PDA

View Full Version : என் உள்ளத்தை தொட்ட..



இன்பக்கவி
10-09-2009, 10:52 AM
கைகள் ஆயிரம் கவிதை
எழுதின...
என் உள்ளத்தை தொட்ட
ஒரே கவிதை நீ...

உன் கண்கள் வடிக்கும்
கண்ணீர் கூட ஒரு அழகான
கவிதை என்றாய்....

தினமும் இன்று
உன்னை பிரிந்து
கண்ணீர் வடிக்க வைத்து
விட்டாய்...

என் கன்னம் வருடி
உன் கை துடைக்கும்
தருணத்திற்காக
கண்ணீர் கூட
சுகம் தான் எனக்கு...

உன் கண்ணில்
என் கண்ணை காணும்
நொடிகளில்
என் கண்ணை நானே
காண முடியாமல் தவிக்கிறேன்...

உன் இமை மூடும் நொடியில்
உன்னை மட்டுமே
காண முடிகிறது என்னால்...
உன் பார்வையின் வலிமை
என் இதயம் வரை
துளைக்கிறது...

என்றாவது வந்து போகும்
மின்னலாய் உன் புன்னகை...
மின்னலை கொண்டு
படம் எடுக்க தூண்டும்..

எப்போதும் சிரிக்கும்
சிரிப்புக்கு அர்த்தம் இல்லை...
அழகும் இல்லை...

என் இதயம் இடம் மாறினாலும்
உன் இதயத்தோடு இருப்பதால்
நிம்மதி உறக்கம் எனக்கு...
உன்னை விட யாரால் முடியும்
என் இதயத்தைபத்திரமாக
பார்த்துக் கொள்ள...

ஆதவா
10-09-2009, 11:23 AM
அன்பு கவிதா அவர்களுக்கு....

உன், என், ஏமாற்றம், மனம், நீ, நான், பாசம், காதல், உள்ளம், கவிதை, கண்கள், கண்ணீர், பிரிவு, நேற்று, இன்று, சுகம், இதயம், என்னை, உன்னை, தனிமை, சிரிப்பு, புன்னகை, என்னவன், என்னவள், முத்தம், மழை, போன்ற வார்த்தைகள் கிட்டத்தட்ட கோடி கவிதைகளுக்கும் மேல் உபயோகப்படுத்தப்பட்டு விட்டன. கவிதைகளில் வார்த்தையாளுமை மிக முக்கியம். சிலசமயம் எளிமையாகவே இருந்தாலும் அதன் உள்ளார்ந்த வலிமை அதிகமாக இருக்கும்.

ஆரம்ப காலங்களில் கவிதைகள் எழுத ஆரம்பிப்பவர்கள் காதலின் கரம் பிடித்து நடப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் கரம்பிடித்தே நடக்க முயற்சிப்பது எத்தனை தவறு? கொஞ்சம் காதல் வட்டத்தைக் கிழித்துப் பார்ப்போம். சமூகம் சார்ந்து, உள்ளம் சார்ந்து, வீடுபேறு சார்ந்து, நிகழ்வுகள், குறிப்புகள், உணர்வுகள், நெகிழ்வுகள், குற்றங்கள், வலிகள், நிராசைகள், வெறுப்புகள், பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், என்று ஆக்கங்களின் வட்டம் பெருத்துக் கொண்டே போகவேண்டும்... வழக்கம் நிறைந்த வார்த்தைகள், சக்கையான கருக்கள், காதலைக் கவிதையாக்குவதாய் பாதாளத்தில் தள்ளும் வாக்கிய அமைப்புகள், ஒரேபாதையில் சுற்றிச் சுற்றி வரும் கவிதைகள் என இதன் வட்டம் குறுகிக் கொண்டே போகவேண்டும்..

நீங்கள் எழுதும் கவிதைகளில் ஒன்றேனும் சமூகத்தில் ஓரிடம் பிடிப்பதாக இருக்கவேண்டும். சில உணர்வுகளின் வடிகாலாக இருந்துவிட்டுப் போக, கவிதைகளை உபயோகப்படுத்துதல் தவறானது. அதில் எந்த பிரயோசனமுமில்லை.

கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள். உங்கள் கண்கள் வித்தியாசமாகப் பார்ப்பதற்கு உள்ளத்தில் இடம் கொடுங்கள். கவிதைகளைத் தானாக அமரும்படி செய்யுங்கள். உங்கள் கவிதைகளின் வீண் வார்த்தைகளைக் குறையுங்கள். தமிழாழம் புகுந்து சொற்களைத் தேடுங்கள். ஒருமுறைக்குப் பலமுறை கவிதைகளைப் படித்து உங்களுக்கு நீங்களே விமர்சியுங்கள். நிச்சயம் கைகூடும்.... தேடல் ஒன்றே வாழ்வின் உயரத்திற்குக் காரணம்...

அன்புடன்
ஆதவா

பாரதி
10-09-2009, 01:36 PM
ஆதவாவின் வார்த்தைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அவை உங்களின் கவிதைகளின் படைப்பு இன்னும் சிறக்க வேண்டும் என்ற நினைப்பில் எழுந்தவை என்பதை கண்டுகொள்ளுங்கள். ”தினமும் இன்று” என்று வார்த்தைகளை அமைப்பது சரியானதா என்று சிந்தியுங்கள்.

கவிதை மூலமாக நீங்கள் கூற விரும்பும் வலி, அன்பு விளங்குகிறது. உங்கள் கவிதைகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அறிஞர்
10-09-2009, 02:22 PM
உள்ளத்தை தொட்டவரை கவிதையாய் பார்த்தல் அருமை.
ஆதவாவின் வழிநடத்தல், தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

இன்பக்கவி
11-09-2009, 03:18 PM
உங்க அளவுக்கு எனக்கு கவிதை எழுத வராது
முயற்சி செய்கிறேன்..நன்றிகள்

பாரதி
12-09-2009, 02:57 PM
உங்க அளவுக்கு எனக்கு கவிதை எழுத வராது. முயற்சி செய்கிறேன்..நன்றிகள்

நண்பரே,
மேலே கூறப்பட்ட கருத்துகள் உங்கள் கவிதையை மேலும் மெருகூட்ட உதவக்கூடும் என்ற எண்ணத்தில் உண்டானவையே. யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ வருந்தவோ வேண்டாம். எல்லோரும் இன்னும் சிறப்பான படைப்புகளைத் தர இயலும். அது உங்கள் கூற்றில் இருப்பதைப் போல, முயற்சியினால் வருவதேயன்றி வேறில்லை. நன்றி.

வானதிதேவி
12-09-2009, 03:21 PM
தங்கமே ஆனாலும் மெருகேற்றும் போது தான் ஒளிர்கிறது.அன்பு சகோதரி வைரமல்லவா.நண்பர் குழாம் இருக்க முடியாததும் உண்டோ

aren
10-10-2009, 01:25 PM
கவிதை நன்றாக வந்திருக்கிறது கவிதா. முதலில் உங்களுக்குத் தெரிந்த கருவிலேயே எழுதுங்கள். எழுத்து சரளமானவுடன் அடுத்த கருவில் கவிதை தானாகவே வந்துவிழும் என்பது நிச்சயம். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வியாசன்
10-10-2009, 01:53 PM
கவிதை நன்றாக இருக்கின்றது

என்ன அனுபவித்து எழுதியதா? வாழ்த்துக்கள் இன்னமும் எதிர்பார்க்கின்றேன்