PDA

View Full Version : ஐசிசி சாம்பியன் டிராபிஅறிஞர்
15-09-2009, 10:22 PM
2009 ஆண்டிற்கான சாம்பியன் டிராபி ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது.

அதுபற்றிய கருத்துக்களை இங்கு பகிர்வோம்.

பயிற்சி ஆட்டம்

மோதும் அணிகள் நாள்-இந்திய நேரம்

நியூசி. - வாரியர்ஸ் செப்.18, மதியம் 1 மணி
தெ.ஆ. - வெ.இ. செப்.18, மாலை 6 மணி
பாக். - இலங்கை செப்.18, மாலை 6 மணி
இலங்கை - வெ.இ. செப்.20, மதியம் 1 மணி
இந்தியா - நியூசி. செப்.20, மாலை 6 மணி
பாக். - வாரியர்ஸ் செப்.20, மாலை 6 மணி

போட்டி

தெ.ஆ. - இலங்கை செப்.22, மாலை 6 மணி
பாக். - வெ. இ. செப்.23, மாலை 6 மணி
தெ. ஆ. - நியூசி. செப்.24, மதியம் 1 மணி
இங்கி. - இலங்கை செப்.25, மாலை 6 மணி
ஆஸி. - வெ. இ. செப்.26, மதியம் 1 மணி
இந்தியா - பாக். செப்.26, மாலை 6 மணி
நியூசி. - இலங்கை செப்.27, மதியம் 1 மணி
தெ.ஆ. - இங்கிலாந்து செப்.27, மாலை 6 மணி
ஆஸி. - இந்தியா செப்.28, மாலை 6 மணி
இங்கி. - நியூசி. செப்.29, மாலை 6 மணி
ஆஸி. - பாக். செப்.30, மதியம் 1 மணி
இந்தியா - வெ. இ. செப்.30, மாலை 6 மணி
முதல் அரையிறுதி அக்.2, மாலை 6 மணி
2வது அரையிறுதி அக்.3, மாலை 6 மணி
இறுதி போட்டி அக்.5, மாலை 6 மணி

aren
16-09-2009, 01:31 AM
இந்தியா கோப்பையை வெல்வதற்கு இப்பொழுது சந்தர்பம் சாதகமாக உள்ளது.

arun
16-09-2009, 09:21 AM
தற்போதுள்ள சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்கா நமக்கு சவாலாக இருக்கும் என நினைக்கிறேன் ஆஸ்திரேலியாவையும் குறைத்து மதிப்பிட முடியாது ஆக மொத்தத்தில் கடினமான டூராக இருக்கும்

குறிப்பு : வீரர்கள் அனைவரும் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் கொஞ்சம் கடினமே

arun
17-09-2009, 10:32 AM
போட்டிக்கான அட்டவணை

Tue Sep 22 18:00 IST Group B - South Africa v Sri Lanka

Wed Sep 23 18:00 IST Group A - Pakistan v West Indies

Thu Sep 24 13:00 IST Group B - South Africa v New Zealand

Fri Sep 25 18:00 IST Group B - England v Sri Lanka

Sat Sep 26 13:00 IST Group A - Australia v West Indies

Sat Sep 26 18:00 IST Group A - India v Pakistan

Sun Sep 27 13:00 IST Group B - New Zealand v Sri Lanka

Sun Sep 27 18:00 IST Group B - South Africa v England

Mon Sep 28 18:00 IST Group A - Australia v India

Tue Sep 29 18:00 IST Group B - England v New Zealand

Wed Sep 30 13:00 IST Group A - Australia v Pakistan

Wed Sep 30 18:00 IST Group A - India v West Indies

Fri Oct 2 18:00 IST 1st Semi-Final - TBC v TBC (A1 v B2)

Sat Oct 3 18:00 IST 2nd Semi-Final - TBC v TBC (B1 v A2)

Mon Oct 5 18:00 IST Final - TBC v TBC

ஓவியன்
17-09-2009, 10:57 AM
பெளத்த மதகுருமார்களின் ஆசிர்வாதத்துடன் களமிறங்கியுள்ளார் சங்க..!! :)http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/108327.jpg

aren
17-09-2009, 09:16 PM
ஓவியன் சொல்றதைப் பார்த்தால் பரிசு இலங்கைக்குத்தான் போலிருக்கு

பால்ராஜ்
19-09-2009, 07:51 AM
நான் எனது பயணத்திட்டங்களை மாற்ற வேண்டுமா என்ற யோசனையில் உள்ளேன்..

பார்ப்போம்..

பால்ராஜ்
19-09-2009, 07:52 AM
என் வோட்டு வெஸ்ட் இண்டீஸுக்கே...
பாவம் ரொம்ப நாளாச்சு அவங்க ஜெயிச்சு..

ஒரு காலத்தில் சிங்கங்களாக இருந்தவர்களாயிற்றே!!

அமரன்
19-09-2009, 08:06 AM
ம்ம்ம்ம்..

வேஸ்டு இன்டீஸ் ஆகிடக் கூடாது என்பதுதான் என்னாசையும்..

நேசம்
19-09-2009, 08:54 AM
எல்லாரும் புதியவர்களாக இருப்பதால் அமரன் சொல்வது போல் வேஸ்டு இண்டிஸ் ஆகிவிடும்

ஓவியன்
19-09-2009, 09:05 AM
ஒரு காலத்தில் சிங்கங்களாக இருந்தவர்களாயிற்றே!!

ஆமாம் இந்த தடவை மைதானத்தில் ‘அ’ வைத் துடைத்தெறிந்து சிங்கங்களாகவே மாறிக் காட்டட்டும்.... :)

பால்ராஜ்
19-09-2009, 03:43 PM
டார்க் ஹார்ஸ் என்கிற கறுப்புக் குதிரையைப் பற்றி எத்தனை பேர் கேட்டிருக்கிறர்களோ என்னவோ.. 83-இல் கபில் தேவின் டீமும் அப்படித்தான் இருந்தது..

எப்படியோ ஓரளவு நம்ம டீம் வந்தால் சரி..

எங்கோ கேட்டது செவிகளில் ரீங்கரிக்கிறது.. தென் ஆப்பிரிக்க இரண்டு முறை தவறி விட்டது மழை காரணமாக என்று...!!

அப்படியானால் அவர்கள் வருண பகவானுக்கு யாகம் செய்து கொண்டிருப்பார்கள்... தங்கள் திறமையை நம்பாத பட்சம்....

அய்யா
21-09-2009, 11:56 AM
இந்திய அணிக்கு அரையிறுதி நிச்சயம்! இறுதிப்போட்டி லட்சியம்!!

தசரா விடுமுறையில் இருக்கும் அனைவரும் பார்த்து டிஆர்பியை உயர்த்தவேண்டுமே அதற்காகவாவது பாடுபடுவார்கள்.

அய்யா
21-09-2009, 11:57 AM
முதல்நாளே படு சூடான மோதலைக் கண்ணுறலாம் போலிருக்கிறதே!

aren
21-09-2009, 04:26 PM
போட்டியிலேயே இல்லாத பங்களாதேஷ் குழுவிற்கு எதற்கு ஓட்டு போடவேண்டும். அது நியூஜிலாந்தாக இருக்கவேண்டும். யாராவது அதை மாற்றுங்களேன்.

arun
22-09-2009, 07:11 AM
இந்திய அணிக்கு அரையிறுதி நிச்சயம்! இறுதிப்போட்டி லட்சியம்!!

தசரா விடுமுறையில் இருக்கும் அனைவரும் பார்த்து டிஆர்பியை உயர்த்தவேண்டுமே அதற்காகவாவது பாடுபடுவார்கள்.

ஆம் தாங்கள் சொல்வதும் சரி என்றே படுகிறது :D

அறிஞர்
22-09-2009, 01:59 PM
இலங்கை சிறப்பாக விளையாடுகிறது. தில்ஷான் கலக்குகிறார்.

131/1 (20.2 ஓவர்)

அறிஞர்
22-09-2009, 02:25 PM
தில்ஷான் - 100 ரன்கள்..
இலங்கை 174/2 (28.1 ஓவர்கள்)

இலங்கை 320 ரன்களுக்கு மேல் எடுத்தால்.. போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

பால்ராஜ்
22-09-2009, 03:01 PM
இந்த இலங்கைப் பசங்க எப்படி மட்டையை வீசினாலும் பந்து மேலேயே படுகிறது..

வெஸ்ட் இண்டீஸ் வந்தால்தான் இவர்களைக் கட்டுப்படுத்த முடியும்....!!??

ஓவியன்
22-09-2009, 04:22 PM
இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 319 ஓட்டங்கள், இன்னும் ஓட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருந்திருந்தாலும் இறுதி ஓவர்களில் தென்னாபிரிக்க அணி ஓட்டங்களைக் கணிசமாகக் கட்டுப் படுத்தி விட்டது...

அறிஞர்
22-09-2009, 06:34 PM
மெண்டீஸ் சுழலில்.. தென்னாப்பிரிக்கா சிக்கி தவிக்கிறது...

136/4 (25 ஓவர்)

அறிஞர்
22-09-2009, 08:30 PM
முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. மழையால் பாதியில் ஆட்டம் நிறுத்தப்பட்டது... ரன்விகிதத்தில் இலங்கை நல்ல முன்னிலை இருந்ததால்... வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

அய்யா
23-09-2009, 04:05 AM
சாம்பியன்ஸ் தொடர் ; இலங்கை 55 ரன்களில் அபார வெற்றி

http://l.yimg.com/a/i/in/cricket/ss/september/91022750.jpg

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை "பி" பிரிவு முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை 37.4 ஓவர்களில் எடுத்திருந்தது. இது டக்வொர்த் லூயிஸ் முறையில் இலங்கை அணியைக் காட்டிலும் 55 ரன்கள் குறைவாகும்.

பூவாதலையா வென்ற கிரகாம் ஸ்மித் முதலில் தவறாக இலங்கையை பேட் செய்ய அழைத்தார். அந்த தவற்றின் விளைவாய் அவரது பந்து வீச்சாளர்களும் நிறைய தவறுகள் செய்தன. தில்ஷானுக்கு நிறைய பந்துகளை வாகாக போட்டுக் கொடுத்தனர்.

ஜெயசூரியா ஆட்டமிழந்த பிறகு சங்கக்காரா, தில்ஷான், பிறகு ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோரிடையே சேர்க்கப்பட்ட ரன்கள் மட்டுமல்லாது அந்த ரன்கள் எடுக்கப்பட்ட வேகம் தென் ஆப்பிரிக்கா துரத்த முடியாத ஒரு இலக்கை நிர்ணயிக்க வைத்தது. கடைசி 10 ஓவரில் 85 ரன்களை தென் ஆப்பிரிக்கா விட்டுக் கொடுத்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, அம்லாவை முதலில் இழந்தாலும், காலிஸ், ஸ்மித் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அஜந்தா மென்டிஸ் பந்து வீச அழைக்கப்பட்டவுடன், அவரை இது வரை இந்தியாவும் மற்ற நாடுகளும் எப்படி விளையாடியது என்பதை அறியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவர் பந்துகளை அடிக்க முயன்றனர்.

இதனால் ஸ்மித், காலிஸ், டுமினி ஆகியோர் அவரிடம் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மீள முடியாத நிலைக்குச் சென்றனர்.

கடைசியில் 37.4 ஓவர்களில் 205/7 என்ற நிலையில் மழை வந்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட இலங்கை முதல் போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஜந்தா மென்டிஸ் 7 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அபாரமாக விளையாடி 106 ரன்களைக் குவித்த திலக ரத்னே தில்ஷான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்:

இலங்கை 319/8
தில்ஷான் 106
ஜெயவர்தனே 77

தென் ஆப்பிரிக்கா 206/7
மென்டிஸ் 3/30

மதி
23-09-2009, 06:39 AM
சந்தடி சாக்கில் இந்தியா முதலிடத்துக்கு வந்துடுச்சாமே..?? எத்தனை நாளைக்கு..?

தாமரை
23-09-2009, 07:19 AM
இன்னும் இரண்டு நாளைக்கு...

அப்புறம் நியூசிலாந்தை தென்னாப்பிரிக்கா அடிச்சு மேல வரும்...

அரையிறுதி -

இந்தியா -தென்னாப்பிரிக்கா,
இலங்கை - ஆஸ்திரேலியா

இறுதிப் போட்டி

இந்தியா - இலங்கை

சாம்பியன் - இலங்கை.

அமரன்
23-09-2009, 07:40 AM
ஆரூடம் சொல்ல ஆராம்பிச்சாச்சா..

.

பால்ராஜ்
23-09-2009, 08:01 AM
தென்னாப்பிரிக்காவின் மற்றொரு வெற்றி வாய்ப்பை
இழக்கச் செய்த மழைக்கு கடும் கண்டனங்கள்....

ஹிந்து... பத்திரிக்கை சொல்வது அப்ஸெட் என்று..

ஏறக்குறைய எதிர்பார்த்தது தானே....

வேறு ஒரு தீவு வந்து தான் இலங்கையின் வெற்றித் தொடருக்கு தீர்வு காண முடியும்..???

ஓவியன்
23-09-2009, 08:11 AM
இலங்கையின் துடுப்பாட்ட வரிசை பலமாகத்தானுள்ளது, ஆனால் டில்சான் மற்றும் சனத் விரைவில் ஆட்டமிழந்தால் இலங்கை இந்தளவுக்கு ஓட்டங்களைக் குவிக்குமா என்பது சந்தேகமே....

ஓவியன்
23-09-2009, 08:20 AM
சாம்பியன்ஸ் தொடர் ; இலங்கை 55 ரன்களில் அபார வெற்றி

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை "பி" பிரிவு முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை 37.4 ஓவர்களில் எடுத்திருந்தது. இது டக்வொர்த் லூயிஸ் முறையில் இலங்கை அணியைக் காட்டிலும் 55 ரன்கள் குறைவாகும்.

பூவாதலையா வென்ற கிரகாம் ஸ்மித் முதலில் தவறாக இலங்கையை பேட் செய்ய அழைத்தார். அந்த தவற்றின் விளைவாய் அவரது பந்து வீச்சாளர்களும் நிறைய தவறுகள் செய்தன. தில்ஷானுக்கு நிறைய பந்துகளை வாகாக போட்டுக் கொடுத்தனர்.

ஜெயசூரியா ஆட்டமிழந்த பிறகு சங்கக்காரா, தில்ஷான், பிறகு ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோரிடையே சேர்க்கப்பட்ட ரன்கள் மட்டுமல்லாது அந்த ரன்கள் எடுக்கப்பட்ட வேகம் தென் ஆப்பிரிக்கா துரத்த முடியாத ஒரு இலக்கை நிர்ணயிக்க வைத்தது. கடைசி 10 ஓவரில் 85 ரன்களை தென் ஆப்பிரிக்கா விட்டுக் கொடுத்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, அம்லாவை முதலில் இழந்தாலும், காலிஸ், ஸ்மித் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அஜந்தா மென்டிஸ் பந்து வீச அழைக்கப்பட்டவுடன், அவரை இது வரை இந்தியாவும் மற்ற நாடுகளும் எப்படி விளையாடியது என்பதை அறியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவர் பந்துகளை அடிக்க முயன்றனர்.

இதனால் ஸ்மித், காலிஸ், டுமினி ஆகியோர் அவரிடம் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மீள முடியாத நிலைக்குச் சென்றனர்.

கடைசியில் 37.4 ஓவர்களில் 205/7 என்ற நிலையில் மழை வந்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட இலங்கை முதல் போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஜந்தா மென்டிஸ் 7 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அபாரமாக விளையாடி 106 ரன்களைக் குவித்த திலக ரத்னே தில்ஷான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐயா, விளையாட்டுச் செய்திதானென்றாலும் தாங்கள் இந்தச் செய்தியைப் பிரதி செய்த லங்காஸ்ரீ (http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1253672699&archive=&start_from=&ucat=4) இணையத்தளத்துக்கு நன்றி சொல்லி இருக்கலாமே...

நேசம்
23-09-2009, 08:37 AM
இலங்கையின் துடுப்பாட்ட வரிசை பலமாகத்தானுள்ளது, ஆனால் டில்சான் மற்றும் சனத் விரைவில் ஆட்டமிழந்தால் இலங்கை இந்தளவுக்கு ஓட்டங்களைக் குவிக்குமா என்பது சந்தேகமே....
இந்த போட்டியில் சவூத் ஆப்ரிக்காஅ அணித்தலைவர் டாஸ் வென்றும் தவறுதலாக பீல்டிங்யை தேர்வு செய்து விட்டாஅர் என்று கூறப்படுகிறது.ஏனென்றால் அவர்கள் முதலில் பேட்டிங் செய்து இருந்தாலும் இந்தளவு ரன்களை எடுத்து இருக்கலாம்.ஏனென்றால் பிட்ச் தன்மை அப்படிப்பட்டது.இதை இலங்கை விரார்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.அவ்வளவு தான்

சங்காராஅ மற்றும் ஜயவர்த்தனா நல்ல பார்மில் இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடியவர்கள்

அறிஞர்
23-09-2009, 01:51 PM
மேற்கு இந்தியா தடுமாறுகிறது... 51/7 (15 ஓவர்கள்). பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

ஓவியன்
23-09-2009, 01:57 PM
மேற்கிந்தியத் தீவினர் நம்ம பா.ரா அவர்களின் நம்பிக்கையைத் தகர்க்கிறார்களே... :frown:

அறிஞர்
23-09-2009, 02:16 PM
மேற்கு இந்திய இரண்டாம் தர அணிதான் விளையாடுகிறது..

சம்பள ஒப்பந்த பிரச்சனையால்.. மூத்த வீரர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.

அறிஞர்
23-09-2009, 02:23 PM
யுவராஜ் போட்டியிலிருந்து.. கைகாயத்தால் ஒதுங்கியிருக்கிறார். 6 வாரம் ஓய்வு தேவையாம்.

கோலி அவருக்கு பதில் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்

பால்ராஜ்
23-09-2009, 02:34 PM
மேற்கிந்தியத் தீவினர் நம்ம பா.ரா அவர்களின் நம்பிக்கையைத் தகர்க்கிறார்களே... :frown:

அய்யய்யோ... இன்று விளயாட்டே இல்லை என்று நினைத்து விட்டேன்...
நான் பார்க்கத் தொடங்கினால் எல்லாம் சரியாகி விடும்:):)

பால்ராஜ்
23-09-2009, 02:35 PM
மே பி டூ லேட் ... 8 விக்கெட் போய் விட்டது...

பால்ராஜ்
23-09-2009, 03:48 PM
ஒரு விதத்தில் பார்க்கும்போது... சின்ன இலக்குகள் கஷ்டமானவை..
முயல் ஆமை கதை ஞாபகம் இருக்கிறதா...??

பாக் பசங்க இரண்டு விக்கெட் போய் விட்டது...! ஸொ ஸ்டில் சம் சான்ஸ்....???

ஓவியன்
23-09-2009, 03:56 PM
சின்ன இலக்குகள் கடினமானவைதான், ஆனால் யுகானா, மிஷாபா போன்ற அனுபவஸ்தர்கள் இருக்கையில் பாகிஸ்தான் அணியினருக்கு இது ஒன்றும் கடினமான இலக்காக எனக்குத் தெரியவில்லை...

நீங்க ஆரம்பத்திலே இருந்தே போட்டியைப் பார்த்திருக்கணும்..!! :D:D

ஓவியன்
24-09-2009, 04:08 AM
இறுதியில் ஒருவாறாக பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி விட்டனர்...

பகிஸ்தான் அணிக்கு 19தே வயதான உமர் அக்மல் நல்லதோர் புதுவரவு, தன் திறமையை மீண்டும் ஒரு தடவை வெளிக்காட்டியுள்ளார் அக்மல்..!! :)

அய்யா
24-09-2009, 07:11 AM
ஐயா, விளையாட்டுச் செய்திதானென்றாலும் தாங்கள் இந்தச் செய்தியைப் பிரதி செய்த லங்காஸ்ரீ (http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1253672699&archive=&start_from=&ucat=4) இணையத்தளத்துக்கு நன்றி சொல்லி இருக்கலாமே...

நான் எடுத்தது லங்காஸ்ரீ தளத்தில் இருந்து அல்ல!

படம் யாஹூ கிரிக்கெட்டிலிருந்தும், செய்தி வெப்துனியாவிலிருந்தும் பெறப்பட்டது.

அவ்விரு தளங்களுக்கும் நன்றி.

அய்யா
24-09-2009, 07:13 AM
பாக். அணி 5 விக்கெட் வேறுபாட்டில் மே.இ. தீவுகள் அணியை வென்றதாகச் செய்திதந்த தட்ஸ் தமிழ் தளத்துக்கு நன்றி!

அய்யா
24-09-2009, 07:14 AM
இன்றைய போட்டி நியூசி - தெ.ஆ. அணிகளுக்கிடையே என்று நான் தெரிந்துகொண்ட யாஹூ கிரிக்கெட்டுக்கு நன்றி.

aren
24-09-2009, 08:07 AM
சந்தடி சாக்கில் இந்தியா முதலிடத்துக்கு வந்துடுச்சாமே..?? எத்தனை நாளைக்கு..?

இந்த சாம்பியன்ஸ் டிராஃபியில் வென்றால்தான் நாம் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும்.

நம் குழுவில் இப்பொழுது ஷேவாக்குடன் சேர்ந்துகொண்டு யுவராஜ்சிங்கும் அவுட். என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.

முதல் ஆட்டத்தில்:

1. காம்பீர்
2. டெண்டுல்கர்
3. திராவிட்
4. ரைனா
5. தோனி
6. கார்திக் அல்லது விராத் கோலி
7. அபிஷேக் நய்யார் அல்லது யூசுஃப் பத்தான்
8. ஹர்பஜன்சிங்
9. ஹிஷாந்த் சர்மா
10. ஆஷிஷ் நெஹ்ரா
11. ஆர்.பி.சிங்

தென் ஆப்பிரிக்காவில் வேகப்பந்தாளர்களுக்கு சாதகமாக இருக்குமாதலால் அபிஷேக் நய்யாருக்கு வாய்ப்புகிடைக்கும் என்றே எதிர்பார்க்கிறேன்.

ஆதி
24-09-2009, 08:59 AM
அன்புள்ள அய்யா, ஓவியனின் இந்த பதிவுக்கு நீங்கள் உங்கள் விளக்கத்தை தந்துவிட்டீர்கள், நீங்கள் எந்த தளத்தில் இருந்து செய்தியை எடுத்தீர்களோ அந்த தளத்துக்கு, கீழுள்ள உங்கள் பதிவில் உடனே நன்றியும் சொல்லிவிட்டீர்கள்.. மிக மகிழ்ச்சியை தந்தது..

நமது மன்றத்தின் வளர்ச்சிக்காக இயற்றப்படும் இவ்வாறான ஆரோகியமான விதிகளை நாம் கடைப்பிடிக்க வழியுறுத்துவது, புதியவர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதற்காகத்தான்..ஐயா, விளையாட்டுச் செய்திதானென்றாலும் தாங்கள் இந்தச் செய்தியைப் பிரதி செய்த லங்காஸ்ரீ (http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1253672699&archive=&start_from=&ucat=4) இணையத்தளத்துக்கு நன்றி சொல்லி இருக்கலாமே...


நான் எடுத்தது லங்காஸ்ரீ தளத்தில் இருந்து அல்ல!

படம் யாஹூ கிரிக்கெட்டிலிருந்தும், செய்தி வெப்துனியாவிலிருந்தும் பெறப்பட்டது.

அவ்விரு தளங்களுக்கும் நன்றி.

ஆனால் நீங்கள் கீழ் வரும் இந்த இரு பதிவுகளையும் பதிந்திருப்பதின் நோக்கம் மன்றின் விதியை பின்பற்றுவதற்காக என்பது போல் தெரியவில்லை.. ஓவியனை வம்பிழுப்பதற்காக பதிந்தது போல் தோற்றமளிக்கிறது..


பாக். அணி 5 விக்கெட் வேறுபாட்டில் மே.இ. தீவுகள் அணியை வென்றதாகச் செய்திதந்த தட்ஸ் தமிழ் தளத்துக்கு நன்றி!


இன்றைய போட்டி நியூசி - தெ.ஆ. அணிகளுக்கிடையே என்று நான் தெரிந்துகொண்ட யாஹூ கிரிக்கெட்டுக்கு நன்றி.

இது போலான சீண்டல் பதிவுகள் மேலும் தொடராமல்/(போல் தோற்றமளிக்காமல்) பார்த்துக் கொள்ளுங்கள்..

இனி இவ்வாறான பதிவுகளை காண நேருமென்றால்.. நிச்சயம் அவை குப்பைக்கு நகர்த்தப்படும்..

புரிதலுக்கு நன்றி.

அறிஞர்
24-09-2009, 03:13 PM
தென்னாப்பிரிக்கா... நியூசிலாந்தை எளிதில் வென்றது.

நியூசிலாந்து 214 (47.5 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 217/5 (41.1 ஓவர்கள்)

அறிஞர்
24-09-2009, 03:16 PM
பாக். அணி 5 விக்கெட் வேறுபாட்டில் மே.இ. தீவுகள் அணியை வென்றதாகச் செய்திதந்த தட்ஸ் தமிழ் தளத்துக்கு நன்றி!


இன்றைய போட்டி நியூசி - தெ.ஆ. அணிகளுக்கிடையே என்று நான் தெரிந்துகொண்ட யாஹூ கிரிக்கெட்டுக்கு நன்றி.

மற்றத் தளங்களிலிருந்து அச்சு மாறாமல் காப்பியடிக்கப் படும் பதிவுகளுக்கு நன்றி கூறச் சொல்லியிருந்தோம்.

அதற்காக எல்லா செய்திகளுக்கும் கூறுவது சரியாகத் தோன்றவில்லை.

உண்மையான பெயரில் வந்து தாங்கள் நல்ல பதிவுகளை கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

aren
24-09-2009, 04:31 PM
நாளை இந்தியா விளையாடுகிறது. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். யுவராஜ்சிங் வேறு கிடையாது. ஷேவாக்கும் அவுட். அடித்த விளையாட ஆளில்லை இப்பொழுது.

கங்குலியை மிஸ் செய்கிறோம் போல் இருக்கிறது இப்பொழுது இருக்கும் நிலமையைப் பார்த்தால்.

ஓவியன்
24-09-2009, 06:15 PM
யுவராஜின் அதிரடித் துடுப்பாட்டம் மட்டுமல்ல, தேவைக்கு கை கொடுக்கும் யுவராஜின் பந்து வீச்சும் எதிர்வரும்போட்டியில் தோனிக்கு கிடைக்காதிருக்கப் போகிறது....

அதனால் ஹர்பஜனுடன், மிஸ்ராவையும் சேர்த்தே களமிறக்குவார்களென நம்புகிறேன்...

ஓவியன்
25-09-2009, 01:04 PM
இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் ஸ்ரீலங்கா அணியினரின் முன்வரிசையை ஆட்டம் காண வைத்து விட்டனரே...

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணித்தலைவர் சரியான முடிவினை எடுத்தே ஸ்ரீலங்காவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளதாகத் தெரிகிறது...

அறிஞர்
25-09-2009, 02:16 PM
இலங்கையும் டாஸ் ஜெயித்திருந்தால்.. முதலில் பேட்டிங்க் தான் எடுத்திருப்பார்கள்...

17/4 என்ற நிலையிலிருந்து இலங்கை சமரவீராவின் பேட்டிங்கால் மீண்டுள்ளது. 94/5 (21.5 ஓவர்)

பால்ராஜ்
25-09-2009, 02:38 PM
இன்றைக்கும் மாட்ச் நடக்கிறதா???
நான் என்ன எல்லாம் செய்வேன் சாமி...? பட்டி மன்றம் வேறு நெருக்குகிறது..

ஒரு கண் அங்கே.. ஒரு கண் இங்கே... ! 121 / 5
சூழ்நிலைகளை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது...??

ஓவியன்
25-09-2009, 03:38 PM
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூ ரன் அவுட்டாகும் நிலை, வெளியே சென்றவர் மீள உள்ளே வந்தார் - இங்கிலாந்து அணித் தலைவர் மீள அழைத்தாரா...?? :)

மீள வந்த மத்யூ அடுத்த பந்து பரிமாற்றத்தில் பிடி கொடுத்து வெளியேறுகிறாரே....

அறிஞர்
25-09-2009, 05:25 PM
முதல் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது இங்கிலாந்து...

போட்டி விறுவிறுப்பாக செல்கிறது.. முடிவு யாருக்கு சாதகம் எனப்பார்ப்போம்.

அறிஞர்
25-09-2009, 08:08 PM
இங்கிலாந்து வெற்றி பெற்றது.. மார்கன் சிறப்பாக மட்டையடித்தார்..

பால்ராஜ்
25-09-2009, 09:58 PM
இங்கிலாந்து வெற்றி பெற்றது என்பதைவிட இலங்கை தோற்றது மகிழ்ச்சியைத் தருகிறது...
சற்றே கோணமான மனமோ என்னவோ??

ஓவியன்
26-09-2009, 05:45 AM
இலங்கை அணி வெற்றி பெற்ற போது அபார வெற்றி என தலையங்கம் தீட்டிய லங்காஸ்ரீயும் வெப்துனியாவும் இன்று மெளனம் சாதிக்கின்றன :D, இங்கிலாந்து அபார வெற்றி எனப் போடாவிட்டாலும் வெற்றி என்றாவது போடலாமே.... :rolleyes:

பால்ராஜ்
26-09-2009, 05:39 PM
மோசமாகத்தொடங்கிய பாக்கிஸ்தான் 300+ எடுக்க விட்டது நம்ம பந்து வீச்சளர்களின் சோப்ளாங்கித்தனம்...??

டெண்டுல்கர் போயாச்சு..
தோல்வியின் தொனியும் தெரிகிறது...
தோனி காப்பாற்றுவாரா..??

aren
26-09-2009, 05:45 PM
ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் எடுக்கவேண்டும், 50 ஓவர்களும் ஆடவேண்டும், அப்படி செய்தால் ஜெயிக்க வாய்பிருக்கிறது.

இப்பொழுது 11 ஓவரில் 80 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்

அமரன்
26-09-2009, 09:06 PM
பாகிஸ்தான் 54 ஓட்டங்களால் போட்டியில் வென்றது.

ஓவியன்
27-09-2009, 04:29 AM
பாகிஸ்தானிலிருந்து எப்படித்தான் இத்தனை திறமையான இளம்பந்து வீச்சாளர்கள் காலத்துக்கு காலம் தோன்றிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே....

வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துகள், யுவராஜ் அணியிலிருந்திருந்தால் நிலமை மாறியிருக்கும் என்ற எண்ணத்தை ஏனோ கட்டுப் படுத்த முடியவில்லை.

பால்ராஜ்
27-09-2009, 05:31 AM
தோனியின் தலைமைத்துவம் பல இடங்களிலும் கேள்விக்குறியதாயிருந்திருக்கிறது..

ஹர்பஜன் சிங்க் எதிரில் வருபவர்கள் எல்லோரையும் அடிப்பது போல அவரது பந்துகளைப் பாக் பசங்க அடித்துக் கொண்டிருந்தபோது டெண்டுல்கருக்கு அல்லது ரெய்னாவுக்கு அல்லது ஈவென் திராவிட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஒவர் கொடுத்திருந்திருக்கலாம

5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு எடுத்து விட்ட பின்னரும் தோல்வியைத் தழுவும் நிலைமையை எய்துவது நம்ம பயல்களுக்கு மட்டுமே வரும் அபூர்வ கலை..

பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு திரும்ப வரத் தயாராகும் நிலையில் இருக்கிறார்கள்..

ஓவியன்
27-09-2009, 05:51 AM
உண்மைதான் விராட் ஹோஹ்லியை கூட பந்து வீச அழைத்த தோனி அனுபவஸ்தர்களான டெண்டுல்கரையும் ரெய்னாவையும் ஏன் பந்து வீச அழைக்கவில்லையென்பதுதான் புரியவில்லை....

பால்ராஜ்
27-09-2009, 06:42 AM
ஹி ஹி
நம்ம ஃபேவரிட் டீம்.. வெஸ்ட் இண்டீஸும் இதே நிலைதான் போல...:eek::eek:


பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு திரும்ப வரத் தயாராகும் நிலையில் இருக்கிறார்கள்..

ஓவியன்
27-09-2009, 06:49 AM
ஹா, ஹா..!!

இதுக்குத்தான் நாம இன்னமும் வாக்களிக்காமலும், நம்ம ஃபேவரைட் டீம் எதுனு சொல்லாமலும் இருக்கமாக்கும்..!! :D:D:D

(நம்ம பசங்க மேலே அத்தனை நம்பிக்கைனு சொல்லலாமா...?? :rolleyes:)

பால்ராஜ்
27-09-2009, 07:02 AM
ஆமா அந்த பொத்தனூர் ஆளை (எங்க ஊராக இருந்தாலும்) யாரும் ஏன் 'கவனிக்க'வில்லை??

(எத்தனை குட்டு நான் வாங்கி இருக்கிறேன்???)...இங்கல்ல..

ஒரு வேளை வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா ஃபைனல் வந்தாலும் வரலாம்....!!!
wishful thinking என்பதற்கு ஒரு அற்புதமான கற்பனை....!!!

aren
28-09-2009, 06:47 AM
இப்பொழுது இருக்கும் நிலமையைப் பார்த்தால் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் மோதும் போலிருக்கிறது.

அப்படியென்றால் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இறுதிச்சுற்றில் மோதுமா என்று நீங்க*ள் நினைப்ப*து என*க்குத் தெரிகிற*து.

ராஜா
28-09-2009, 07:47 AM
அப்படியென்றால் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இறுதிச்சுற்றில் மோதுமா என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது.

நாங்க நினைக்கீறோமோ இல்லையோ.. நீங்க அப்படி நினைக்கிறீங்கன்னு புரியுது மாட்டிரிக்ஸ்..!

அய்யா
28-09-2009, 11:06 AM
அன்புள்ள அய்யா, ஓவியனின் இந்த பதிவுக்கு நீங்கள் உங்கள் விளக்கத்தை தந்துவிட்டீர்கள், நீங்கள் எந்த தளத்தில் இருந்து செய்தியை எடுத்தீர்களோ அந்த தளத்துக்கு, கீழுள்ள உங்கள் பதிவில் உடனே நன்றியும் சொல்லிவிட்டீர்கள்.. மிக மகிழ்ச்சியை தந்தது..

நமது மன்றத்தின் வளர்ச்சிக்காக இயற்றப்படும் இவ்வாறான ஆரோகியமான விதிகளை நாம் கடைப்பிடிக்க வழியுறுத்துவது, புதியவர்களுக்கு அது ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதற்காகத்தான்..


ஆனால் நீங்கள் கீழ் வரும் இந்த இரு பதிவுகளையும் பதிந்திருப்பதின் நோக்கம் மன்றின் விதியை பின்பற்றுவதற்காக என்பது போல் தெரியவில்லை.. ஓவியனை வம்பிழுப்பதற்காக பதிந்தது போல் தோற்றமளிக்கிறது..

இது போலான சீண்டல் பதிவுகள் மேலும் தொடராமல்/(போல் தோற்றமளிக்காமல்) பார்த்துக் கொள்ளுங்கள்..

இனி இவ்வாறான பதிவுகளை காண நேருமென்றால்.. நிச்சயம் அவை குப்பைக்கு நகர்த்தப்படும்..

புரிதலுக்கு நன்றி.


யாரையும் வம்பிழுப்பது என் நோக்கம் அல்ல!

அவ்வாறு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல!

அறிஞர்
28-09-2009, 02:01 PM
தோனிக்கு டாஸுக்கும் ரொம்ப தூரம் ஆகிவிட்டது..

இன்று இந்தியாவுக்கு கண்டம் தான்... ஆஸ்திரேலியா 340 ரன் எடுத்தால்.. இந்தியா வீடு திரும்ப வேண்டியதுதான்.

மதி
28-09-2009, 02:05 PM
ரொம்ப கஷ்டம் தான் போல...

அய்யா
28-09-2009, 02:11 PM
Aus 113/2
22.3 Overs
Aus vs Ind

அறிஞர்
28-09-2009, 02:42 PM
இஷாந்த் சர்மா பணம் வாங்கிக் கொண்டு பவுலிங்க் போடுகிறாரா... வாரியிறைத்துக் கொண்டு இருக்கிறார்...

340 ரன்கள் எளிதாக எடுப்பார்கள் என நம்புகிறேன்.

அய்யா
28-09-2009, 03:13 PM
இஷாந்த் சர்மா பணம் வாங்கிக் கொண்டு பவுலிங்க் போடுகிறாரா... வாரியிறைத்துக் கொண்டு இருக்கிறார்...

340 ரன்கள் எளிதாக எடுப்பார்கள் என நம்புகிறேன்.

பீதியைக் கிளப்பாதீர்கள் அண்ணா!

நீங்கள் சொல்வதெல்லாம் இதுவரை பலித்தே வந்திருக்கிறது!!

அறிஞர்
28-09-2009, 03:17 PM
என்ன பண்றது இவுங்களை நம்பி நாம் மேட்ச் பார்த்து.. நேரடித்து வீண்டிக்கிறோமே...

அறிஞர்
28-09-2009, 03:42 PM
மழை வந்துள்ளது...
இது இந்தியாவுக்கு உதவுமா.....

மதி
28-09-2009, 03:42 PM
வருண பகவானும் ஆட்டம் பார்க்க வந்துவிட்டார்.... தேறுமா ???

அறிஞர்
28-09-2009, 03:43 PM
ஆஹா இந்தியாவுக்கு உதவி வந்தால் சந்தோசமே...

அய்யா
28-09-2009, 04:14 PM
Aus 234/4
42.3 Overs

மழை..!

அறிஞர்
28-09-2009, 04:20 PM
உடனே ஆட்டம் ஆரம்பித்தால் 42 ஓவரில் இந்தியா 263 ரன் எடுக்க வேண்டும்

இல்லையென்றால் 20 ஓவரில் 153 ரன் எடுக்க வேண்டும்.

இப்பொழுதைக்கு மழை விடுகிற மாதிரி தெரியலை...

அய்யா
28-09-2009, 04:37 PM
ஆட்டம் முற்றிலும் தடைபட்டால் என்ன நிலைமை அண்ணா?

அறிஞர்
28-09-2009, 06:06 PM
ஆட்டம் தடைபட்டது...
இருவருக்கும் தலா ஒரு புள்ளிகள்.....
--------------
ஆஸ்திரேலியா பாகிஸ்தானிடம் தோற்றால் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்புள்ளது. பாகிஸ்தான்.. ஆஸ்திரேலியாவுக்கு விட்டுக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....

ஆக மொத்தத்தில் இந்தியாவுக்கு வாய்ப்பு குறைகிறது.

aren
29-09-2009, 12:28 AM
ஆஸ்திரேலியா நன்றாகவே ஆடுகிறது ஆகையால் பாகிஸ்தானை வெல்வதற்கு சாத்தியம் இருக்கிறது.

இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்வது கொஞ்சம் சந்தேகமே.

நேற்று மழை பெய்யாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா நிச்சயம் 300 ரன்களை எட்டியிருக்கும், இந்தியா அதை எடுக்க நிச்சயம் சிரமப்பட்டிருக்கும்.

மழை வந்ததால் இந்தியாவிற்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறதுமாதிரி தெரிகிறது.

இந்தியா மேற்கு இண்டீஸை குறைந்தது 70 ரன்கள் விதயாசத்தில் வெல்லவேண்டும். அதுபோல் பாகிஸ்தான் குறைந்தது 50 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வெல்லவேண்டும். இது இரண்டும் நடக்குமா என்று தெரியவில்லை.

ஓவியன்
29-09-2009, 04:14 AM
ஹா, ஹா மழைக்கு நன்றி, இந்த மழையும் ஃபிக்ஸ் பண்ணப் பட்டதாக இருக்குமோ...?? :rolleyes::D

அய்யா
29-09-2009, 08:23 AM
இந்தியா மேற்கு இண்டீஸை குறைந்தது 70 ரன்கள் விதயாசத்தில் வெல்லவேண்டும். அதுபோல் பாகிஸ்தான் குறைந்தது 50 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வெல்லவேண்டும். இது இரண்டும் நடக்குமா என்று தெரியவில்லை.

மேலே இருப்'பவர்' நினைத்தால் நடக்கலாம்!

பால்ராஜ்
29-09-2009, 02:23 PM
தோனி... காலி என்றே தொன்றுகிறது... சேவாஹ் வேறு வெளியில் இருந்து காம்பீருக்கு இழுக்கிறார்...

பாவம் ந்யூசீலாந்து பசங்க... ஒரு சாம்பியன்ஷிப் ஆவது ஜெயித்துக் கொண்டு போகட்டுமே...!

அறிஞர்
29-09-2009, 02:31 PM
நியூசிலாந்து இன்று சிறப்பாக விளையாடுகிறார்கள்.

இங்கிலாந்து 86/5 (25 ஓவர்) தடுமாறுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கையும், இந்தியாவும் வீடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகிறது.

பால்ராஜ்
29-09-2009, 02:56 PM
நம்ம ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை
நம்ம எதிரி ஜெயிக்காமல் இருந்தால் மகிழ்ச்சிதான்..

பாக் அணியும் இதுபோலவே இருக்க ....நம் தரப்பில் வாழ்த்துக்கள்...

அய்யா
29-09-2009, 03:27 PM
இங்கிலாந்து ; ௧௨௫/௯
௩௭ சுற்றுகளில்

ஓவியன்
29-09-2009, 03:39 PM
Eng 123/9
37 Overs
Eng vs NZ

அய்யா,

மன்றத்தின் முல்லை மன்றம் தவிர்ந்த பகுதிகளில் ஆங்கிலப் பதிவுகளுக்கு இடமில்லையென்பது விதி, பொத்தனூர் பிரபுவின் ஆங்கிலப் பதிவுகள் சில நாட்கள் இந்த திரியில் இருந்தது என்பதற்காக ஆங்கிலப் பதிவுகள் இந்தப் பகுதியில் அனுமதிக்கப்படுமென்று அர்த்தம் கிடையாது....

இங்கே மன்றத்தில் நிர்வாகப் பணியில் இருப்பவர்கள் முழு நேரமாக நிர்வாகப் பணியிலிருப்பதில்லை என்பது நீங்களறிந்ததே, ஆகவே இப்படி ஏட்டிக்குப் போட்டியாக பதிவிடுவதிலும் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிப்பதே நலமானது...

இது, மன்றத்தில் மூத்த உறுப்பினரான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்...

நன்றி..

அறிஞர்
29-09-2009, 03:53 PM
நியூசிலாந்து வெற்றி பெற 147 ரன்கள் தேவை...
இங்கிலாந்தின் பவுலர்களும் சிறப்பாக பந்து வீசுவார்கள்...
கடினமான தளம்

aren
29-09-2009, 05:18 PM
இது ஏதோ குக்கிங் மாதிரி எனக்குத் தோன்றுகிறது. இலங்கை அணியை வெளியே தள்ள ஒரு வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அய்யா
29-09-2009, 05:26 PM
நியூசிலாந்து அதிரடித் துவக்கம்.

75/0

11 ஓவர்.

நேசம்
30-09-2009, 06:02 AM
பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிராத்தனை செய்வார்கள்

பால்ராஜ்
30-09-2009, 07:47 AM
பாக்கிஸ்தான் பேட்டிங் தொடங்கி உள்ளது..
இரண்டும் எதிரிகள்.. எதை சப்போர்ட் பண்ணுவது...??

எனக்கென்னவோ ஆஸிகள் வெல்லக் கூடும் என்று தோன்றுகிறது..

பால்ராஜ்
30-09-2009, 10:07 AM
பாக் 133 / 4 ஏறக்குறைய 35 ஓவர்களில்,,,,
இதுதான் நல்ல பௌலிங் என்பதில் பலனோ...??
220 - 230 தேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

அமரன்
30-09-2009, 11:09 AM
ஆரம்பத்தில் அட்டகாசம் செய்தார்கள். இப்போது அடக்கி வீசுகிறார்கள். அடுத்து எப்படி. கிடைக்குமா அதிரடி?

பால்ராஜ்
30-09-2009, 12:59 PM
பாக் 205-இலேயே சுருண்டு விட்டது... ஆஸிக்கள் வெற்றியை நோக்கி சுமுகமாகவே செல்வதுபோல் இருக்கிறது... ஏதாவது 'மிரக்கிள்' நடக்கா விட்டால்...

மேற்கிந்தியர் தொடங்கிய உடனே நம்ம ஆட்கள் ஒரு விக்கேட் எடுத்தாலும் நம்ம சரித்திரம் அவ்வளவு சரி இல்லை... அதனால் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கக் கூடும்.. டெண்டுல்கர் வேறு இல்லை..

நாம் பாக் இரண்டுபேருமே பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு திரும்ப வேண்டியதுதான் என்று தோன்றுகிறது..

ஆல் வைட்.. வெள்ளைக்காரர்கள் மட்டுமே செமி யில் செல்வார்களோ...??

அறிஞர்
30-09-2009, 01:52 PM
ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடுகிறது...

இந்தியாவும் சிறப்பாக விளையாடுகிறது.. ஆனால் வீணான ஆட்டம்...

வீட்டுக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியா, இலங்கை அணிகளுடன் இந்தியாவும் சேர்ந்துக் கொள்கிறது.

அறிஞர்
30-09-2009, 02:52 PM
அடுத்தடுத்து.. விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா... 179/7

தோற்றால் நல்லது 40 பந்துகளில் 27 ரன் தேவை

பால்ராஜ்
30-09-2009, 02:55 PM
அஹ்ஹா.. இதுதான் கிரிக்கெட் என்பதோ....
நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று பார்க்காமல் இருந்துவிட்டேன்..

aren
30-09-2009, 02:56 PM
கவலைவேண்டாம். பாகிஸ்தான் விட்டு கொடுத்துவிடும்.

அறிஞர்
30-09-2009, 03:02 PM
கடைசி 5ஓவர் பேட்டிங்க் பவர் பிளே எடுத்துள்ளனர்... 23 ரன்கள் 30 பந்துகள்.

அறிஞர்
30-09-2009, 03:02 PM
நகத்தை கடித்தபடி... ஆஸ்திரேலியா...
பாகிஸ்தானும் பெயருக்கு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது
28பந்து 23 ரன்

அறிஞர்
30-09-2009, 03:04 PM
8வது விக்கெட்டும் வீழ்ந்தது... 25 பந்து 19 ரன்கள்

அறிஞர்
30-09-2009, 03:09 PM
விறு விறுப்பான ஆட்டம்...

ரன் இல்லாத மெயிடன் ஓவர்.. பாகிஸ்தானுக்கு...

ஆஸ்திரேலியா வெற்றி பெற 18 பந்து 18 ரன்

aren
30-09-2009, 03:18 PM
ஆஸ்திரேலியா ஜெயித்துவிடும் போலிருக்கே. 200 அடித்துவிட்டார்களே. இன்னும் ஆறு ரன்களே எடுக்கவேண்டும்.

அறிஞர்
30-09-2009, 03:18 PM
ஆஸ்திலியா சமாளித்துவிட்டது... 6 பந்து 4 ரன்கள்.
-------------------
மேற்கு இந்தியாவின் இரண்டாம் தர அணி 129 ரன்கள் எடுத்துவிட்டது...

அறிஞர்
30-09-2009, 03:26 PM
கடைசி பந்தில் தடுமாறி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா

aren
30-09-2009, 03:30 PM
வெற்றி வெற்றிதான். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஜிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவை அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

இனிமேல் கோப்பையை ஆஸ்திரேலியா வாங்காமல் விடாது என்றே நான் நினைக்கிறேன்.

இந்திய வீரர்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்கிறோம். இவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் இப்படி சொதப்புகிறார்களே. இனிமேல் நாம் ஏன் பணம் கொடுத்து நம் நேரத்தை கெடுத்துக்கொண்டு டிவியில் மாட்ச் பார்க்கவேண்டும், இவர்கள் அதிகமாக சம்பாதிக்கவா?

நான் இனிமேல் மாட்ச் பார்க்ககூடாது என்று நினைத்திருக்கிறேன். நிச்சயம் இதை கடைபிடிப்பேன் என்றே நம்புகிறேன்.

அறிஞர்
30-09-2009, 03:35 PM
இந்தியா 12/2
காம்பீர், டிராவி அவுட்...

டிராவிடை வீட்டுக்கு அனுப்பலாம்..
சரியாக ஓடாமல்.. மற்றவரை அவுட்டாக்குகிறார்.. இல்லை தான் அவுட்டாகுகிறார்.

அய்யா
30-09-2009, 03:49 PM
தோனி - யுவராஜ் குளிர் யுத்தம் இன்னும் வலுக்கும் என்று எண்ணுகிறேன்.

அய்யா
30-09-2009, 03:52 PM
இப்பொழுது இருக்கும் நிலமையைப் பார்த்தால் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் மோதும் போலிருக்கிறது.

.

பாராட்டுகள் அண்ணா!

அரசியலிலும், விளையாட்டிலும் தங்கள் கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாகவே இருக்கின்றன.

பால்ராஜ்
01-10-2009, 07:37 AM
யப்பாடி இனி நிம்மதியாகத் தூங்கலாம்...

நமக்கு கம்பெனி... தோனி.. திராவிட்.. என்று பலரும் இனி சில வாரங்கள் தூங்கக் கூடும்

இன்பா
01-10-2009, 07:56 AM
எப்பவுமே இந்தியா அரையிருதிக்குப் போகனும்னா..?

ஆஸி தோத்து, பாக்கிஸ்தான் ஜெயிச்சி, நியூசிலாந்து கென்யாகூட படு கேவலமா தோத்து, பங்ளாதேஷ் ஸ்காண்ட்லேண்ட வின் பன்னி, அயர்லாந்டு 150 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சி, தென்னாப்ரிக்கா ட்ரா ஆகி...

என்னாப்பா இது கூத்து, ஒவ்வரு வாட்டியும் இப்படித்தான்...

நம்ம டீம் அரையிறுதிக்கு போறது மத்த டீம் கையில தான் இருக்கு :D

அய்யா
01-10-2009, 08:30 AM
எப்பவுமே இந்தியா அரையிருதிக்குப் போகனும்னா..?

ஆஸி தோத்து, பாக்கிஸ்தான் ஜெயிச்சி, நியூசிலாந்து கென்யாகூட படு கேவலமா தோத்து, பங்ளாதேஷ் ஸ்காண்ட்லேண்ட வின் பன்னி, அயர்லாந்டு 150 ரன் வித்தியாசத்துல ஜெயிச்சி, தென்னாப்ரிக்கா ட்ரா ஆகி...

என்னாப்பா இது கூத்து, ஒவ்வரு வாட்டியும் இப்படித்தான்...

நம்ம டீம் அரையிறுதிக்கு போறது மத்த டீம் கையில தான் இருக்கு :D

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

நேசம்
01-10-2009, 08:58 AM
எப்படி உங்களால் மட்டும் முடியுது ஆரென் அண்ணா..ஒரு வேளை மேட்ச் பிக்சில் பெரிய ஆளா இருப்பிங்க போலிருக்கு

பால்ராஜ்
02-10-2009, 01:09 PM
பாக் - ஆஸி மாட்ச் மிகவும் நன்றாக இருந்தது..

இன்றைய போட்டியில் இங்கிலாந்து ஜெயிக்க நல்ல வாய்ப்புள்ளது.

பா.ராஜேஷ்
02-10-2009, 05:11 PM
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாதான் வெற்றி பெறும் போலிருக்கே!

இங்கிலாந்து 257/10 (47.4)
ஆஸ்திரேலியா 11/1 (2.5)

நேசம்
02-10-2009, 05:29 PM
இங்கிலாந்து வெற்றி பெற்ராலும் ஆச்சரிய்யமில்லை

aren
03-10-2009, 03:35 AM
இங்கிலாந்திற்கு நன்றாகவே ஆப்பு வைத்துவிட்டார்கள்.

தென் ஆப்பிரிக்கா காப்டன் ஸ்மித்திற்கு ரன்னர் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன அகம்பாவம்பிடித்த இங்கிலாந்து வெளியேறியதுகண்டு மிகவும் மகிழ்ச்சி.

ஓவியன்
03-10-2009, 07:30 AM
ஷேன் வட்சன், சான்ஸே இல்லை....
பாவம் கொலிங் வூட், அழுதபடி வீட்ட போயிருப்பார்..!! :rolleyes:

நேசம்
03-10-2009, 08:25 AM
இங்கிலாந்திற்கு நன்றாகவே ஆப்பு வைத்துவிட்டார்கள்.

தென் ஆப்பிரிக்கா காப்டன் ஸ்மித்திற்கு ரன்னர் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன அகம்பாவம்பிடித்த இங்கிலாந்து வெளியேறியதுகண்டு மிகவும் மகிழ்ச்சி.
இங்கிலாந்து கேப்டன் செயலை ஐசிசி யும் ஆதரித்துள்ளது.அப்பட்டின்னா அது விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கும் இல்லையா

aren
03-10-2009, 09:03 AM
இங்கிலாந்து கேப்டன் செயலை ஐசிசி யும் ஆதரித்துள்ளது.அப்பட்டின்னா அது விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கும் இல்லையா

விதிமுறை என்பது வேறு மனிதாபினாம் என்பது வேறு. இது ஐசிசி விதிமுறையில் இல்லையென்றால் ஏன் இதுவரை நடுவர்கள் இந்த மாதிரியானவர்களுக்கு ரன்னர் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் செய்தது விதியை மீறிய செயல்தானே.

இந்த மாதிரி விதியை மீறி ஜெயித்திருப்பவர்களானால் அவர்களுடைய வெற்றியை திரும்ப பெற்றுவிடலாமே.

அனைத்திற்கு விதி என்பதை மட்டுமே பார்க்கக்கூடாது. எத்தனை முறை இங்கிலாந்து இந்த வேலையைச் செய்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் விதி எங்கே போயிற்று.

நீங்கள் நடந்துமுடிந்த ஆஷிஷ் டெஸ்ட் தொடரைப் பார்த்தீர்களா? முதல் டெஸ்டில் இங்கிலாந்து தோற்றுவிடும் நிலையில் நேரத்தை வீணாக்கியது எந்த விதத்தில் ஞாயம். இதே ஸ்டிராஸ்தான் அதைச் செய்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி இங்கிலாந்து முதல் டெஸ்டில் தேற்றிருந்தால் ஆஷிஷ் தொடரில் வெற்றி கிடைத்திருக்காதே?

இங்கிலாந்தின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மிகவும் மோசமானது என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

பா.ராஜேஷ்
03-10-2009, 09:18 AM
ஆஸ்திரலியாதான் வெற்றி வாகை சூடுமோ !!???

ஓவியன்
03-10-2009, 09:43 AM
இங்கிலாந்தின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மிகவும் மோசமானது என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது.


மன்னிக்க வேண்டும் ஆரென் அண்ணா, இதே ஆஸஸ் தொடரில் நாணயச் சுழற்சி முடிந்த பின்னர், நடந்த பயிற்சி ஆட்டத்தில் பிரட் ஹடின் தன் விரலை முறித்து விட, அவருக்குப் பதில் இன்னொரு வீரரை களமிறக்க ‘அன்ரூ ஸ்ட்ரோஸ்’ அனுமதித்தாரே...?, நாணயச் சுழற்சிக்கு முன் அறிவிக்கப்பட்ட அணி வீரர்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதிருப்பது வழமையாக இருக்க அன்று மனிதாபிமானத்துடன் ‘ஸ்ட்ரோஸ்’ ஹடினுக்குப் பதிலாக ‘கிரஹம் மனூ’ களமிறங்க அனுமதித்திருந்தாரே...??

அந்த இடத்தில் ஸ்ட்ரோஸுக்குப் பதில் பாண்டிங் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், இன்னொரு வீரரை மாற்ற அனுமதித்திருப்பாரா ‘பாண்டிங்’..??

பின்னர் இதே சாம்பியன் கிண்ணப் போட்டியில், இலங்கை வீரர் ‘மத்யூ’ இங்கிலாந்து வீரர் ‘ஒனியன்ஸ்’ உடன் மோதி ரன் அவுட்டான போது, அவரை மீள துடுப்பெடுத்தாட அனுமதித்ததும் இதே ‘ஸ்ட்ரோஸ்’தான்.

‘ஸ்மித்’ விடயத்தில் மனிதாபிமானமுள்ளவராக இருக்க வேண்டியதிலும் ஒரு தலைவராக இருக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கலாம் ‘ஸ்ட்ரோஸ்’, சாதாரண ஒரு வீரராக இருக்கையில் நல்ல மனிதராக தானே ஆட்டமிழந்ததை ஒப்புக் கொண்டு வெளியேறும் சங்ககார கூட இப்போது அடிக்கடி தேவையில்லாமல் ஆட்டமிழப்பு அப்பீல் கேட்டுக் கொண்டிருப்பதன் அடிப்படையும் இதுதான்.

அவர்கள் தான் பாவம் என்ன செய்வது, அணி தோற்று விட்டால் நாம் அந்த தோல்வியின் பொறுப்பை முற்று முழுதாக அணித் தலைவர்களிடமல்லவா செலுத்தி விடுகிறோம்.

நேசம்
03-10-2009, 10:10 AM
சரியான விளக்கம் ஒவியன்.நியூசிலாந்து கேப்டன் வெட்டரி கூட இங்கிலாந்து உடன் போட்டியில் காலிங்வுட் விசயத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்

aren
04-10-2009, 01:54 AM
ஓவியன்,

மாத்யூஸை திரும்ப கூப்பிடாமல் இருந்திருந்தால் அவர் இனிமேல் இங்கிலாந்தின் கிரிக்கெட் தலைவராக தொடரமுடியாமல் போயிருக்கும், அங்கேயிருக்கும் பத்திரைக்கைகள் கிழித்திருப்பார்கள். காரணம் அந்த பெளலர் மாத்யூஸீன் வழியை மறைத்ததால்தான் அவரால் அந்த ரன்னை எடுக்கமுடியவில்லை. முழுக்க முழுக்க இது இங்கிலாந்தின் தவறு. ஆகையால் வேறு வழியில்லாமல் மாத்யூஸைக் கூப்பிட்டார்.

பார்க்கலாம் இனிமேல் இங்கிலாந்து ரன்னரைக் கேட்கும்பொழுது எதிர்த்து ஆடும் அணி நிச்சயம் அவர்களுக்கு ரன்னரை வழங்காது என்பது நிச்சயம்.

aren
04-10-2009, 01:55 AM
பாகிஸ்தான் தோற்றதுதான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

ஷோயிப் மாலிக் இனிமேல் அணியில் தொடர்வது சந்தேகமே.

ஓவியன்
04-10-2009, 05:02 AM
பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் போராடியிருக்கும், ஆனால் நியூசிலாந்து அப்படிப் போராடாமல் இலகுவில் வெற்றிக் கிண்ணத்தை விட்டுக் கொடுத்து விடுமென நினைக்கின்றேன்.

அய்யா
05-10-2009, 06:11 AM
கண்ணருகே வந்தது கைகளில் தவழுமா?

http://l.yimg.com/a/i/in/cricket/ss/october/91394737.jpg

சாம்பியன்ஸ் கோப்பை ; இன்று இறுதிப்போட்டி. ஆஸி x நியூசி

படம் ; யாஹூ

aren
05-10-2009, 01:06 PM
டானியல் விட்டோரி இன்று ஆட்டத்தில் இல்லை, ஆகையால் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி எளிதாகுமா?

ஓவியன்
05-10-2009, 01:13 PM
இன்றைய அணித்தலைவர் ‘மக்கலமும் (14 பந்து வீச்சுக்களைச் சந்தித்து பூச்சியம் ஓட்டங்களுடன்) தன் விக்கெட்டை கொடுத்து விட்டு பெவிலியனுக்கு சென்று விட்டாரென்பதால், அவுஸ்திரேலியர்கள் வெற்றியை நோக்கிப் பயணிப்பதாகவே தெரிகிறது....

aren
05-10-2009, 01:17 PM
பேசாமல் அவர்களுக்கே கோப்பையைக் கொடுத்துவிடலாம். எதுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து இந்த மாட்ச்களை பார்க்கவேண்டும்.

போரடிக்க ஆரம்பித்துவிட்டது இப்பொழுதெல்லாம் கிரிக்கெட்.

நம் மக்கள் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள் ஆனால் மாட்ச் என்று வரும்பொழுது கோட்டைவிட்டுவிடுகிறார்கள்.

aren
05-10-2009, 01:22 PM
10 ஓவர்களில் 23 ரன்களே எடுத்துள்ளார்கள். இதுதான் குறைந்த அளவு ரன்கள் முதல் பத்து ஓவர்களில் எடுத்தது.

அப்படியென்றால் போட்டி எப்படி போகிறது என்று நன்றாகத் தெரிகிறது.

நேசம்
05-10-2009, 01:28 PM
டானியல் விட்டோரி இன்று ஆட்டத்தில் இல்லை, ஆகையால் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி எளிதாகுமா?
இவர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு நன்மைதான்.அந்த அளவுக்கு பவுலிங் மட்டுமில்லை பேட்டிங்கில் பல தடவை கை கொடுத்துள்ளார்.

aren
05-10-2009, 01:31 PM
மெதுவாகவே நியூஜிலாந்து ஆட்டக்காரர்கள் ஆடுகிறார்கள்.

கடைசி 20 ஓவர்களில் அடித்து ஆடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

240 ரன்களாவது இவர்கள் எடுத்தால்தான் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதற்கு குறைவாக எடுத்தால் கொஞ்சம் கஷ்டப்படவேண்டியிருக்கும்

அறிஞர்
05-10-2009, 01:37 PM
300 ரன்களுக்கு குறைவாக எடுத்தால் சிரமம்.......

பேட்டிங்கிற்கு சாதகமான தளம் என்றார்கள்...

மெக்கல்லம்... கட்டைப்போட்டு.. அவுட்டாகி கவுத்துவிட்டார்.

நேசம்
05-10-2009, 01:55 PM
மெக்கல்லம் தனது வழக்கமான ஆட்டத்திற்கு பதிலாக தடுப்பு ஆட்டம் விளையாடிதால் விக்கெட் இழந்து விட்டாட் போலிருக்கு

நேசம்
05-10-2009, 01:59 PM
இரண்டாவது விகெட்டை நியூசிலாந்து இழந்து விட்டது.ஸ்கோர் 66/2

aren
05-10-2009, 02:09 PM
ஆனால் ரெட்மாண்ட் போனது ஒரு வித்ததில் நல்லதுதான் நியூஜிலாந்திற்கு. சொதப்பினார்.

aren
05-10-2009, 02:16 PM
மூன்றாவது விக்கெட்டும் அவுட். 81/3 22.5 ஓவர்கள்.

அறிஞர்
05-10-2009, 02:19 PM
4ம் காலி...

அருமையான கேட்ச்...

81/4 (23.5 ஓவர்கள்)

அறிஞர்
05-10-2009, 02:20 PM
ஆனால் ரெட்மாண்ட் போனது ஒரு வித்ததில் நல்லதுதான் நியூஜிலாந்திற்கு. சொதப்பினார்.
ஆஹா.. மொத்த அணியும் ஆட்டம் காண்கிறது

அறிஞர்
05-10-2009, 02:36 PM
94/5 (26.4 ஓவர்கள்)...

நியூசிலாந்து வீரர்கள்... ஓய்வெடுக்கும் இடம் நோக்கி அணிவகுப்பு நடத்துகிறார்கள்.

aren
05-10-2009, 02:52 PM
சங்கு ஊதிவிடவேண்டியதுதானா?

அறிஞர்
05-10-2009, 06:35 PM
நியூசிலாந்து... ஆரம்பத்தில் நன்றாக பந்துவீசினர்...
அடுத்த 2 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சரித்தால் நன்றாக இருக்கும்.

அறிஞர்
05-10-2009, 08:43 PM
ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது..

வாட்சன் சிறப்பாக ஆடினார்... 105ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரர், வாட்சன் பெறுகிறார்.

தொடர் நாயகன் விருதை பாண்டிங்க் பெற்றார். மேலும் அதிக ரன்கள் எடுத்ததற்கான.. தங்க பேட்டையும் வாங்கினார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய விருது தென்னாப்பிரிக்கா வீரருக்கு தங்க பந்து கிடைத்தது...

ஆஸி அணியினர் அனைவருக்கும் வெள்ளை கோட்டு கொடுக்கப்பட்டது.

aren
05-10-2009, 10:23 PM
ஆஸ்திரேலியா இந்த மாதிரி போட்டிகளில் எப்பொழுது கோப்பையை எதிர்நோக்கியே ஆடும், அதேமாதிரிதான் இந்த முறையும் ஆடியது. ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் ஆடிய ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல முழுவதும் தகுதிபெற்றதே.

நம் மக்கள் இதைப் பார்த்தாவது கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அறிஞர்
05-10-2009, 10:53 PM
வெற்றிப்பெற்ற ஆஸி அணியினருக்கு வாழ்த்துக்கள்...

http://www.tamilmantram.com/vb/[IMG]http://i13.photobucket.com/albums/a282/aringar/109136.jpghttp://i13.photobucket.com/albums/a282/aringar/109136.jpg

ஓவியன்
06-10-2009, 04:34 AM
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள், நியூசிலாந்து இன்னமும் ஆக்ரோஷமாக போராடியிருக்கலாம்...

arun
06-10-2009, 06:45 AM
முக்கியமான போட்டிகள் என்றாலே ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தில் ஒரு ஆக்ரோஷம் இருக்கும் மீண்டும் ஒரு முறை நேற்றைய போட்டியில் அதனை நிரூபித்து உள்ளனர் பாராட்டுக்கள்