PDA

View Full Version : அமெரிக்க ஓபன் டென்னிஸ் ‘டபுள்ஸ்’ பைனலில் பூபதி, பயஸ் ஜோடி



அறிஞர்
10-09-2009, 02:11 PM
கோப்பையை வெல்லும் அணியில் இந்தியர் ஒருவர்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ‘டபுள்ஸ்’ பைனலில் பூபதி, பயஸ் ஜோடி


நியூயார்க், செப். 10-
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் லியாண்டர்பயஸ் (இந்தியா) - லூக்காஸ்லோகி (செக்குடியரசு) ஜோடி 6-4, 3-6, 7-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் பாப்பிரையன் - மைக்பிரையன் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மகேஷ்பூபதி (இந்தியா) - மார்க்நவ்வல்ஸ் (பகாமஸ்) ஜோடி 6-4, 6-2 என்ற நேர்செட்டில் மேக்ஸ்மிலனி (பெலாரஸ்) - ஆன்டிராம் (இஸ்ரேல்) ஜோடியை தோற்கடித்தது. பட்டம் வெல்வதற்கான இறுதி போட்டியில் பயஸ் - பூபதி ஜோடி பலப்பரீட்சை நடத்துகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4ம் நிலை வீரரான ஜோகோவிக் (செர்பியா) 7-6, 1-6, 7-5, 6-2 என்ற கணக்கில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெ யின்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் பிரிவில் யானி யா விக்மயர் (பெல்ஜியம்) 7-5, 6-4 என்ற கணக்கில் கேத்ரினா பான்டரன்கோவாவை (உக்ரைன்) தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார்.

jey
13-09-2009, 04:11 PM
போன வருடம் தவறவிட்ட கோப்பை இந்தமுறை நமக்கு கட்டாயம் கிட்டும் வாழ்த்துக்கள் கோப்பையை வெல்ல

பால்ராஜ்
17-09-2009, 07:04 AM
நண்பர்கள் மீண்டும் சேர்ந்தால்... சின்னச் சிறிய பிணக்கங்களை மறந்து விட்டு
உலகை வெல்லலாம்..
ஏன் எதிர்பக்கங்களில் இருக்க வேண்டும் என்பது பெரிய கேள்விக்குறி..!