PDA

View Full Version : இயற்கையின் சீற்றம்- சுனாமி பற்றிய அறிவியல் கதை-முற்றும்



மதுரை மைந்தன்
09-09-2009, 03:33 AM
முகவுரை: இது சுனாமி (ஆழிப்பேரலை) யைப்பற்றிய கற்பனை கதை. இந்த கதை 2004 ல் சுனாமி வருவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதி கதை சுருக்கத்தை பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்பெயில்பெர்குக்கு அனுப்பியிருந்தேன். அது கதை சுரக்கம் மட்டுமே. அவரிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அதை இந்த இணைய தளத்திற்கு அனுப்பி அவர்கள் என்னை திரைக் கதை வடிவமைத்து லாஸ் ஏஞ்சல்சில் நடை பெற்ற திரைக் கதைக்கான போட்டியில் பங்கு பெற அழைப்பு விடுத்தனர். Nature's Fury என்ற தலைப்பில் பதிவாகியுள்ள கதையைப்பற்றி இங்கு காணலாம்.

http://www.filmmakers.com/member/screenwriter/folios_zz.htm

எனக்கு திரைக்கதை வடிவமைக்க தெரியாததாலும் வேலைப்பழுவாலும் அக்தையை நிறுத்தி வைத்திருந்தேன். தமிழ் மன்றத்தில் எனது முந்தைய அறிவியல் சார்பு கதைகளுக்கு கிடைத்த வரவேற்பில் இக்கதையை தமிழில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

இயற்கையுடன் ஒன்றி அதைப் போற்றி வாழ்ந்தால் அவை நமக்கு பல பொக்கிஷங்களைத் தரும். அனால் இயற்கைக்கு முரண்பாடாக நடந்தால் அவை சுனாமி போல சீற்றம் கொள்ளும் என்பது தான் கதையின் கரு. இந்த கதை 1996 ம் வருடம் நடக்கிறது. அதன் முக்கியத்தவத்தை கதையின் இறுதியில் கூறவிருக்கறேன். உங்களது ஆதரவு வேண்டி கதைக்குள் செல்கிறேன்.

பாகம்-1

எம்.வி.நான்கோரி சென்னைவிலிருந்து அந்தமான் தீவுகளின் தலை நகரமான போர்ட் ப்ளேருக்கு சுமார் 800 பயணிகளுடன் செல்லத் துவங்கியது. பயணிகளில் அமெரிக்காவில் பணியாற்றும் விஞ்ஞானி ராமனும் ஒருவர்.

கப்பலில் ராமனும் அவரது மனைவி மகள் ஆகியோர் முதல் வகுப்பு அறையில் பயணித்தனர்.

ராமன் முதலில் சென்னையிலிருந்து போர்ட் ப்ளேருக்குக் செல்லும் விமானத்தில் செல்ல நினைத்தார். ஆனால் அவரது மனைவியும் மகளும் கப்பலில் செல்லப் பிரியப் பட்டார்கள். கப்பல் பயணம் மூன்று நாட்கள் எடுப்பதால் வழியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இவற்றை கண்டு களிக்கலாம் என்ற ஆசை அவர்களுக்கு. ராமனும் அவர்களது ஆசையை ஏற்றுக் கொண்டார்.

கப்பலின் முதலாம் வகுப்பு காபினில் நான்கு படுக்கைகள் உள்ளன. ஆனால் கப்பல் அதிகாரிகள் டாக்டர் ராமனுடய காபினில் நான்காவது படுக்கையை வேறு யாருக்கும் தராமல் முழு காபினையும் ராமனுக்கும் அவரது மனைவி மற்றும் மகளுக்கு அளித்திருந்தனர். ராமனின் பெண் ஒரு படுக்கைக்குத் தாவி விளையாடிக் கொண்டிருந்தாள். ராமனின் மனைவி கப்பலை ஒரு சுற்றிப் பார்த்து லைப்ரரி ஒன்றை கண்டு அதிலிருந்து ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து வந்து அதில் மூழ்கிப் போனாள்.

கப்பல் சென்னையை விட்டு கிளம்பி சிறிது நேரம் கழித்து டின்னருக்கான மணி ஒலிக்கவே ராமனின் மனைவி புத்தகத்தை வேண்டா வெறுப்பாக கீழே வைத்து விட்டு ராமனுடனும் மகளுடனும் ரெஸ்டாரன்டிற்கு செனறாள்.

அவர்கள் ஒரு மேசையை தேர்ந்தெடுத்து சாப்பிட உடகாரும் போது கப்பல் சிப்பந்திகளில் ஒருவன் ராமனிடம் வந்து " சார் காப்டென் உங்களை சந்திக்க விரும்புகிறார்" என்று கப்பலின் காப்டனும் இன்னும் சில மனிதர்களும் அமர்ந்திருந்த மேசையை காண்பித்தான்.

ராமன் எழுந்து காப்டன் அமர்ந்திருந்த மேசையை அணுக காப்டன் இருகரம் கூப்பி வரவேற்றார்.

" வாங்க உங்க பெயரை பயணிகள் பட்டியலில் பார்த்தேன். நீங்கள் ஒரு விஞ்ஞானி என்று அறிந்து சந்திக்க ஆவலாயிருந்தேன். இதோ இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் அப்படித் தான்" என்றார் அவர்.

அனைவரும் ராமனை வரவேற்றனர்.

"நீங்கள் உங்களது குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டு விட்டு வாருங்கள். உங்களுடன் அளவளாவ ஆசைப்படுகிறோம்" என்றார் காப்டென்.

அவர்களிடமிருந்து விடைபெற்று தனது மேசைக்கு திரும்பிய ராமன் மனைவியிடம் காப்டென் தன்னை சாப்பாட்டிற்கு பிறகு வந்து அளவளாவ கூப்பிட்டிருக்கிறார் என்றார். ராமனின் மகள் " ஓ.கே. டாடி. நாங்க சாப்பாட்ட பிறகு டி.வி யில் படம் பார்க்கப் போறோம்" என்றாள்.

சாப்பாடு முடிந்தவுடன் ராமன் காப்டென் அமர்ந்திருந்த மேசையில் சென்று அமர்ந்தார்.

" நீங்கள் என்ன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா" என்று காப்டென் கேட்டதற்கு " நான் சுனாமியைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்" எனறதும் அங்கு அமர்ந்திருந்த அனைவரும் ராமனின் பேச்சை கேட்க மிக ஆவலாக இருக்கைகளின் முன் வந்தனர்.

தொடரும்

தாமரை
09-09-2009, 03:38 AM
எவ்வளவு திறமை பெற்றவர்களுடன் மன்றத்தில் இணைந்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்கும் பொழுதே புல்லரிக்கிறது..

மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது உங்களது அறிமுகப் பகுதியே!

முதல் வரிசையில் உட்கார்ந்து "உம்" கொட்டும்

இன்பா
09-09-2009, 04:32 AM
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

புல்லரிக்க வைக்கிறது....!!!!!

samuthraselvam
09-09-2009, 08:42 AM
சுனாமியை பற்றிய கதையா? வரவேற்கிறேன்....
வாழ்த்துக்கள் மைந்தன் அண்ணா....

அன்புரசிகன்
09-09-2009, 02:47 PM
கதிரையின் நுனிக்கு வரவைத்துவிட்டு இப்படி காக்கவைக்கிறீங்கள்.. அடுத்தபாகத்திற்காக காத்திருக்கிறேன்.

மதி
09-09-2009, 03:05 PM
அடுத்த பாகம் சாரே??? நல்ல ஆரம்பம்.

Mano.G.
09-09-2009, 03:22 PM
எவ்வளவு திறமை பெற்றவர்களுடன் மன்றத்தில் இணைந்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்க்கும் பொழுதே புல்லரிக்கிறது..
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது உங்களது அறிமுகப் பகுதியே!

முதல் வரிசையில் உட்கார்ந்து "உம்" கொட்டும்

தம்பி தாமரையின் நிலையிலேயே நான், ஆங்கில திரை படத்திற்கு
எழுதப்பட்ட கதை.

வாழ்த்துக்கள்

உங்கள் புகழ் மேலும் உயர்ந்து உலகம் போற்ற வாழ்த்துக்கள்.


மனோ.ஜி

மதுரை மைந்தன்
09-09-2009, 08:40 PM
என்னை பாராட்டி கதைக்கு பின்னூட்டங்கள் போட்ட மனறத்து நண்பர்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்

மதுரை மைந்தன்
09-09-2009, 08:42 PM
பாகம்-2

"சுனாமி என்றால் என்ன?" " சுனாமி எப்போ வரும் என்று சொல்ல முடியுமா?' "சுனாமி வரவதை தடுக்க முடியுமா?" இப்படி அடுக்கடுக்காய் கேள்வி கேட்டனர் அங்கு அமர்ந்திருந்த கப்பலின் சக பிரயாணிகள். அவர்களுக்கு ராமன் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

" சுனாமி என்பது கடல் பொங்கி எழவதை குறிக்கும் ஜப்பானிய வார்த்தை. தமிழில் ஆழிப்பேரலை என்பார்கள். சுனாமி வருவதை அறிந்து கொண்டு பாதுகாப்பு செய்து கொள்ள முடியும். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதிகளில் சுனாமி வரும் அபாயம் இருப்பதால் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எனது ஆராய்ச்சியின் மூலம் ஒரு கருவியை உருவாக்கி இருக்கிறேன். இந்த கருவிகளை கலிபோர்னியாவின் கடற்கரை பகுதிகளில் நிறுவி சுனாமி வரப் போவதை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இங்கு அந்தமானில் போர்ட் பிளெர் நகரத்தில் அத்தகைய கருவி ஒன்றை நிறுவவதற்கு இந்திய அரசாங்கத்தின் அழைப்பே ஏற்று சென்று கொண்டிருக்கிறேன்

சுனாமி உருவாகுவதை எனக்கு தெரிந்த அளவில் நிறுத்த முடியாது. அனால் அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அதை தடுக்க முடியும். சுனாமி உருவாகுவதற்கு கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பகங்களால் கண்டங்களின் அடித்தட்டுக்கள் நகர்ந்து கடல் நீர் இடப் பெயற்சி செய்யப் படுவது ஒரு காரணமாகும். எனது ஆராய்ச்சியின் படி இந்த பூமி கடல் மற்றும் எல்லா பொருட்களுக்கும் ஒரு இயற்கையான இடைவிடாமை (Natural Frequency) இருக்கிறது. இயற்கையின் இந்த இடைவிடாமை பாதிக்கப்படும் போது இயற்கை சீற்றம் கொண்டு சுனாமியாக எழுகிறது.

" இந்த இயற்கையான இடைவிடாமையைப் பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?" என்று கேட்டார் ஒருவர்.

"நிச்சயமாக" தொர்ந்தார் ராமன். " எல்லா பொருட்களும் இயற்கையில் ஒரு வித ஆட்டத்தை கொண்டிருக்கின்றன. இரும்பு கம்பிகள் குழாய்கள் கட்டிடங்கள் பாலங்கள் போன்றவை முடிக்கிவிட்ட வீணை கம்பிகள் போல ஆடுகின்றன. தண்ணீர் நிரம்பிய டம்ளரை ஒரு ஸ்பூனினால் தட்டப் பட்டால் அது வினாடிக்கு 500 முறை என்று ஆடுகிறது. கட்டிடங்கள் வினாடிக்கு ஒரு முறை என்ற அளவில் ஆடுகின்றன. பாலங்கள் கட்டப்படும்போது கட்டிட பொறியாளர்கள் இவைகளின் இயற்கையான இடைவிடாமையை பாலங்களின் மீது செல்லும் வாகங்களின் இடைவிடாமையிலிருந்து வேறு பட்டு இருக்குமாறு செய்வார்கள். போர் காலங்களில் பாலங்கள் மீது சிப்பாய்கள் நடக்கும் போது அவர்கள் ஒரு சேர அடி எடுத்து வைக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் அடி எடுத்தால் இந்த அடிகளின் இடைவிடாமை பாலத்தின் இடைவிடாமையுடன் ஒன்று சேர்ந்து பாலங்கள் இடிந்து விழக்கூடும்.".

சுனாமி உருவாகுவதற்கு கடலின் இயற்கை இடைவிடாமை பாதிக்கப்படுவதும் ஒரு காரணம் என்பதற்கு தமிழக சரித்திரத்தில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அவைகளை கதை வடிவில் கூறுகிறேன்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் ராமன் கூறப் போகும் கதைகளை ஆர்வத்துடன் கேட்க தயாராகினர்.


தொடரும்

அன்புரசிகன்
10-09-2009, 12:16 AM
அண்ணே... இரத்த அழுத்தத்தினை கூட்டுகிறீர்கள்... வாசித்து முடிக்கையில் பெருமூச்சு தேவைப்படுகிறது..

புதிதாக ஒன்று அறிந்தேன். எல்லாப்பொருட்களும் எப்படியாவது ஆடுகிறது என்று... (அதிர்வது வேறா??? சற்று தெளிவு படுத்துங்களேன்....)

samuthraselvam
10-09-2009, 05:17 AM
காட்ட விரும்புகிறேன். அவைகளை கதை வடிவில் கூறுகிறேன்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் ராமன் கூறப் போகும் கதைகளை ஆர்வத்துடன் கேட்க தயாராகினர்.


தொடரும்

நாங்களும்......

கதையை படிக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது....

தொடருங்கள்.. ஆர்வமாக காத்திருக்கிறோம்....

கீதம்
10-09-2009, 05:44 AM
அறிவியல் கதையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்வண்ணம் அழகுத் தமிழில் தருகிறீர்கள். இதன் பின்னணியில் உள்ள உங்கள் உழைப்பை வியந்து பாராட்டுகிறேன். அன்புடன் கீதம்.

மதுரை மைந்தன்
10-09-2009, 11:12 AM
அண்ணே... இரத்த அழுத்தத்தினை கூட்டுகிறீர்கள்... வாசித்து முடிக்கையில் பெருமூச்சு தேவைப்படுகிறது..

புதிதாக ஒன்று அறிந்தேன். எல்லாப்பொருட்களும் எப்படியாவது ஆடுகிறது என்று... (அதிர்வது வேறா??? சற்று தெளிவு படுத்துங்களேன்....)

எனக்கு தெரிந்த அளவில் ஆடுவது என்று நான் இங்கு குறிப்பிட்டிருப்பது அனைத்து பொருட்களும் தங்களுக்குள் ஒரு இடைவிடாத ஆட்டத்தை கொண்டிருக்கின்றன. இதற்கான சிறந்த உதாரணம் போர் காலங்களில் படை வீரர்கள் ஒரு பாலத்தை கடக்கும் போது அது வரை ஒரு சீராக நடந்து வந்தவர்களை சீரில்லாமல் நடக்க சொல்வார்கள். (they have to miss the beat of their boots sounding in unision) அவர்கள் அப்படி ஒரு சீராக நடந்தால் அந்த நடையின் ஒலி யின் இடைவிடாமை (frequency) பாலத்தின் இயற்கையான இடைவிடாமை (natural frequency)யுடன் ஒன்றி பாலம் தகர்ந்து விடக் கூடும் என்பதால். அதிர்வு என்பது ஒலி அளவில் ஒரே சீராக இருக்காது. உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.

மதுரை மைந்தன்
10-09-2009, 11:13 AM
நாங்களும்......

கதையை படிக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது....

தொடருங்கள்.. ஆர்வமாக காத்திருக்கிறோம்....

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
10-09-2009, 11:23 AM
அறிவியல் கதையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்வண்ணம் அழகுத் தமிழில் தருகிறீர்கள். இதன் பின்னணியில் உள்ள உங்கள் உழைப்பை வியந்து பாராட்டுகிறேன். அன்புடன் கீதம்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கீதம். அறிவியலை தாய் மொழியில் கற்றால் தான் வளம் உண்டாகும். ஜப்பான் சீனா போன்ற நாடுகளில் அறிவியலில் உயர் கல்வியை கூட தங்களது தாய் மொழிகளில் கற்கின்றனர். தமிழ் நாட்டில் தமிழ் விஞ்ஞான வளர்ச்சி கழகம் என்ற அமைப்பு அண்ணாமலை பல்கலை கழகத்தில் இயங்கி வந்தது. அவர்கள் தமிழில் அறிவியல் அருஞ்சொற்களை பட்டியலிட்டு தந்திருக்கிறார்கள். 1996 ம் ஆண்டு இந்திய சுதந்திர பொன் விழாவை கொண்டாடம் வகையில் எனது முயற்சியால் "தேசிய மேம்பாட்டில் அணு சக்தியின் மகத்தான பங்கு" என்ற கருத்தரங்கு ஒன்றை முற்றிலும் தமிழிலியே நடத்தியது ஒரு சாதனையாகும்.

மதுரை மைந்தன்
10-09-2009, 11:27 AM
பாகம்-3

ராமன் தனது கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.

" சுமார் 1500 ஆண்டகளுக்கு முன் நடந்தது இது. அப்போது தமிழகத்தை சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களில் சோழ மன்னர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தனர். வீர சோழன் என்ற மன்னன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே யுத்தம் நடந்து வந்தது அப்போது. நமது கதையின் நாயகன் மருது பாண்டிய நாட்டில் மீனவனாக தொழில் புரிந்து வந்தான். யுத்தம் வந்ததும் அவன் படையில் சேர்க்கப் பட்டு யத்த களத்தில் இருந்தான். சோழப் படைகள் யுத்தத்தில் வெற்றி பெற்று வந்தன. யுத்தம் முடிய இருக்கும் தருவாயில் அங்கிருந்து தப்பித்து கடற்கரையோரம் இருந்த தனது ஊருக்கு திரும்பினான். அவன் யுத்தத்திற்கு கிளம்பும் போது நோய் வாய் பட்டிருந்த மனைவியைப் பற்றி கவலைப் பட்டான்.

கோசலை மருதுவின் மனைவி அவன் திரும்பி வந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். யுத்தம் முடிவடைந்ததா பாண்டிய மன்னன் வெற்றி பெற்றானா என்றெல்லாம் கேட்டாள். " நாம் தோற்று விட்டோம். நான் யுத்த களத்திலிருந்து தப்பித்து இங்கு வந்தேன்" என்றான் மருது. இதைக்கேட்டு கோபமுற்ற கோசலை " யுத்தத்திலிருந்து புறமுதகிட்டு வருவது கோழைத்தனம். உன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நீ சண்டையிட்டிருக்க வேண்டும். உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலை" என்றாள். "நீ இங்கு நோயில் படுத்திருக்கும் போது என்னால் சண்டை போட முடியவில்லை. அதான் நான் கிளம்பி வந்தேன்" என்று சமாதானம் சொன்னான் மருது. " நீ உணவுக்கு என்ன செய்தாய்?" என்று மருது கேட்டதற்கு " பக்கத்து வீட்டுக்காரர்கள் கொஞ்சம் அரிசி கோடுத்தார்கள். ஊரிலிருந்த சற்று வயதான படையில் சேர தகுதியற்ற ஆண்கள் கடலில் சென்று பிடித்து வந்த மீன்கள் சிலவற்றை கொடுத்தார்கள். அவற்றை உண்டு சமாளித்தேன். அனால் தற்சமயம் வீட்டில் உணவு எதுவும் இல்லை "

இதைக் கேட்டு பெரு மூச்சு விட்ட மருது " சரி. நான் கடலில் சென்று மீன்களை பிடித்து வருகிறேன். அடுத்த சில நாட்களுக்கு தேவையான மீன்களை பிடித்த பிறகு வந்து நல்ல ஓய்வு எடுக்கவேண்டும்" என்று சொல்லி கிளம்பினான். இருட்டவதற்கு சில மணி நேரங்களே இருந்ததால் கோசலை மருதுவிடம் " கடலில் ரொம்ப தூரம் போக வேண்டாமய்யா. விளக்கு ஏற்றவதற்கு முன்பாகவே வந்துடு" என்று சொல்லி விடை கொடுத்தாள்.

மருது தனது சற்றே உடைந்த படகை எடுத்து கடலில் மீன் பிடிக்க சென்றான். பெரிய மீன்களாக பிடிக்க வேண்டும் என்று கடலில் வெகு தூரம் சென்றான். கடல் அமைதியாக இருந்ததும் குளிர் காற்று அடித்தததும் மருதுவை அசதியில் கண்ணயர செய்தது. அவன் கண் முழித்த போது படகு காற்றில் தள்ளப் பட்டு சோழ ராஜ்ஜியத்தின் தலை நகரமான காவிரிபூம்பட்டினம் என்ற பூம்புகார் அருகாமையில் வந்திருந்தது. யுத்தத்தில் பெற்ற வெற்றியை சோழ மன்னன் வெகு விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்தான். யானைகளின் பிளிரல்கள் குதிரைகளின் குளம்பொலிகள் சிப்பாய்களின் ஒரு சேர நடந்த ஒலிகள் பெரிய டமாரங்களின் தட்டல்கள் எங்கும் எதிரலித்தொன. இந்த ஒலிகள் பூமியை அதிர வைத்தன. கடலில் இருந்த மருதுக்கும் இந்த அதிர்வை உணர முடிந்தது.

பூம்புகார் கொண்டாட்டங்கள் உச்சக் கட்டத்தை எட்ட மருதுவின் கவனம் கடலில் தூரத்தில் பெரும் அலைகள் எழுவதை ஈர்த்தது. பல அடிகள் உயரத்திற்கு எழுந்த அலைகளைக் கண்ட மருது திடுக்குற்றான். படகை வெகு வேகமாக செலுத்தி கரையை அடையலாம் என்று முயன்றான். ஆனால் வெகு வேகமாக வந்த அலைகள் அவனது படகை தாக்கி மேலே தூக்கி எறிந்தது. நீச்சலில் திறன் படைத்தவனாக இருந்தாலும் அவனால் அலைகளை சமாளிக்க முடியாமல் கடலுக்கடியில் கொண்டு செல்லப் பட்டான். கடலில் மூழ்குவதற்கு முன் பூம்புகார் நகரம் அலைகளால் தாக்கப் பட்டு கடலுக்டியில் செல்வதை கண நேரத்தில் பார்த்தான்.

மருதுவின் வரவை எதிர் பார்த்து காத்திருந்த கோசலை நேரமாகவே கடற்கரைக்கு வந்து காத்திருந்தாள். முழு நிலவின் வெளிச்சத்தில் கடலில் தூரத்தில் பெரும் அலைகள் எழுவதைக் கண்ட கோசலை வெகு வேகமாக ஓடி வந்து 'கடல் பொங்குகிறது" என்று ஊரில் கூச்சலிட ஆண்கள் தங்களது பெண்களையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வேகமாக பக்கத்து தென்னை பனை மரங்களின் மீது ஏறி தப்பினார்கள். கோசலையின் அறிவிப்பினால் பெரும்பான்மையான மக்கள் காப்பாற்றப் பட்டார்கள்.

கொந்தளித்த கடல் அடங்கிய பிறகும் மருது திரும்பி வராமல் போகவே கோசலை அவனுக்கு என்னாயிற்றோ என்று கலங்கினாள். அவன் வருகையை எதிர் பார்த்து கடற்கரையிலேயே பல நாடகள் இருந்து இறுதியில் உயிர் நீத்தாள். கடல் கொந்தளிப்பிலிருந்து துணிகரமாக மக்களைக் காப்பாற்றியதன் நினைவாக கிராமத்து மக்கள் அவளது சிலை ஒன்றை அவள் உயிர் துறந்த இடத்தில் நிறுவினார்கள். காலப் போக்கில் மக்கள் அவளை கோசலை அம்மன் என்று வழிபடத் தொடங்கினார்கள்.


தொடரும்

கா.ரமேஷ்
10-09-2009, 11:49 AM
நிறைய அறிவியல் நிகழ்வுகளை அறிய முடிகிறது... தங்களது அடுத்தடுத்த பாகங்களுக்காக அனைவரோடு நானும் ஒருவனாய் காத்திருக்கிறேன் ....

மதி
10-09-2009, 12:13 PM
சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போட்டுடுங்க...

மதுரை மைந்தன்
11-09-2009, 09:09 AM
நிறைய அறிவியல் நிகழ்வுகளை அறிய முடிகிறது... தங்களது அடுத்தடுத்த பாகங்களுக்காக அனைவரோடு நானும் ஒருவனாய் காத்திருக்கிறேன் ....

உங்களை அதிகம் காக்க வைக்கவில்லை. இதோ தொடர்கிறது கதை. நன்றி

மதுரை மைந்தன்
11-09-2009, 09:10 AM
சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போட்டுடுங்க...

நீங்க சொல்லி நான் கேக்காம இருப்பேனா? இதோ கதையின் தொடர்ச்சி. நன்றி

மதுரை மைந்தன்
11-09-2009, 09:13 AM
பாகம் -4

ராமன் தொடர்ந்தார்.

" பூம்புகார் கடலுக்கடியில் சென்றதற்கு அன்று நடந்த கொண்டாட்டங்களில் எழுந்த ஒலிகளின் எழுச்சியின் இடைவிடாமை கடல் நீரின் இடைவிடாமையுடன் ஒன்றி இயற்கை சீற்றம் கொண்டதால் எழுந்த கடல் கொந்தளிப்பே காரணம் என்பது என் அனுமானம்".

ராமன் அடுத்து தொடர்வதற்கு முன் அங்கிருந்த ஒருவர் கேட்டார் " தற்சமயம் சுனாமி இங்கு வந்தால் அதனால் கப்பலுக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமா?".

அவருடய கேள்விக்கு காப்டென் பதிலளித்தார். " பெரும் அலைகள் கப்பலை தாக்கினால் கப்பல் கவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. 'பொசைடான் அட்வென்சர்' என்ற ஆங்கில படத்தில் இதை காட்டி இருக்கிறார்கள். ஆனால்இ சுனாமி வருவதை மன் கூட்டி அறிய விஞ்ஞானி ராமனிடம் ஒரு கருவி இருக்கிறது என்றார். அதன் மூலம் நமக்கு முன் கூட்டியே தெரிய வந்தால் நங்கூரங்களை பாய்ச்சி கப்பலை நிலை நிறுத்தி காப்பாற்ற முடியம்".

ராமன் சொன்னார் " எனது ஆராய்ச்சியின் படி தற்சமயம் சுனாமி உருவாகுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக குறைவு. ஆனால் மனிதர்கள் தங்களது நடவடிக்கைகள் மூலம் சுனாமி வருவதற்கு வழி வகுக்க முடியும். உதாரணமாக சில நாடுகள் கடலுக்கடியில் அணுகுண்டு பரிசோதனை நடத்துகிறார்கள்.;. இது மிகவும் அபாயகரமானது.".

" நான் அடுத்த சரித்திர நிகழ்வை கதையாக கூறுகிறேன்".

" 1960ம் வருடத்தில் ராமேஸ்வரத்தின் தென் பகுதியில் இருந்த தனுஷ்கோடி ஊர் கடலுக்கடியில் சென்றது தான் அந்த நிகழ்வு. ஊரின் நடுவில் இருந்த பெரிய சிவன் கோயிலில் குருக்களாக இருந்தார் வைத்யநாத சாஸ்திரிகள். கோயிலுக்கடுத்தாற் போல் இருந்தது அவரது வீடு. அவருடைய மூதாதையர்களைப் போலவே வைதீகத்தை தனது தொழிலாக கொண்டிருந்தார். அவரது ஒரே மகனான சங்கரனையும் ஒரு புரோகிதராக ஆக்கினார்.

அன்று காலையில் தனது மகன் சங்கரனிடம் அவர் சொன்னார் " நீ ஒரு பிராமணணாக அதுவும் புரோகிதராக இருந்து கொண்டு இது வரை குளிக்க வில்லை. சந்தியாவந்தனமும் பண்ண வில்லை. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?. சென்னையிலிருந்து ஒரு பணக்காரர் மழை வேண்டி வருண ஜபம் வேள்விக்கு எற்பாடு செய்திருக்கிறார். அவர்கள் எல்லா புரோகிதர்களையும் அழைத்திருக்கிறார்கள். எனக்கு காலில் வாதம் இருக்கு. அதனாலே ரொம்ப நேரம் கீழே உடகார்ந்து ஜபம் பண்ண முடியாது. எல்லோருக்கும் பட்டு வேட்டி அங்கவஸ்திரம் கொடுத்து நல்ல விருந்தும் போட்டு கையில் தடசிணையாக நூறு ரூபாயும் தரப்போகிறார்களாம். நீ கிளம்பி போயிட்டு வா"

சங்கரன் புரோகிதத்தை விருப்பமின்றி செய்தான். அவனுக்கு நன்றாக படித்து அவனுடன் ராமேஸ்வரத்தில் படித்த நண்பன் அப்துல் கலாமைப் போல் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வர வேண்டும் என்று ஆசை.

அப்துல் கலாமைப் பற்றி யோசித்ததில் பள்ளியில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவனுக்கு. அப்துல் கலாமும் சாம்பு என்ற பிராமண பையனும் வகுப்பில் முதல் பெஞ்சில் அடுத்தடத்து அமர்ந்திருந்தனர். அன்றொரு நாள் பள்ளிக்கு புதிதாக வந்திருந்த ஆசிரியருக்கு பிராமண பையன் இஸ்லாமிய பையன் அருகில் அமர்ந்திரந்தது பிடிக்கவில்லை. அவர் அப்துல் கலாமை வகுப்பின் கடைசி பெஞ்சில் சென்று அமர சொன்னார். இதை பொறுக்காத சாம்பு அழத் தொடங்கினான். அழுது கொண்டே வீடு சென்று தன் தந்தையிடம் அவன் இதைக் கூற அந்த பள்ளியின் பொறுப்பாளரான அவர் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு சிறுவர்களிடையே இத்தகைய பேதங்களை கொண்டு வரக் கூடாது என்று அறிவரை கூறி அப்துல் கலாமை சாம்புவின் பக்கத்து இருக்கையில் அமரச் செய்தார். பின்னாடகளில் அப்துல் கலாமக்கு பல உதவிகளும் செய்தார்.

சங்கரன் வெறுமையாக சிரித்தான். " ஒரு இஸ்லாமிய பையனை பிராமணர்கள் ஆதரவளித்து நன்றாக படிக்க செய்கிறார்கள். அனால் பிராமணணாக பிறந்த இவன் குலத் தொழிலை செய்ய வேண்டும். அந்த தொழிலிக்கு சமூகம் ஆதரவு தருவதில்லை. முற் காலத்தில் அரசர்கள் ஆதரவு தந்தனர். ஆனால் இன்று கிடைக்கும் நாலணா தட்சிணையில் இரண்டு வேளை சாப்பிடக் கூட முடியவில்லை.

சங்கரன் குளித்து வீபூதி தரித்து முந்தைய தினம் மடியாக நனைத்து காய வைத்திருந்த வேட்டியை கட்டிக் கொண்டான். சந்தியாவந்தனம் செய்து விட்டு துண்டை தோளில் போட்டுக் கொண்டு காக்கி பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பையில் இன்னொரு வேட்டி ஸ்லோக புத்தகம் தர்பை புல்கட்டு இவைகள் அவனுடைய சொத்தாக இருந்தன. காலில் செருப்பில்லாமல் கொதிக்கும் வெயிலில் தார் ரோட்டில் ரயில்வே நிலையம் நோக்கி புறப்பட்டான். ரயில்வே நிலையத்தில் ராமேஸ்வரத்திற்கு செல்லும் பாசஞ்சர் வண்டியில் ஏறினான் தான் தனுஷ்கோடிக்கு திரும்ப போவதில்லை என்று அறியாமலே.


தொடரும்.....

மதுரை மைந்தன்
12-09-2009, 09:48 AM
பாகம் - 5

ராமேஸ்வரம் செல்லும் பாசஞ்சர் வண்டியில் ஏறிய சங்கரன் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். ரயிலில் கூட்டமும் இல்லை உடகார்ந்திருந்த இருக்கை மரத்தினால் ஆனது. ஆகவே சங்கரனின் 'மடி' சுத்தத்திற்கு பங்கம் வரவில்லை. அனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. ரயில் கிளம்ப சற்று முன் நிறைய ஜனங்கள் வண்டியில் ஏறி சங்கரனின் பக்கத்தில் வந்தமர்ந்தனர். அத்தனை ஜனங்கள் வண்டியில் ஏறியது சங்கரனுக்கு வியப்பாக இருந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவன் " நாங்க ராமேஸ்வரம் கோயிலுக்கு போய்கிட்டிருக்கோம். இன்னிக்கு அங்கே நேபாள மன்னர் பூசை செய்ய போகிறார். அவர் பக்தர்களுக்கு சாப்பாடு போட்டு துணிமணி பணம் எல்லாம் தரப் போறார்" என்றான்.

சங்கரன் வரண ஜபம் செய்வதற்கு முன்னால் குளிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தான். பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரங்களை நினைவு படுத்திக் கொண்டான்.

பூஜை நடக்கவிருந்த மண்டபம் நிறைய தூண்களுடன் மேலே கூரை வேய்ந்து பெரிதாக இருந்தது. ஆனால் சுவர்கள் ஏதுமின்றி நான்கு பக்கங்களும் திறந்து இருந்தது. ரயிலிலிருந்து இறங்கி மண்டபத்தை அடைந்தவுடன் அங்கிருந்த தலைமை புரோகிதர் சங்கரன் எதிர் பார்த்தபடி அவனை பக்கத்து புஷ்கரணியில் குளித்து விட்டு வரமாறு கூறினார்.

ஜபத்தை ஆரம்பிக்கும் முன் தலைமை புரோகிதர் " இந்த ஜபத்தை ஏறபாடு செய்த ஜமீன்தாருக்கு பெரிய மனசு. தமிழ் நாட்டிலே மழையே இல்லை என்று இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் உங்கள் எல்லோருக்கும் சரிகை வேட்டி நூறு ரூபாய் பணம் இவற்றோடு நல்ல சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதனாலே எல்லோரும் மந்திரங்களை ஸ்பஷ்டமா உரக்க ஒரே நேரத்தில் சொல்லணும். உங்க மந்திரங்களொட ஒலி சென்னையில் இருக்கும் அவர் காதில் போய் விழணும்" என்று சொல்லி தொந்தி குலங்க சிரித்தார்.

" ஜமீன்தார் உங்களுக்காக மண்டபத்துக்கு வெளியே காபி சப்ளை ஏற்பாடு செய்திருக்கார். போய் சாப்பிட்டு வந்துடுங்கோ. ஜபம் மூணு நாலு மணி நேரம் ஆகும் நடுவில் ஒரு சொட்டு ஜலம் கூட சாப்பிடக் கூடாது." என்றார் அவர்.

சங்கரன் சென்று காபி சாப்பிட்டு வந்தான். ஜபம் செய்வதற்கு முன்னால் அவன் காபி சாப்பிட்டான் என்று தெரிந்தால் அவனுடைய அப்பா மிகவும் கோபித்து கொள்வார். ஒரு நாள் ஐயர்வாளுக்கு காபி சாப்பிடலைனா என்ன ஆயிடும் என்று கேட்பார்.

200 க்கும் மேற்பட்ட புரொகிதர்கள் அங்கு வந்திருந்தார்கள். தனுஷ்கொடி ராமேஸ்வரம் ராமநாதபுரம் மதுரை என்று எல்லா ஊர்களிலிமிருந்து அவர்கள் வந்திருந்தார்கள். நூறு ரூபாய் ஒரு பெரிய தொகை அந்த நாட்களில்.

சங்கரனுக்கு அவர்களில் எத்தனை பேர் உண்மையில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகம் வந்தது. ஆனால் எல்லோரும் நெற்றியில் பட்டையாக விபூதி பூசியிருந்தார்கள். கேரளாவில் யாராவது குளிக்காமல் கோயிலக்கு சென்றால் அங்கே வாசற்படியில் சுருண்டு டிடத்திரக்கும் பாம்பு அவர்களை தீண்டிவிடும் என்று சங்கரன் கேள்வி பட்டிருந்தான். அன்று அங்கு மண்டபத்தில் ஒரு பாம்பை விட்டால் அது எத்தனை பேரை திண்டும் என்று நினைத்து பெரிதாக சிரித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற புரோகிதர்கள் அவனை வியப்பாக பார்த்தார்கள்.

ஜபம் ஆரம்பித்தது. தலைமை புரோகிதர் மந்திரங்களை உரக்க சொல்ல அனைவரும் அதை ஒன்றாக ஒரே குரலில் திரும்ப சொன்னார்கள். ஒவ்வொரு தடவையும் 'ஸ்வாகா' என்ற மந்திரத்தை சொன்ன பிறகு பக்கத்திலிருந்த பாத்திரத்திலிருந்து ஒரு கரண்டி நெய்யை அருகிலிருந்த ஹோமத்தில் விட்டார்கள். நேரமாக ஆக அவர்களின் மந்திர ஒலி உச்ச ஸ்தாயியை அடைந்து எங்கும் எதிரொலித்தது.

சங்கரனின் மூளையில் ஒரு அபாய மணி ஒலிக்க துவங்கியது. அவன் முந்தைய பிறவி ஒன்றில் நமது பாண்டிய நாட்டு மீனவனான மருதுவாக பிறந்திருந்தது அவனுக்கு தெரியாது. புரோகிதர்களின் மந்திர ஒலி உச்ச ஸ்தாயியை அடைய அவனால் பொறுக்க முடியவில்லை. எழுந்து ' நிறுத்துங்கள் இந்த யாகத்தை" என்று கத்தினான்.


தொடரும்...

மதி
13-09-2009, 05:30 AM
நன்றாக போகிறது கதை.... சரித்திர கதையா.. விஞ்ஞான கதையா என்று புரிந்து கொள்ள முடியாதபடி.. எல்லாம் சரியளவில் கலந்து.
மேலும் தொடருங்கள் மதுரையண்ணா..

மதுரை மைந்தன்
13-09-2009, 09:02 AM
நன்றாக போகிறது கதை.... சரித்திர கதையா.. விஞ்ஞான கதையா என்று புரிந்து கொள்ள முடியாதபடி.. எல்லாம் சரியளவில் கலந்து.
மேலும் தொடருங்கள் மதுரையண்ணா..


உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி நணபர் மதி

மதுரை மைந்தன்
13-09-2009, 09:04 AM
பாகம்-6

சங்கரன் ஜபத்தை நிறுத்த சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. தலைமை புரோகிதர் அவனிடம் ஜபத்தை ஏன் நிறுத்த வேண்டும் என்று கேட்டார்.

சங்கரன் மனக்கண்மன் பல பிம்பங்கள் தோன்றி மறைந்தன. அவன் மெல்லிய குரலில் " ஜபத்தை எல்லோரும் ஒரு சேர உச்ச ஸ்தாயியில் ஒலிப்பதால் கடல் பொங்கி எழுந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி தீவுகளை மூழ்கடிக்க செய்து விடும் என்று என்னுள் அபாய குரல் ஒலிக்கிறது. ஜபத்தை நிறுத்தினால் மட்டும் போதாது மக்கள் அனைவரும் பக்கத்து கந்தமான பர்வத மலைக்கு மேலே சென்றால் நாம் தப்பிப்போம்" என்றான்.

தலைமை புரோகிதருக்கு இதைக் கேட்டு என்ன செய்வதென்று புரியாமல் நின்றார். புரோகிதர்களில் ஒருவர் " அம்பி நேத்து ராத்திரி தனுஷ்கோடி கீத்து கொட்டாயில செகண்ட் ஷோ பாத்திருப்பான். அதான் தூக்க கலக்கத்தில ஏதோ பேத்தறான்" என்றார். இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தனர்.

தலைமை புரோகிதருக்கு சங்கரனின் தந்தை வைத்யநாத சாஸ்திரிகள் மீது நல்ல மரியாதை இருந்தது. அதனால் அவர் " சங்கரா கடல் பொங்கும்னு நீ சொல்றதை நாங்க ஏத்துக்க முடியாது. எனக்கு தெரிந்து இந்த பகுதியின் சரித்திரத்திலே கடல் பொங்கினதா கேள்விப் பட்டதில்லை. மணிக்கணக்கா ஜபம் செய்வதற்கு உனக்கு அனுபவம் இல்லாததால் களைத்து போய் இல்லாததையெல்லாம் கற்பனை பண்றே. பாரு நாம ஜெபிச்சதால் வெளியே மழை பெய்ய தொடங்கி இருக்கு."

மண்டபத்திற்கு வெளியே காற்றும் மழையுமாக இருப்பதை பார்த்த சங்கரனுக்கு கடல் பொங்கும் பயம் அதிகரித்தது. அவன் எல்லோரிடமும் நான் சொல்வதை நம்புங்கள் என்று மன்றாடினான்.

தலைமை புரோகிதர் அவன் சொல்வதை நிராகரித்து " ஏற்கனவே உன்னால் ஏற்பட்ட தடங்கலால் நாங்கள் ஜபத்தை திரும்ப ஆரம்பிக்க வேண்டும். ஆகவே நீ உடனே இடத்தை காலி பண்ணு. மண்டபத்து கேட்டில் உள்ள ஜமீன்தாரின் ஆட்களிடம் உனக்கு சேர வேண்டிய பட்டு வேஷ்டி பணம் ஆகியவற்றை தர ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

சங்கரன் மனம் தளர்ந்த நிலையில் மண்டபத்தை விட்டு வெளியெ வந்து ஜமீன்தாரின் ஆட்கள் தந்த நூறு ரூபாய் நோட்டை மட்டும் வாங்கிக் கொண்டான். பட்டு வேஷ்டியை மறுத்து விட்டான். அவன் பணத்தை பெற்றுக் கொண்டதற்கு காரணம் அவன் தந்தை அவனிடம் கட்டாயமாக அதை வாங்கி வர வேண்டும் என்று இட்ட கட்டளையினால் தான். வைத்யநாத சாஸ்திரிகளுக்கு கர்நாடக சங்கீதம் கேட்க பிடிக்கும். சங்கரன் கொண்டு வரும் நூறு ரூபாயில் ஒரு வானொலி பெட்டி வாங்கி அவருக்கு பிடித்தமான மதுரை மணி அய்யர் டைகர் வரதாச்சாரியார் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் இவர்களின் கச்சேரிகளை கேட்க ஆசைப் பட்டார்.

தன்னிடமிருந்த சாக்கு பையை தலைக்கு வைத்துக் கொண்டு மழையில் ரயில்வே நிலையம் நோக்கி நடந்தான் சங்கரன். அங்கு நின்றிருந்த தனுஷ்கோடி செல்லும் பாசஞ்சர் வண்டியில் ஏறி அமர்ந்தான். நேபாள மன்னரின் பூஜைக்கு சென்று திரும்பும் மக்களால் ரயில் பெட்டி நிரம்பியிருந்தது. மன்னர் அவரகளுக்கு துணி மணிகள் பணம் இவற்றோடு நல்ல விருந்து சாப்பாட்டையும் ஏற்பாடு செய்திருந்ததால் அவர்கள் மகிழ்ச்சியாக பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தனர். அவரகளின் நடுவே உயிரற்ற ஜடமாக சங்கரன் அமர்ந்திருந்தான்.

அவன் மனக்கண்முன் பல காட்சிகள் தோன்றி மறைந்தன. அதில் ஒரு காட்சியில் அவன் கோசலையை பார்த்தான். தான் என்ன செய்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் உடனே அவன் ரயிலிலிருந்து கீழிறங்கி கோசலையின் பெயரை சத்தமாக சொல்லி பெட்டி பெட்டியாக தேட ஆரம்பித்தான். பயணிகள் அவன் செயலை ஏளனம் செய்து பைத்தியக் காரன் என்றார்கள்.

திடீரென்று சங்கரனுக்கு தூரத்தில் கடலலைகள் பொங்குவது தெரிந்தது. அவன் கொட்டும் மழையில் பெட்டி பெட்டியாக சென்று பயணிகளிடம் ரயிலை விட்டு கிழிறங்கி கந்தமான பர்வதம் மலைக்கு செல்லுமாறு வேண்டி கதறினான். ஒருவரும் அவன் சொன்னதை காதில் வாங்கி கொள்ள வில்லை. பெண்கள் சிலர் " யார் பெத்த பிள்ளையோ" என்று அனுதாப பட்டனர்.

சிறிது நேரத்தில் 20 அடிகளுக்கு மேலான கடலலைகள் எழுந்து ரயில் வண்டியை பயணிகளுடன் கடலுக்கடியில் இழுத்து சென்றது. சங்கரனும் அலைகளால் தாக்கப் பட்டு மூழ்க தொடங்கினான். கடல் அன்னை மூழ்குபவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் தருகிறாள் என்ற நம்பிக்கையின் படி சங்கரனும் மூன்று தடவை நீர் மட்டத்திற்கு மேலே வந்து இறுதியில் கடலுக்கடியில் கொண்டு செல்லப்பட்டான். அவன் முதல் தடைவையாக மேலெழுந்த போது ரயில் வண்டியுடன் ஆயிரக்கணக்கான பயணிகள் கடல் நீரில் மூழ்கும் கோர காட்சியை பார்த்தான். இரண்டாவது தடைவையாக மேலெழுந்த போது ராமேஸ்வரத்தை தமிழக கடற்கரையுடன் இணைக்கும் பாம்பன் பாலம் இடிந்து விழுவதை பார்த்தான். மூன்றாவது தடவை மேலெழுந்த போது தனுஷ்கோடி சிவன் கோயிலின் கோபுர கலசம் கடல் நீரில் மறைவதை பார்த்தான். அவன் தந்தையை பற்றியும் அவரிடம் தருவதற்காக வேட்டியின் மடிப்பில் வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டைப் பற்றியும் எண்ணிக் கொண்டே கடலடியில் சென்றான்.

கடல் பொங்கிய போது வைத்யநாத சாஸ்திரிகள் தனுஷ்கொடியில் இல்லை. நேபாள மன்னரின் பூஜையில் பங்கேற்க இருந்த ராமேஸ்வரம் கோயிலின் தலைமை அட்சகருக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் வைத்யநாத சாஸ்திரிகளை அவசரமாக காரில் அழைத்து சென்றார்கள். பூஜை முடிந்து விருந்துண்டு வெளியே வந்த அவருக்கு கடல் பொங்குவதையும் ரயில் வண்டி கடலுக்கடியில் செல்லும் கோர காட்சியையும் கண்டு பதை பதைத்தார். மக்கள் அனைவரும் மேடான இடங்களுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.உயர எழுந்த அலைகளால் நீர் மட்டம் உயர்ந்து அவர் நின்றிருந்த கோயிலின் படிகளை நனைத்தன. ஒரு சிறு அலை எழுந்து அவரது காலை நனைத்தபோது அதில் மிதந்து வந்த நூறு ரூபாய் நோட்டு அவர் கால்களில் சிக்கியது.


தொடரும்...

அன்புரசிகன்
14-09-2009, 06:11 AM
புகையிரதவண்டியில் சுனாமியால் எனது நண்பனின் உறவினர்கள் கதிர்காமம் செல்லும் வழியில் இறந்தனர்... அந்த நிகழ்வை நினைவூட்டியது...

சரித்திரக்கதைகள் போல் நகர்கிறது... தொடருங்கள். படிக்கும் ஆவலில்....

samuthraselvam
14-09-2009, 06:39 AM
இது கதையா நிஜமான நிகழ்வா என்ற சந்தேகம் வலுக்கிறது.... அறிவியலையும் வரலாற்றையும் இணைத்து சொல்லிக்கொண்டிருக்கும் விதம் பரபரப்பை உண்டு பண்ணுகிறது..... அடுத்த பாகம் சீக்கிரம்....

அன்புரசிகன்
14-09-2009, 06:51 AM
இது கதையா நிஜமான நிகழ்வா என்ற சந்தேகம் வலுக்கிறது.....

அதே அதே...

மஞ்சுபாஷிணி
14-09-2009, 09:13 AM
இதுவரை படித்து முடித்த இந்த கதையை நினைத்து பார்க்கும்போதே திகிலாக இருக்கிறது ஐயா...

சுனாமி வரும்முன்னரே அதைப்பற்றி கதை எழுதியதும் மிக சந்தோஷமான விஷயம் ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா....

தொடருங்கள் ஐயா...

மதுரை மைந்தன்
16-09-2009, 12:10 PM
புகையிரதவண்டியில் சுனாமியால் எனது நண்பனின் உறவினர்கள் கதிர்காமம் செல்லும் வழியில் இறந்தனர்... அந்த நிகழ்வை நினைவூட்டியது...

சரித்திரக்கதைகள் போல் நகர்கிறது... தொடருங்கள். படிக்கும் ஆவலில்....


உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அன்பு ரசிகன்.

மதுரை மைந்தன்
16-09-2009, 12:11 PM
இது கதையா நிஜமான நிகழ்வா என்ற சந்தேகம் வலுக்கிறது.... அறிவியலையும் வரலாற்றையும் இணைத்து சொல்லிக்கொண்டிருக்கும் விதம் பரபரப்பை உண்டு பண்ணுகிறது..... அடுத்த பாகம் சீக்கிரம்....

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பர் சமத்திரசெல்வம்

மதுரை மைந்தன்
16-09-2009, 12:13 PM
இதுவரை படித்து முடித்த இந்த கதையை நினைத்து பார்க்கும்போதே திகிலாக இருக்கிறது ஐயா...

சுனாமி வரும்முன்னரே அதைப்பற்றி கதை எழுதியதும் மிக சந்தோஷமான விஷயம் ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா....

தொடருங்கள் ஐயா...

நன்றி சகோதிரி மஞ்சுபாஷிணி

மதுரை மைந்தன்
16-09-2009, 12:15 PM
பாகம்-7

ராமன் சுனாமி கதைகளை கூறி முடீத்தவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. கதைகளைக் கேட்டுக் கொண்டே இருந்ததில் ஒருவர் அசந்து தூங்கி விட்டார். காப்டென் அவரை சுட்டிக் காட்டி " முழிப்பு வந்ததும் ராமர் காட்டுக்கு போய்விட்டாரா என்று கேட்ட கிணற்றுத் தவளை மாதிரி உங்களிடம் கேள்வி கேட்கப் போகிறார்" என்று சொல்லி சிரித்தார்.

ராமனின் மகள் அங்கு வந்து "டாடி சினிமா முடிஞ்சுடுச்சு. கேபினுக்கு போகலாமானு அம்மா கேக்க சொன்னா" என்றாள். காப்டென் அவளிடம் " உன் பேரு என்ன பாப்பா?" என்று கேட்டார். " என் பெயர் கௌசல்யா" என்றாள் அவள். காப்டென் ராமனிடம் " சார் நிங்க எந்த வருடம் பிறந்தீங்க?" என்று கேட்டார். ராமன் 1964 என்று பதிலளித்து விட்டு அங்கிருந்தவர்களிடம் விடை பெற்று கேபினுக்கு திரும்பினார். அவர்கள் சென்றதும் காப்டென் அங்கிருந்தவர்களிடம் " எனக்கென்னவோ மிஸ்டர் ராமன் தான் முந்தைய பிறவிகள்ல மருதுவாகவும் சங்கரனாகவும் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. கோசலை கௌசல்யா இரண்டு பெயர்களும் கூட ஒத்து போகின்றன.' என்றார். " அவர் நம்ம கூட வறது ஒரு பெரிய பாதுகாப்பு மாதிரி. சரி நாம அவங்க அவங்க காபினுக்கு போய் தூங்கலாம். நாளைக்கு நிறைய வேலை இருக்கு" என்று சொல்லி சென்றார்.

" டாடி நாளை காலையிலே சீக்கிரம் எழுந்து மேல் டெக்கு போய் சூரிய உதயம் பார்க்க போறோம் நானும் மம்மியும். நீங்களும் வரேளா?" என்று கேட்டாள் கௌசல்யா. " இல்லைம்மா எனக்கு களைப்பா இருக்கு நான் நல்லா தூங்க போறேன். நீங்க போயிட்டு வாங்க. மறக்காம காமிராவை எடுத்து போய் சூரிய உதயத்தை படம் பிடிச்சு எனக்கு காண்பிக்கணும்" என்று சொல்லி துயில் கொண்டார் ராமன்.

மறு நாள் காலை வெகு நேரம் தூங்கிய பிறகு கண் விழித்த ராமனை கௌசல்யா " குட் மார்னிங் டாடி. நீங்க அருமையான சூரிய உடயத்தை மிஸ் பண்ணிடடீங்க. மம்மி நிறைய படங்கள் எடுத்திருக்காங்க. அதை பாருங்க. அப்பப்பா என்ன காட்சி சூரியன் ஒரு பெரிய சிவப்ப பந்து போல அடி வானத்திலிருந்து எழும்பியது இன்னும் கண் முன்னாலேயே இருக்கு" என்றாள். " அப்படியா அப்போ சூரிய அஸ்தமனக் காட்சியை நான் கட்டாயம் பார்க்க வறேன்" என்றார் ராமன்.

ரெஸ்டாரண்டில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு ராமன் காப்டெனின் அறைக்கு சென்றார். அங்கு முந்தைய இரவு பார்த் நண்பர்களும் இருந்தார்கள். அதில் ஒருவர் " ராமன் சார் சங்கரன் தனுஷ்கொடிக்கு திரும்பினானா?" என்று கேட்டார். இதைக் கேட்டு உரக்க சிரித்த காப் டென் " நான் சொன்னேனெ அதே மாதிரி ஆயிடுச்சு" என்று சொல்லி சங்கரனும் ரயில் பயணிகளும் தனுஷ்கோடியும் கடல் கொந்தளிப்பில் மறைந்த விவரத்தை சொன்னார்". ராமனிடம் காப்டென் கப்பல் பயணம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். " கடல் அமைதியாக இருக்கிறது. அதனால் கப்பல் அதிகம் ஆடாமல் செல்கிறது. நான் சூரிய உதயத்தை மேல் டெக்கில் பார்க்க தவறி விட்டேன். ஆனால் தவறாமல் சூரிய அஸ்தமனத்தை தவறாமல் பார்க்க போகிறேன்" என்றார் ராமன்.

நண்பகல் சாப்பாட்டிற்கு பிறகு லவுஞ்சில் தொலை காட்சி பெட்டியில் திரைப் படம் பார்த்த பிறகு காபினுக்கு திரும்பி ஓய்வு எடுத்துக் கொண்டனர் ராமனும் அவரது மனைவி மகளும். மாலையில் மனைவி மகளுடன் மேல் டெக்கிற்கு சென்று சூரியன் கடலில் மறைவதை பார்த்துக் கொண்டிரந்த ராமன் இருப்பு கொள்ளாமல் காபினுக்கு தான் மட்டும் திரும்பினார். அவர் அடி மனதில் ஏதோ அபாய அறிவுப்புகள் வர ஆரம்பித்தன. போர்ட் ப்ளேரில் நிறுவவதறகாக கொண்டு வந்திருந்த சுனாமி வருவதை கண்டபிடிக்கும் கருவியை எடுத்து அதை இரக்கினார். அதில் ஒரு சிக்னலும் வராததால் குழப்பம் அடைந்தவiராக காபினை விட்டு வெளியே வந்தார். ராமன் திடீரென்று மேல் தளத்திலிருந்து கிளம்பியதைக் கண்ட காப்டென் அவரை தேடி அங்கு வந்தார். ராமன் அவரிடம் தன் மன கலக்கத்தையும் தனது கருவியில் ஒன்றும் தெரியவில்லை என்பதையும் அவரிடம் சொன்னார்.

அச்சமயம் அங்கு ஓடி வந்த கௌசல்யா " டாடி தொலை காடசி பெட்டில ஒரு விசேட காட்சி காண்பிக்கறாங்க. வாங்க வந்து பாருங்க." என்று அவரை அழைத்தாள். ராமனும் காப்டெனும் ஆவலுடன் லவுஞ்சிற்கு அவளுடன் விரைந்தார்கள். அங்கு தொலை காட்சி பெட்டியை சுற்றி பலர் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமனும் எட்டி பார்த்த போது அவர் கண்ட காட்சிகள் அவரது நெஞ்சை படபடக்க வைத்தன.


தொடரும்....

அன்புரசிகன்
17-09-2009, 05:14 AM
இரத்த அழுத்தம் ஏறுகிறது... அசத்தலாக நகர்கிறது.. அடுத்த பாகம்???

மதுரை மைந்தன்
17-09-2009, 09:31 AM
பாகம்-8

ராமன் அருகில் வந்த காப்டென் " சார் ஏன் பதட்டமா இருக்கீங்க" என்று கேட்டார். ராமன் அவரிடம் தொலை காட்சி பெட்டியில் வந்து கொண்டிரந்த காட்சிகளை காண்பித்தார். ஹாங்காங் நகரை சீனர்களிடம் பிரிட்டிஷ் காரர்கள் ஒப்படைக்கும் விழா காட்சிகளே அவை.

ஹாங்காங் நகரமே திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. வாண வேடிக்கைகளில் நிபணர்களான சீனர்கள் ஹாங்காங் வானத்தை வாண வேடிக்கைகளைக் கொண்டு ஒளி ஒலி வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தனர். சீன சிப்பாய்கள் தங்களது பூட்ஸ்களால் ஒரு சேர ஒலி எழப்பிக் கொண்டு அணி வகுத்துச் செனறனர். சங்கீததத்தாலும் நடனங்களாலும் பெரிய பறைகளை ஒலித்துக் கொண்டும் நகரம் அதிர்ந்தது.

" பூம்புகார் நகரம் கடலுக்கடியில் செல்வதற்கு முன்பாக அங்கும் இப்படித்தான் கோலாகலங்கள் நிகழ்ந்தன. அன்று அங்கு நடந்த மாதிரி கடல் கொந்தளித்து ஹாங்காங் நகரம் அழிந்து விடுமோ என்று அஞ'சுகிறேன்" என்றார் ராமன் காப்டெனிடம். அவரையும் அழைத்துக் கொண்டு தனது காபினுக்கு விரைந்த ராமன் தனது சுனாமி வருவதைக் கண்டறியும் கருவியை இயக்கினார். சிறிது நெர முயற்சியில் அவருக்கு மெலிதான சிக்னல் கிடைத்தது.

" பசிபிக் கடலில் ஹாங்காங்கிற்கு வெகு தூரத்தில் சுனாமி உருவாகுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சுனாமி அலைகள் உருவாகி வந்தால் அவை ஹாங்காங் தீவை எட்ட சில மணி நேரங்கள் ஆகும். அதற்குள் நாம் அவை உருவாகாமல் தடுக்க வேண்டும்" என்றார் ராமன் கவலை தோய்ந்த முகத்துடன்.

" அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார் காப்டென். " கேளிக்கைகளை நாம் எப்படியாவது நிறுத்த வேண்டும். உலக சுனாமி பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அலவலகம் ஹாங்காங்கில் இருக்கிறது. நாம் அவர்களை தொடர்பு கொண்டு நிலமையை விளக்கினால் அவர்கள் நமக்கு உதவக் கூடும்" என்றார் ராமன். தனது டைரியை எடுத்தக் கொண்டு காப்டனுடன் கப்பலின் ரேடியோ தகவல் அறைக்கு விரைந்தார்.

பல முயற்சிகளுக்கு பிறகும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் மனம் துவண்டார் ராமன். என்ன செய்வதென்று தெரியாமல் திருமப தொலை காட்சி பெட்டியை நோக்க அவரது கவனம் அங்கு கண்ட காடசியால் ஈர்க்கப் பட்டது. ஹாங்காங் தீவை சீனர்களிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்த பிரிட்டிஷ் கவர்னர் பிரிட்டிஷ் துருப்புகள் மற்றும் பிரிட்டிஷ் குடி மக்கள் ஆகியோரை சுமந்து கொண்டு எச்.எம.எஸ் ஈகிள் என்ற கப்பல் ஹாங்காங் துறைமுகத்திலிருந்து கிளம்பி சென்று கொண்டிருந்தது.

" ஹாங்காங்கின் பழைய கவர்னர் வில்சனை எனக்கு நன்கு தெரியும். அவரிடம் நாம் தொடர்பு கொள்வோம்" என்று கூறி எச்.எம.எஸ் ஈகிள் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த அவருடன் பேசினார் ராமன். ராமனைப் பற்றி மிக உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருந்த அவர் தீவிலிருந்த சீனப் படை தளபதியை தொலை பேசியில் அணுகி " கேளிக்கைகளை உடனெ நிறுத்துங்கள். இல்லையெல் ஹாங்காங்கிற்கு அபாயம் இருக்கிறது" என்றார். அவர் சொன்னதை தளபதி ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது கேளிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று வில்சன் கப்பலை தீவை நோக்கி திரும்பி செல்லுமாறு ஆணையிட்டார். ஹாங்காங் நகரில் எச்.எம.எஸ் ஈகிள் தீவை நொக்கி வரவதை கண்ட சின தளபதி சினமுற்று " இந்த பிரிட்டிஷ்காரர்களுக்கு தீவை நம்மிடம் ஒப்பiடைக்க மனமில்லை. அதனால் அவர்கள் திரும்ப வருகிறார்கள். நாம் அவர்களை எதிர் கொள்ள வேண்டும்" என்று சீன துருப்புகளை போருக்கான ஆயத்தங்களை செய்ய சொன்னார்.


தொடரும்

samuthraselvam
17-09-2009, 09:54 AM
நல்லா விறுவிறுப்பா கொண்டு போறீங்க மண்ணின் :lachen001:மைந்தன்... வாழ்த்துக்கள்...:icon_b:

மதி
17-09-2009, 11:41 AM
நல்லா விறுவிறுப்பா கொண்டு போறீங்க மண்ணின் :lachen001:மைந்தன்... வாழ்த்துக்கள்...:icon_b:
அதே அதே...

அன்புரசிகன்
17-09-2009, 11:08 PM
கதை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் மிகுந்ததாகவும் செல்கிறது. அறிவியல் என்பதற்கு அப்பால் சுனாமியைப்பற்றி தெரிந்தபின்னர் அது பற்றிய கதையை படிப்பதில் ஆர்வம் எகிறுகிறது. அடுத்த பாகத்திற்காக வெய்ட்டிங்....................

மதுரை மைந்தன்
18-09-2009, 10:16 PM
பின்னூட்டங்கள் போட்டு என்னை ஊக்குவிக்கும் நண்பர்கள் சமுத்திரசெல்வம் அன்பு ரசிகன் மதி இவர்களுக்கு என் நன்றிகள்

மதுரை மைந்தன்
18-09-2009, 10:31 PM
இறுதி பாகம்

பைனாகுலரில் ஹாங்காங் திவில் சீன துருப்புகள் சண்டைக்கு ஆயத்தமாவதை பார்த்த எச்.எம்.எஸ். யூகிள் கப்பலின் காப்டென் கவர்னர் வில்சனிடம் அதைக் கூற கவலையுற்ற கவர்னர் கப்பலில் சமாதான கொடியாக வெள்ளைக் கொடியை ஏற்ற சொன்னார்.

எம்வி; நான்கோரியில் ராமன் ஹாங்காங் நிகழ்வுகளை கவனித்து வந்தவர் திடீரென்று கேளிக்கைகள் நின்று விட்டதை அறிந்து நிம்மதி பெரு மூச்சு விட்டார். கவர்னர் வில்சனை தொடர்பு கொண்டு எப்படி அவர் கேளிக்கைகளை நிறுத்த செய்தார் என்று கேட்க வில்சன் எப்படி கப்பலை திருப்ப வைத்ததை சீனர்கள் தப்பாக அர்த்தம் எடுத்து சண்டைக்கு தயாராகி கேளிக்கைகளை நிறுத்த செய்தனர் என்று சொன்னார்.

உலகெங்கிலும் இருந்த சுனாமியை கண்டுபிடிக்கும் கேந்திரங்களில் ஹாங்காங் நிகழ்வுகளை கவலையுடன் கவனித்து வந்தவர்கள் சுனாமி வரும் அபாயம் நீங்கியதை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். உண்மையில் சிறிய அளவில் உரவாகியிருந்த சுனாமி அலைகள் பசிபிக் கடலில் இருந்த ஆளற்ற தீவை தாக்கி அழித்து விட்டு அடங்கி விட்டதாக செய்திகள் வந்தன.

இந்த செய்தி ஹாங்காஙகிலிருந்த சீன படை தளபதியிடம் தெரிவிக்கப் பட ஹாங்காங் அபாயத்திலிருந்து தப்பியதை குறித்து மகிழ்ந்து கவர்னர் வில்சனை தொடர்பு கொண்டு தனது அவசர புத்திக்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.

எம்.வி.நான்கோரியின் காப்டென் ராமனை பாராட்டி " நாளை நாம் போர்ட் பிளெரில் டாக் செய்கிறோம். உங்களது முயற்சியால் ஹாங்காங் காப்பாற்றப் பட்ட செய்தி அங்கு சேர உங்களுக்கு நாளை காலை அங்கு ஒரு பெரிய வரவேற்பு காத்திருக்கிறது. " என்றார்.

ராமன் மகிழ்ச்சியுற்றவராய் தனது காபினுக்கு திரும்பினார் அங்கு அவரது மனைவியும் மகளும் அவரைக் கட்டி பிடிதது முத்தங்கள் கொடுத்தனர். கௌசல்யா " ஐ ஆம் ப்ரொவுட் ஆப் மை டாடி" என்றாள். அப்போது அங்கு இரவு போஜனத்திற்கான மணி ஒலிக்க ராமன் தனது மனைவி மகளுடன் ரெஸ்டாரண்ட் சென்றார். அங்கே அவர்களுக்காக ஒரு பெரிய விருந்து ஏற்பாடாகியிருந்தது. அனைவரும் ஒரே மேசையை சுற்றி அமர காப்டென் அவர்களக்கு நடந்த நிகழ்வுகளை விளக்கி கூறினார். அனைவரும் கை தட்டி ராமனை பாராட்டினார்கள். காப்டென் ராமனை பேச அழைத்தார்.

ராமன் தான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய இரண்டு கவிதைகளை படித்தார். முதலில் தமிழில்


கரையில் எழுந்த பேரொலி
பேரொலியால் கிளம்பிய பேரலைகள்
பேரலைகளால் மூழ்கிய பெருநகரங்கள்
பெருநகரங்களுடன் மறைந்த பெருமக்கள்
அனைவருக்கும் எமது உளமார்ந்த அஞ்சலி

ஆங்கிலத்தில்

Synchronised sound waves rose so high
sent the tidal waves rise so high
waves took big towns so low
Great people of the towns below
Our homage to all!

அங்கிருந்த அனைவரும் சுனாமியில் மறைந்தவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

முற்றும்
______________________________________________________________________________________________________

முடிவுரை:

2004 ல் எழுந்த சுனாமி பேரலையின் அழிவுகளைக் கேட்டு உலகமே வருந்தியது. லண்டனில் அச்சமயம் பணியாற்றி வந்த நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை பலராலும் பாராட்டப்பட்டது. லண்டனில் நடந்த சுனாமி நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஆங்கில கவிஞர்களின் அரங்கில் நான் எனது கவிதையை சமர்ப்பித்தேன். அதன் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

வங்க கடலே வங்க கடலே
இது என்ன நியாயம்?
ஏன் இத்தனை கோபம்?

காற்று வாங்க உன்னிடம் வந்தோம்
எங்களது மூச்சுக் காற்றை எடுத்துக் கொண்டாய்
மணல் வீடு கட்டி விளையாடிய குழந்தைகளுக்கு
உன் மணலிலேயே சமாதி கட்டினாய்

வங்க கடலே வங்க கடலே
இது என்ன நியாயம்?
ஏன் இத்தனை கோபம்?

இந்திர விழா எடுத்த பூம்புகார்
வளம் காணும் எங்கள் தமிழ் உலகம்
இவைகளைக் காண ஆழிப்பேரலையாய் எழுந்தாயோ
உன் வளம் தந்து எங்களை வளமாக்கும் நீ
எங்களுக்கு உன்னை சாவுக்களமாக்கியது ஏன்?

வங்க கடலே வங்க கடலே
இது என்ன நியாயம்?
ஏன் இத்தனை கோபம்?
__________________

இந்த பாடலை மன்றத்து நண்பர் தமிழ்தாசன் அவர்கள் மனறத்திரைவானம் திரியில் ஒலி வடிவம் அமைத்து தந்திருக்கிறார். அதை இங்கு கேட்கலாம்


http://www.tamilmantram.com/vb/showpost.php?p=402895&postcount=41

கா.ரமேஷ்
19-09-2009, 06:31 AM
கடைசி வரை கதையோடு ஒன்றியே இருக்கும் ஆர்வத்தை தந்தீர்கள்... பாராட்டுக்கள் உங்களது முயற்ச்சிகள் அருமை...

அக்னி
19-09-2009, 06:35 AM
உங்கள் திரிகளில் பதிவுகள் இடுவதில்லை என்று நான் கொண்ட முடிவை,
இந்தத் தொடரிலும் கடைப்பிடித்தால்,
அது எனது வெஞ்சினம் ஆகிவிடும்...

சிறப்பான ஒரு படைப்புக்கு, ஒரு எதிர்வுகூறிய படைப்போடு,
எனது பின்னூட்டப் பதிவும் பின்தொடர்வது, எனக்கு மிக்க மகிழ்ச்சி...

ஒரு கதையை வாசித்து முடித்தபின்,
அந்தக் கதையை,
நிகழ்ந்த, நிகழ்கின்ற நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்க, வாசகரின் மனம் முற்படுமானால்,
அது அந்தக் கதையின் மாபெரும் வெற்றி...

இந்தக் கதையை வாசித்து முடித்ததும்,
நான் பயணித்துக்கொண்டிருக்கும் தொடருந்து, தொடருந்தின் தாளச்சத்தம்,
நிறைந்திருக்கும் பயணிகள், அவர்களின் பேச்சுக்கள்,
கண்ணைக் கூசச் செய்யாமல் ஒளிரும் முழுச் சூரியன்,
சூரியக் கதிர்களை வடிகட்டித் தரும் மென் பனிப்புகார்,
சாளரத்தினூடு வேகமாய்ப் பின்னோக்கி நகரும் காட்சிகள்
என்றனைத்துமே வெறுமையாகிப்போய்விட,
ஆழிப்பேரலை ஏற்படும் முன்னர், இந்த உலகில் ஏதேனும் பெருஞ் சத்தம் எழுந்ததா...???
என்ற வினா மிகப்பெரியதாக எனக்குள்...

விடை கிட்டாமல் சுயநினைவுக்குத் திரும்பினேன்.
(யாருக்கேனும் தெரிந்தாற் பகிர்ந்துகொள்ளுங்களேன்...)

அந்தளவிற்கு கதை எனக்குள் பெரும் தாக்கத்தைத் தந்துவிட்டது.
நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தோடு பொருத்திப் பார்க்க வைத்தது.

2004 ம் ஆழிப்பேரலை எழப்போகின்றது என்பதனை எவையேனும் நிகழ்வுகள் எதிர்வுகூறியனவா என்றால், தெரியவில்லை.

சிறுபிள்ளைச் சிந்தனையாக இருந்தாலும்,

அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தில் ‘அத்திப்பட்டி’ கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்ட திகதி ‘டிசம்பர் 26’...
அடுத்து மதுரை மைந்தன் அவர்களின் சுனாமிக்கு முந்தைய இந்தப் படைப்பு...
இப்படி வேறேதும் உள்ளனவா என்று தெரியவில்லை.

ஆழிப்பேரலையை எதிர்வு கூறிய ஏதேனும் நிகழ்வுகள் உள்ளனவா...

மதுரை மைந்தன் அவர்கள் கூறியதுபோல,
ஏதேனும் மனித செயற்பாடுகளால் அந்த அலை உயர்ந்திருக்குமோ...

எனினும் அவ்வாறான ஒரு அவலம் மீண்டும் நிகழாதிருக்க இறைவனைப் பிரார்த்திப்பதை விடவும் வேறு வழி தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தின், ஒரு சொகுசுப் பயணத்தில்,
அன்றைய காலத்தின் சரித்திர நிகழ்வுகளை இணைத்த விதமும், விபரித்த விதமும் மிக அழகு...

சுனாமி வரும் வரைக்கும், அந்த வார்த்தையே தெரியாத என்னைப்போன்ற பலரும்,
இந்தக் கதையை சுனாமிக்கு முன்னர் வாசிக்க நேர்ந்திருந்தால்,
கற்பனைக்கதையாகவே எமக்கு இருந்திருக்கும்.

சுனாமியின் பின்னர் வாசிக்க நேர்ந்ததால்,
ஒரு கனதி கலந்த வியப்பு...

மதுரை மைந்தன் அவர்களின் இந்தப் படைப்புக்கு,
ஐந்து நட்சத்திரங்களும், இ-பண முடிப்பும் அளித்துக் கௌரவிக்கின்றேன்...

samuthraselvam
19-09-2009, 07:20 AM
அற்புதம் மண்ணின் மைந்தன்.... உங்களின் கதை 2004 ஆண்டின் டிசம்பர் மாதம் 26 -ஆம் தேதி வந்த சுனாமியை நினைவுபடுத்துகிறது.....

சுமாத்திரா தீவில் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவு பதிவானது...

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 26 -ஆம் தேதி சமுத்ராவுக்கு பேர் வைக்கும் விழா நடந்தது... அதன் பாதிப்பாகவே எனது செல்லத்துக்கு சமுத்ரா என்று பெயரிட்டேன்...

வாழ்த்துக்கள் மைந்தன்...

கீதம்
19-09-2009, 10:27 PM
நல்லதொரு அறிவியல் கதையை அதன் விறுவிறுப்பு குறையாமல் அதே சமயம் மிகவும் வியப்பு மேலோங்கப் படிக்கச்செய்யும் வகையில் அளித்த மதுரை மைந்தன் அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டு.

பாரதி
20-09-2009, 01:06 AM
விஞ்ஞானம் கலந்த கதையை பண்டைய காலத்துடன் இணைத்து புனைவது சற்று கடினமான ஒன்று. அப்படிப்பட்ட கதையை புனைந்து சரியாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்தும் பாராட்டும் நண்பரே.

மதி
20-09-2009, 04:00 AM
அழகாக இயற்கைநிகழ்வுகளை புனைக்கதையாக தொகுத்து.. சிறப்பாக படைத்துள்ளீர். ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு கடைசிவரை தொடர்ந்தது சிறப்பு.. வாழ்த்துகள் மதுரைமைந்தரே..

அன்புரசிகன்
23-09-2009, 08:46 AM
என்னவென்று சொல்ல... இறுதிவரை இந்த சரித்திரத்தினை சுவாரசியமாக நகர்த்தியதற்கு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓ போட்டே ஆகவேண்டும்...

பாராட்டும் தகுதி இல்லை. வாழ்த்துக்கள் மதுரையண்ணலே...

மதுரை மைந்தன்
23-09-2009, 11:35 AM
இக்கதையை பாராட்டி பின்னூட்டங்கள் போட்ட மன்றத்து நண்பர்கள் கா.ரமேஷ், அக்னி, samuthraselvam, geetham, பாரதி, மதி, அன்பு ரசிகன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.