சு.... :)
படத்தின் நாயகன்.. ஆச்சர்யம் கமலல்ல... மோகன்லால்.. அசத்தியிருக்கிறார் மனுஷன். ஒவ்வொரு காட்சியிலும் ஏற்ற இறக்கமுள்ள வசனங்கள் அபாரம்... படம் ஆரம்பித்து நேர்கோட்டில் சென்று முடிவடைகிறது. வசனங்கள் அவ்வளவு கூர்மை... அறைவது போல். இரண்டு மணிநேரத்திற்குள்ளாக முடிவது ஆறுதல். மசாலாத்தனங்கள் இல்லாமை, பாடல்காட்சிகள் மற்றும் தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளை தவிர்த்திருப்பது பலம். கமலுக்கு நடிக்கவென்று சொல்ல ஒரே ஒரு இடம் தான். அவர் முகத்தை க்ளோஸப்பில் காட்டும் போது பேசும் போதே கண்ணில் எட்டிப்பார்க்கும் கண்ணீர்... திரையரங்கில் நிசப்தம். முடிந்தவுடன் அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்து சென்றது நன்றாய் இருந்தது.. நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நல்லதொரு படம்....

வாழ்த்துகள் படக்குழுவினரூக்கு...

இளசு
19-09-2009, 03:51 PM
திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்!

virumaandi
20-09-2009, 02:03 PM
எதிர் பார்க்காமல் கிடைத்த சர்க்கரை பொங்கல்.. இந்த படம்.
தமிழ் சினிமாவில் கமல் கமல் தான் என்று நிரூபித்துள்ள படம்..
அமைதியாக ரிலீசு ஆகி.. சுனாமியாக பேச வைத்துள்ள வித்தியாசமான படம்...

காசுக்கேத்த உழைப்பு..
ஜெட் வேக படம்.. அனைவரையும் கட்டி போடுகிறது.. இத்தனைக்கும் ஒரு மசாலாவும் இல்லாமல்..
வாழ்த்துக்கள்.. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..

கமலின் பொன்விழாவில்.. கொடுத்த சர்ப்ரைஸ் வெற்றி இது...

இப்படத்தின் வசனம்!!..., வசனம்!!.., வாக்குவாதம்...!!! இது தான் படத்தின் வெற்றி....
கூர்மையான வசனங்களால் நம்மை சீட்டில் கட்டி வைத்தது..!!

வசனம் எழுதிய முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

இப்படத்தின் செலவை ஒரு நாள் கலெக்ஷனிலேயே எடுத்து விடுவார்கள்..
இரண்டாவது நாள் முதல் வரும் கலெக்ஷன் எல்லாம் லாபம் தான்...

வாழ்த்துக்கள் கமலுக்கு

அமரன்
21-09-2009, 08:41 AM
இப்படியான படங்களைப் பார்க்க நேரம் கை கொடுக்காதே..

நல்ல படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி அடைய வேண்டும்.

ஓவியன்
21-09-2009, 09:06 AM
நானும் பார்த்திட்டேனில்லே..!! :)

திரையரங்கில் டிக்கெட்டுக்களைப் பெற நீண்ட வரிசை கடக்கணும்,
ரமழான் மாதத்தில் இரவு 9.30மணிக் காட்சி மட்டும்தான் காட்டப்படும்,
போன்ற சிக்கல்களைக் கடந்து திரைப்படத்தினைப் பார்க்கத் தூண்டியது கமல்-மோகன்லால் என்ற இரு நடிப்புச் சிகரங்களின் ஈர்ப்புத்தான்....

படம் ஆரம்பித்ததுடன் நான் அறிந்தவை;

படத்துக்கு நாயகி இல்லை,
படத்துக்கு தனிப்பாடல் காட்சிகளில்லை,
படத்துக்கென தனி நகைச்சுவை நடிகர்களில்லை...

நம் கண்களை படத்தைக் கூர்மையாகப் பார்க்க வைத்திருப்பது பட இயக்குனரின் வெற்றி,
அட படத்தின் இயக்குனர் சக்ரி ‘சலங்கை ஒலி’ படத்தில் கமலினை ஒழுங்காக புகைப்படம் எடுக்கமுடியாதவராக நடித்தவராமே...
என்னவோர் அழகிய முரண் அது, அங்கே புகைப்படம் எடுக்க முடியாமல் நடித்தவர் அதே கமலினை வைத்து மூன்று ரெட் கமெராக்கள் மூலம் உன்னைப் போல் ஒருவனை திரைப்படமாக்கி அசத்தியுள்ளார்....

பொதுவாக எல்லா இடங்களிலுமே எமோகன்லால் நடிப்பில் வெளுத்து வாங்க, கிடைத்த ஒரு இடத்தில் கண்ணீராலும் முகபாவத்தாலும் தானும் சளைத்தவரல்ல என நிரூபித்து விடுகிறார் கமல்....

படத்துக்கு வசனங்கள் மிகப் பெரிய பலம், இத்தனை கூர்மையான கத்தி போன்ற வசனங்களை அண்மையில் வேறு எந்த படத்திலும் கேட்ட நினைவில்லை.....

மோகன்லால், கமல், லக்ஸ்மி தவிர ‘கணேஸ்’ நடிப்பில் கவனிக்க வைக்கிறார்-திரையுலகில் இவருக்கு இன்னும் நல்ல பிரகாசமான இடம் கிடைப்பது உறுதி....

படத்தினை இரண்டு மணித்தியாலத்துள் பார்த்து முடித்து வெளியே வந்த போது, இதுதான், இதுதான் இப்படியான படங்களைத்தானே தமிழில் எதிர்பார்கின்றோமென மனசு துள்ளிக் குதித்தது...

நல்லதோர் திரைப்படத்தினைத் தந்த படக் குழுவினருக்கு என் நன்றிகளும்... :)

ஜாக்
21-09-2009, 12:41 PM
காலையில் படம் பார்த்தேன்

டெக்னிகலி ரொம்ப அருமையான வந்திருக்கு

கதையின் நாயகன் கமல் இல்லை மோகன்லால்

படத்தில் வரும் வசன காட்சிகள் மிக பெரிய ப்ளஸ், அதிலும் கமல் ஒரு இடத்தை தன்னை ஓட்டர் லிஸ்டில் இருந்து பெயரை தூக்கிட்டாங்க என்றும் சொல்லும் காட்சியில் தியேட்டர் அதிருது

பாடல்கள் நகைசுவை காட்சிகள் என்று ஏது திணிக்காமல் நச்சுனு தேவையானதை மட்டும் கொடுத்து இருப்பது மனது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது

பின்னனி இசையில் தேவையான விறுவிறுப்பை தந்து இருக்கிறார். ஒளிப்பதிவு அற்புதம்

தியேட்டரை விட்டு வெளிய வந்த நல்ல படம் பார்த்த திருப்தி

மதுரை மைந்தன்
21-09-2009, 12:54 PM
படத்தை மெல்போர்னில் தியேட்டரில் பார்த்தேன். 18 டாலர்கள் டிக்கெட் என்றாலும் நல்ல படம் பார்த்த திருப்தி.

ஏற்கனவே இந்தியல் வெளிவந்த வெட்னஸ்டே படத்தை பார்த்திருந்ததால் கதை தெரியும். இருந்தும் புதிதாக ஒரு படத்தை பார்க்க வைத்த கமல ஹாஸன் மோகன் லால் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

பெரும்பாலும் மெல்போர்னில் தமிழ் படங்களுக்கு அதிக கூட்டம் இருப்பதில்லை. ஆனால் இந்த படத்திற்கு நல்ல கூட்டம். அதற்கு ஒரு காரணம் தமிழ் ரசிகர்களோடு மலையாள ரசிகர்களும் படம் பார்க்க வந்ததால்.

மோகன் லால் திரையில் தோன்றியவுடன் கை தட்டல்கள் இருந்தன. கமலுக்கும் கை தட்டினார்கள். வசனங்கள் அருமையாக இருந்தன. உலகத் தரம் வாய்ந்த படம் ஒன்றை பார்த்து கொடுத்த பணத்திற்கு வசூல்.

அய்யா
21-09-2009, 01:01 PM
இப்படத்தின் வெற்றி இருவித தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஒன்று, கதாநாயகிகளின் கவர்ச்சி, அபத்தக் காமெடி என்று அலையும் தமிழ் சினிமாவை ஓரளவுக்கு திசைதிருப்பலாம்.

இன்னொன்று, இதேபோன்று வித்தியாசப்படம் எடுக்கிறேன் பேர்வழியென்று அவனவன் கிளம்பி, நம் பொறுமையைச் சோதிக்கலாம்.

மஞ்சுபாஷிணி
21-09-2009, 04:25 PM
அருமையான விமர்சனம்.. கண்டிப்பாக பார்த்துவிடவேண்டியது தான் படம்.. நன்றி நண்பரே...

ரங்கராஜன்
21-09-2009, 04:54 PM
எல்லாரும் என்னுடைய சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்................ நான் இன்னும் படம் பார்க்கவில்லை

Honeytamil
24-09-2009, 06:23 AM
ஏற்கனவே கமலின் " குருதிப்புனல் " இதே மாதிரி பாடல்கள் இல்லாமல் நகைச்சுவைக்காட்சிகள் இல்லாமல் ஒரே நேர் திரைக்கதை அமைப்புடன் வந்த பொது இந்த மாதிரி படங்கள் தமிழில் வராதா என்று காத்திருந்தேன்.

முதல் நாளில் முதல் காட்சியில் இந்தப்படத்தை பார்த்தது மனதுக்கு திருப்தி.!!!

aren
24-09-2009, 08:27 AM
எல்லாரும் என்னுடைய சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்................ நான் இன்னும் படம் பார்க்கவில்லை

கமலின் தீவிர ரசிகராக இருந்தும் இந்தப்படத்தைப் பார்க்காத தக்ஸ் அவர்களை வண்மையாக கண்டிக்கிறேன்.

பாரதி
24-09-2009, 02:00 PM
நானும் பார்த்துட்டேனே...!

படம் நல்ல விறுவிறுப்பு.

படம் நன்றாக இருக்கிறது என்று வந்த விமர்சனங்களைப் பொறுக்காமல், இப்போது வேறு நோக்கில் இப்படத்தைப்பற்றி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

படத்தின் வலிமை வசனம்தான்.

நல்ல திரையரங்கில் பார்க்காவிட்டால் சிரமம்தான். நான் பார்த்த திரையரங்கில் எல்லா ஒலிபெருக்கிகளிலும் காதைக் கிழிக்கும் அளவுக்கு பின்னணி இசையை ஒலிக்க வைத்திருந்தார்கள்..ஹும்...

படத்தின் கருத்து சரியா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், கருத்தை சொல்லிய முறை நேரடியானது என்பது என் கணிப்பு.

படத்தில் சிற்சில குறைகளும் தென்படுகின்றன என்றாலும், சொல்ல வந்ததை பார்ப்பவர்கள் மனதில் ஏற்றுவதில் இப்படம் ஓரளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

aren
24-09-2009, 02:29 PM
எல்லோரும் பார்த்துவிட்டீர்கள், எனக்குத்தான் இன்னும் நேரம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

உதயசூரியன்
24-09-2009, 04:43 PM
நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி..... ஒரு போலிசு அதிகாரியின் நினைவு அசைவுகளில் மறக்க முடியாத ஒரு நாள் பற்றிய கதையில்.. நம்மையும் உள் இழுத்து.... கடைசி வரை ரசிகர்களை.. இருந்து மோகன்லாலின் கடைசி வார்த்தைகளையும் கேட்டுவிடு... நகரும் படி அமைத்த.. பட குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இந்தியில் இருந்த குறை இங்கே இல்லை.. அது.. பிரபலமன இருவர் நடித்து இன்னும் படத்தை பிரபலபடுத்தியது..
ஒரு குறை.. இங்கே.. தமிழ் நாட்டில் இருப்பவருக்கு இவ்வலவு கோபம் வருவது செயற்கை.. ஆனலும் வசனத்தில் அதை சுடி காடி அதை நிறை செய்து இருக்கிறார் கமல்..
(இந்தியில் பாதிக்க பட்டவர் இம்முயற்சியில் இறங்குவார்)
மற்றொரு குறை.. டி.வி. ரிப்போர்டரக வரும் பெண்.

படம்.. பலரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது...
மசலா இல்லாதது..
எதை சொல்ல வேண்டுமோ அதை மடும் சொல்லி இருப்பது..

ஜெடில் பயணம் செய்தது போன்ற வேகம்..
புது முகங்களான இரு போலிசு அதிகாரிகள்..

தீவிரவதிகள் பாம் போட்டதை நேரடியக காட்டியதை மறைமுகமக டிவிக்களை வசனங்கள் மூலம் சொல்லியிருப்பது...
கமல் நடிப்பு...
மோகன்லல் நடிப்பு..
லட்சுமி நடிப்பு..

நாம் எப்போதும் கேட்கும் வித்தியாசமன படைப்பு..

அதை விட.. யாருக்கும்.. வலிக்கமல்.. ஆனல் எல்லோருக்கும் உரைக்கும் படியன.. கத்தி போன்ற வசனங்கள்.. திரைகதை..
பலே...
பலே..
பாரடுக்கள் கமல்..
அவர் சொன்ன கருத்துக்கள் உடன் பாடில்லை..
சொன்னது நம்பும் படி இல்லை.. என்றாலும்.
அவர் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியுள்ளார்..
அனைவரும் கண்டிப்பாக பர்க்க வேண்டிய படம்..

கமலின் படங்களில் மசால இணைத்திருந்தாலும் கூட.. கொடுத்த கசுக்கு வித்தியாசமன புதுமையன விஷயங்கள் இருக்கும்..
அதிலும் இப்படத்தை பற்றி சொல்லவும் வேண்டுமோ....?
வழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மன்மதன்
25-09-2009, 02:29 PM
நல்ல படம்..

கேமரா வொர்க் அருமை..

ஸ்ருதிஹாசனை இளையராஜா கூப்பிட்டு வாழ்த்தும் படி இசையமைத்ததற்கு பாராட்டலாம்.

‘வெட்னஸ்டே' படம் பார்த்துவிட்டு இதை பார்ப்பவர்களுக்கு இதை அப்படியே (சில வசனம் தவிர) மறுபடி பார்த்த மாதிரி இருக்கும்.

கமல் - மோகன்லால் என இரு ஜீனியஸ்கள் நடித்திருக்க வெறென்ன வேண்டும்..

பார்க்கலாம்..

சிவா.ஜி
25-09-2009, 05:14 PM
ஏற்கனவே ஹிந்தியில் பார்த்திருந்தாலும், கமலின் நடிப்பில், தமிழில் அந்த கூர்மையான வசனங்களைக் கேட்பது நன்றாக இருக்கிறது. ஊருக்கு வந்திருந்தபோது தியேட்டரில் பார்த்த படம். இசையும், ஒளிப்பதிவும் அருமை.

மசாலா இல்லாத இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்.

நேசம்
25-09-2009, 06:10 PM
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றி இருக்கிறார்கள்.நான் சொல்வது புரிந்து இருக்கும்

மஞ்சுபாஷிணி
26-09-2009, 04:01 PM
எனக்கு பிடிச்சிருக்குப்பா ... படம் நேற்று தான் பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது...

விக்ரம்
30-09-2009, 09:57 AM
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றி இருக்கிறார்கள்.நான் சொல்வது புரிந்து இருக்கும்
வாழைப் பழமல்ல நேசம், வாழைக்காய் அது. ஊசியை ஏற்றியதற்குப் பதில், வாழைக்காயை கத்தியால் கட் செய்திருக்க வேண்டும். நான் சொல்றதும் புரிந்திருக்குமே!!!

முள்ளை எடுக்க முள் வேண்டும். ஆனா முட்புதரை எடுக்க முள் யூஸ் பண்ணக்கூடாது, மாறாக புல்டோசர் வச்சு எடுக்கணும்.

ரங்கராஜன்
01-10-2009, 06:51 AM
வாழைப் பழமல்ல நேசம், வாழைக்காய் அது. ஊசியை ஏற்றியதற்குப் பதில், வாழைக்காயை கத்தியால் கட் செய்திருக்க வேண்டும். நான் சொல்றதும் புரிந்திருக்குமே!!!

முள்ளை எடுக்க முள் வேண்டும். ஆனா முட்புதரை எடுக்க முள் யூஸ் பண்ணக்கூடாது, மாறாக புல்டோசர் வச்சு எடுக்கணும்.

அருமையான பதில் விக்ரம் அண்ணா

விக்ரம்
02-10-2009, 04:57 PM
அருமையான பதில் விக்ரம் அண்ணா
வெளிப்படையான பேச்சு ஆபத்தானதா??!!

உ(எ)ங்க மனசுல இருக்கிறத சொன்னேன் தக்ஸ். உன்னைப்போல் ஒருவன்.

நேசம்
02-10-2009, 05:40 PM
நான் சொல்றதும் புரிந்திருக்குமே!!!

முள்ளை எடுக்க முள் வேண்டும். ஆனா முட்புதரை எடுக்க முள் யூஸ் பண்ணக்கூடாது, மாறாக புல்டோசர் வச்சு எடுக்கணும்.

உங்கள் பதில் சரிதான் விக்ரம்


வெளிப்படையான பேச்சு ஆபத்தானதா??!!

உ(எ)ங்க மனசுல இருக்கிறத சொன்னேன் தக்ஸ். உன்னைப்போல் ஒருவன்.

எனக்கு சில சமயங்களில் வெளிப்படையாக பேசுவது பிடிக்கும்.இப்பொழுது நான் சொல்வது புரிந்து இருக்கும்

பரஞ்சோதி
04-10-2009, 03:18 PM
அசத்தல் விமர்சனம், அனைவரின் மனம் திறந்த பாராட்டுகள் படத்தின் தரத்தை சொல்கின்றன.

குவைத்தில் நிறைய வெட்டி விட்டதாக சொல்லியிருக்காங்க, ஆகையால் சென்னையில் தான் பார்க்கணும்.

வெற்றி
05-10-2009, 11:02 AM
16 ரீல் டார்கெட் என்பதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், சொல்ல வந்த விசயம் 1.30 மணி நேரம் தான் (11 ரீல்) என்றாலும் "சோ வாட் ? " என துணிந்த ராஜ் கமல் இண்டர் நேஷ்னல் படக்குழுவினருக்கு முதல் பாரட்டு.. தி வெண்ட்ஸ் டே படத்தழுவல் என்றாலும்...உன்னைப்போல் ஒருவன் வேறு தான்..எனெனில் கமலும் மோகன்லாலும் படம் முழுவதும் 50% பாடி லாங்வேஜிலும் 50% தங்கள் குரல்களாலும் நடித்து இருக்கிறார்கள்...
வசனங்களில் இருக்கும் ஆங்கிலக்கலப்பு படத்தை இன்னும் அழகாக காட்டுகிறது ( கோட் செய்து திட்டாதீங்க சாமீங்களா ...எனக்கு அப்படித்தான் படுகிறது )
எனக்கு ரொம்ப பிடித்தது யார் எனில் ஆரிப் கானாக வரும் அந்த துடுக்கு போலிஸ் ஆபிசர் கதாபத்திரமும் அதில் நடித்தவரின் நடிப்பும் தான்...(படத்தின் முரண்களை சமன் செய்யும் மறைமுக பாத்திரம்,,) பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் ,,,
திரை அரங்களில் மட்டும் பாருங்கள் ... நமது கோபங்களைக்கொண்ட நம் சக தோழன்கள் பலரை,,

aren
05-10-2009, 02:15 PM
படம் வெற்றி பெற்று இன்னும் இது மாதிரி படங்கள் தமிழில் வரவேண்டும் என்பதே என் விருப்பம்.

thalaivan
05-10-2009, 03:33 PM
எல்லோருக்கும் எதிர்மறையான கருத்தை பதிவு செய்வதில் எனக்கு இருக்கும் சமூக அக்கறையை விமர்சிக்க போகிறீர்களா அல்லது தனி ஒரு மனிதனின் நடவடிக்கை சமூக சீரழிவுக்கா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கமலின் படங்கள் எப்போதுமே அமெரிக்கர்கள்போல தனித்திறமை பளிச்சிடும்.

தேவர் மகனில் செய்த தவறைப்போலவே இதிலும் அவருது கதைக்கரு ஒரு முறையற்ற பிரசவம்போல் எனக்கு படுகிறது.

தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் என்ற அவர் கொள்கை தவறான மேலும் அவரது பிறவிக்குணமாக இன்றும் வெளிப்பட்டுவிட்டது.

சமூக கட்டமைப்புக்கு ஒவ்வாத மனிதராக அவரது வாழ்க்கை போலவே அவரது இந்த முடிவும் தீர்மானிக்கிறது.

அவ்வாறெனில் சிங்களர் புலிகளை கொல்வதை சரி என்கிறாரா....இந்த அவா...ள்

aren
05-10-2009, 10:27 PM
திரையில் அரைத்த மாவயே இவர் அரைப்பதில்லை. ஏதாவது வித்யாசமாக கொடுக்கவேண்டும் என்றே நினைப்பவர் கமல்.

நீங்கள் பேசுவதுபோல் பார்த்தால், பாலசந்தர் எப்பொழுது தமிழனால் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களை தன் படத்தில் கொண்டுவந்தார். அவருடைய படங்களும் மற்ற படங்களின் கதைகளுக்கு முழுவதுமாக வேறுபட்டவை.

ஒரு கதாநாயகன் எப்பொழுது நல்லவனாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை.

இந்தக் கதையில் வேறு வித்யாசமாக மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

ஓவியன்
06-10-2009, 04:22 AM
அவ்வாறெனில் சிங்களர் புலிகளை கொல்வதை சரி என்கிறாரா....இந்த அவா...ள்

தமிழர், சிங்களவர் பற்றிய அடிப்படை கூட தெரியாத நிலையில் கருத்துப் பதிவிட்ட உங்கள் கருத்திற்கு என் வன்மையான கண்டனங்கள்....

இதனைப் பற்றி நீள, அகலமாக என்னால் விவாதிக்க முடியும், ஆனால் அதற்கு ஏதுவான இடமும் காலமும் இதுவல்ல என்பதால் மெளனிக்கிறேன்....

இனிமேலாவது ஒரு கருத்தினைப் பதிவிடுகையில் அந்தக் கருத்தின் ஆழத்தினை அறிந்து பதிவிடுங்கள்....

ஓவியன்
06-10-2009, 04:25 AM
தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் என்ற அவர் கொள்கை தவறான மேலும் அவரது பிறவிக்குணமாக இன்றும் வெளிப்பட்டுவிட்டது.

’அன்பே சிவம்’, ‘ஹேராம்’ என்றெல்லாம் கமலின் படங்கள் வந்ததே ஞாபகம் இருக்கிறதா தலைவா...?? :D

சிவா.ஜி
06-10-2009, 05:09 AM
தலைவரே...இந்தப் படத்தின் கதை கமலுடையதல்ல...ஹிந்தியிலிருந்து தழுவப்பட்டது. அதுமட்டுமல்ல...சொல்ல வந்த கருத்து விமர்சனத்துக்குட்படுமென்று தெரிந்தாலும் துணிந்து சொல்வதுதான் ஒரு கலைஞனின் கடமை.

அந்தவகையில் துணிவுள்ள கலைஞர்களைப் பாராட்டுவோம்.

உதயசூரியன்
06-10-2009, 09:45 AM
தலைவன் அவர்களின் கருத்து.. விமர்சனத்திற்காக இல்லை.. தனி மனித எதிர்ப்பு மட்டுமே..
ஓவியன் பதில்.. பராட்டுக்கள்..
எங்கே எப்படி விவாதிக்க வேண்டுமோ.. அப்படி தான் விவாதிக்க வேண்டும்..
நுனுக்கமாக விமர்சித்து பல குறைகளை.. சுட்டி காட்டும் சிவா அவர்களும்.. இது போல வித்தியாசமான படைப்புகளை பாராட்டியிருப்பது.. வரவேற்க்க தக்கது...

இப்படத்தை திரையில் மட்டுமே காணவும்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

பால்ராஜ்
26-10-2009, 12:23 PM
வித்தியாசமான படம்..
அற்புதமான கதை அமைப்பு..

கமர்ஷியலாக எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பது சற்று கேள்விக்குறியே
ஆனால் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும்.

இரண்டு நாள் முன்பு தியேட்டரில் சென்று பார்த்தேன்..
மொத்தம் 20 பேர் இருந்திருக்கலாம்.. அதுவும் மினி தியேட்டரில்..

கூத்தரசன்
07-08-2010, 11:33 AM
வணக்கம்,

நல்லவேளை படம் முன்பே இந்தியில் வந்ததால், கதைக்கு கமல் பெயர் போடவில்லை. ஆங்கில படத்தைத் தழுவி எடுத்திருந்தால் கதைக்கு கமல் பெயர் இருந்திருக்கும். இந்திப்படத்தைப் பார்த்திருப்பவர்களுக்குத் தெரியும் யார் பொதுமக்களில் ஒருவரான பாத்திரத்தைச் சிறப்பாக செய்தார்கள் என்று.

கூத்தன்