PDA

View Full Version : அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி



Honeytamil
08-09-2009, 06:05 AM
வன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து "அல்ஜசீரா" தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை "அல்ஜீரா" பேட்டி கண்டுள்ளது.

தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் "அல்ஜசீரா தொலைக்காட்சி" சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் "அரச பயங்கரவாதம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.youtube.com/watch?v=E8KZ09rsveQ

உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான "அல்ஜசீரா தொலைக் காட்சி" சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.

ஏற்கனவே "சனல்04" தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.

நன்றி : பாரிஸ்தமிழ்

praveen
08-09-2009, 06:41 AM
இதையும் பின்னர் ஒருவரை விட்டு போலி என்றும், எகிப்தில் செட் போட்டு எடுக்கப்பட்டது என்றும் இலங்கை அரசு சொன்னால் விசயம் முடிந்து போனது.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் இந்து என்.ராம் அவரை கூப்பிட்டால் மறுபடியும் ஒரு பார்வையிட்டு ரெம்ப நன்றாக உள்ளது, இந்தியாவில் கூட் இப்படி இல்லை :), இங்கேயே என் வாழ்நாள் முழுவதும் தங்கி விடலாம் என்பது போல இருக்கிறது என்று ஒரு பேட்டி விட்டால் முந்தையது புஸ்வானம் ஆகும்.

பின்னர் வழக்கம் போல அல் அஜிரா மீது ஒரு வழக்கு போட்டால் பொய் என்றாகி விடும்.

ஒரு தனிப்பட்ட மனிதன் ப்ராடாக இருப்பதை பார்த்திருக்கிறேன், ஒரு நாடே(அரசே) ஏமாற்று பேர்வழியாக இருப்பது இ(ல)ங்கே தான்.

அய்யா
08-09-2009, 07:12 AM
ஒரு தனிப்பட்ட மனிதன் ப்ராடாக இருப்பதை பார்த்திருக்கிறேன், ஒரு நாடே(அரசே) ஏமாற்று பேர்வழியாக இருப்பது இ(ல)ங்கே தான்.


:icon_b::icon_b::icon_b:

அமரன்
08-09-2009, 07:15 AM
வாங்கய்யா.. சுகமா இருக்கியளா.

மிச்சம் நாளாச்சுப் பார்த்து..

அய்யா
08-09-2009, 07:37 AM
வாங்கய்யா.. சுகமா இருக்கியளா.

மிச்சம் நாளாச்சுப் பார்த்து..

ஓம் அண்ணா.. வடிவான சுகமா இருக்கினம்.

நேசம்
08-09-2009, 08:32 AM
மற்ற நாடுகளுக்கு தெரியமால் இல்லை.அல்ஜஸிராவின் சேவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஆனால் இலங்கை போல் பலன் இல்லை.

தூயவன்
10-09-2009, 05:57 PM
இதையும் பின்னர் ஒருவரை விட்டு போலி என்றும், எகிப்தில் செட் போட்டு எடுக்கப்பட்டது என்றும் இலங்கை அரசு சொன்னால் விசயம் முடிந்து போனது.................................

............................................


:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

அறிஞர்
10-09-2009, 06:27 PM
வெளி வந்த செய்திகள் சில தான்...
அனைத்தையும் மூடி மறைக்கிறது இலங்கை அரசு..
சரியான நீதி என்று தான் கிடைக்குமோ..