PDA

View Full Version : தூய தமிழ்ச்சொற்கள்பாரதி
07-09-2009, 02:52 PM
அன்பு நண்பர்களே,

நம்மில் பலரும் அன்றாடம் பேசும் தமிழில் பிறமொழிகள் பலவும் கலந்திருக்கின்றன. இவற்றில் உண்மையிலேயே எது தமிழ், எது பிறமொழி என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். தூய தமிழை வழக்கில் கொண்டு வருவதற்காக சிலர் முயற்சி செய்யக்கூடும். அவர்களுக்காகவும், தூய தமிழ்சொற்கள் எவை என்பதை நாம் அறிந்து கொள்ளவும், நல்ல தமிழ் சொற்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இந்தத்திரி பயன்படட்டும்.

இந்தத்திரியில் பிழைகளைக் கண்டால் சுட்டிக்காட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்த தூய தமிழ் சொற்களை பட்டியலிடுங்கள்.

இத்திரிக்கு பெரிதும் உதவும் தமிழ்வட்டம் குழுமம், பல்வேறு வலைப்பூக்கள், தமிழ் இணையத்தளங்கள், மின்னஞ்சல் குழுக்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

பாரதி
07-09-2009, 02:52 PM
இந்த அட்டவணை பிற இணைய தளங்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இருந்து தொகுக்கப்படுகிறது. அகர வரிசைப்படுத்தப்படும் பணி தொடர்ந்து நடைபெறும். பிழைகள் / குறைகள் இருப்பின் சுட்டுக. நீங்கள் அறிந்த தூய சொற்களையும் தருக. நன்றி.

--------------------------------------------------------
அகரம்

பிறமொழிச்சொல் - தமிழ்


அக்கணம் - அப்பொழுது
அக்கிரகாரம் - பார்ப்பனச்சேரி, பார்ப்பனர்கள் வசிக்கும் இடம்
அக்கிரமம் - ஒழுங்கின்மை, முறைகேடு
அக்னி,அக்கினி அக்நி - நெருப்பு, தீ, அனல் எரி
அகங்காரம் - செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்
அகடவிகடம் - வேறுபட்டது, குறும்பு மாற்று
அகதி - அறவை, வறியர், ஏழை, புகலிலார்,\யாருமற்றவர், ஆதரவற்றவர்
அகந்தை - இறுமாப்பு, செருக்கு
அகம்பாவம் - தற்பெருமை, செருக்கு
அகராதி - அகரமுதலி, அகரவரிசை, அகரநிரல்
அகிம்சை - இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை

அங்கம் - உடல்உறுப்பு
அங்கீகாரம் - ஒப்புதல்
அங்கத்தினர் - உறுப்பினர்

அசத்தை - பொய்
அசுத்தம் - அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை
அசிரீரி - உருவமற்றது, வானொலி
அசீரணம் - அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை

அஞ்சலி - கும்பிடல், வணக்கம் செய்தல்
அஞ்சனம் - மை, கறுப்பு, இருள்
அஞ்ஞாதம் - மறைவு அறியப்படாதது

அண்டம் - முட்டை, உலகம், வித்து மூலம்

அதிகாரி - உயர் அலுவலர்
அதீதம் - மிகை

அப்பியாசம் - பயிற்சி, பழக்கம்
அபயம் - அடைக்கலம்
அபகரித்தல் - பறித்தல், கவர்தல்
அபத்தம் - பொய், பொம்மை
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
அபூர்வம் - அருமை

அனுக்கிரகம் - அருள் செய்தல்
அனுபந்தம் - பிற்சேர்க்கை
அனுபவம் - பட்டறிப்பு, நுகர்வு

அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு

அலாதி - தனி

அந்தியம் - முடிவு, சாவு
அந்தியக்கிரியை - ஈமவினை, இறுதிக்கடன்
அந்திய காலம் - முடிவுக்காலம், இறுதிக்காலம்
அந்நியர் - பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்
அந்தரங்கம் - மறைவடக்கம்
அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்தஸ்து - நிலைமை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை,
அந்தஸ்து - நிலை
அநர்த்தம் - அழிவு, கேடு
அநந்தம் - முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - முறையற்றது, நடுவின்மை, முறைகேடு
அநுகூலம் - சார்பு
அநுட்டித்தல் - கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்
அநுஷ்டித்தல் - கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்
அநுதாபம் - இரக்கம், அருளல், இரங்கல்
அநுதினம் - நாள் தோறும்

அரசன்,ராஜா - மன்னன்,வேந்தன்,கோன்

பாரதி
07-09-2009, 02:52 PM
இகரம்


பிறமொழிச்சொல் - தமிழ்இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன்கொடை
இலக்கம் - எண்

பாரதி
07-09-2009, 02:52 PM
ஆகரம்

பிறமொழிச்சொல் - தமிழ்


ஆகாயம் - வானம்
ஆசை - விருப்பம்
ஆபத்து - துன்பம், இடர்
ஆராதனை - வழிபாடு
ஆன்மா - உயிர்
ஆஜர் - வருகை

பாரதி
07-09-2009, 02:52 PM
ஐகாரம்

பிறமொழிச்சொல் - தமிழ்ஐக்கியம் - ஒற்றுமை

பாரதி
07-09-2009, 02:52 PM
உகரம்


பிறமொழிச்சொல் - தமிழ்உபத்திரவம் - வேதனை
உற்சவம் - திருவிழா

பாரதி
07-09-2009, 02:52 PM
பிறமொழிச்சொல் - தமிழ்


கல்யாணம் - திருமணம்
கடிதம் - மடல்
கரம் - கை
கதிரை - நாற்காலி, அணை, இருக்கை
கஷ்டம் - தொல்லை
கட்டில் - மஞ்சம்
கடிகாரம் - கன்னல்,மணிக்கூடு
கறார் விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு

காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
காருண்யம் - பரிவு
காரியம் - செயல்
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்

கிஸ்தி - வரி
கிரயம் - விலை
கிராமம் - சிற்றூர்
கீதம், கானம், கானா - பாட்டு,பாடல்

கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
குதூகலம் - எக்களிப்பு

கைதி - சிறையாளி

கோஷ்டி - குழாம்
கோத்திரம் - குடி
கோப்பை - கிண்ணம்

----------------------------------------

சகஜம் - வழக்கம்
சக்தி - ஆற்றல், வலு
சக்கரவர்த்தி - பேரரசன்
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சட்டை - அங்கராத்து,மேலாடை,மெய்ப்பை
சதவீதம் - நூற்றுக்கூறு,விழுக்காடு
சபதம் - சூள்
சர்க்கார் - அரசாங்கம்
சரகம் - எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சரணம் - அடைக்கலம்
சரணாகதி - அடைக்கலம்
சனி (கிழமைகளில்) - காரி
சங்கீதம் - இசை
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்தா - கட்டணம்
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்ததி - வழித்தோன்றல்
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சம்பளம் - கூலி, ஊழியம்
சம்பிரதாயம் - தொன்மரபு
சமீபம் - அண்மை
சவால் - அறைகூவல்
சாஸ்திரம் - கலை
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சாமான் - பண்டம்

சிகிச்சை - மருத்துவமுறை
சிங்காசனம் - அரியணை
சிப்பந்தி - வேலையாள்
சிபாரிசு - பரிந்துரை
சிரம் - தலை, சென்னி
சிநேகம் - நட்பு

சீதனம் - மணக்கொடை
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்

சுகம் - இன்பம்
சுத்தம் - தூய்மை
சுதந்திரம் - விடுதலை
சுபாவம் - இயல்பு
சுமார் - ஏறக்குறைய
சுயம் - தன்
சுயதொழில் - தன்தொழில்
சுயராஜ்யம் - தன்னாட்சி

செருப்பு - பாதணி

சேவை - தொண்டு,பணி
சேஷ்டை - குறும்பு

சௌகரியம் - வசதி

-------------------------------

நமஸ்காரம்,சலாம் - வணக்கம்
நஷ்டம் - இழப்பு

நிபுணர் - வல்லுநர்
நிமிஷம் - மணித்துளி
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்

நீதி - நடுநிலை நன்னெறி

நேரம் - ஓரை,நாழி

---------------------------------

தசம் - புள்ளி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தஸ்தாவேஜூ - ஆவணம்

தாகம் - வேட்கை

திருப்தி - உள நிறைவு, மன நிறைவு
தினம், நிதம் - நாள்

தேதி - நாள்
தேசம் - நாடு

துவக்கு - சுடுகலன்

---------------------------------------

பக்தன் - அடியான்
பகிரங்கம் - வெளிப்படை
பசங்கள் - பிள்ளைகள்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ், செய்தித்தாள்
பரஸ்பர ஒத்துழைப்பு - சமதரப்பு ஒத்துழைப்பு
பரிகாசம் - நகையாடல்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பந்தோபஸ்து - பாதுகாப்பு
பவுண், பவுன் - பொன், தங்கம்
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு

பாக்கியம் - பேறு
பாரம் - சுமை
பாண் - வெதுப்பி
பாஷை - மொழி

பிரகாரம் - திருச்சுற்று
பிரச்சாரம் - பரப்புவேலை, பரப்புரை
பிரச்சினை - சிக்கல்
பிரசாதம் - திருப்பொருள்
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்

புதன் (கிழமைகளில்) - அறிவன்
புத்தகம் - நூல் (பொத்தகம் தமிழ் என்போரும் உண்டு)
புருஷன் - கணவன்

பூச்சியம்,சைபர் - சுழியம்
பூர்வம் - முந்திய
பூஜை - பூசெய் (பூசை)

போஜனம் - ஊண்,உணவு,சாப்பாடு

---------------------------------------

மந்திரி - அமைச்சன்
மந்திரம் - மறைமொழி
மரணம் - சாவு, இறப்பு

மாமிசம் - இறைச்சி
மார்க்கம் - நெறி, வழி

மிருகம் - விலங்கு

முகூர்த்தம் - நல்வேளை
முக்கியம் - முகன்மை
முகாம் - பாசறை

மோசம் - கேடு

----------------------------------------

யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்

-------------------------------------

இரகசியம் - மறைபொருள், கமுக்கம்
இரதம் - தேர்
இரத்தம் - குருதி,உதிரம்

இராகம் - பண்
இராத்திரி - இரவு,அல்
இராச்சியம்,தேசம் - நாடு
இராணுவம் - படை

உருசி - சுவை

-------------------------------------

வயது - அகவை
வருடம், வருசம், வருஷம் - ஆண்டு

வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
வாத்தியம் - இசைக்கருவி
வார்த்தை - சொல்
வாரம் - கிழமை
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாயு - காற்று
வாலிபர் - இளைஞர்

விக்கிரகம் - திருவுருவம்
விசயம், விஷயம் - பொருள், செய்தி
விசேஷம் - சிறப்பு
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
விரதம் - நோன்பு
விஷம் - நஞ்சு
விஜயம் - பயணம்

வீரம் - மறம்
வீதி - தெரு, சாலை

வேகம் - விரைவு
வேதம் - மறை

வைத்தியசாலை - மருத்துவமனை

------------------------------------------

ஜகாவாங்குதல் - பின்வாங்குதல்
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜல்லிக்கட்டு - மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல்
ஜனனம் - பிறப்பு
ஜன்னல் - சாளரம்
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி

ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜாஸ்தி - மிகுதி

ஜீவன் - உயிர்

ஜென்மம் - பிறவி

ஜோடி - இணை

------------------------------------------
யாத்திரை - திருச்செலவு

இலட்சணம் - அழகு

ஸ்தாபனம் - நிறுவனம், நிலையம்

க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்

அய்யா
07-09-2009, 03:14 PM
ஆசனம், உபவாசம், பிரத்யேகம்.. இவையெல்லாம் தமிழ்ச் சொற்களா?

இளசு
07-09-2009, 08:01 PM
நல்லதொரு தொடக்கம்.. நல்ல முயற்சி.. நல்ல பணி..

பாராட்டுகள் பாரதி..


ஃபைல் என்பது கோப்பு ஆன புதிது - பலருக்கு நாக்குளறி இருக்கும்.. இன்று அச்சொல் புழக்கத்தில்...

தூய தமிழுக்கு முன் நாம் செய்ய வேண்டியவை -

1) அதிகம் தமிழில் பேச, எழுத..
2) அதைப் பிழை குறைத்து.....
3) நல்ல தமிழ்ச் சொற்களைப் பொருத்தமான இடத்தில் இட்டு - கையாள, பரவலாக்க.. (போர்ட்டிக்கோ - முன்றில், அவென்யூ - நிழற்சாலை)


காலம், மனிதன், ஆசனம் போன்றவை ஒரே வேர்ச்சொல்லில் இருந்து இருமொழிகளுக்குப் போனவையாய் இருக்கலாம்..

வேர்விட்டு தமிழ்மண்ணில் சொந்தத்துடன் பொருந்தியவற்றைப் பெயர்த்தெடுப்பது தேவையற்றது... நாம் முதலில் கவனிக்கவேண்டியதும் அது அன்று...

முன்னர் சொன்ன மூன்று நிறைவாய்ச் செய்தபின், '' தனித்தமிழ்'' கடைசியாய்க் கவனிக்கப்படலாம்... என் எண்ணப்பாதை சரியா பாரதி?

பால்ராஜ்
08-09-2009, 05:06 AM
அற்புதமான முயற்சி...தழைத்தோங்க வாழ்த்துக்கள்..

நம்ம கேஸில் உதைப்பது அன்றாட வாழ்க்கையில் புழங்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு (வார்த்தை ...தமிழ்தானா..??) சரி சமனான தமிழ்ச் சொற்கள்..

பின்னர் சில காம்ப்ளிக்கேட்டட் சொற்களுக்கும்....!
விரைவில் விடை கிடைக்கும் என நம்புவோம்...

samuthraselvam
08-09-2009, 06:21 AM
நாம் தமிழ் தான் என்று நினைத்து பேசும் ஒரு சில வார்த்தைகளெல்லாம் தூய தமிழ்ச்சொல் அல்ல என்பது இந்த திரியின் மூலம் தெரிகிறது....

பதிவிற்கு நன்றி பாரதி அண்ணா...

கீதம்
08-09-2009, 06:54 AM
மிகவும் பயனுள்ள முயற்சி. அனைவரும் தூய தமிழில் எழுதாவிடினும், தவறின்றி எழுதப் பழகுதல் வேண்டும். பகிர்ந்துள்ள பாரதி அவர்களுக்கு நன்றி.

பால்ராஜ்
08-09-2009, 07:25 AM
20 ...கட்டில் என்பது தமிழ் வார்த்தை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. இனியும் நினைக்க விரும்பும் 'இடம்' அல்லவா??

51.. இரண்டுமே வடமொழிச் சொற்களாகவே தென்படுகின்றன..

பரந்த நோக்கில் பார்க்கும்போது மொழி என்பது பிறருக்கு நாம் நினைப்பதைச் சொல்வதற்காக...

அதற்காகத் தான் 'கார்' போன்ற வார்த்தைகளை நமது மொழியிலும் ஈர்பத்துவே நல்லதோ என்று தோன்றுகிறது

பாரதி
08-09-2009, 12:32 PM
கருத்துகள் தந்த அய்யா, அண்ணா, பால்ராஜ், சமுத்திர செல்வம், கீதம் ஆகியோருக்கு நன்றி.

அய்யா...வின் ஐயத்திற்கு என்னால் நேரடியாக விடை கூற இயலவில்லை. இணையத்தில் தேடியதிலும் உறுதியான பதிலைக் காண இயலவில்லை. மொழியை ஆய்வு செய்யும் சான்றோர்கள்தான் இதற்கு சரியான பதிலை தர இயலும். அல்லது உறுதி செய்யும் நண்பர்கள் விளக்கினால் பிற மொழிச்சொற்களை நமது பட்டியலில் இருந்து நீக்கி விடலாம்.

இளசு அண்ணா சொன்னது போல், முதலில் தமிழில்.... பின்னர் பிழையின்றி தமிழில்..... பின்னர் தூயதமிழில் எழுத, பேச முயற்சி செய்வதே சரியாக தோன்றுகிறது.

ஏனெனில் சில இடங்களில் படித்தது போல்....
மார்னிங்க்ல பிரஷ் பண்ணி,
பாத் பண்ணி,
ட்ரெஸ் பண்ணி,
பிரேக்ஃபாஸ்ட் பண்ணி,
பைக்ல, பஸ்ல, ட்ரெயின்ல ட்ராவல் பண்ணி,
ட்ராபிக் ஜாமை ஓவர் கம் பண்ணி,
அர்ஜெண்டா ரோடை கிராஸ் பண்ணி,
ஆபிஸுக்கு டைம்ல ரீச் பண்ணி,
ரிஜிஸ்டரில் சைன் பண்ணி,
மேனேஜருக்கு விஷ் பண்ணி,
அஸிஸ்டெண்டுக்கு ஃபோன் பண்ணி,
ஃபைல்ஸ்ல கரெக்சன் பண்ணி,
சீட்ல ஹாயா இருக்க முடியாம டயர்டோட லஞ்ச்க்கு ஆர்டர் பண்ணி.....

இப்படி ”பண்ணித்தமிழ்”தான் பல இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கிறது.

ஆக.... முடிந்த மட்டிலும் தமிழில்.... பிழையற்ற தமிழில்... தூய தமிழில் பேச எழுதுவதற்கான முயற்சியே இது.

இயன்ற போதெல்லாம் நல்ல தமிழ்சொற்களை தேடுவோம், பயன்படுத்துவோம்.

ஆதி
08-09-2009, 01:25 PM
ப்ரத்யேகம் - சிறப்பு

ஆசனம் - அணை

உபவாசம் - நோன்பு

அரங்கம் என்பதே தமிழ் சொல்தான் அண்ணா..

இன்னும் பல தூய தமிழ் சொற்களை அறிய தாருங்கள் அண்ணா..

பாரதி
10-09-2009, 12:44 PM
கருத்திற்கும் விளக்கத்திற்கும் நன்றி ஆதி.
நீங்கள் கூறியது போல அட்டவணையில் மாற்றம் செய்து விடுகிறேன்.

பாரதி
10-09-2009, 04:46 PM
அட்டவணையில் சொற்கள் சேர்க்கப்பட்டன.

பாரதி
11-09-2009, 01:15 PM
அட்டவணையில் சொற்கள் சேர்க்கப்பட்டன.

இளசு
11-09-2009, 08:27 PM
தொடரும் தொகுப்புக்கு நன்றியும் பாராட்டும் பாரதி!

சில தூயச் சொற்களை உச்சரிக்க நல்லுணர்ச்சி மிகுகிறது...

பாரதி
12-09-2009, 07:17 AM
ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணா.
---------------------------------------------------------------------------------
அட்டவணையில் சொற்கள் சேர்க்கப்பட்டன.

ஆதி
13-09-2009, 07:11 AM
முக்கியம் - முகன்மை

மிக அழகான சொல், முகன்மையை விடுத்து முக்கியத்தை முக்கியமாய் பேசி இருக்கிறேனே..

பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று

இவையும் மிக அழகியச் சொற்கள்..

அண்ணா,

சம்பளம் தமிழ் சொல்தானே..

சம்பும், அளமும் ஊதியமாய் கொடுத்ததால் சம்பளமானதுதானே..

சம்பு(சம்பா நெல்) + அளம் (உப்பு) = சம்பளம்..

ஆங்கிலத்தில் salary எனும் சொல் கூட salt-ல் இருந்து வந்ததாக படித்திருக்கிறேன்..

பாரதி
14-09-2009, 05:40 AM
நல்ல கருத்துகளுக்கு நன்றி ஆதி.

இணையத்தில் சில இடங்களில் ”சம்பளம்” என்பது தமிழ் சொல் அல்ல என்று கூறி இருக்கிறார்கள். நீங்களும் ஒரு முறை உறுதிப்படுத்துங்கள். அட்டவணையில் சரிப்படுத்தி விடுவோம்.

பாரதி
14-09-2009, 05:44 AM
அட்டவணையில் சொற்கள் சேர்க்கப்பட்டன.

பாரதி
15-09-2009, 12:51 PM
அட்டவணையில் சொற்கள் சேர்க்கப்பட்டன.

Ranjitham
16-09-2009, 03:09 PM
பயனுல்ல திரி வாழ்துக்கள்.
நன்றியுடன்
இரன்சிதம்.

aren
08-10-2009, 09:41 AM
நிமிஷம் என்பதை நிமிடம் என்று தமிழ்படித்தியிருக்கிறார்களே. நிமிடம் தமிழ்தானே.

நீங்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். நம் தமிழ்மொழியில் ஒரு வார்த்தை இல்லாமல் இருந்தால் அதை வேறு மொழியிலிருந்து தருவித்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளும் இதை செவ்வனே செய்கின்றன. அதனால் அவர்கள் மொழியிம் மேம்படுகின்றன.

வெட்டிவேர், கட்டுமரம் போன்ற தமிழ்ச்சொற்களை அவர் அப்படியே எடுத்துக்கொண்டு ஆங்கிலமாக்கினார்கள்.

அதே போல் தமிழில் இல்லாத வார்த்தைகளை நாமும் எடுத்துக்கொண்டால் தவறல்ல என்பது என்னுடைய கருத்து.

ஆதி
08-10-2009, 11:08 AM
நிமிஷம் என்பதை நிமிடம் என்று தமிழ்படித்தியிருக்கிறார்களே. நிமிடம் தமிழ்தானே.

நீங்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். நம் தமிழ்மொழியில் ஒரு வார்த்தை இல்லாமல் இருந்தால் அதை வேறு மொழியிலிருந்து தருவித்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

ஆங்கிலமும் ஐரோப்பிய மொழிகளும் இதை செவ்வனே செய்கின்றன. அதனால் அவர்கள் மொழியிம் மேம்படுகின்றன.

வெட்டிவேர், கட்டுமரம் போன்ற தமிழ்ச்சொற்களை அவர் அப்படியே எடுத்துக்கொண்டு ஆங்கிலமாக்கினார்கள்.

அதே போல் தமிழில் இல்லாத வார்த்தைகளை நாமும் எடுத்துக்கொண்டால் தவறல்ல என்பது என்னுடைய கருத்து.


நீங்கள் சொல்வது மிக சரி ஆரென் அண்ணா..


மற்ற மொழியில் உள்ள ஒரு சொல்லுக்கு இணையான சொல் தமிழில் இல்லை எனும் போதுதான் நாம் இது சரி.. ஆனால் தமிழில் இல்லாத சொல்லே இல்லை எனும் போது ஏன் இந்த நிலை..

சொல் (தமிழ் ) - வாத்தை (வடமொழி)

சொல்லிருக்கும் போது வார்த்தையை தானே பயன்படுத்துகிறோம்..

பரிசு ( தமிழ் ) - விருது ( வடமொழி )

அகவை - வயது

புதல்வன் - புத்திரன்

எதிரி - சத்ரு

உதிரம் - இரத்தம்

இப்படி எத்தனையோ தமிழ் சொற்களை விட்டுவிட்டு வடமொழிச் சொற்களைத்தானே எடுத்து கையாண்டு கொண்டிருக்கிறோம்..

இந்த தவறை பாரதியும் பாவேந்தனும் அதிகமாகவே செய்தார்கள்..

aren
10-10-2009, 01:47 AM
இரத்தம் தமிழ் சொல் இல்லையா?

poornima
19-10-2009, 04:30 PM
இரத்தம் தமிழ் சொல் இல்லையா?

குருதி - கூட தமிழ்ச் சொல் இல்லையா..?

aren
19-10-2009, 04:36 PM
வயதும், விருதும் நாம் மொத்தமாக தமிழ்ப்படுத்திவிட்டோம் என்றே நினைக்கிறேன். உன் அகவை எவ்வளவு என்றால் அடிக்கவந்துவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். பரிசு என்றால் பலருக்கு இன்றும் புரியும். ஆனால் அகவை??

பிரம்மத்ராஜா
19-10-2009, 05:15 PM
எந்த தமிழர் சுத்த தமிழில் பேசுகிறார் அப்படி பேசினால் நாம் புரிந்து பதில் சொல்வதற்குள் போதுமேன்டாகிவிடும் மொழியை வளர்க்க வேண்டுமென்றால் ஆரேன் அவர்கள் சொல்வதுபோல் நம்மிடம் இல்லாத சொற்க்களை வேறு மொழியில் இருந்து பெறுவதில் தவறு ஒன்றுமில்லை

aren
19-10-2009, 05:34 PM
எந்த தமிழர் சுத்த தமிழில் பேசுகிறார் அப்படி பேசினால் நாம் புரிந்து பதில் சொல்வதற்குள் போதுமேன்டாகிவிடும்

புகைவண்டி நிலையம் என்றால் என்ன என்று சென்னையில் கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஒழுங்காக வீடு போய் சேரமாட்டீர்கள்.

இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

அனைவரும் தமிழ்ச் சொற்களை உபயோகிக்கவேண்டுமாயின் அதற்கான முயற்சியில் அரசாங்கம் முதலில் ஏற்பாடு செய்யவேண்டும், ஆனால் அதற்காக ஆங்கிலக்கல்வி அறவே கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. அது நம் எதிர்காலத்தை பாதிக்கும்.

பால்ராஜ்
20-10-2009, 03:17 PM
தூய தமிழ் என்பது ஓரளவுக்கு ஒரு மாயை..
பரிசு என்பது Prize என்பதற்கு மிகவும் அருகில் இருக்கிறது..
ஆங்கிலேயன் நம்மிடத்தில் சுட்டானா ...?

தமிழின் தனித்தன்மையை காக்கும் நோக்கில் கிணத்துத் தவளை ஆகி விடக் கூடாது..

aren
20-10-2009, 05:35 PM
தூய தமிழ் என்பது ஓரளவுக்கு ஒரு மாயை..
பரிசு என்பது Prize என்பதற்கு மிகவும் அருகில் இருக்கிறது..
ஆங்கிலேயன் நம்மிடத்தில் சுட்டானா ...?

தமிழின் தனித்தன்மையை காக்கும் நோக்கில் கிணத்துத் தவளை ஆகி விடக் கூடாது..

பரிசு ஆங்கிலத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

இந்தப் பையன் மிகவும் சமர்த்து என்கிறோம். இது ஸ்மார்ட் என்பதிலிருந்து வந்திருக்கவேண்டும்.

அமரன்
20-10-2009, 06:39 PM
பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த...
நம்தமிழை அறிந்து வைத்திருக்க..
..
...
உதவும் தொகுப்பு...
நன்றி அண்ணா.

ஆதி
28-10-2009, 08:31 AM
பரிசு ஆங்கிலத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

இந்தப் பையன் மிகவும் சமர்த்து என்கிறோம். இது ஸ்மார்ட் என்பதிலிருந்து வந்திருக்கவேண்டும்.

பரிசும், சமத்தும் நமது..

கயிறு என்பதை Coir என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்..

சொல் வளம் நம்மிடத்தில் உண்டு இங்கிருந்து தான் அங்கு சென்றது என்பதற்கு பல சான்றுகள் நம்மிடத்தில் கண்டு கொள்ள, நிகண்டுகளை புரட்டிப் பாருங்கள் நிரம்ப புரியும்..

பாரதி
07-11-2009, 12:36 PM
எந்த தமிழர் சுத்த தமிழில் பேசுகிறார் அப்படி பேசினால் நாம் புரிந்து பதில் சொல்வதற்குள் போதுமென்றாகிவிடும். மொழியை வளர்க்க வேண்டுமென்றால் ஆரேன் அவர்கள் சொல்வதுபோல் நம்மிடம் இல்லாத சொற்களை வேறு மொழியில் இருந்து பெறுவதில் தவறு ஒன்றுமில்லை

எந்தத்தமிழரும் தூய தமிழில் பேசுவதே இல்லை என்ற உங்கள் கூற்றின்படியே நோக்கினும் வருத்தமே மிஞ்சுகிறது. தமிழில் பேசினால் புரிந்து பதில் சொல்வது இயலாததாகி விடும் என்ற உங்களின் கருத்து என்னைத் திகைக்க வைக்கிறது!.... என்ன சொல்ல?

நண்பரே, நம்மிடம் சொற்கள் இல்லாத போது அல்லது புதிதாக உருவாக்க இயலாத போதுதான் உங்களுடைய கூற்று சரியாகும். ஏற்கனவே தமிழில் இருக்கின்ற சொற்களை மறந்து, மறைத்து பிற மொழிச்சொற்களை பேச வேண்டியதல்லவே? மறந்திருப்பினும் அவற்றை நினைவு கூறுவதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளலாமே?


புகைவண்டி நிலையம் என்றால் என்ன என்று சென்னையில் கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஒழுங்காக வீடு போய் சேரமாட்டீர்கள். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

அனைவரும் தமிழ்ச் சொற்களை உபயோகிக்கவேண்டுமாயின் அதற்கான முயற்சியில் அரசாங்கம் முதலில் ஏற்பாடு செய்யவேண்டும், ஆனால் அதற்காக ஆங்கிலக்கல்வி அறவே கூடாது என்று தடை விதிக்கக்கூடாது. அது நம் எதிர்காலத்தை பாதிக்கும்.

இப்போதும் தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொடர்வண்டி நிலையங்களிலும் தூய தமிழில்தானே அறிவிப்பு செய்கிறார்கள்! உதாரணமாக “கடற்கரை வரை செல்லும் அடுத்த மின் தொடர் வண்டி இரண்டாவது நடைமேடையில் இருந்து புறப்படும்” என அறிவிப்பு செய்கிறார்கள் எனில் நமக்கு விளங்கத்தானே செய்கிறது.

”மெட்ராஸ்” என்றிருந்ததை ”சென்னை” என்று மாற்றிய போது ஏற்பட்ட வினாக்கள் இன்று மறைந்து விட்டிருப்பதையும் நாம் காண முடியும். (இப்படி பெயரை மாற்றியது சரியா என்ற வினாவிற்குள் நான் செல்லவில்லை. ஒரு மாற்றம் செய்யும் போது இருக்கும் கேள்வி முறையான பயன்பாட்டிற்கு பின்னர் மறைந்து விடும் என்பதை விளக்கவே இங்கு கூறுகிறேன்.)

டி.வி - தொலைக்காட்சி, ரேடியோ - வானொலி, எஃப் எம் - பண்பலை, லைவ் - நேரலை, சினிமா - திரைப்படம் ..... என எவ்வளவோ சொற்கள் தினசரிப்பயன்பாட்டில் வந்து விட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே போல் கம்ப்யூட்டர் - கணினி என்று அழைக்கப்படுவதும் தொடர்ந்து கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே. அதைப் பழக்கப்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

இந்தத்திரியில் எந்த இடத்திலும் ஆங்கிலக்கல்வி அறவே தேவையில்லை என்று கூறவே இல்லை. முறையாக ஆங்கிலத்தையும் கற்போம். ஆங்கிலத்தில் பேச வேண்டிய நேரத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோம். தமிழில் பேசும் போது, பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி, இயன்ற வரை தமிழில் பேச முயற்சிப்போம்.தூய தமிழ் என்பது ஓரளவுக்கு ஒரு மாயை..
பரிசு என்பது Prize என்பதற்கு மிகவும் அருகில் இருக்கிறது..
ஆங்கிலேயன் நம்மிடத்தில் சுட்டானா ...?

தமிழின் தனித்தன்மையை காக்கும் நோக்கில் கிணத்துத் தவளை ஆகி விடக் கூடாது..

செம்மொழி என்று தமிழ் அறிவிக்கப்பட்ட பின்னரும் நாம் மாயையில் மூழ்கி இருக்கத்தான் வேண்டுமா...? யார் யாரிடத்தில் சுட்டார் என்பதை விட, நாம் தமிழரிடம் பேசுமிடத்தில் தமிழில் பேசுவோம் என முயற்சிக்கலாம் அல்லவா? கிணற்றுத்தவளையாக இருக்க வேண்டியதே இல்லை. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்பதற்கேற்ப நடப்போம் என்றே நானும் கூறுகிறேன். தமிழை மறந்து, தமிழில் நிகழ்ச்சிகள் நடத்துவதாகக்கூறும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போன்றே நமது எதிர்காலத்தலைமுறை ஆகிவிடக்கூடாதே என்பதே என் ஆதங்கமும்.


பரிசும், சமத்தும் நமது..

கயிறு என்பதை Coir என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம்..

சொல் வளம் நம்மிடத்தில் உண்டு இங்கிருந்து தான் அங்கு சென்றது என்பதற்கு பல சான்றுகள் நம்மிடத்தில் கண்டு கொள்ள, நிகண்டுகளை புரட்டிப் பாருங்கள் நிரம்ப புரியும்..

இவற்றில் அறிவை மயங்கச்செய்யும் சொற்கள் பலவும் உண்டு. எனவேதான் நாம் தமிழ்ச்சொற்கள் எவை என்பதை அறிய வேண்டிய நிலையில் இருக்கிறோம். நிகண்டு மின்னூலாக கிடைக்கப்பெறுகிறதா நண்பரே? இருப்பின் பலருக்கும் உதவியாக இருக்கும். (சில நிகண்டுகள் மணிப்பிரவாள நடையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.)

குணமதி
07-11-2009, 01:38 PM
ஒரு மாற்றம் செய்யும் போது இருக்கும் கேள்வி முறையான பயன்பாட்டிற்கு பின்னர் மறைந்து விடும் என்பதை விளக்கவே இங்கு கூறுகிறேன்.

டி.வி - தொலைக்காட்சி, ரேடியோ - வானொலி, எஃப் எம் - பண்பலை, லைவ் - நேரலை, சினிமா - திரைப்படம் ..... என எவ்வளவோ சொற்கள் தினசரிப்பயன்பாட்டில் வந்து விட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே போல் கம்ப்யூட்டர் - கணினி என்று அழைக்கப்படுவதும் தொடர்ந்து கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே. அதைப் பழக்கப்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

இந்தத்திரியில் எந்த இடத்திலும் ஆங்கிலக்கல்வி அறவே தேவையில்லை என்று கூறவே இல்லை. முறையாக ஆங்கிலத்தையும் கற்போம். ஆங்கிலத்தில் பேச வேண்டிய நேரத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோம். தமிழில் பேசும் போது, பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி, இயன்ற வரை தமிழில் பேச முயற்சிப்போம்.
. தமிழை மறந்து, தமிழில் நிகழ்ச்சிகள் நடத்துவதாகக்கூறும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போன்றே நமது எதிர்காலத்தலைமுறை ஆகிவிடக்கூடாதே என்பதே என் ஆதங்கமும்.

சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து.

gvchandran
10-04-2010, 12:27 AM
சமபந்தம் = தொடர்பு
நியாயம் =நேர்மை
பரிகாசம் =எள்ளல்

அன்புரசிகன்
10-04-2010, 06:45 AM
அண்மையில் கண்டது.
தற்குறிப்பு- CV / resume

M.Jagadeesan
17-09-2010, 08:29 AM
ஆசனம், உபவாசம், பிரத்யேகம்.. இவையெல்லாம் தமிழ்ச் சொற்களா?

ஆசனம், உபவாசம்,பிரத்யேகம்
இவையெல்லாம் தமிழ்ச்சொற்கள் அல்ல.

karikaalan
19-09-2010, 03:18 PM
பாரதிஜி

இன்றுதான் இத்திரியைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

மகிழ்ந்தேன். கட்டின வீட்டிற்கு பழுது சொல்வதில் வல்லவன் ஆயிற்றே!

இஸ்திரிப் பெட்டி == உடை மடிக்கும் கருவியா அல்லது, ஆடையில் இருக்கும் சுருக்கங்களை நீக்குகிறதா?

ரசித்தல் = அனுபவித்தல் என்று இருக்கிறது. அனுபவம் வடமொழியாயிற்றே?

===கரிகாலன்

karikaalan
19-09-2010, 03:24 PM
பரிசு ஆங்கிலத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

இந்தப் பையன் மிகவும் சமர்த்து என்கிறோம். இது ஸ்மார்ட் என்பதிலிருந்து வந்திருக்கவேண்டும்.

பரிசு பற்பல நூற்றாண்டுகளாகத் தமிழில் கையாளப்படுகிறது.

சமர்த்து == வடமொழிச்சொல் சமர்த். ஆங்கிலம் வடமொழிச்சொல்லைத் தனதாக்கிக் கொண்டது.

===கரிகாலன்

பாரதி
19-09-2010, 04:50 PM
இன்றுதான் இத்திரியைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

மகிழ்ந்தேன். கட்டின வீட்டிற்கு பழுது சொல்வதில் வல்லவன் ஆயிற்றே!

இஸ்திரிப் பெட்டி == உடை மடிக்கும் கருவியா அல்லது, ஆடையில் இருக்கும் சுருக்கங்களை நீக்குகிறதா?

ரசித்தல் = அனுபவித்தல் என்று இருக்கிறது. அனுபவம் வடமொழியாயிற்றே?

===கரிகாலன்

வருக அண்ணலே!
வணக்கம். நலமா..?

கட்டின வீட்டை கரிசனமாக வைத்திருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் எனக்கு விளங்குகிறது. மிகவும் நன்றி அண்ணலே. அதை நீக்கி விட்டேன். பணியிடத்தில் இருக்கும் இணைய இணைப்பு தொல்லையால் பதிவுகளை படிக்கவும், பின்னூட்டங்களை இடுவதும் சிரமமாக இருக்கிறது. இஸ்திரிப்பெட்டி குறித்த உங்கள் ஐயம் எனக்கும் வந்தது. சில தளங்களில் கிடைத்ததை சரிபார்க்க இயலாததால் அப்படியே இட்டு விட்டேன். இந்தத்திரியில் என் கவனத்தை திருப்பியதற்கும் நன்றி.

சுரங்கம், குகை என்ற சொற்களும் வடமொழியைச் சேர்ந்தவை என்பதை நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் போது தெரிய வந்தது. சற்று ஆழமாக சிந்தித்தால் தமிழா, பிற மொழிச்சொல்லா என்பதை கண்டுகொள்ள முடியாத நிலைக்கு சென்று கொண்டிருப்பது போல தோன்றுகிறது.

உங்களைப் போன்ற பெரியவர்கள், தமிழார்வம் மிக்கவர்கள் பிழை நீக்குதல், தமிழ்ச்சொற்களைத் தருதல் ஆகியவற்றில் உதவினால் மிகவும் மகிழ்வேன் அண்ணலே.

அனுராகவன்
20-09-2010, 07:18 PM
அடடே! இத்தன பார்க்காம..
சூப்பரான பகுதி..

gopikrishnan.r
25-09-2010, 11:39 AM
தேவைப்படும் இடங்களில் மட்டும் பிற மொழிகளை பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து...

Nivas.T
25-09-2010, 12:25 PM
தமிழில் பேசினால் தரம் குறைவு என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், மாற்ற முடியாது என்று எதுவுமில்லை, நாம் மாறுவோம் என்று நினைத்தால் அனைத்தும் மாறும். இன்றைய தமிழ் திரையுலகை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். (தமிழில் பேர்வைக்க விரிவிலக்கு செய்ய வேண்டியுள்ளது, என்ன ஒரு வெட்கக்கேடு)

அயன் - தூயவன், பலம்கொண்டவன்
வ - என்றால் (1/4) கால் பகுதியாம்

இப்படி பல தமிழ் சொற்களும் கிடைக்கிறது பிறகு அவற்றை பயன்படுத்தினால் யாரும் புரிந்துகொள்ள முடிகிறது (தமிழகத்தின் தலையெழுத்து).

முக்கியமாக செய்தி பத்திரிகைகளில் பணிபுரிபவர்களை முடிந்த வரை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த முறையிட வேண்டும்.

இப்படி சிறிது, சிறுதாக மற்றம் கொணரலாம்.

M.Jagadeesan
27-09-2010, 10:54 AM
தமிழில் பேசினால் தரம் குறைவு என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், மாற்ற முடியாது என்று எதுவுமில்லை, நாம் மாறுவோம் என்று நினைத்தால் அனைத்தும் மாறும். இன்றைய தமிழ் திரையுலகை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். (தமிழில் பேர்வைக்க விரிவிலக்கு செய்ய வேண்டியுள்ளது, என்ன ஒரு வெட்கக்கேடு)

அயன் - தூயவன், பலம்கொண்டவன்
வ - என்றால் (1/4) கால் பகுதியாம்

இப்படி பல தமிழ் சொற்களும் கிடைக்கிறது பிறகு அவற்றை பயன்படுத்தினால் யாரும் புரிந்துகொள்ள முடிகிறது (தமிழகத்தின் தலையெழுத்து).

முக்கியமாக செய்தி பத்திரிகைகளில் பணிபுரிபவர்களை முடிந்த வரை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த முறையிட வேண்டும்.

இப்படி சிறிது, சிறுதாக மற்றம் கொணரலாம்.

முதலில் தங்களுடைய பெயரை "நிவாசு" -என்று எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஆதி
27-09-2010, 11:53 AM
நிவாஸ்,

பிரம்மனை அயன் என்று பழைய இலக்கியங்களில் அழைப்பதை கண்டிருக்கிறேன்..

அயன் = அய் + அன்

அய் = ஐ

ஐ அன் = ஐந்திலும் இல்லாதவன்/ ஐந்தும் கடக்காதவன் :D

Nivas.T
27-09-2010, 01:12 PM
முதலில் தங்களுடைய பெயரை "நிவாசு" -என்று எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பரே

ஆனால் முடியாது

நான் தமிழ் உணர்வு கொள்வதற்கு முன்னால் இப்பெயர் எனக்கு இடப்பட்டு விட்டது, எனது தமிழ் உணர்வுக்கும் என் பெயருக்கும் தொடர்பில்லை

நான் வேலை செய்வது மென்பொருள் துறையில் அங்கு ஆங்கிலம்தான் முதலிடம் அதனால் என் வேலையை விட்டுவிட வேண்டுமா என்ன?

எனது தந்தை செய்த தவறுக்கு நான் பொருப்பாக முடியது, அதற்காக என் பெயரையும் என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால் நான் தவறு செய்ய மட்டேன். என் மகனுக்கு பெயர் பிரபாகன் என்று தான் வைப்பேன். என் பெயரை நான் மாற்றாததால் எனக்கு தமிழ் உணர்வு இருக்க கூடாதா என்ன?

ஜெகதீசன் அதுசரி தாங்கள் பெயர் தமிழ்பெயரா?

அப்படி என்றால் ராஜேந்திரா சோழர் தமிழர் இல்லையா...........?

Nivas.T
27-09-2010, 01:19 PM
நிவாஸ்,

பிரம்மனை அயன் என்று பழைய இலக்கியங்களில் அழைப்பதை கண்டிருக்கிறேன்..

அயன் = அய் + அன்

அய் = ஐ

ஐ அன் = ஐந்திலும் இல்லாதவன்/ ஐந்தும் கடக்காதவன் :D

:D புரியுது ஆனா புரியல?:D:D:D:D:D:D

கௌதமன்
04-07-2011, 04:54 PM
இரத்தம் தமிழ் சொல் இல்லையா?

தமிழ்ச்சொல்லே!
ஆனால் இரத்தம் அல்ல. அரத்தம். விளக்கம் மா.சோ.விக்டர் அவர்கள் எழுதிய புத்தகத்தில் உள்ளது.