PDA

View Full Version : அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்.இலங்கைக்கு நெருங்கிறது நெருக்கடிநேசம்
17-09-2009, 06:40 AM
http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_39081537724.jpg

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்.உடனடியாக தங்கள் விடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என பிரிட்டன் கத்தோலிக்க பிஸப்பகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இலங்கை போருக்கு பின் கரித்தாஸ் தொண்டு அமைப்பின் செயல்படுகளை காண ஸிபில்ட் பிஸப் ஜான் ரொவ்ஸ்தோர்ன் மற்றும் ஜோன் அர்னால்ட் ஆகிய இருவரும் இலங்கைக்கு சென்றனர்.


யாருமே அனுமதிக்க படாதா தடுப்பு முகாம்களுக்கு சென்று பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.எட்டு நாட்கள் அங்கு இருந்த இருவரும் மக்கள் கன்னியாஸ்திரிகளை சந்திது பேசினர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது,
ஜன நெருக்கடியாக இருப்பதால் போதிய அளவு உணவு, சுகாதார ஸெவை இல்லை.அண்மையில் பெய்த மழையினால் அவர்களது அரைகுறை இருப்பிடங்களை கூட இழந்துள்ளனர்.மேலும் பருவ கால மழை வருவதால் அவர்கள் உடனடியாக அவர்களது விடுகளுக்கு செல்ல அனுமதிக்க படவேண்டும்

இலங்கை அரசு 180 நாட்களில் தமிழர்கள் அவர்களது கிராமங்களுக்கு திரிப்பி அனுப்பி வைக்க படுவர் என்று உறுதியளித்து. அதை இலங்கை அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்

ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

மனித உரிமை மீறல் குறித்து இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும்.இல்லையென்றால் இலங்கைக்கு வரிசலுகை கிடையாது என்று ஐரோப்பிய ஊனியன் அறிவித்துள்ளது.
மனித உறிமை மிறல் குரிது ஐரோப்பிய ஆனைகுழு தெரிவித்த கருத்துக்கு இதுவை இலங்கை அரசு பதிலளிக்க வில்லை.சில நாட்களுக்கு முன்பு ராஜபக்ஸெ நன்கு பேர் கொண்ட குழுவை இது சம்பந்தமாக அமைந்தார்.ஆவால் அவர்கள் தெரிவித்த கருத்துக்கு, தெளிவான, உறுதியான பதில் தேவை என்று ஐரோப்பிய ஊனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நன்றி தினமலர்

அன்புரசிகன்
17-09-2009, 06:49 AM
விடுதலைப்புலிகளை அழிக்கத்தான் இந்த முகாம்கள்... இதை ஏன் இன்றுவரை இலங்கைக்கு ஆதரவு தந்து கையுயர்த்தும் மேற்குலகம் எதிர்க்கவேண்டும். இன்றுவரை எந்த வித விவாதமும் இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திலோ ஐக்கியநாடுகள் சபையிலோ நிகழவில்லை. அண்மையில் சனல் 4 ஒளிபரப்பிய காணொளியை கண்டும் கைகுலாவும் நிலையிலுள்ளவர்களுக்கு ஏன் ரோஷம் வரவேண்டும்???

பால்ராஜ்
17-09-2009, 07:10 AM
கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து 'ரசிக்கும்(?)போது' ஏன் இது எனக்கும்
என்னைப் போல் பலருக்கும் உறைக்க வில்லை என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை..

வாரிசுகளுக்குப் பதவி என்று வரும்போது வீல் சேரில் சென்று காம்ப் செய்தாலும் சில விஷயங்களில் தந்தி மட்டும் அடித்து விட்டு நழுவி விடுபவர்களைப் பார்க்கும்போது ..

சில கேள்விகள்.. விடைகள் இல்லாமலேயே போய் விடுகின்றன...

அமரன்
17-09-2009, 08:30 AM
கீழ்நாடுகள் எல்லாம் அணிசேர்கின்றன எனும்படியான* தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் சிறிலங்காவின் நகர்வுகள் மேல்நாடுகளை மந்தமாக்கின்றனவோ என்னவோ..

அன்புரசிகன்
17-09-2009, 11:11 PM
சீனா இலங்கையின் பக்கம் இருக்கும் வரை எந்த கொம்பும் இலங்கையை அரட்டக்கூட முடியாது... அதற்கேற்ற வகையில் தான் மகிந்த அரசியல் நடத்துகிறார்... கையேந்தும் போது சட்டம் கதைத்தவர்களுக்கு கைகட்டி நிக்கும் போது மட்டும் பாசம் பொங்குகிறது...

இறைவன் என்ற ஒன்று இருந்தால் அவர் கண்திறந்தால் மட்டுமே ஈழத்து தமிழருக்கு விடிவு வரும்... தவிர தற்சமயம் வேறேதும் துணை அவர்களுக்கு இல்லை..

பாரதி
18-09-2009, 03:10 AM
ஐக்கிய நாடுகள் சபையில் கண்டனத்தீர்மானம் கூட கொண்டு வர முடியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை தூதர் கண்டிப்பாக வெளியேற்றப்படுகிறார்.
கச்சத்தீவுகள் அருகே மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் / கைது செய்யப்படுகிறார்கள்.

இதெல்லாம்.... யாருக்குமே தெரியவில்லை என்பதால் நெருக்கடி முற்றுகிறது என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பாக மட்டுமே இருக்கக்கூடும்.