PDA

View Full Version : நகைச்சுவைsadagopan
08-09-2009, 10:20 AM
நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!"

"அப்படியா! அதுக்கு எ‎ன்ன ரெஸ்பா‎ன்ஸ்?"

"மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல.. நா‎ன் இப்ப என்ன செய்ய..?"


*****

"நீ எ‎ன்ன சோப் யூஸ் ப‎ண்ற?"

"கோபால் சோப், கோபால் டூத்பேஸ்ட், கோபால் பனிய‎ன், கோபால் ஜட்..."

"ஆ.. போதும் போதும்! கோபால் பெரிய இ‏ண்டர்நேஷனல் கம்பெனியா?"

"இல்ல.. கோபால் எ‎ன் ரூம் மேட்!"


*****

"103க்கும் 105க்கும் நடுவுல எ‎ன்ன இருக்கு தெரியுமா?"

"104"

"அதா‎ன் இல்லை.. நடுவுல ‘0'தா‎ன் இருக்கு. நீங்க இன்னும் மேத்ஸ்ல வீக்குதா‎ன்!"


*****

நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க கூட கை கோர்த்துக்கணுமாம்.

"அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!"


*****

(பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..)

"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?"

"எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
******

"அமைச்சரே! நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?"

"மக்களிடமிருந்து சரமாரியாய் வசைமாரி பொழிகிறது மன்னா!"

ஆதி
08-09-2009, 10:25 AM
//(பயாலஜி வகுப்பில் ஆசிரியர் மாணவனிடம்..)

"இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?"

"எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"//

இது சூப்பர்.. வாழ்த்துக்கள் சடகோபன்..

ஓவியன்
08-09-2009, 10:38 AM
வாங்க சடகோபன், எப்படி இருக்கீங்க...

நீங்க பகிர்ந்து கொண்ட நகைச் சுவைகள் ஒவ்வொன்றும் ‘டமால், டுமீல்’ ரகம்...

நன்றிகள், அப்படியே இந்த நகைச்சுவைகளைப் பகிர்ந்த இணையத்தளத்துக்கும் (http://www.uthayan.com/Welcome/entertainment/full.php?id=159&cat=4&sub=10&Uthayan1251232996) நன்றி கூறி இருக்கலாமே...

aren
08-09-2009, 04:41 PM
ஜோக்குகள் நன்றாக இருந்தன. ஓவியன் அவர்கள் சொன்னதுபோல் நீங்கள் இறக்குமதி செய்த இணையத்தளத்திற்கு ஒரு நன்றியை சொல்லிவிடுங்கள்.

சிவா.ஜி
08-09-2009, 05:09 PM
பகிர்வுக்கு நன்றி சடகோபன். எல்லாமே அசத்தல் ரக ஜோக்குகள்.

இளசு
08-09-2009, 08:09 PM
நல்ல தொகுப்பு... நன்றி சடகோபன்..குறிப்பாய் கோபால் சோப் - டாப்!


ஓவியன் தந்த சுட்டியில் வாசித்தால் - தாமத மாணவியும், டிவி தொகுப்பாளினியும் அசத்துகிறார்கள்..

அறிஞர்
08-09-2009, 11:33 PM
மீதமுள்ள சிரிப்புகள்
"நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?"

"வேண்டாம்"

"ஏ‎ன்?"

"எ‎ன் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!"

*****

(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)

"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க."

"எதுக்குடா செல்லம்?"

"நா‎ன் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

*****

"ஏண்டா.. உங்க அப்பா எ‎ந்நேரமும் உ‎ன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு."

"ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதா‎ன்!!"

*****

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

*****

(‏ஐ.டி.தொழிலாளி, கார்ப்பொரேஷ‎ன் குப்பைத் தொழிலாளியிடம்..)

"எ‎ன் கையில டிகிரி இருக்கு; நெறய நாலெட்ஜ் ‏ இருக்கு; சொசைட்டில பெரிய அந்தஸ்து இ‏ருக்கு. உனக்கு??"

"நிரந்தரமான வேலை ‏இருக்கு!!"

*****

எங்க பேங்க்ல இன்ட்ரஸ்ட் இல்லாமயே லோன் கொடுக்கறோம்

"சார்.. கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க.. கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா கொடுத்தாதான் என்னவாம்?!"

****

"ஏன் இன்னிக்கு கிளாஸ்க்கு லேட்?"

"ஒரு பையன் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தான் டீச்சர்"

"அதனால?"

"அவன் ரொம்ப ஸ்லோவா நடந்து வந்தான் டீச்சர்"

****

(டிவியில்.. நேரலையில்..)

டிவி காம்பியர் : நீங்க எங்கே இருக்கீங்க..?

நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர்

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?

நேயர் : 110

டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு?

நேயர் : நான் உன் புருஷன்.. வீட்டுச் சாவியை எங்க வச்சிருக்க?"

****

"சாரி.. இப்போதைக்கு எங்க கம்பெனில வேலை எதுவும் இல்லை. நீங்க போகலாம்"

"அப்படினா நான்தான் உங்க கம்பெனிக்கு சரியான ஆள். வேலை கேட்டு தொந்தரவே பண்ண மாட்டேன் சார்!"

****

"நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்"

"இப்போ என்ன வியாபாரம் பண்றே?"

"செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ் மீட் நடக்குற இடங்கள்ல..!!"
-----------
நன்றி-உதயன்.காம் (http://www.uthayan.com/Welcome/entertainment/full.php?id=159&cat=4&sub=10&Uthayan1251232996)
----------

arun
09-09-2009, 06:48 AM
அனைத்தும் சர வெடி சிரிப்புகள் சிரித்து ரசித்து படித்தேன் பகிர்ந்தமைக்கு நன்றி

samuthraselvam
09-09-2009, 08:31 AM
கோபால் இண்டர்நேசனல் ஜோக் சரியான மொக்கை... அனைத்து ஜோக்குகளுமே சூப்பர்..... பகிர்ந்தமைக்கு நன்றி சடகோபன்....

sadagopan
10-09-2009, 08:59 AM
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.

ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
**********
கணவன் : "உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?''

மனைவி : "உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?''
***********
"டீச்சர்.. எ‎‎ன் தலைல எதுவுமே ஏறாது‎ன்னு சொன்னீங்கல்ல?"

"ஆமாடா.. அதுக்கெ‎ன்ன இப்போ."

"நல்லாப் பாருங்க. ஒரு எறும்பு ஏறிட்டு இருக்கு"
********
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன். அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களே‎ன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நா‎ன் என்னோட பில் தர்றே‎ன்."
*********

samuthraselvam
10-09-2009, 10:00 AM
அரிசியில் கல் ஜோக் சூப்பர்... தலையில் பேன் ஏறாம எறும்பு ஏறுதே...?

கலக்கல் சடகோபன்...

வானதிதேவி
14-09-2009, 06:24 PM
அனைத்து நகைச்சுவைகளும் அருமை.பகிர்வுக்கு நன்றி.

Ranjitham
14-09-2009, 10:52 PM
அருமை அருமை அனைத்தும் அருமை
நன்றியுடன்
இரன்சிதம்.
.

இளசு
15-09-2009, 05:52 AM
டாக்டர் பில் பார்த்தால் சிரிப்பு மறையும்!!!

கலக்கல் சிரிப்புகள்.... அதிலும் கல் -பல்... அருமை!

சிறுபிள்ளை
15-09-2009, 06:18 AM
டேய் நான் நேத்து ரோட்டுல வரும்போது ஒரு சிங்கம் எதில வந்திடிச்சிடா...
அப்படியா
ஆமாம்
அது உன்ன எதுவுமே பன்னலயாடா?
ஊஹும்... ஏன்னா அது பெண் சிங்கம்..


(இவரோட அழகுல மயங்கி விழுந்திடிச்சாம்..இவரு உடனே அங்கிருந்து ஓடி வந்துட்டாராம்)

அன்புரசிகன்
15-09-2009, 06:20 AM
டேய் நான் நேத்து ரோட்டுல வரும்போது ஒரு சிங்கம் எதில வந்திடிச்சிடா...
அப்படியா
ஆமாம்
அது உன்ன எதுவுமே பன்னலயாடா?
ஊஹும்... ஏன்னா அது பெண் சிங்கம்..


(இவரோட அழகுல மயங்கி விழுந்திடிச்சாம்..இவரு உடனே அங்கிருந்து ஓடி வந்துட்டாராம்)
ஓடி வந்தது நம்ம ஓவியன் தானே...??? ஏன்னா அவர் தான் ஆண்சிங்கமாச்சே.... :D

மன்மதன்
15-09-2009, 02:12 PM
ஓடி வந்தது நம்ம ஓவியன் தானே...??? ஏன்னா அவர் தான் ஆண்சிங்கமாச்சே.... :D

ஓஹ்..இதுதான் அழகுல மயங்கி விழுறதா......:D:D