PDA

View Full Version : நாற்காலியில் இருந்து வீழ்ந்த மஹிந்த ராஜபக்ச



Honeytamil
14-09-2009, 01:52 PM
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில், மஹிந்தவுக்கு முதுகில் உபாதையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான உரையை நிகழ்த்தாமலே, விழாவில் இருந்து, வெளியேறியுள்ளார் அவர்.

ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம், பின்பக்கம் சரிந்ததாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.உடனடியாக கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வேறு ஆசனத்தில் அமரச்செய்துள்ளனர். பின் கலாச்சார அமைச்சின் செயலாளர் நடாத்திய நன்றியுரைக்கு பின்னர், சிலருக்கு மட்டும் விருதுகளை வழங்கி கௌரவித்த ஜனாதிபதி, அங்கிருந்து அகன்றுள்ளார். வீழ்ந்ததினை படம்பிடித்த கமேராக்களின், படச்சுருள்களும் ஜனாதிபதி தரப்பினால் கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.:lachen001::lachen001::lachen001:

இன்பா
15-09-2009, 04:45 AM
நாற்காலி உடைந்துவிட்டது... இனி உட்கார முடியாது..!

மஸாகி
15-09-2009, 10:40 AM
எதிர்கட்சித் தலைவர் - ரணில் விக்ரமசிங்க விழுந்திருந்தாலாவது யானைக்கும் அடி சறுக்கும் என்று கூறலாம். இதனை..?:confused:

பால்ராஜ்
15-09-2009, 03:21 PM
சொல்லப் போனால் சிரிப்பதா அனுதாபப் படுவதா என்று தெரியவில்லை..

நல்ல வேளை நம்ம சானல்களுக்கு இந்த க்ளிப்பிங் கிடைக்கவில்லை...
ஒரு வாரத்துக்கு இதையே வைத்து ஓட்டியிருப்பார்கள்.

தூயவன்
17-09-2009, 05:24 AM
இது பிரபாகரனின் சதியாக இருக்குமோ

:D:D:D:D:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001: