PDA

View Full Version : பயமா!எனக்கா?

சரண்யா
16-09-2009, 05:33 AM
எல்லோரும் ஏதொ ஒரு விசயத்தில் பயந்த,பயப்படும் சிலவற்றை தங்களின் பாணியில்
பகிர்ந்துகொள்வீர்கள் என்று நினைத்து இந்த திரியை தொடங்குகிறேன்.
அதற்கு சும்மா பாம்பு கண்டால்,புலியைக்கண்டால் சொல்லாம....
நடைமுறையில் நீங்கள்/உங்களுக்கு தெரிந்தவர் பயந்த/எப்பொழுது பயப்படும் சிலவற்றை...
சரி பார்ப்போம் ....யாருக்கு எதில்லெல்லாம் பயம் என்று....

நானே தொடங்குகிறேன் ஆனால் சிரிக்க கூடாது.....
கிண்டலுக்கு சொல்லுவோமே....
மருத்துவரிடம் சொல்லி ஊசி போட சொல்லவா....
ஆமாம்.ஊசி தான் என்னொட பயமே!!!!!!

சிறு வயதில் ஊசி போடவா? கேட்பார் மருத்துவர்
அங்குள்ள இரண்டு வழியில்..
மருத்துவர் பக்கத்தில்,நேர் எதிரில்....
ஒரு வழியே ஒடிய போது அந்த பக்கமா அம்மா வந்து
சரி வேண்டாம் வா என்று சொல்லுவாங்க......

ஆனால்
அது ஏனோ இன்னும்...
ஊசி போடவா? கேட்பார் மருத்துவர் கிண்டலாக...
வேண்டாமென்றே மறுத்து விடுவேன்.
மாத்திரையிலே குணமாக்கிவிடுவார்.
அப்பறம்...
எதிரே பார்க்காமல்...
திரும்பும் போது யாராவது நின்றால்...
வேலை பார்த்த போது தலைமையாசிரியரிடம்
திட்டு வாங்கி விடுவோமோ... என்ற பயம்.
பொதுவா திட்டு......பயம் தான்.

ஓவியன்
16-09-2009, 06:43 AM
நல்லதொரு பயம்(ன்) தரும் திரி, சரண்யா...
இத்திரி எல்லோர் பயங்களையும் போக்கட்டும் :)

சிறு வயதில் ஜன்னலோரமாக படுத்துத் தூங்க பயம்,
பூதம் ஜன்னலூடாக கை நீட்டி என்னைத் தூக்கிடுமே....!! :D

வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்க்கப் பயம்,
அங்கும் பூதமென அப்போது பயம் காட்டியிருந்தார்கள்..!! :traurig001:

பின் ஈழத்தில் பொம்பரைக் கண்டால் பயம்,
செல் வெடித்தால் பயமென்ற நிலைகள் கடந்து,
இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ
என்ற கற்பனைகளில் வந்து நிற்கிறது என் பயம்..!! :icon_rollout:

நேசம்
16-09-2009, 06:54 AM
கற்பனைகளில் வந்து நிற்கிறது என் பயம்..!! :icon_rollout:

:ohmy:....இப்போ உள்ளே சரணாகதி பயம் என்ன....

arun
16-09-2009, 09:30 AM
கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு முதல் பாலை பேஸ் பண்ண பயம் :D

எங்கே டக் அவுட் ஆகி விடுவோமோ என்ற பயம் :confused:

கனவு ஏதேனும் கண்டு விட்டு திடீரென முழித்தால் என்னை அறியாமல் ஒரு பயம் :sprachlos020: :sprachlos020:

கடைசியாக பஸ் பயணத்தின்போது யாராதும் பிக்பாக்கெட் அடித்து விடுவார்களோ என்ற பயம் :icon_rollout: :icon_rollout:

aren
16-09-2009, 09:57 AM
நான் எதைத் தொடங்கினாலும் கொஞ்சம் பயத்துடனேயே தொடங்குவேன். இதுவும் ஒரு விதத்தில் நல்லதற்கே என்று பிறகு என்னையே தேத்திக்கொள்வேன். காரணம் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தால் நாம் அகலகால் வைக்காமல் கொஞ்சம் நிதானமாக கவனமாக செயல்படமுடியும் என்று நினைப்பேன்.

மற்றபடி எனக்கு பேய் பூதல் இதிலெல்லாம் பயமே கிடையாது, காரணம் எனக்கு பல* வருடங்களுக்கு முன்பே கல்யாணமாகிவிட்டது.

சரண்யா
16-09-2009, 10:19 AM

உங்களளளளளளளளளளளளளளள.......................

ஓவியன்
16-09-2009, 10:25 AM
மற்றபடி எனக்கு பேய் பூதல் இதிலெல்லாம் பயமே கிடையாது, காரணம் எனக்கு பல* வருடங்களுக்கு முன்பே கல்யாணமாகிவிட்டது.

மீள ஒரு தடவை சிங்கைக்கு வரும் எண்ணமொன்றும் உள்ளது எனக்கு..!! :D:D:icon_rollout:

அமரன்
16-09-2009, 11:00 AM
நான் எதைத் தொடங்கினாலும் கொஞ்சம் பயத்துடனேயே தொடங்குவேன். இதுவும் ஒரு விதத்தில் நல்லதற்கே என்று பிறகு என்னையே தேத்திக்கொள்வேன். காரணம் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தால் நாம் அகலகால் வைக்காமல் கொஞ்சம் நிதானமாக கவனமாக செயல்படமுடியும் என்று நினைப்பேன்.

மற்றபடி எனக்கு பேய் பூதல் இதிலெல்லாம் பயமே கிடையாது, காரணம் எனக்கு பல* வருடங்களுக்கு முன்பே கல்யாணமாகிவிட்டது.

உண்மையைச் சொல்லுங்க. இதை எழுதும் போது கூடப் பயத்துடந்தானே எழுதினீங்க.

பயப்படாமல் பயந்ததை சொல்லுவதுக்கு சந்தர்ப்பம் தந்த சரண்யாவுக்கு நன்றியும் பாராட்டும்.

நன்றாகக் கொளுந்து விட்டு எரியப்போகிறது பாருங்க. (ஆரென் அண்ணாவுக்கு ஓவி சொன்ன பதிலுடன் சம்பந்தப்படுத்திப் பாக்காதீங்க மக்கா)

samuthraselvam
16-09-2009, 11:03 AM
நல்ல பயத் திரி... ஆளுக்கொரு ஆசை மாதிரி ஆளுக்கொரு பயம்....

என் பயம், நாடு ராத்திரியில் சின்னதாக ஒரு சத்தம் வந்தாலும் இதயம் தடக் தடக் தான்...

அப்புறம் ஆராரோ பாடினாதான் தூக்கம்... முன்பு அம்மா, பின் கணவர், இப்போது சமுத்ரா.... நம் ஓவர் கற்பனையே பயம் தான்....

இருட்டை பார்த்தால் அதில் உருவம் தெரிவதுபோல தோன்றும்...

இது ஒரு பயம்... சமுத்ரா பிறந்த புதிதில் அவளை குளிப்பாட்டுவதை பார்க்க பயம்.. பார்த்து அழுதிருக்கிறேன் தெரியுமா?

கிணற்றில் நீச்சல் அடிக்கும் போது மோட்டார் பம்ப் ஓடிக்கொண்டிருந்தால் இரும்பு பம்ப் வழியாக மின்சாரம் பாயுமோ என்ற பயம்....

பல்சர் ஓட்டும்போது கீழே விழுந்து நான் பல்சருக்கு அடியில் மாட்டிவிடுவேனோ என்ற பயம்...

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...

அமரன்
16-09-2009, 11:07 AM

நல்லவேளை இதயம் துடிக்கிற சத்தத்தை கேட்டுப் பயப்படாமல் இருக்கீங்க.

மொத்தத்துல உங்களுக்கு எல்லாம் பயமயம்னு சொல்லுங்கோ. (ஆனாப் பாருங்க பட்டி மன்றத் திரியில என்னை என்னமா மாட்டி விடுறீங்க. அதுக்கு மட்டும் பயமே இல்லப்போல..

சரண்யா
16-09-2009, 11:47 AM
நல்ல பயத் திரி... ஆளுக்கொரு ஆசை மாதிரி ஆளுக்கொரு பயம்....

என் பயம், நாடு ராத்திரியில் சின்னதாக ஒரு சத்தம் வந்தாலும் இதயம் தடக் தடக் தான்...

அப்புறம் ஆராரோ பாடினாதான் தூக்கம்... முன்பு அம்மா, பின் கணவர், இப்போது சமுத்ரா.... நம் ஓவர் கற்பனையே பயம் தான்....

இருட்டை பார்த்தால் அதில் உருவம் தெரிவதுபோல தோன்றும்...

இது ஒரு பயம்... சமுத்ரா பிறந்த புதிதில் அவளை குளிப்பாட்டுவதை பார்க்க பயம்.. பார்த்து அழுதிருக்கிறேன் தெரியுமா?

கிணற்றில் நீச்சல் அடிக்கும் போது மோட்டார் பம்ப் ஓடிக்கொண்டிருந்தால் இரும்பு பம்ப் வழியாக மின்சாரம் பாயுமோ என்ற பயம்....

பல்சர் ஓட்டும்போது கீழே விழுந்து நான் பல்சருக்கு அடியில் மாட்டிவிடுவேனோ என்ற பயம்...

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...

ஆமா மின்சாரத்தால் தீ விபத்துகளும் ஏராளம்..
வண்டி ஓட்ட கத்துகலையா?
ஓட்டுனர் உரிமம் இருக்கா?இன்சுரன்சு போட்டீங்களா வண்டிக்கு?

சரண்யா
16-09-2009, 11:48 AM
எங்க அமரன் அண்ணா உங்க பயம் எது?

ரங்கராஜன்
16-09-2009, 05:48 PM
பயம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது பரீட்சை ரிசல்ட் தான்.

பரீட்சை ரிசல்ட் வந்து விட்டது என்று யாராவது சொன்னவுடன் வயிற்றில் பல ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்குமே அந்த உணர்வை எப்படி விவரிப்பது, பள்ளி காலங்களில் இருந்து அந்த பயம் இன்னும் என்னை துரத்துகிறது. கல்லூரி காலங்களில் நெட்டில் ரிசல்ட் பார்ப்பதற்குள் ஒரு பாதி உயிர் இருக்காது, அந்த நேரம் பார்த்து நெட் வேற hang வேறு ஆகி தவணை முறையில் மாங்கல்யத்தை அறுக்கும். முக்கால் உயிரும் போய் இருக்கும் அந்த நேரத்தில் நெட் சரியாகி ரிசல்ட் வரும்.................................... எல்லாவற்றிலும் பெயிலாகி இருப்பேன். அந்த நெட் கடை ஓனர் என்னை நாயை பார்ப்பது போல பார்ப்பான்.

உடனே நான் “ இது என்னுடையது இல்லை என்னுடைய தம்பியோட ரிசல்ட்” என்று கப்சா அடித்து விட்டு வருவேன்.

வெளியே வந்தவுடன் ரோட்டில் போகும் அனைவரும் என்னையே பார்க்கும் படியாக இருக்கும். ரொம்ப அசிங்கமாக இருக்கும்....... கோபமாக வரும்.......... நேராக ஒரு பிரியாணி கடைக்குள் சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு வெளியே வருவேன்.................. மூடு மாறி விடும், இப்போ யாரும் என்னை பார்ப்பது போல இருக்காது, சந்தோஷமாக வீட்டுக்கு போவேன். அடுத்த காலேஜில் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள எல்லா டிரைனிங்கும் எடுத்துக் கொண்டு. அடுத்த ஒரு வாரம் பொண்டாட்டி செத்தவன் போல காலேஜுக்கு சோகமாக போவேன்......... அப்புறம் பழைய குருடி கதைவை திறடி கதை தான்.................

இப்போ கூட தேர்தல் ரிசல்ட், மேட்ச் ரிசல்ட், மற்றும் பில்ட் டெஸ்டு ரிசல்ட் என்றால் கூட வயிற்றில் புளி கரைக்கும்.

என் பாசமலர் லீலுமா பைக்கேல்லாம் ஓட்டுமா??????? அடக்கொடுமையே அதுவும் பல்சர்............. நாசமா போச்சு.

வாங்க சரண்யா நல்வரவு.

அக்னி
16-09-2009, 07:00 PM
மற்றபடி எனக்கு பேய் பூதல் இதிலெல்லாம் பயமே கிடையாது, காரணம் எனக்கு பல* வருடங்களுக்கு முன்பே கல்யாணமாகிவிட்டது.
ஆமாமா... அதான் உளறுறதப் பார்த்தாலே புரியுது...
ஏதோ குளறுற சத்த(க்)ம் கேக்கலையோ...
:rolleyes:

ஓவியரே...
சிங்கைக்குப் போய் ஆரென் அண்ணிக்கிட்ட போட்டுக்கொடுத்தா...
நடக்கிறதே வேற...

ஏலுமெண்டா... தைரியமிருந்தா... போட்டுக்கொடும் பார்க்கலாம்...
சவால்... விடுறன்...
மூட்டை கட்டித் தூக்கிடுவோம் ஆட்டோல... ஜாக்கிரதை...

சரண்யா
17-09-2009, 02:33 AM
பயம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது பரீட்சை ரிசல்ட் தான்.

பரீட்சை ரிசல்ட் வந்து விட்டது என்று யாராவது சொன்னவுடன் வயிற்றில் பல ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்குமே அந்த உணர்வை எப்படி விவரிப்பது, பள்ளி காலங்களில் இருந்து அந்த பயம் இன்னும் என்னை துரத்துகிறது. கல்லூரி காலங்களில் நெட்டில் ரிசல்ட் பார்ப்பதற்குள் ஒரு பாதி உயிர் இருக்காது, அந்த நேரம் பார்த்து நெட் வேற hang வேறு ஆகி தவணை முறையில் மாங்கல்யத்தை அறுக்கும். முக்கால் உயிரும் போய் இருக்கும் அந்த நேரத்தில் நெட் சரியாகி ரிசல்ட் வரும்.................................... எல்லாவற்றிலும் பெயிலாகி இருப்பேன். அந்த நெட் கடை ஓனர் என்னை நாயை பார்ப்பது போல பார்ப்பான்.

உடனே நான் “ இது என்னுடையது இல்லை என்னுடைய தம்பியோட ரிசல்ட்” என்று கப்சா அடித்து விட்டு வருவேன்.

வெளியே வந்தவுடன் ரோட்டில் போகும் அனைவரும் என்னையே பார்க்கும் படியாக இருக்கும். ரொம்ப அசிங்கமாக இருக்கும்....... கோபமாக வரும்.......... நேராக ஒரு பிரியாணி கடைக்குள் சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு வெளியே வருவேன்.................. மூடு மாறி விடும், இப்போ யாரும் என்னை பார்ப்பது போல இருக்காது, சந்தோஷமாக வீட்டுக்கு போவேன். அடுத்த காலேஜில் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள எல்லா டிரைனிங்கும் எடுத்துக் கொண்டு. அடுத்த ஒரு வாரம் பொண்டாட்டி செத்தவன் போல காலேஜுக்கு சோகமாக போவேன்......... அப்புறம் பழைய குருடி கதைவை திறடி கதை தான்.................

இப்போ கூட தேர்தல் ரிசல்ட், மேட்ச் ரிசல்ட், மற்றும் பில்ட் டெஸ்டு ரிசல்ட் என்றால் கூட வயிற்றில் புளி கரைக்கும்.

என் பாசமலர் லீலுமா பைக்கேல்லாம் ஓட்டுமா??????? அடக்கொடுமையே அதுவும் பல்சர்............. நாசமா போச்சு.

வாங்க சரண்யா நல்வரவு.
நன்றிdaks அவர்களே..
பெயிலாகிட்டு பிரியாணி சாப்பாடா?
சோகமாக வைத்துக் கொள்ள எல்லா டிரைனிங்கும் எடுத்துக் கொண்டு.......:):)

சரண்யா
17-09-2009, 02:38 AM
மிரட்டல் விடும்
அக்னி எங்க
நீங்க சொல்ல.... உங்க பயம் எது???????

arun
17-09-2009, 05:49 AM
நான் எதைத் தொடங்கினாலும் கொஞ்சம் பயத்துடனேயே தொடங்குவேன். இதுவும் ஒரு விதத்தில் நல்லதற்கே என்று பிறகு என்னையே தேத்திக்கொள்வேன். காரணம் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தால் நாம் அகலகால் வைக்காமல் கொஞ்சம் நிதானமாக கவனமாக செயல்படமுடியும் என்று நினைப்பேன்.

மற்றபடி எனக்கு பேய் பூதல் இதிலெல்லாம் பயமே கிடையாது, காரணம் எனக்கு பல* வருடங்களுக்கு முன்பே கல்யாணமாகிவிட்டது.

கல்யாணம் ஆனா பேய் பூதத்துக்கு பயப்பட தேவை இல்லையா...:)

ஏதோ என்னால முடிஞ்சது :D :D

அக்னி
17-09-2009, 06:12 AM
மிரட்டல் விடும்
அக்னி எங்க
நீங்க சொல்ல.... உங்க பயம் எது???????
நீங்க கேக்கிறது பயம் எனக்கு...
என்னோட பயத்தைச் சொல்லவும் பயம் எனக்கு...
;)

இன்னும் சில, பல பயங்கள் வரட்டுமே.
ஏதாச்சும் நினைவை நிரடிவிட்டால் சொல்லுவோமில்ல. :rolleyes:

ஏதோ என்னால முடிஞ்சது :D :D
அட... நம்ம கட்சி...

samuthraselvam
17-09-2009, 09:27 AM
ஆமா மின்சாரத்தால் தீ விபத்துகளும் ஏராளம்..
வண்டி ஓட்ட கத்துகலையா?
ஓட்டுனர் உரிமம் இருக்கா?இன்சுரன்சு போட்டீங்களா வண்டிக்கு?

கத்துகிட்டாச்சு.....:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:

என் திருமணத்திற்கு முன் வந்த என் பிறந்த நாளின்போது என் கணவர் பல்சர் ஓட்டக் கத்துக் கொடுத்தார்...:liebe028:

இப்போது எல்லா விதமான டூ வீலர்களும் ஓட்டுவேன்...:medium-smiley-115:

லைசென்ஸ் இல்லை... :aetsch013:
வண்டிக்கு இன்சூரன்ஸ் இருக்கு..:icon_b:

எனக்கு தான் இல்லை...:medium-smiley-100: அதுதான் பயமே....:medium-smiley-029:

samuthraselvam
17-09-2009, 10:07 AM
உடனே நான் “ இது என்னுடையது இல்லை என்னுடைய தம்பியோட ரிசல்ட்” என்று கப்சா அடித்து விட்டு வருவேன்.

நேராக ஒரு பிரியாணி கடைக்குள் சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு வெளியே வருவேன். அடுத்த காலேஜில் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள எல்லா டிரைனிங்கும் எடுத்துக் கொண்டு. அடுத்த ஒரு வாரம் பொண்டாட்டி செத்தவன் போல காலேஜுக்கு சோகமாக போவேன்......... அப்புறம் பழைய குருடி கதைவை திறடி கதை தான்.................

என் பாசமலர் லீலுமா பைக்கேல்லாம் ஓட்டுமா??????? அடக்கொடுமையே அதுவும் பல்சர்............. நாசமா போச்சு.

உங்களை பெயலாக்கருதுக்கு தம்பி இருக்கான்? பாவம் நீங்க....ஹா ஹா..:lachen001:

பெயிலானா சந்தோசத்தைக் கொண்டாடவே பிரியாணி சாப்பிட போறீங்கன்னா....பாசான துக்கத்தை எப்படிக் கொண்டாடுவீங்க?:confused:

பெயிலாகி பெயிலாகிதான் B.E. பாஸ் பண்ணினியா?:aetsch013::aetsch013:

உன் பாசமலர் பல்சர் மட்டும் ஒட்டாது... மாட்டு வண்டியிலிருந்து இப்ப வந்திருக்கும் புது மாடல் பைக் வரைக்கும் ஓட்டும்.... டிரில்லர் ஓட்டும், டிராக்டர் கூட ஓட்டும்.... :medium-smiley-044::medium-smiley-044:

பாரதி
17-09-2009, 02:27 PM
தலைப்பைக் கண்டதும்.... பயமற்றவர் என்ற தோற்றமே வந்தது. திரியைப் படித்த பின்னரே விளங்கியது. பயம் காலத்திற்கு காலம் மாறுபட்டு கொண்டே இருக்குமே...?

ஆசிரியரின் கையில் இருக்கும் பிரம்பு, இருள், நீங்கள் கூறியது போல மருத்துவரின் ஊசி..... ..... ...... மின்சாரம், பணியிட வாயுக்கள்.... என்று மாறிக்கொண்டே இருக்கிறது. இப்போதைக்கு மனிதர்களாக நடிப்பவர்கள் மேல்தான் பயம்.

வானதிதேவி
17-09-2009, 02:46 PM
நன்றாக நயம்பட இயம்பினிர்கள் பாரதி.எனக்கும் பயம் என்று உண்டு.தாளிக்கும் போது ஒரு ஆறடி தள்ளி நி்ன்றே கடுகு மற்ற பொருட்களை போடும் பழக்கம் இன்று வரை மாறவில்லை.

இறைநேசன்
17-09-2009, 03:06 PM
நடக்க போகும் எது ஒன்ற்றையும் மனிதனால் நிர்ணயிக்க முடியாத நிலையில், ஏதாவது ஒற்றை குறித்து பயப்படுவது என்பது எல்லோருக்கும் வாடிக்கையே!

நான் சிறுவயதில் மிகவும் பயப்படுவது "நாய்"க்குத்தான், ஏனெனில் எனது மாமா ஒருவர் நாய் கடித்து சில நாட்கள் கழித்து, நாய் போலவே குறைத்து இறந்து போனார். இன்று நினைத்தாலும் மனதெல்லாம் பதறும் சம்பவம் அது.

இப்பொழுது நான் பயப்படுவது இறைவன் ஒருவருக்குத்தான். போதிய இறைபயம் இருந்தால், மற்ற பயங்கள் நெருங்காது என்றே நான் கருதுகிறேன். இறைவனுக்கு ஏன் பயப்படவேண்டும் என்று கேட்கலாம். அது நம் தகப்பனுக்கு கொடுக்க கூடிய மரியாதயுடன் கூடிய ஒருவகை பயம்.

சரண்யா
18-09-2009, 02:25 AM
/இப்போதைக்கு மனிதர்களாக நடிப்பவர்கள் மேல்தான் பயம்./
நன்றாக சொன்னீர்கள் பாரதி அவர்களே...
தலைப்பு பார்த்தவுடனே பார்க்கத் தோணணும் ல.......

சரண்யா
18-09-2009, 02:29 AM
/இறைவனுக்கு ஏன் பயப்படவேண்டும் என்று கேட்கலாம். அது நம் தகப்பனுக்கு கொடுக்க கூடிய மரியாதயுடன் கூடிய ஒருவகை பயம்/.
இறைநேசன் பெயரிலே இருக்கிற்து இறைமை ஏன் என்று தான் கேட்க தோன்றுகிறது...
அப்படியென்றால் மனசாட்சி என்றா......

அமரன்
22-09-2009, 08:38 AM
என் ஒன்பதாவது வயதில்..

நான் என்னதான் குழப்படி செய்தாலும் பெரியோரை மதிக்காத போது அம்மாவுக்கு கோபம் உச்சத்தில் உருவாகும். ஒரு முறை அம்மா வேலைக்கு சென்ற நேரத்தில் என் சித்தியை போடி என்று சொல்லி விட்டேன். சொன்ன பிறகுதான் சித்தி அம்மாவுக்கு சொன்னால்..? அம்மா அடி பின்னிடுவாங்களே என்பது உறைத்தது. அம்மாவிடம் சொல்லிடாதீங்க சித்தி என்று கேட்க என் மனம் ஒப்பவில்லை. அந்தளவு....! அம்மா வரும் நேரம் நெருங்கியது. எனக்கோ பயம் அடிவயிற்றை முட்டியது. அம்மா வரும் போது தூங்கிடலாம் என்று நினைச்சேன். தூக்கம் வந்தால் தானே. போர்வையைப் போர்த்திட்டு இறுகக் கண்களை மூடிக்கொண்டு கிடந்தேன். அம்மா வந்தாங்க.. என்னைத் தேடினாங்க.. எனக்கு கலப்பன் அடிக்க தொடங்கிச்சு. படுத்திருக்கான் என்று சித்தி சொன்னது கேட்டது. மாலைவேளையில அவன் படுக்கிறதில்லையேன்னு அம்மா பதில்கேள்வி கேட்டுக்கொண்டு வந்து என்னைத் தொட்டாங்க. லேசாகக் காய்ச்சல் கண்டது போல இருந்துச்சு. அப்புறம் என்ன ஒரே களேபரம்தான். அந்த களேபரத்தில என் பயமும் போச்சு. என் இறுக்கமும் போச்சு..

விகடன்
29-10-2009, 10:52 AM
ஓவியனைப்போலவே ஊரிலிருந்தபோது பொம்பர் சத்தம், அதைத்தொடர்ந்து எங்காவது எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் அழுகுரல். இதுவே சி சிறு பிராயத்தில் சில காலத்திற்கு தொடர்ந்தபடியால், யாராவது அழுதாலே எனக்கு ஒருவகை பீதி தொற்றிவிடும். அதுவே இப்பொ கடுப்பாகி யார் அழுதாலும் அறவே பிடிக்காது. தேவையின்றி அழிவோரைக் கண்டால் கோபந்தான் வரும்.

எனக்கு இரு வர்க்கத்தின்மீது மட்டுந்தான் பயம்.
என்னைய் எதிரியாக நினைப்பவர்கள், நான் எதிர்த்தவர்கள்.

சரண்யா
29-10-2009, 12:35 PM
ஓ..அமரன் அவர்களே..அம்மாட்ட அவ்வளவு பயமா...
/என்னைய் எதிரியாக நினைப்பவர்கள், நான் எதிர்த்தவர்கள்/
ஆம் விராடன் அவர்க்ளே...நாம் என்ன செய்கிறோமோ அதோட பிரதிபலிப்பு தான் ....ஆனால் சில நேரத்திலும் தவறும் நடக்க வாய்ப்பு இருக்கு..புரிந்து கொள்ளாத்தால்...கால்ம் புரிய வைத்த பின்னர் எதிரிகளும் நண்பர்கள் ஆக வாய்ப்பு இருக்கு....
நன்றிகள் இருவருக்குமே...பகிர்ந்து கொண்டதற்கு...

அன்புரசிகன்
30-10-2009, 03:33 AM
சிறிய வயதில் சில தெருநாய்களை பார்க்கும் போது பயம். கனவில் காணவே பயம். காரணம் எனக்கு அனேக கனவுகள் பயங்கரமாகத்தான் இருக்கும். நிஜத்தில் பாம்புகளுக்கு பயம் இல்லை. ஆனால் கனவில் கெடிகலக்கும்...

கட்டாரில் இருக்கும் போது நண்பர் ஒருவரின் கார் டயர் வெடித்து கார் அருகிலிருந்த இரும்பு வேலியில் மோதியிருந்தத. ஏறத்தாள ஒருவருடத்திற்கு முன் ஓமான் மஸ்கட் இலிருந்து சலலா சென்றபோது வாகனம் 200-240km/h ல் போகும். இருந்தால் போல் ஒரு எண்ணம் வரும். வாகன டயர் வெடித்தால்......................... என்ற எண்ணம் வந்ததும் தானாக வேகம் குறையும். கொஞ்சநேரம் 150 இற்கு வந்து அப்புறம் என்னையறியாமலே வேகத்தினை அதிகரித்துவிடுவேன். பின் மீண்டும் குறையும். இப்படி மாறி மாறி நடந்தது...

------------------

ஓவியன் ஒரு பயத்தினை மறைத்துவிட்டார்... அது நான் ஓமானில் 2008ம் ஆண்டுக்கு பிறகு அவதானித்தது... :D :D :D

அன்புரசிகன்
30-10-2009, 03:35 AM
மற்றபடி எனக்கு பேய் பூதல் இதிலெல்லாம் பயமே கிடையாது, காரணம் எனக்கு பல* வருடங்களுக்கு முன்பே கல்யாணமாகிவிட்டது.

மீள ஒரு தடவை சிங்கைக்கு வரும் எண்ணமொன்றும் உள்ளது எனக்கு..!! :D:D:icon_rollout:

voip இல் சிங்கைக்கு அழைக்க இலவசமாம். ஆரன் அண்ணாவின் வீட்டு தொலைபேசி நம்பர் இல்லையோ??? சாவகாசமா எடுத்துரைக்கலாமே...:lachen001:

எவ்வளவு விரைவில் ஆரன் அண்ணாவுக்கு பூதல் மேல் பயம் வருகிறது என்று பார்க்கலாம் என்ற நப்பாசையில்...............

விகடன்
31-10-2009, 11:21 AM
ஓவியனை விடுடா.
இப்ப எல்லாம் அவருக்கு மனைவி என்றால்த்தான் பயமாம்.
அந்தப்பயங்கள் எல்லாம் புறக்கணிக்கத்தக்கவையாகிவிட்டனவாம் :D.

சரண்யா
22-11-2009, 02:23 AM
தொடருங்கள்...பகிர்ந்து கொள்ளுங்கள்..

ஜனகன்
22-11-2009, 08:29 PM
எனக்கு பேயை கண்டால் பயம்

சரண்யா
23-11-2009, 12:16 AM
ஒ..பார்த்திருக்கீங்களா..