Log in

View Full Version : என்னவள்



வானதிதேவி
09-09-2009, 06:01 PM
அம்மாவிடம் நண்பன் இல்லம் செல்வதாய்
கூறிவிட்டு குளக்கரையில் நான் மட்டும்
நீ வருவாயென!

வந்தால் இன்றாவது வாய் திறந்து உன்னிடம்
கேட்டுவிட வேண்டும்!

அந்தோ வருகிறாய் உன் பாத சலங்கையின்
ஒலியிலேயே உன் அவசரம் புரிகிறது
மயங்காதே பெண்ணே
உன்னிடம் அப்படி என்ன கேட்டு விடப்போகிறேன்
ஒரு குவளை நீரைத் தவிர
இப்படித்தான் ஆரம்பமாயிற்று நம் நேசம்
ஆனாலும் நீ எவ்வளவு அழகாக வெட்கபட்டாய்
உன் பாதம் பட்டு மண்ணும் சிவந்த மாயமென்ன பெண்ணெ

கா.ரமேஷ்
10-09-2009, 06:22 AM
காதலில் தவிப்பு மிக அழகு..

கவிதையில் அது அழகாக தெரிகிறது வாழ்த்துக்கள்...

அமரன்
10-09-2009, 07:23 AM
அஞ்சி அலறும் சலங்கை அவசரத்தைக் கொஞ்சுவதும்..
வஞ்சியை கண்ட* காளை மனம் குறும்பில் விஞ்சுவதும்..
இலக்கிய இன்பங்கள்.. காதல் தாகத்தின் தெளிப்புகள்..

பாராட்டுகள் வானதி.

வானதிதேவி
10-09-2009, 11:10 AM
நன்றி,ஆண் கெஞ்சுவதும் பெண் மிஞ்சுவதும் ஊடலுக்கே உரித்தானது அல்லவா?

பாரதி
10-09-2009, 02:40 PM
இதுதான் உங்களின் முதல் முயற்சி என்று நினைக்கிறேன். தொடர்ந்து நல்ல ஆக்கங்களை படைக்க மன்ற உறவுகளின் கவிதைகளும் வழிகாட்டுதலும் உங்களுக்கு உதவட்டும்.

உணர்வை வெளிக்காட்டும் கவிதைக்கு பாராட்டு.

அறிஞர்
10-09-2009, 06:48 PM
கெஞ்சலும், மிஞ்சலும், கொஞ்சலமில்லாதது.. எந்த காதல்...
தொடர்ந்து எழுதுங்கள்..

aren
10-10-2009, 01:20 PM
இப்படி தவித்து பின் பெற்ற காதலில் ஒரு அர்த்தம் இருக்கும். கவிதை நன்றாக இருக்கிறது. இன்னும் எழுதுங்கள்.

வானதிதேவி
10-10-2009, 04:25 PM
நன்றி நண்பர்களே முயற்சிக்கிறேன்.