PDA

View Full Version : அகநாழிகை - இலக்கிய இதழுக்கு படைப்புகள்..



ஆதவா
12-09-2009, 09:31 AM
அன்புள்ள நண்பருக்கு,

இருமாதங்களுக்கொரு முறை வெளியாக இருக்கும் அகநாழிகை‘ தமிழ் இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல் வெளிவர உள்ளது.

குழு அரசியல்களுக்கு அப்பாற்பட்டு ஆகச்சிறந்த படைப்புகளை அடையாளங்கண்டு வெளிப்படுத்துவதையும், ஏற்கனவே சிறப்புற எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை பிரசுரிப்பதும், புதிதாக எழுதுவோரை ஊக்கப்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு ‘அகநாழிகை‘ வெளிவர உள்ளது.

இம்முயற்சி சிறப்புற தாங்கள் தங்கள் படைப்புகள் / சந்தா / புரவலர் / விளம்பரம் என இயன்ற விதத்தில் பங்கேற்று தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தித்தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

படைப்புகள் அனுப்பாதவர்கள் விரைவில் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,

பொன்.வாசுதேவன்

==============================================================================

அகநாழிகை சந்தா விவரம்

தனி இதழ் ரூ.25/-

ஆண்டு சந்தா ரூ.150/-

இரண்டாண்டு சந்தா ரூ.275/-

ஐந்தாண்டு சந்தா ரூ.600/-

ஆயுள் சந்தா ரூ.3000/-

சந்தா : வெளிநாடுகளுக்கு

ஆண்டு சந்தா ரூ.1000/-

இரண்டாண்டு சந்தா ரூ.1800/-

ஆயுள் சந்தா ரூ.10000/-

புரவலர் திட்டம்

புரவலர் கட்டணம் ரூ.1000/-

(புரவலர்களின் பெயர் ஒவ்வொரு இதழிலும் வெளியிடப்படும்)

புரவலர்கள் சந்தா கட்டணம் தனியே செலுத்த வேண்டும்.

விளம்பரக்கட்டணம்

பின் அட்டை (ஒரு வண்ணம்) ரூ.10000/-

முன் உள் அட்டை (ஒரு வண்ணம்) ரூ.8000/-

பின் உள் அட்டை (ஒரு வண்ணம்) ரூ.7000/-

உள் பக்கம் ரூ.3000/-

சிறு விளம்பரங்கள் ரூ.1000/- ரூ.750/- ரூ.500/-

புத்தக விளம்பரங்கள், தொடர் விளம்பரங்களுக்கு சலுகைக் கட்டணம்.

சந்தா / புரவலர் / விளம்பரக் கட்டணங்கள் ICICI வங்கிக் கணக்கு எண். 155501500097 - P.VASUDEVAN மூலம் செலுத்தலாம்.

வாயிலாகவும் பணவிடை / காசோலை ‘P.VASUDEVAN' - PAYABLE AT 'MADURANTAKAM' மூலம் செலுத்தலாம்.

வெளியூர் காசோலைகளுக்கு ரூ.25/- சேர்த்து அனுப்ப வேண்டும்.


அனைத்து தொடர்புகளுக்கும் :

அகநாழிகை - இலக்கிய இதழ்
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
எண்.33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603306.
காஞ்சிபுரம் மாவட்டம்.

பேச : +91 999 454 1010

மின்மடல் வழி : aganazhigai@gmail.com


---------------------------------------

நம் மன்ற மக்கள், தங்கள் படைப்புகளை இதழுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

அன்புடன்
ஆதவா

சிவா.ஜி
12-09-2009, 09:47 AM
நல்ல படைப்புகள் வெளிவர இப்படித் தரமான இலக்கியப் பத்திரிகைகள் வெளிவருவது மிகவும் அவசியமாகும். நம் மன்ற உறவுகளின் படைப்புகளை இனி இதில் காணலாம்.

விரைவில் சந்தா செலுத்திவிடுகிறேன். தகவலுக்கு நன்றி ஆதவா.

அறிஞர்
14-09-2009, 01:55 PM
பத்திரிக்கை வெற்றியடைய வாழ்த்துக்கள்...