PDA

View Full Version : செய்தி ஒளிப்பதிவாளரை அடித்த ஹர்பஜன்ஆதி
10-09-2009, 01:01 PM
http://www.youtube.com/watch?v=fOAWe1fEUt0

முழுவிவரத்துக்கு கீழுள்ள ப்ரவீன் அண்ணா திரியை பார்க்கவும்..

நன்றி ப்ரவீன் அண்ணா..

praveen
10-09-2009, 01:26 PM
தினமலர் செய்தி

கைநீட்டினார் ஹர்பஜன்! கேமராமேனுக்கு விட்டார் "குத்து'

பெங்களூரு:ஹர்பஜன் மீண்டும் பொசுக் என்று கோபப்பட்டார். இம்முறை கேமராமேன் முகத்தில் குத்து விட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.இந்திய கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன். களத்திலும் சரி, களத் திற்கு வெளியேயும் சரி, ஆவேசமாக செயல்படுவார். கடந்த 2007ல் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது இவர்,சைமண்ட்சை "குரங்கு' என திட்டியதாக புகார் எழுந்தது. கன்னத்தில் "பளார்': அதன் பின்பு கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.,) நடந்த தொடரின் போது ஸ்ரீசாந்த் கன்னத்தில் "பளார்' என அறைந்தார். இதனால் அந்த தொடர் முழுவதும் பங்கேற்க ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, தனது புதிய ஹம்மர் காரில் "நம்பர் பிளேட்' இல்லாமல் சென்ற தற்காக 3 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார். ஸ்ரீசாந்த் பிரச்னைக்கு பின், தன்னுடைய கோபத்தை குறைத்து நல்வழியில் செயல்பட இருப்பதாக ஹர்பஜன் உறுதி அளித்து இருந்தார். இதனை நேற்று மீறினார். வீடியோ கேமராமேன் முகத்தில் குத்து விட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார்.முகத்தில் "குத்து': முத்தரப்பு தொடரில் பங்கேற்க இலங்கை செல்வதற்காக நேற்று காலை பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்தார். தனது பொருட்களை காரில் இருந்து இறக்கினார். அப்போது கேமராமேனின் கேமரா, ஹர்பஜன் தலையில் லேசாக இடித்துவிட்டது. இதனால் உடனடியாக கோபப்பட்ட அவர், அந்த கேமராமேனின் முகத்தில் வழக்கம் போல ஓங்கி ஒரு "குத்து' விட்டார். பின் அவரை முறைத்து பார்த்தார். அதற்குள் பாதுகாப்பு படையினர், கேமரா மேனை அந்த இடத்தில் இருந்து அகற்றினர்.இது அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோபத்தை குறைத்து நற்பெயர் எடுப்பதாக ஹர்பஜன் உறுதி தெரிவித்தும், தொடர்ந்து அவர் இப்படி செயல்படுவது, ஜென்டில் மேன் விளையாட்டான கிரிக்கெட் டுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கேப்டன் ஆசையில்...அடுத்தடுத்து கெட்ட பெயரை சம்பாதித்து வரும் ஹர்பஜனுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி மீது திடீர் ஆசை வந்துள்ளது. கார்பரேட் டிராபியில் ஏர் இந்தியா புளு அணிக்கு கேப்டனாக இருந்த அவர் இதுகுறித்து கூறுகையில்,"" வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு அசத்தலான கேப்டனாக செயல்பட்டார். தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக சுழல் வீரர் வெட்டோரி உள்ளார். அப்படி இருக்க இந்தியாவில் மட்டும் கேப்டன் பதவிக்கு பேட்ஸ் மேன்கள் மட்டும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. கேப்டன் பதவிக்கு நல்ல ஆளுமைத்திறன் தான் தேவை. அவர் சிறந்த பவுலரா அல்லது பேட்ஸ்மேனா என பார்க்கத் தேவையில்லை. வாய்ப்பு கிடைத்தால் கேப்டன் சவாலை சந்திக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.இதற்கு மாறான இன்னொரு செய்தி வெப்துனியாவில்.

ஹர்பஜன் என்னைத்தாக்கவில்லை - கேமரா மேன்
வியாழன், 10 செப்டம்பர் 2009( 13:25 IST )

இந்திய அணி நேற்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் பெங்களூர் விமான நிலையத்தில் கேமரா மேனை ஹர்பஜன் தாக்கியதாக செய்தி வெளியாகியது. ஆனால் தக்கப்பட்டதாக கூறப்படும் கேமரா மேன் லக்ஷ்மி நாராயண், தன்னை ஹர்பஜன் தக்கவில்லை என்று அந்த செய்தியை மறுத்துள்ளார்.

பெங்களூர் விமான நிலையத்தில் நுழைவதற்கு முன் ஹர்பஜன் சிங் தன் காரிலிருந்து தன் உடைமைகளை எடுத்து கொண்டிருந்த போது கேமரா மேனின் கேமரா அவரது தலையில் பட்டதால் ஹர்பஜன் ஆத்திர்மடைந்ததாகவும், இதனால் லக்ஷ்மி நாராயணன் என்ற அந்த கேமரா மேனை ஹர்பஜன் ஒரு குத்து விட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்துக் கூறிய லக்ஷ்மி நாராயணன், "பாஜி என்னை அடிக்கவும் இல்லை, தகாத வார்த்தைகளால் திட்டவும் இல்லை, வேறு சிலர் மட்டுமே இதனை பரப்பி விட்டனர். அவர் கேமராவை சற்றே தள்ளி விட்டார் அவ்வளவே" என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்பா
10-09-2009, 01:32 PM
ஹர்பஜன் அவசர கோவக்காரர் தான்...
ஆனால் அந்த கேமரா மேன் பக்குவக்காரார்...
இருந்தாலும் ஓவர் பக்குவம் என்று சொல்லலாம்......

ஓவியன்
10-09-2009, 02:23 PM
ஹர்பஜன் சிங்க் அடிக்கடி பளார் சிங்காக மாறுகிறாரே....

அறிஞர்
10-09-2009, 02:24 PM
பிரபலங்களுக்கு இந்த தொல்லை அதிகம்...
என்னப் பிரச்சனையில் அவர் வந்தாரோ...

சில நாட்களில் இதை பூசி மொழுகிவிடுவார்கள்..

பாலகன்
10-09-2009, 04:50 PM
இதில் தவறான (குத்துவிட்டதாக) செய்தியை வெளியிட்ட செய்தி தாள் மீது தான் நடவடிக்கை எடுக்கவேன்டும். முதல் பக்கத்தில் உள்ள படத்தில் அர்பஜன் கேமராவை தான் தட்டிவிட்டுள்ளார்.

கேமரா மேன் தனது எல்லை எது என்று இல்லாமல் அல்லது தெரியாமல் பத்திரிக்கை சுதந்திரத்தை தன் கையில் எடுத்துக்கொன்டு ஒரு ஸ்டார் கிரிக்கெட் வீரர் தலையில் இடிப்பது ஞாயமாக?

இன்பா
11-09-2009, 05:32 AM
அறிஞர் & மகாபிரபு அண்ணாஸ்,

பிரபலப்படுத்துவதும் போட்டு மிதிப்பது பத்திரிக்கை காரர்களே.. தான்...!!! அதை விடுங்கள்...

ஹர்பஜன் நல்ல விளையாட்டுக் காரர் ஆனால் இதுப் போல அவர் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டியுள்ளார்... அப்போ அவரிடம் தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம்...

மன்மதன்
11-09-2009, 09:14 AM
தலையில் மெதுவாக பட்டதற்கு அனைத்து பத்திரிக்கைகாரர்களுக்கு மத்தியில் அப்படி நடந்திருக்ககூடாது..அது ஒரு பிரபலத்திற்கு அழகல்ல..

மக்களுக்கு செய்தியை முந்தித்தரவேண்டும் என்று மூக்கை தொடுமளவிற்கு கேமராவை கொண்டு செல்வது செய்தியாளர்களுக்கு அழகல்ல..

கூட்ட நெரிசலில் இப்படி ஆக வாய்ப்புள்ளது..

இவ்வளவு ஷார்ட் டெம்பர் கொண்ட ஹர்பஜனுக்கு கேப்டன் பதிவு கொடுக்க மாட்டார்கள்..

பால்ராஜ்
13-09-2009, 06:22 AM
யாராவது திருப்பி இரண்டு கொடுத்தால் நிறுத்தி விடுவார் என்று நினைக்கிறேன்..

நேசம்
13-09-2009, 06:44 AM
இப்படி கோபம் வரும் ஒருவர் அணிதலைவர் பதவிக்கு வந்தால் பலப்பேர் இப்படி தான் அடி வாங்க வேண்டி இருக்கும்.இதற்கு பதிலாக பாரளுமண்றத்துக்கு அனுப்பலாம்

ஆதி
13-09-2009, 07:19 AM
இப்படி கோபம் வரும் ஒருவர் அணிதலைவர் பதவிக்கு வந்தால் பலப்பேர் இப்படி தான் அடி வாங்க வேண்டி இருக்கும்.இதற்கு பதிலாக பாரளுமண்றத்துக்கு அனுப்பலாம்


நேசம் அண்ணா, எப்படி இப்படி:eek:, சூப்பர் சூப்பர் அடைமிங்..:icon_b:

:D::plachen001:

ஹர்பஜனுக்கு, இன்னும் பயிற்சி வேண்டுமோ.. :sprachlos020:

ஓவியன்
13-09-2009, 07:26 AM
இப்படி கோபம் வரும் ஒருவர் அணிதலைவர் பதவிக்கு வந்தால் பலப்பேர் இப்படி தான் அடி வாங்க வேண்டி இருக்கும்.

இதனைக் கேட்டால் ஆமாம், ஆமாமென அழுதபடி தலையாட்டுவார் ஸ்ரீசாந் ..!! :D:D:D

நேசம்
13-09-2009, 07:37 AM
நேசம் அண்ணா, எப்படி இப்படி:eek:, சூப்பர் சூப்பர் அடைமிங்..:icon_b:

:D::plachen001:

ஹர்பஜனுக்கு, இன்னும் பயிற்சி வேண்டுமோ.. :sprachlos020:
இதுவே போதும்ங்கே...
ச்ரிசாந்த் மற்றும் கேமராமேன்

அமரன்
13-09-2009, 09:33 AM
இப்படி கோபம் வரும் ஒருவர் அணிதலைவர் பதவிக்கு வந்தால் பலப்பேர் இப்படி தான் அடி வாங்க வேண்டி இருக்கும்.இதற்கு பதிலாக பாரளுமண்றத்துக்கு அனுப்பலாம்

நலாப் பல்டி அடிப்பாரா நேசம்..

arun
14-09-2009, 06:07 AM
இவருக்கு இதே வேலையா போச்சு :D