PDA

View Full Version : மேல் அதிகாரி



சரண்யா
12-09-2009, 12:25 PM
சிறுவயது முதல் படித்து
வளர்ந்து
பட்டம் வாங்கி...

வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...

மேலும் மேலும் முன்னெறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...

தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....

தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....

ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ.....அது...

ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)

அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்...

அமரன்
13-09-2009, 09:28 AM
முதலில் உங்களுக்கு நல்வரவு ரேஸ்மா.

எல்லாரும் உங்களை வரவேற்கும் முகமாக உங்களை இங்கே அறிமுகம் செய்யுங்களேன்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

எளிமையாக ஊடுறுவி ஆழமாகப் பாய்ந்து களத்தினருக்கு காயங்களை தரும்விதமாக இருப்பது கவிதையின் பலம்.

ஆசனதோசமா..
மேலதிகார அழுத்தமா..
புதியபாதை அமைக்க விருப்பமில்லாமையா.
சுய பாதுகாப்பா..
வேலைக்கனத்தை உணர்த்தும் தந்திரோபாயமா..
காட்சி ஒன்று.. கருவிகள் பல...
நெகடிவ்தான் நிஜம்.. கறுப்புத்தான் நிறம்..

பாராட்டுகள் ரேஷ்மா.

நேசம்
13-09-2009, 10:00 AM
சுய பாதுகாப்பு தான் காரணமாக இருக்கும்.ஆனால் அதே சமயத்தில் தன் பட்ட கஷ்டத்தை நினைத்து நேர்மையுடன் நடந்து இருந்தால் சிறப்பு.தொடர்ந்து தாருங்க|ள். அமரன் சொன்னது போல் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

சரண்யா
14-09-2009, 03:40 AM
முதலில் உங்களுக்கு நல்வரவு ரேஸ்மா.

எல்லாரும் உங்களை வரவேற்கும் முகமாக உங்களை இங்கே அறிமுகம் செய்யுங்களேன்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

எளிமையாக ஊடுறுவி ஆழமாகப் பாய்ந்து களத்தினருக்கு காயங்களை தரும்விதமாக இருப்பது கவிதையின் பலம்.

ஆசனதோசமா..
மேலதிகார அழுத்தமா..
புதியபாதை அமைக்க விருப்பமில்லாமையா.
சுய பாதுகாப்பா..
வேலைக்கனத்தை உணர்த்தும் தந்திரோபாயமா..
காட்சி ஒன்று.. கருவிகள் பல...
நெகடிவ்தான் நிஜம்.. கறுப்புத்தான் நிறம்..

பாராட்டுகள் ரேஷ்மா.
நன்றிகள் பல...
முதல் முறையாக எழுதத் தோன்றியது...
இது என்ன இந்த கடைசி இரண்டு வரிகள் நீங்கள் கூறியிருப்பது
விளக்கம் வேணும்...

தாமரை
14-09-2009, 03:46 AM
தன்னை விட உயர்ந்த ஒருவனை
தனக்குக் கீழே பணியமர்த்த
இரும்பு இதயம் வேண்டும்.

தன்னை விட திறமை குறைந்தவனை
தலைவனாய் ஏற்றுக் கொள்ள
உயர்ந்த உள்ளம் வேண்டும்

சரண்யா
14-09-2009, 03:46 AM
அறிமுகம் செய்துவிட்டேன்
நீங்கள் அனுப்பிய திரியில்....
லின்க் தமிழில் திரிதானா?
நன்றிகள்
அமரன் ,நேசம் விமர்சித்தற்கு
என்றும் நல்ல நாளாக அமைய வாழ்த்துகள்..

arun
14-09-2009, 06:01 AM
கவிதை நன்று

மனித இயல்புகளில் ஒன்று பழைய நிலைகளை மறப்பது

சரண்யா
17-09-2009, 02:58 AM
நன்றி arun மறப்பதால் தானே முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.....

Ranjitham
17-09-2009, 03:22 AM
அருமை யான கவிதை சரன்யா.
அருமை யிலும் அருமை தாமரை அவர்களின் பதிவு.
தாமரை அவர்களுக்கு ஒருகேள்வி இந்த’ஈகோவை’ என்னதான் செய்வது?
நன்றியுடன்
இரன்சிதம்.

சரண்யா
20-09-2009, 08:53 AM
நன்றி Ranjitham அவர்களே...
விரைவில் தாமரை பதில் அளிப்பாரா?

சிவா.ஜி
20-09-2009, 09:16 AM
கவிதை நல்லக் கேள்வியைத்தான் கேட்கிறது. வாழ்த்துகள் சரண்யா.

சரண்யா
20-09-2009, 10:09 AM
நன்றி
சிவா.ஜி அவர்களே

வானதிதேவி
20-09-2009, 10:49 AM
நிஜங்கள் என்றுமே சுடும் அனலானவை.மனம் தான் உணர மறப்பவை.மறுப்பவை.நன்று சரண்யா.

சரண்யா
20-09-2009, 11:47 AM
மறுக்கப்படவில்லை
மறந்து விட்டது பாதையை....
நன்றிwanathidevi அவர்களே

aren
10-10-2009, 01:13 PM
இதுதான் வாழ்க்கை சரண்யா. நாம் கடந்து வந்த பாதையை ஏனோ திரும்பி பார்க்க நாம் முயற்சிப்பதில்லை. காரணம் அதில் பட்ட அடிகளா?

நாம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்று ஒரு முறை திரும்பிப்பார்த்தால் அதே நிலமையில் இருக்கும் பலருக்கு நாம் உதவிட நினைப்போம். ஆனால் பலர் அதை மறந்துவிடுகிறார்கள்.

கவிதை நன்றாக வந்திருக்கிறது.

இன்னும் தொடருங்கள்.