PDA

View Full Version : முத்தரப்பு கிரிக்கெட் போட்டி



அய்யா
08-09-2009, 01:16 PM
முத்தரப்பு கிரிக்கெட் இந்தியா - இலங்கை - நியூசி. மோதல்

போட்டி அட்டவணை

தேதி மோதும் அணிகள் இடம்

செப்.8 இலங்கை & நியூசி. கொழும்பு
செப்.11 இந்தியா & நியூசி. கொழும்பு
செப்.12 இந்தியா & இலங்கை கொழும்பு
செப்.14 இறுதிப் போட்டி கொழும்பு
* எல்லா போட்டிகளும் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் பகல்&இரவு ஆட்டமாக (இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு) நடக்கிறது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை. நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இலங்கை, நியூசிலாந்து, இந்தியா மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் (செப்.8-14) இன்று தொடங்குகிறது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் பகல்-இரவு ஆட்டத்தில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.


உள்ளூரில் விளையாடுவதால் சற்று கூடுதல் பலத்துடன் இலங்கை களம் இறங்குகிறது. பேட்டிங், பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் அந்த அணி வலிமையாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி அடுத்து நடந்த 2 டி20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி அசத்தியது. நியூசி. அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகம் உள்ளனர். அதுவே அந்த அணிக்கு சாதகமாகும்.

நம்பர் 1 வாய்ப்பு: காயம் காரணமாக அதிரடி வீரர் சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இருவரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. சச்சின், டிராவிட், நெஹ்ரா போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருப்பது பலம். கடந்த சில வருடங்களாகவே இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி களை குவித்து வருகிறது.

ஒருநாள் தரவரிசையில் 127 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா உள்ளது. இந்தியா 126 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா கோப் பையை வென்றால் தரவரிசை யில் முதல் இடத்தைப் பிடிக்கும். ஒருநாள் போட்டிக்கு 2002ம் ஆண்டு தரவரிசை பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுவரை இந்தியா முதல் இடத்தைப் பிடிக்க வில்லை. கிடைத்துள்ள இந்த அருமையான வாய்ப்பை டோனி அன் கோ பயன்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.
-----------
முத்தரப்புத் தொடர்.

இலங்கை எதிர் நியுசிலாந்து.

இலங்கை 216/7. (50 ஓவர்கள்)

திலன் சமரவீரா 104, ஆஞ்சலோ மாத்தியூஸ் 51,

அய்யா
08-09-2009, 01:59 PM
நியூசிலாந்து திணறல்..

10 ஓவர் முடிவில்.. 17/3.

40 ஓவர்களில் 200 ஓட்டங்கள் தேவை.

aren
08-09-2009, 03:16 PM
சாமரவீரா நன்றாக ஆடி இலங்கையை அபாயகட்டத்திலிருந்து மீட்டு கொண்டுவந்தார்.

இப்பொழுது பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசுகிறார்கள். இலங்கை இந்தப் போட்டியில் நிச்சயம் வெல்லும் என்றே நினைக்கிறேன்

அய்யா
08-09-2009, 04:40 PM
இலங்கை 97 ஓட்ட வேறுபாட்டில் வெற்றி..!

arun
09-09-2009, 07:24 AM
தடுமாற்றத்துடன் இலங்கை ஆரம்பித்தாலும் முடிவில் அசத்தலாக வென்று விட்டது பாராட்டுக்கள்

aren
09-09-2009, 11:43 AM
அவங்க ஊரில் ஜெயிக்கவில்லையென்றால் எப்படி. அதுவும் மலிங்கா மாதிரி ஒரு பந்து வீச்சாளரை வைத்துக்கொண்டு.

ஓவியன்
09-09-2009, 03:00 PM
மலிங்கா மாதிரி ஒரு பந்து வீச்சாளரை வைத்துக்கொண்டு.

மலிங்கவையும் இராணுவத்தில் சேர்த்தால் நல்ல குண்டு வீச்சாளராக விளங்கி இராணவத்தினருக்கும் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் போலத் தெரிகிறது..!! :D:D:D

அறிஞர்
09-09-2009, 03:34 PM
இலங்கை சிறப்பாக விளையாடியது...

இந்தியா, நியூசிலாந்து யார்.. முன்னேறுவார்கள் எனப் பார்க்கவேண்டும்.

ஜாக்
09-09-2009, 03:42 PM
மலிங்கவையும் இராணுவத்தில் சேர்த்தால் நல்ல குண்டு வீச்சாளராக விளங்கி இராணவத்தினருக்கும் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் போலத் தெரிகிறது..!! :D:D:D
உங்களால் மட்டும்தாங்க இப்படி எல்லாம் யோசிக்க முடியும்:lachen001::lachen001:

சாம்பியன் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் இந்த முத்தரப்பு போட்டியில் நமது வீரர்கள் தங்களது திறமையை வெளிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்ன நடக்குதுனு பொருத்திருந்து பார்ப்போம்:icon_b:

பாரதி
10-09-2009, 12:52 PM
கம்பீர் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கோஹ்லி அணியில் இடம்பெறுவார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

அறிஞர்
11-09-2009, 01:44 PM
இந்தியாவில் பவுலிங்க் சிறப்பாக இருந்தது..
நியூசிலாந்து 155 (46.3 ஓவர்)
இந்தியா 21/1 (6.5 ஓவர்)

அறிஞர்
11-09-2009, 02:39 PM
அடுத்தடுத்து.. விக்கெட்டுகளை இழந்து இந்தியா 71/3 (19.2 ஓவர்)

ஜாக்
11-09-2009, 03:23 PM
வெற்றி இலக்கை நோக்கி இந்தியா மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது 108/4 (30 ஓவர்)

அறிஞர்
11-09-2009, 03:54 PM
வெளியேறும் நிலையில் நியூசிலாந்து..

142/4

ஜாக்
11-09-2009, 04:17 PM
வெற்றி வெற்றி

நியூசிலாந்தை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

இறுதி ஸ்கோர் 156/4 (40.3 ஓவர்)


இதன் மூலம் இறுதி போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவது முடிவாகிவிட்டது

அமரன்
12-09-2009, 07:09 AM
ஒருநாள் போட்டிக்கான தரப்படுத்தலில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது இந்தியா. வாழ்த்துகள் இந்தியா.

மதி
12-09-2009, 07:24 AM
இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்

ஜாக்
12-09-2009, 11:29 AM
கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்ய தீர்மானித்தது

தற்பொழுது இலங்கை மிக வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது

174/4 (30 ஓவர்கள்)

நேசம்
12-09-2009, 12:00 PM
36.6ஒவரில் 207 ஒட்டங்களுக்கு 5 விகெட்.ஜெயசுர்யா 98 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டார்

ஜாக்
12-09-2009, 01:04 PM
இலங்கை 50 ஓவர் முடிவில் 307/6

இந்திய அணிக்கு இமாலய இலக்கு 308 ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று பார்க்கிறேன் பொருத்திருந்து பார்ப்போம்

வானதிதேவி
12-09-2009, 03:34 PM
நாம் தான் வெற்றி பெற்றோம் நண்பரே

பாரதி
12-09-2009, 03:46 PM
நாம் தான் வெற்றி பெற்றோம் நண்பரே

...................!!!
இந்திய அணியின் தற்போதையை “ஓட்ட” விபரம் : 136 / 8

பாரதி
12-09-2009, 03:51 PM
மேத்யூஸ் பந்து வீச்சில் 16 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஆறு துடுப்பாட்டக்காரர்களை ஆட்டமிழக்க வைத்துள்ளார்!

இந்தியா :139 / 9

ஜாக்
12-09-2009, 05:51 PM
வெற்றி வெற்றி இலங்கை அபார வெற்றி

இலங்கை 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இலங்கை - 307/6 (50 ஓவர்கள்)

இந்தியா - 168 (37.2 ஓவர்கள்)

ஆட்ட நாயகன் - மேத்தியூஸ்

இறுதி போட்டி வரும் திங்கள் 14/09/09 அன்று பகல் இரவு ஆட்டமாக நடை பெறும்

ஓவியன்
13-09-2009, 04:41 AM
இந்தப் போட்டியின் வெற்றி தோல்வி இறுதிப் போட்டியினைப் பாதிக்காது என்று தெரிந்தும் ஓய்விலுள்ள வீரர்களை களமிறங்கி இந்தப் போட்டியினை ஒரு பயிற்சிப் போட்டியாக இந்தியா மாற்றத் தவறியது ஏன்..??

பிரவீன் குமார், அபிஷேக் நாயர்...

களமிறக்கிப் பார்த்திருக்கலாமே.....???

நேசம்
13-09-2009, 04:55 AM
இந்தியா ஒருவேளை வெற்றி பெற்று இருந்தால் ஒவியன் நிங்கள் சொல்வது சரியாக இருந்து இருக்கும்.

ஓவியன்
13-09-2009, 05:25 AM
இல்லை நேசம் இப்போது இந்திய கிரிக்கட் நிர்வாகத்தினர் இறுதிப்போட்டிக்கு வீரர்களைத் தெரிவதில் நிச்சயமாக குளப்பத்திலிருப்பார்கள், பிரவீன், அபிஷேக், விராட் போன்றவர்களை நேற்றுக் களமிறக்கி அவர்களில் யாராவது நன்றாக விளையாடியிருந்தால் அவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லலாமே...

இப்போது பழைய அணியின் வீரர்களைக் கொண்ட அணி நன்றாக விளையாடாத வேளையில் புதியவர்களையும் இறுதிப் போட்டியில் பரீட்சித்தும் பார்க்க முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது....

என்னைப் பொறுத்த வரை நெஃகராவுக்கும் டெண்டுல்கருக்கும் நேற்று ஓய்வு கொடுத்திருக்கலாம்,

பால்ராஜ்
13-09-2009, 06:19 AM
நம்ம ஆட்களுக்கு கில்லர் இன்ஸ்டிங்க்ட் எனப்படும் வெற்றி வெறி இல்லாததே காரணம்..

ஒரு மன நிலைப் பயிற்சியாளரே இந்திய அணிக்கும் நீண்ட காலத் தேவை...

பாக்கிஸ்தானும் சரி இலங்கையும் சரி
பலரும் தவறினாலும் ஏதாவது ஒரு ஜோடி க்ளிக் ஆவதுபோல் விளையாடுவார்கள்..

நம்ம ஆட்கள் முதல் ஜோடி காலி... முற்றிலும் காலி..!

நேசம்
13-09-2009, 06:55 AM
என்னைப் பொறுத்த வரை நெஃகராவுக்கும் டெண்டுல்கருக்கும் நேற்று ஓய்வு கொடுத்திருக்கலாம்,
நிச்சயமாக டெண்டல்கருக்கு (ட்ராவிட் சேர்ந்து தான்)நிரந்தர ஒய்வு கொடுக்கலாம்.பலப்போட்டிகள் கொண்ட தொடராக இருந்து, ஒருவேளை இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தால் புதிய விரர்களை இறஙி பார்த்து இருப்பார்கல்.பந்து விச்சிலும் ஆர்.பி.சிங்க் மற்றும் நெHராவும் சரியான பாரிமில் இருப்பதால் மாற்று விரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.அதுதான் காரணமாக இருக்கும்.ஆனால் பிரவிண் குமரவை சேர்ந்து இருந்தால் இலங்கை மைதனாத்தில் அவரது பந்து விச்சு எடுப்பட்டு இருக்கும்

நேசம்
13-09-2009, 07:34 AM
ஒருநாள் போட்டிக்கான தரப்படுத்தலில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது இந்தியா. வாழ்த்துகள் இந்தியா.
ஒரு நாள் முதல்வர் போல் ஒரே நாளில் இலங்கை தோற்றதன் முலம் முதலிடத்தை இழந்து முண்றாமிடத்துக்கு வந்து விட்டது.

அமரன்
13-09-2009, 08:33 AM
இலங்கைக்கு வாழ்த்துகள்..

மாத்யூ என்ற இளம் சகலதுறை ஆட்டக்காரரை இலங்கை பெற்று விட்டதாகத் தோன்றுகிறது.

கோப்பை யாருக்கு என்று வாக்களியுங்கப்பூ.

ஓவியன்
13-09-2009, 09:17 AM
உண்மைதான் அமரன்,
ஆஞ்சலோ மத்யூ
கவனிக்கப்பட வேண்டியவர்,
எதிரணிகளினால் மைதானங்களில்
கண்காணிக்கப்பட வேண்டியவர்..!!

ஜாக்
13-09-2009, 04:57 PM
இந்தப் போட்டியினை ஒரு பயிற்சிப் போட்டியாக இந்தியா மாற்றத் தவறியது ஏன்..??
ஒரு வேளை வின்னிங் காம்பினேஷனை பிரிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு இருக்கலாம்

ஒரு நாள் முதல்வர் போல் ஒரே நாளில் இலங்கை தோற்றதன் முலம் முதலிடத்தை இழந்து முண்றாமிடத்துக்கு வந்து விட்டது.
24 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கவில்லை என்பது மிக வருத்தத்துக்குரிய விஷயம்:traurig001:

கோப்பை யாருக்கு என்று வாக்களியுங்கப்பூ.
கோப்பைய யார் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் எனது வாக்கினை செலுத்திவிட்டேன்:icon_b:

ஓவியன்
14-09-2009, 06:35 AM
இன்று இறுதிப் போட்டி, முதல் போட்டியிலும் சவாலாக விளங்கும் வீரர்களை நிச்சயமாக இந்தப் போட்டியில் இலங்கை அணி களமிறக்கும்...
முக்கியமாக முத்தையா முரளிதரன், மற்றும் நியூசிலாந்துடனான போட்டியில் கலக்கிய சமரவீர இந்தப்போட்டியில் களமிறக்கப்படுவார்கள்...

இந்திய அணியிலும் மாற்றங்கள் இருக்கலாம், கார்த்திக்குக்குப் பதில் விராட் கோலி களம் இறங்கலாம், பிரவீன் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமோ தெரியவில்லை. யூசப் பதானுக்குப் பதில் அபிஷேக் நாயர் பொருந்தமென நினைத்து களமிறக்கினாலும் இறக்குவார்கள்..

இந்திய அணி பலமான ஓட்ட எண்ணிக்கையைக் கடக்க யுவராஜ் ஃபோர்முக்குத் திரும்புவது அவசியம், இந்தப் போட்டியிலாவது யுவராஜ் ஃபோர்முக்கு வருவாரா..??

பொதுவாக இப்போது ஃபோர்மிலுள்ளவர்களைக் கொண்டு பார்த்தால் இந்தியாவிலும் இலங்கை அணி பலமுள்ளதாகத் தெரிகிறது, இருந்தாலும் இன்று நாணயச் சுழற்சியும் முக்கிய பங்கு வகிக்கும்..

சுண்டி விடப்பட்ட நாணயம் சங்ககாரவையா தோனியையா பார்த்துச் சிரிக்கப் போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்....:rolleyes:

ஓவியன்
14-09-2009, 09:15 AM
நல்ல விடயம் இந்தியா நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய தோனி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.... :)

இந்திய அணியில் ஒரே மாற்றம், கார்த்திக்குப் பதில் விராட்கோலி களமிறக்கப் பட்டுள்ளார்...
இலங்கை அணியில் எந்த மாற்றமுமில்லை பழைய அணியே விளையாடுகிறது....

ஜாக்
14-09-2009, 09:32 AM
டாஸ் செய்த இந்திய பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி கொண்டு இருக்கிறது

முக்கிய செய்தி டென்டுல்கருடன் டிராவிட் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி உள்ளார்

தற்போதைய நிலவரம் 36/0 (7 ஓவர்கள்)

ஜாக்
14-09-2009, 11:03 AM
26 ஓவர்கள் முடிவில் இந்தியா 146/1:icon_b:

அமரன்
14-09-2009, 11:15 AM
சச்சின் 100 போடுவாரா.

ஓவியன்
14-09-2009, 11:27 AM
சச்சின் 100 போடுவாரா.

போட்டிட்டாருங்கோ, போட்டிட்டார்...!!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

ஜாக்
14-09-2009, 11:28 AM
டென்டுல்கர் அபாரம் தனது 44 வது சதத்தை பூர்த்தி செய்தார் :icon_b::icon_b:

183/1 33 (ஓவர்கள்)

கா.ரமேஷ்
14-09-2009, 11:29 AM
சச்சினின் அடுத்த மைல்கல்...

44வது 100 தொட்ட தலைக்கு பாராட்டுக்கள்...

அறிஞர்
14-09-2009, 01:46 PM
இந்தியா நன்றாக விளையாடியது. ஆனால் 40-45 ஓவர்களில் இன்னும் ரன் குவித்திருக்கலாம்.

இலங்கை நல்ல ஆரம்பத்தை கொடுத்துள்ளது 32 (4.3 ஓவர்)

போட்டி விறுவிறுப்பாக இருக்கும்

ஜாக்
14-09-2009, 02:17 PM
ஆமாம் அறிஞரே நான் 350க்கு மேல் எதிர்பார்த்தேன் நடுவில் கொஞ்சம் சொதப்பிட்டாங்க*:traurig001:

தற்போதைய நிலவரம்

இலங்கை 79/2 (10 ஓவர்கள்)

ஆட்டம் பயங்கர விறு விறுப்பாக போய் கொண்டிருக்கிறது

பால்ராஜ்
14-09-2009, 02:31 PM
நம்ம மசங்க சொதப்பக் கூடியவங்கதான்..
320 ஒருவேளை போதாது என்று தோன்றியபோது.
ஜெயசூரியா பொனதால் ஓரளவுக்கு சான்ஸ் உள்ளதுபோல் இருக்கிறது..

ஆமா..இந்த மாலிங்கா ஆக் ஷனை யாருமே கண்டுக்கிறதில்லை..??
மாங்காய் எறிகிறமாதிரி லிட்டரல் த்ரோயிங்..

மதி
14-09-2009, 03:16 PM
சதமடித்த டெண்டுல்கருக்கு வாழ்த்துகள்...

இலங்கை 162/5. 24 ஓவர்களில்... இந்தியா வெல்லுமா???

அறிஞர்
14-09-2009, 07:10 PM
ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு அபாரம். முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி.. இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

பால்ராஜ்
15-09-2009, 12:46 AM
அப்படி இப்படி திண்டாடித் திணறு ஜெயிச்சாச்சு...
இலங்கை ஆறாவது ஜோடி அசத்தலாகப் அலட்டிக்காமல் ரன் அடித்துக் கொண்டிருந்தார்கள்... அதை உடைத்த ரெய்னாவின் பந்து ஆட்டத்தின் திருப்புமுனை என்று சொல்லலாம்.

இந்தியர்கள் எல்லோரின் கையிலும் வெண்ணை... பந்து வழுக்கி வழுக்கி விழுகிறது.

எப்படியும் வெற்றி வெற்றிதானே. வாழ்த்துக்கள்.

மதி
15-09-2009, 02:55 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்

ஓவியன்
15-09-2009, 04:11 AM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகளும்....:)


ஆமா..இந்த மாலிங்கா ஆக் ஷனை யாருமே கண்டுக்கிறதில்லை..??
மாங்காய் எறிகிறமாதிரி லிட்டரல் த்ரோயிங்..

நாம ஏற்கனவே கண்டு சொல்லி இருந்தம்ல...!! :D


மலிங்கவையும் இராணுவத்தில் சேர்த்தால் நல்ல குண்டு வீச்சாளராக விளங்கி இராணவத்தினருக்கும் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் போலத் தெரிகிறது..!! :D:D:D

ஜாக்
15-09-2009, 04:44 AM
இந்திய அணி வெற்றி பெற்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்:) பீல்டிங் மிகவும் கவலைக்குறியதாக இருக்கிறது:frown:

இன்பா
15-09-2009, 04:47 AM
இந்திய அணி வெற்றி பெற்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்:) பீல்டிங் மிகவும் கவலைக்குறியதாக இருக்கிறது:frown:

எதிலாவதொன்றில் தவறு செய்வது நம் பழக்கம்...!!

ஃபீல்டிங்கில் தடுமாறினாலும் வெற்றி நமதே, என்று சந்தோசம்.. :)

aren
15-09-2009, 04:54 AM
போன ஆட்டத்தில் செய்த சொதப்பலை இந்த ஆட்டத்தில் செய்யாமல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு என் பாராட்டுக்கள்.

ஃபீல்டிங்கில் பயங்கர சொதப்பல்.

இனிமேல் கார்த்திக்கிற்கு சந்தர்பம் கிடைப்பது கடினம் என்றே எதிர்பார்க்கிறேன்.

மன்மதன்
15-09-2009, 02:15 PM
போட்டி முடிந்ததும் தோனி பெரிய லெக்சரே கொடுத்திருக்கிறார் போல..

இலங்கை ஜெயசூர்யாவை அதிகமாக நம்பி இருப்பது போல தற்போது சச்சினை இந்தியா நம்பி இருக்கிறது..

வெற்றி பெற்ற பாரத அணிக்கு வாழ்த்துகள்..

பால்ராஜ்
15-09-2009, 03:11 PM
டெண்டுல்கர் சதம் அடித்தபோது மைதானத்தில் மயான அமைதி... இந்த இடத்துக்கெல்லாம் சென்று விளையாட வேண்டுமா என்ற கேள்வி...

என்னதான் சொன்னாலும் நம்ம மெட்ராஸ் க்ரௌட் கீதே.. அதுதான் நைனா பெஸ்ட் க்ரௌட்... நம்ம டீம் தோத்துப் போனாலும் அழகாகக் கை தட்டுவாங்க...!

தோசைக் கரண்டியை 'டண்; என்று தோசைக்கல் மேலே தூக்கி போட்டது போல தன் பேட்-ஐ எடுத்து விக்கெட்டு மேல் போட்டாரே.. அவர் வாழ்க..

இல்லையென்றால் இந்த வாழ்த்துக்கள் எல்லாம் எங்கேயோ போயிருக்கும்...

ஜாக்
15-09-2009, 03:21 PM
ஃபீல்டிங்கில் தடுமாறினாலும் வெற்றி நமதே, என்று சந்தோசம்.. :)
எளிதாக ஜெயிக்க வேண்டிய மாட்சை இப்படி கடைசி வரை இழுத்தடித்து ஜெயிப்பதையே வழக்காம கொண்டு இருக்கிறாரக்ள்

வெற்றி பெற்றது சந்தோஷமாக இருந்தாலும். இந்த வெற்றியை முழுமையாக ரசித்து அனுபவிக்க முடியவில்லை

ஃபீல்டிங்கில் பயங்கர சொதப்பல்..
சொதப்பல் இல்லை சொதப்பலோ சொதப்பல்

இனிமேல் கார்த்திக்கிற்கு சந்தர்பம் கிடைப்பது கடினம் என்றே எதிர்பார்க்கிறேன்.
தமிழ வீரர்களுக்கு இதே வேலைங்க கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் ஒரு போது சரியாக பயன்படுத்தி கொண்டதாக சரித்திரமே கிடையாது ஸ்ரீகாந்த் மட்டும் விதி விலக்கு

போட்டி முடிந்ததும் தோனி பெரிய லெக்சரே கொடுத்திருக்கிறார் போல.. ..
பீல்டிங்கில் சொதப்பிய மன்னர்களில் தோனியும் ஒருவரல்லவா

இலங்கை ஜெயசூர்யாவை அதிகமாக நம்பி இருப்பது போல தற்போது சச்சினை இந்தியா நம்பி இருக்கிறது....
ம்ம் இந்த நிலமை மாறவேண்டும்