PDA

View Full Version : மைக்ரோசாப்ட் வேர்டு உதவி தேவை



kalaiselvan2
12-09-2009, 03:56 PM
நான் என்னுடைய சில முக்கிய கோப்புகளை சில மாதங்களுக்கு முன் வோர்டில் பதிவு செய்து அவற்றிற்கு பாஸ்வேர்டு கொடுத்து பூட்டி வைத்தேன் இப்பொழுது நான் அவற்றை திறக்க வேண்டியுள்ளது. ஆனால் சாவியினை மறந்துவிட்டேன் அவற்றை இப்பொழுது எப்படி திறப்பது என யாராவது தயவுசெய்து கூறுங்களேன்.

praveen
13-09-2009, 06:46 AM
இந்த மாதிரி பாஸ்வேர்டு இட்ட ஆபிஸ் பைல்களை திறக்க தனி மென்பொருட்கள் உள்ளன. ஆனால் நீங்களளிட்ட பாஸ்வேர்டின் நீளத்தை பொறுத்து அதிக நேரம் எடுக்கும். தனிப்பட்ட ரகசியமில்லாத பைல் என்றால் உங்கள் பைலை ஒரு பைல் பதிவேற்று தளத்தில் ஏற்றி அந்த சுட்டியை எனக்கு தனிமடலில் தாருங்கள், பாஸ்வேர்டை நீக்கி தரப்பார்க்கிறேன்.

பொதுவாக உங்கள் பாஸ்வேர்டு டெக்னிக் என்ன?

எத்தனை எழுத்துக்களில் பாஸ்வேர்டு தருவீர்கள், அனைத்தும் ஸ்மால் லெட்டர்ஸ் தானா? எழுத்துக்களுடன் நம்பரும் சேர்த்து தருவீர்களா?, இது போல கூடுதல் தகவல் கொடுத்தால் உத்திரவாதமாக திறந்து தரப்படும்.

மொட்டையாக ஒன்றுமே தெரியாது என்றால் மிகுந்த காலவிரயம் நேரும், மேலும் அந்த பைல் உங்களுடையதில்லை, அடுத்தவர் பைலை திறக்கவே முற்படுகிறீர்கள் என்றும் நினைக்க தோன்றும்.

இதற்கான மென்பொருள் இலவசம் அல்ல, மேலும் அப்படி அந்த மென்பொருள் கிடைத்தாலும் சரியான முறைப்படி அதனை இயக்கினால் தான் எளிதில்/விரைவில் பாஸ்வேர்டு கிடைக்கப்படும்.