PDA

View Full Version : அசத்தல் வரிகள்...



மஸாகி
03-09-2009, 10:17 AM
நீங்கள் எழுதிய கவி வரிகளில் - சிறந்த வரிகள் என உங்களுக்கு அதிகம் பெயரையும், புகழையும், பாராட்டையும், மனமகிழ்வையும் பெற்றுத் தந்த வரிகள் சிலதையும் - அதனை விஷேடமாக யாராவது உங்கள் அன்புக்குரியவர், அல்லது மதிப்புக்குரியவர், பிரபலமானவர் பாராட்டி இருந்தால் அவரைப் பற்றியும் இங்கே குறிப்பிடுங்கள். சிறந்த அசத்தல் வரிகளுக்கு (5) ஐ-காசு முடிப்பு வழங்கப்படும்..

முதலில் என் அசத்தல் வரிகளைக் கொண்டு - நானே ஆரம்பிக்கின்றேன்..

வரிகள் :
இந்தப் பாலைவனத்திலின்று
ஒரு - நயாகரா நிலைகொண்டிருக்கிறது..
இந்த மன்னர் பூமிக்கின்று
ஒரு - பேரரசு படையெடுத்திருக்கிறது..

பாராட்டியவர் :
கவிப்பேரரசு வைரமுத்து


நட்புடன்-மஸாகி
03092009

ஆதி
03-09-2009, 10:42 AM
அசத்தலான வரிகள் மஸாகி அவர்களே, முழு கவிதையும் கொடுத்தால் கருவோடு வரியை சுவைப்போம் அல்லவா.. கவிபேரரசை ஆக்ரமித்த வரிகள் எம்மையும் ஆக்ரமிக்காமல் இல்லை.. பாராட்டுக்கள்..

மஸாகி
03-09-2009, 12:32 PM
அசத்தலான வரிகள் மஸாகி அவர்களே, முழு கவிதையும் கொடுத்தால் கருவோடு வரியை சுவைப்போம் அல்லவா.. கவிபேரரசை ஆக்ரமித்த வரிகள் எம்மையும் ஆக்ரமிக்காமல் இல்லை.. பாராட்டுக்கள்..

இது - கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள், சவுதிக்கு வந்தபோது - அவரை வரவேற்பதற்காக எழுதப்பட்ட கவிதையில், அவரைக் கவர்ந்ததென பாராட்டிய வரிகள்..

( அந் நிகழ்வில் - எனது "கம்ப்யூட்டர்வாதி" என்ற நான்காவது கவிதைத் தொகுப்பும் - அவரால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடப்படவேண்டியது)

இப்போது - பாலைவனத்திற்கும், மன்னர் பூமிக்கும் - கவிப்பேரரசின் வருகைக்கும் அர்த்தம் கிடைத்துவிட்டதா ஆதி..?

நட்புடன்-மஸாகி
03092009

ஆதி
03-09-2009, 01:10 PM
கிடைத்துவிட்டது மஸாகி.. விளக்கத்திற்கு நன்றிகள் பல.. :)