PDA

View Full Version : யார்?

தாமரை
03-09-2009, 09:03 AM
முல்லைக்கு கொடுத்த தேர்
இழுத்து வந்தது
யார்?
:eek::eek::eek:

ஆதி
03-09-2009, 09:04 AM
கபிலராக இருக்குமோ அண்ணா :)

சிறுபிள்ளை
03-09-2009, 09:05 AM
குதிரைகள்தான், அங்கே பின்னூட்டம் இங்கே கவிதை யா???

தாமரை
03-09-2009, 09:08 AM
இல்லை.. ஓரறிவு உயிரின் வாட்டத்தை போக்க நினைத்தவன் ஏறி வந்த தேரை இழுத்து வந்தது ஐந்தறிவு குதிரையல்ல்வா?

அதோட துன்பம் கண்ணுக்குப் படவில்லையே அப்படின்னு ஒரு வருத்தம்...

அங்க பின்னூட்டம் போட்டா நாலு பதிவுக்கு அப்புறம் அந்தக் கேள்வி மறந்து போயிடுமே!

சிறுபிள்ளை
03-09-2009, 09:12 AM
இது ஒருதலைப்பட்ட வருத்தமே நண்பியே...

அப்படிப்பார்த்தால்... தேரை செய்ய பயன்பட்ட மரக்கட்டைகள் வெட்டப்பட்ட மரத்தைப்பற்றி நினைக்கவில்லையே?? அப்படின்னும் கேக்கலாம் இல்லையா??

ஒருவர் வாழ ஒரு பொருளை இழக்கலாம்.. ஆனால் ஒரு பொருள் அழிய மற்றொரு பொருள் காரணமாக இருக்கக்கூடாது.

தாமரை
03-09-2009, 09:23 AM
முதல் விஷயம்.. என்னோட புரோஃபைலைப் பார்க்கவும்... நான் ஆண். நண்பி இல்லை,, :D :D :D

இரண்டாம் விஷயம்.. மத்தவங்க எப்படியோ நான் என்ன செய்தேன்.. இந்தக் காட்சியைக் கற்பனை செய்தேன்...

ஒரு மன்னன் தேரில் வருகிறான்... ஒரு முல்லைக் கொடி வாடிக் கிடக்கிறது..

தேரோட்டியும் இல்லை...

மன்னனுக்கு இரக்கம் சுரக்க தேரில் இருந்து இறங்கி தேரை முல்லைக் கொடியின் அருகில் நிறுத்துகிறான்.. கொடியை தேரின் மீது பரவ விடுகிறான்,

இப்போ அடுத்து புறப்பட வேண்டும்.. குதிரையை தேரில் இருந்து அவிழ்க்கிறான்..

ஏற்கனவே இளகிய மனதிற்கு சட்டென மனதிற்கு உறைக்கிறது.. ஐயோ பாவம் குதிரை என...

குதிரையை அவிழ்த்து சுதந்திரமாக்கி விடுகிறான்,, தன் அரண்மனை நோக்கி நடக்கத் துவங்குகிறான்..

பாரி நடந்தே அரண்மனைக்கு வந்ததாகத் தான் கதை. ஏன் நடக்கணும்? குதிரை என்னாச்சு? என்ற கேள்விகளுக்கு இது பதிலளிக்கும்..

ஆதவா
03-09-2009, 10:01 AM
மன்னனைச் சொல்லி குற்றமில்லை... கவிஞனைத்தான் சொல்லணும்!!!

தாமரை
03-09-2009, 10:29 AM
என்னையா? இதென்ன வம்பு?

விட்டா பாரி தேரை விட்டு இறங்கி அவசரத்துக்கு ஒதுங்கிய போது புலவர் முல்லைக் கொடியால தேரை மறைச்சிட்டாரு.. இராஜா தேரைக் காணோம்னு போயிட்டாரு.. அப்புறம் புலவர் அந்தத் தேரை இராஜாவே கொடுத்ததா கவிதை எழுதிட்டாருன்னு சொல்லுவீங்க போல இருக்கே!

ஆதி
03-09-2009, 10:38 AM

:D :D :D :D :D :D

மன்மதன்
03-09-2009, 10:49 AM
விட்டா பாரி தேரை விட்டு இறங்கி அவசரத்துக்கு ஒதுங்கிய போது புலவர் முல்லைக் கொடியால தேரை மறைச்சிட்டாரு.. இராஜா தேரைக் காணோம்னு போயிட்டாரு.. அப்புறம் புலவர் அந்தத் தேரை இராஜாவே கொடுத்ததா கவிதை எழுதிட்டாருன்னு சொல்லுவீங்க போல இருக்கே!

ஆஹா......இதுதான் அதுவா..:D

ஆதவா
03-09-2009, 10:56 AM
என்னையா? இதென்ன வம்பு?

விட்டா பாரி தேரை விட்டு இறங்கி அவசரத்துக்கு ஒதுங்கிய போது புலவர் முல்லைக் கொடியால தேரை மறைச்சிட்டாரு.. இராஜா தேரைக் காணோம்னு போயிட்டாரு.. அப்புறம் புலவர் அந்தத் தேரை இராஜாவே கொடுத்ததா கவிதை எழுதிட்டாருன்னு சொல்லுவீங்க போல இருக்கே!

இருக்கலாம் இருக்கலாம் :D

தாமரை
03-09-2009, 11:16 AM
இருக்கலாம் இருக்கலாம் :D

இல்லைன்னு சொல்லலை.. இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது..

நன்றி : தசாவதாரம்

நாகரா
03-09-2009, 11:49 AM
முதல் விஷயம்.. என்னோட புரோஃபைலைப் பார்க்கவும்... நான் ஆண். நண்பி இல்லை,, :D :D :D

இரண்டாம் விஷயம்.. மத்தவங்க எப்படியோ நான் என்ன செய்தேன்.. இந்தக் காட்சியைக் கற்பனை செய்தேன்...

ஒரு மன்னன் தேரில் வருகிறான்... ஒரு முல்லைக் கொடி வாடிக் கிடக்கிறது..

தேரோட்டியும் இல்லை...

மன்னனுக்கு இரக்கம் சுரக்க தேரில் இருந்து இறங்கி தேரை முல்லைக் கொடியின் அருகில் நிறுத்துகிறான்.. கொடியை தேரின் மீது பரவ விடுகிறான்,

இப்போ அடுத்து புறப்பட வேண்டும்.. குதிரையை தேரில் இருந்து அவிழ்க்கிறான்..

ஏற்கனவே இளகிய மனதிற்கு சட்டென மனதிற்கு உறைக்கிறது.. ஐயோ பாவம் குதிரை என...

குதிரையை அவிழ்த்து சுதந்திரமாக்கி விடுகிறான்,, தன் அரண்மனை நோக்கி நடக்கத் துவங்குகிறான்..

பாரி நடந்தே அரண்மனைக்கு வந்ததாகத் தான் கதை. ஏன் நடக்கணும்? குதிரை என்னாச்சு? என்ற கேள்விகளுக்கு இது பதிலளிக்கும்..
குறுங்கவியும் அதற்கான இந்த விரிவான விளக்கமும் அருமை திரு. தாமரை

பாரிங்குத் தயவின்
இறக்கம்!
பாரிக்குள் அரசன்
அவிழ
தேர்விட்டுக் குதிரை
அவிழும்!
வீதியில் மனிதம்
நடக்கும்!
முல்லைக் காட்டில்
தேருந் தொலையும்!

மன்மதன்
03-09-2009, 12:16 PM
இல்லைன்னு சொல்லலை.. இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது..

நன்றி : தசாவதாரம்

இருந்துட்டுதான் போகட்டுமே..
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி பார்ட் -2 வாக...

தாமரை
03-09-2009, 12:22 PM
இருந்துட்டுதான் போகட்டுமே..
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி பார்ட் -2 வாக...

நீங்க புரிஞ்சிக்கலை மன்மதன்... ஆதவா சொன்னதில் ஒரு "க்" அழிச்சிருக்கேன் பாருங்க...

இருக்கலாம்.. இருக்கலாம்,

அதாவது இரண்டு அப்துல்கலாம் இருக்கலாம்...

அதாவது நான் இரண்டு அப்துல் கலாம் இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன்...

பாரியின் வாரிசு

வாரி

சிவா.ஜி
03-09-2009, 01:49 PM
மூணு வரியில ஒரு ஆண்டாண்டு கால பாடலையே அசைச்சுப்புட்டாரே இந்த தாமரை?

அதுசரிதான். ஓரறிவுக்குப் பரிந்தவர், பரிகளுக்குப் பரியாதவராய் இருந்திருப்பாரா? பாடல் எழுதிய கவிதான் பரியைப்பற்றி பாட மறந்தாரா?

த.ஜார்ஜ்
03-09-2009, 04:46 PM
எங்கோ, என்றோ படித்த ஒரு குறுங்கவிதை நினைவுக்கு வந்தது. தாமரை தன் கவிதைக்குச் சொன்ன விளக்கத்தை படிக்கையில்...
'யாரும் ஆசைப்பட கூடாதென்று
புத்தன் ஆசைப்பட்டான்'

அந்த இரண்டாவது விளக்கத்தில் உங்கள் நகைச்சுவையுணர்ச்சி
பீறிட்டெழுவதை... புரிஞ்சிகிட்டோம்

கீதம்
04-09-2009, 12:57 AM
எனக்கொரு சந்தேகம். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்துவிட்டு, குதிரைகளையும் அவிழ்த்துவிட்டால் என்ன நியாயம்? பச்சைக்கொடியை பரிகள் மேய்ந்துவிடாதா?

தாமரை
04-09-2009, 04:16 AM
மூணு வரியில ஒரு ஆண்டாண்டு கால பாடலையே அசைச்சுப்புட்டாரே இந்த தாமரை?

அதுசரிதான். ஓரறிவுக்குப் பரிந்தவர், பரிகளுக்குப் பரியாதவராய் இருந்திருப்பாரா? பாடல் எழுதிய கவிதான் பரியைப்பற்றி பாட மறந்தாரா?

அன்றைய வள்ளல்களுக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய இலவச வள்ளல்களுக்கு நம்ம பாடல் கண்டிப்பா பொருந்தும். இல்லையா சிவா.ஜி?

தாமரை
04-09-2009, 04:17 AM
எனக்கொரு சந்தேகம். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்துவிட்டு, குதிரைகளையும் அவிழ்த்துவிட்டால் என்ன நியாயம்? பச்சைக்கொடியை பரிகள் மேய்ந்துவிடாதா?

பழகிய குதிரை தேரை மேயுமா என்ன? அது என்ன மனுஷனா?
:D:D:D

சிவா.ஜி
04-09-2009, 05:03 AM
அன்றைய வள்ளல்களுக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய இலவச வள்ளல்களுக்கு நம்ம பாடல் கண்டிப்பா பொருந்தும். இல்லையா சிவா.ஜி?

உண்மை...உண்மை...அச்சாகப் பொருந்தும்.

கா.ரமேஷ்
04-09-2009, 06:25 AM
அன்று மட்டுமல்ல இன்றும் அதே வழியைத்தான் கடைபிடிக்கிறார்கள் என தோன்றுகிறது. வழங்கும் கொடைகள்,இலவசங்கள் நிறைய பேரை சோம்பேறிகளாக மாற்றியிருக்கிறது அல்லது ஏமாற்றுவாதிகளாக மாற* கற்றுக்கொடுத்திருக்கிறது....

ஓவியன்
19-09-2009, 05:24 AM
அண்ணா நீங்க சொன்னது போலவே இருந்திருந்தால் நல்லது, ஆனால் முன்னைய நாட்களில் தேரோட்டவென தனியேயும், குதிரையேற்றம் செய்யவென தனியேயும் குதிரைகளை ஆரம்பத்திலிருந்தே வளர்த்து வந்திருப்பார்கள். தேரிழுக்கும் குதிரைகள் முரட்டுத் தன்மை கொண்டவையாக இலகுவில் கட்டுப் படுத்த முடியாதனவையாக இருந்திருந்தால் அதனைக் குதிரையேற்றத்துக்குப் பயன்படுத்தியிருக்க முடியாதே - அதனாலும் பாரி நடந்து வந்திருக்கலாம். :rolleyes:

aren
10-10-2009, 10:02 AM
இரு வரியில் ஒரு குறுங்கவிதையை எழுதிவிட்டு அதற்கு இத்தனை பெரிய விளங்கங்களா. தாமரை உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

பாரி இப்படியும் செய்திருப்பாரோ என்று என்னை நினைக்கவைத்துவிட்டீர்கள்.