PDA

View Full Version : ஒரே நாளில் 96 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை!!!!aren
08-09-2009, 10:14 AM
ஒரே நாளில் 96 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை
செப்டம்பர் 08,2009,00:00 IST
பாட்னா: பீகாரில் ஒரே நாளில் 96 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 15ம் தேதி ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 176 மரக்கன்றுகள் நடப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப் பட்டது.பீகார் மாநிலம் திர்கத் நகராட்சி கமிஷனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.எம்.ராஜு, இந்த உலக சாதனையை முறியடிக்க முடிவு செய்தார். ஒரேநாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டார். இதற்காக மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் உதவியை நாடினார். முதல்வர் நிதிஷ் குமார், இவரது திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். ஆறு மாவட்டங்களில் உள்ள 8,463 ஊராட்சி மற்றும் 7,500 கிராமங்களில் உள்ள மூன்று லட்சம் மக்களை மரம் நடும் திட்டத்தில் சேர்த்தார்.நான்கு குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து 200 மரக்கன்றுகளை நடவேண்டும், என்ற நடைமுறை வகுக்கப்பட்டது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மாநில தலைமை செயலரின் உதவியுடன் கடந்த மாதம் 31ம்தேதி, 96 லட்சத்து 19 ஆயிரத்து 870 மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்கப் பட்டது. இந்த சாதனை விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. மூன்று ஆண்டு காலத்துக்கு இந்த மரங்களை பராமரிக்கும் பொறுப்பு, மரம் நட்ட குடும்பத்தாரை சேர்ந்தது. இதற்காக கிராம வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.வேப்பமரம், தூங்குமூஞ்சி மரம் உள்ளிட்ட மரங்கள் சாலை ஓரங்களிலும், நெல்லி, கொய்யா, மாங்காய், எலுமிச்சை உள்ளிட்ட மரங்கள் கிராமங்களிலும் நடப்பட்டன. கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

aren
08-09-2009, 10:16 AM
இதே மாதிரி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தால் இந்தியாவில் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செய்வார்களா?

காடுகளை அழிக்காமல் இந்த அரசியல்வாதிகள் விட்டாலே போதுமானது என்று யாரோ ஒரு பொதுஜனம் பேசுவது காதில் விழுகிறது.

சுகந்தப்ரீதன்
08-09-2009, 10:37 AM
கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்தை மிக அழகா கையாண்டு சாதனை படைச்சிட்ருக்காங்கன்னுதான் சொல்லனும்..!! உண்மையிலேயே பாராட்ட படவேண்டிய விசயம் இது..!! நட்டதோட நிக்காம தொடர்ந்து தண்ணி ஊற்றி காப்பாத்திடுவாங்கன்னும் நம்புவோம்...!!

நம்ப தமிழ்நாட்டுல ஏரிவெட்டி முடிச்சி தண்ணி பிடிச்சதுக்கு அப்புறம்தான் மரக்கன்று நடறதா முதலமைச்சர் முடிவெடுத்திருக்காரோ என்னவோ தெரியலை... எங்க பார்த்தாலும் கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்துல இப்போதைக்கு ஏரிவெட்டு நடந்துக்கிட்டு இருக்குது...!!

ஓவியன்
08-09-2009, 10:48 AM
மர நடுகை நல்ல விடயம்தான், ஆனால் இந்த மரங்களை நடுவதுடன் நின்று விடாது அவற்றைப் பேணிப் பராமரித்து வளர்ப்பதற்கும் அனைவரும் ஒன்று பட்டு உழைப்பது நல்ல விடயம்...

நமக்காக இல்லையென்றாலும், நம் சந்ததிக்காகவேனும்...

பாரதி
08-09-2009, 11:39 AM
நல்ல செய்தி.
பாராட்டத்தக்க முயற்சி.
ஆனால் இத்துடன் நின்று விடாமல், அம்மரங்கள் நன்கு வேரூன்றி, வளர்ந்து தாமாக தாக்குப்பிடிக்கும் வரை அந்த அதிகாரி அதே இடத்தில் இருப்பாராயின் நன்று.

இதே போன்று நல்ல எண்ணத்தில் சில நகரங்களில் மரங்கள் வளர்க்க முயற்சி செய்த அதிகாரிகள் இடம் மாற்றப்பட்ட பின்னர் அந்த தாவரங்களின் கதி என்னவாயிற்று என்று சொல்லத்தேவையில்லை.

மழை வேண்டுமெனில் மரம் வளர்ப்போம்.

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி ஆரென்.

நேசம்
09-09-2009, 05:38 AM
நல்லதோர் முயறி எடுத்துள்ளார் அந்த அதிகாரி.இது மக்களீடையே ஒரு விழிப்புணர்வு தந்து இருக்கும்.

arun
09-09-2009, 07:04 AM
வாவ் அருமை ஆனால் இதனை பாதுகாப்பார்களா? பாதுகாத்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது