PDA

View Full Version : மூன்று வெண்பாக்கள்!

தமிழநம்பி
03-09-2009, 04:15 AM
மூன்று வெண்பாக்கள்!

'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டி பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்கின்றனர். கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :

1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நன்றாகச் செய்க நயந்து

என் பாடல் :

நாடு நனிநல்ல! நாடா தொதுக்கிடுக
கேடு விளைக்கின்ற கீழ்மைகளை! - தேடுபணி
பொன்றாப் புகழும் பொதுநலனும் நாடிமிக
நன்றாகச் செய்க நயந்து!

2. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நெஞ்சில் எரியும் நெருப்பு

என் பாடல் :

தன்னல வாழ்வே தமதாக்கித் தம்குடும்ப
இன்னலம் தன்னையே எண்ணிடுவார்! - என்றென்றும்
வஞ்சஞ் செயவஞ்சார் வாழ்வை நினைக்கையில்
நெஞ்சில் எரியும் நெருப்பு.

3. கொடுக்கப்பட்ட ஈற்றடி : என்றும் திருநாள் எனக்கு

என் பாடல் :

வீதிதொறும் மாழ்கமது! வேகவுணா! ஊதுபுகை!
ஊதியமும் கிம்பளமும் உண்டய்யா! - ஏதிங்கே
ஒன்றிவரா மேலாள்! ஒருக்காலும் சிக்கலிலை!
என்றும் திருநாள் எனக்கு!

ஆதவா
03-09-2009, 05:00 AM
மூன்று வெண்பாக்களும் பிரமாதமாக இருக்கிறது.. குறிப்பாக மூன்றாம் வெண்பா, ஒரு அட்வைஸாக இல்லாமல் பிரமாதமாக இருக்கிறது....

தமிழ் கொஞ்சும் உங்களது பல திரிகளைக் கவனித்து வருகிறேன்!! தொடர்க

முதல் வெண்பாவில் "கீழ்மைகளை" என்பது தளைதட்டும் சொற்பிரயோகம் ஆகும்.

இளசு
03-09-2009, 07:01 AM
வாழ்த்துகள் தமிழநம்பி..

ஆதவன் சொன்னதுபோல் தமிழ்கமழும் பதிவுகள் தந்து கவர்கிறீர்கள்.

மாழ்க-மது - சொற்பிரித்து பொருளறிய இயலவில்லை எனக்கு. உதவுங்கள். நன்றி.

சிவா.ஜி
03-09-2009, 07:41 AM
தமிழின் சுவையுணர நீங்கள் தரும் வெண்பாக்கள் அனைத்தும் நன்பாக்கள்.

வாழ்த்துகள் தமிழ்நம்பி.

aren
03-09-2009, 07:42 AM
முதலில் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்களெல்லாம் அதிகம் படித்தவர்களில்லை, ஆகையால் இந்தப் பாடல்களில் பொருளையும் எங்களுக்குப் புரியும்வகையில் சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

ஆதி
03-09-2009, 08:01 AM
மூன்று வெண்பாவும் மூன்று சுவை..

ஆதவா சொன்னது போல் கீழ்மைகளை மட்டுமே தளை தட்டுகிறது.. கொஞ்சம் சரிபாருங்கள்..

பாராட்டுக்கள்..

தமிழநம்பி
03-09-2009, 02:58 PM
மூன்று வெண்பாக்களும் பிரமாதமாக இருக்கிறது.. குறிப்பாக மூன்றாம் வெண்பா, ஒரு அட்வைஸாக இல்லாமல் பிரமாதமாக இருக்கிறது....

தமிழ் கொஞ்சும் உங்களது பல திரிகளைக் கவனித்து வருகிறேன்!! தொடர்க

முதல் வெண்பாவில் "கீழ்மைகளை" என்பது தளைதட்டும் சொற்பிரயோகம் ஆகும்.

நன்றி நண்பரே!

மூன்றாவது வெண்பா விளையாட்டாகப் புனைபெயரில் எழுதியது.
அதற்கு உங்களிடம் முதல் மதிப்பெண் கிடைத்திருக்கிறது.

கீழ்மைகள் - தளை தட்டச் செய்யாது.

கீழ்மைகள் - கூவிளங்காய் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

சீரின் தொடக்கத்தில் நிற்கும் "ஐ" வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும். இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

பாட்டின் யாப்பு சரிபார்க்க முயற்சி மேற்கொண்டதற்கு மறுபடியும் நன்றி!
___________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
03-09-2009, 03:06 PM
வாழ்த்துகள் தமிழநம்பி..

ஆதவன் சொன்னதுபோல் தமிழ்கமழும் பதிவுகள் தந்து கவர்கிறீர்கள்.

மாழ்க-மது - சொற்பிரித்து பொருளறிய இயலவில்லை எனக்கு. உதவுங்கள். நன்றி.

நன்றி இளசு.

மாழ்குதல் என்றால் மயங்கியிருத்தல்.

வீதிதோறும் மயங்கிக்கிடக்க மது உள்ளது என்ற பொருளைத்தரவே-
"வீதிதொறும் மாழ்கமது"
_________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
03-09-2009, 03:07 PM
நன்றி சிவா!
____________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஆதவா
03-09-2009, 03:14 PM
நன்றி நண்பரே!

மூன்றாவது வெண்பா விளையாட்டாகப் புனைபெயரில் எழுதியது.
அதற்கு உங்களிடம் முதல் மதிப்பெண் கிடைத்திருக்கிறது.

கீழ்மைகள் - தளை தட்டச் செய்யாது.

கீழ்மைகள் - கூவிளங்காய் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

சீரின் தொடக்கத்தில் நிற்கும் "ஐ" வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும். இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

பாட்டின் யாப்பு சரிபார்க்க முயற்சி மேற்கொண்டதற்கு மறுபடியும் நன்றி!

கீழ்மைகளை"

மன்னிக்கவும்.. நீங்கள் சொல்வது எனக்குப் புதியதாக இருக்கிறது.

கீழ்+மை+களை - நேர்+நேர்+நிரை = தேமாங்கனி வருகிறது.

உங்கள் கூற்றுப்படி ஐ குறிலாக இருக்கும் பட்சத்தில் அதே தேமாங்கனிதானே வருகிறது??

"களை" என்றுமே நேர் ஆகாது...

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்!!

ஆதி
03-09-2009, 03:39 PM
கீழ்மைகள் தளை தட்டாது ஒப்பு கொள்கிறேன்

கீழ்மைகளை தளை தட்டதானே செய்யும்

தமிழநம்பி
03-09-2009, 03:52 PM
முதலில் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்களெல்லாம் அதிகம் படித்தவர்களில்லை, ஆகையால் இந்தப் பாடல்களில் பொருளையும் எங்களுக்குப் புரியும்வகையில் சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

சுருக்கமாகப் பொருளைக் கூறுகிறேன் :

1. மிக நல்லவற்றை விரும்புக; கேட்டைத் தரவல்ல கீழான செயல்களைத் தவிர்த்திடுக; அழியாத புகழையும் பொது நன்மைகளையும் விரும்பி, புகழைத்தரும் பணிகளைத் தேடிக்கண்டு, உங்கள் செயல்களை நன்றாகச் செய்திடுக.

2. தன்னலத்தையே தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, தம் குடும்பத்தாரின் இனிய நலன்தனையே எண்ணியிருக்கின்றவர்களும், அதற்கென்று என்றென்றும் கொடுஞ்செயல்களைச் செய்ய அஞ்சாதவர்களுமாக இருக்கின்றவர்களின் வாழ்க்கையை நினைக்கையில் நெஞ்சில் நெருப்பிட்டாற்போல் எரிச்சல் ஏற்படுகின்றது.(அல்லது நெஞ்சில் நெருப்பு எரிவதைப்போல் சீற்றம் உண்டாகிறது)

3.மயங்கியிருக்க ஒவ்வொரு வீதியிலும் மது விற்கிறது; விரைவு உணவு (fast food) கிடைக்கிறது; புகைத்துத் தள்ள சுருட்டு, வெணசுருட்டு வகைகள் கிடைக்கின்றன; செலவழிப்பதற்கு சம்பளத்துடன் கிம்பளமும் தடையின்றி கிடைக்கிறது; ஒத்துப் போகாத மேலதிகாரிகள் இல்லை; ஒருநாளும் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை;
எந்த நாளும் எனக்குத்திருநாளே!

ஈடுபாட்டிற்கு நன்றி நண்பரே!
_________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
03-09-2009, 03:56 PM
மூன்று வெண்பாவும் மூன்று சுவை..

ஆதவா சொன்னது போல் கீழ்மைகளை மட்டுமே தளை தட்டுகிறது.. கொஞ்சம் சரிபாருங்கள்..

பாராட்டுக்கள்..

நன்றி ஆதி.

தளை சரியாக உள்ளமையை அவருக்கு எழுதிய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மரபு பாக்களில் கவனம் செலுத்துவோர் இருப்பது மகிழ்வளிக்கிறது.
________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
03-09-2009, 04:10 PM
கீழ்மைகளை"

மன்னிக்கவும்.. நீங்கள் சொல்வது எனக்குப் புதியதாக இருக்கிறது.

கீழ்+மை+களை - நேர்+நேர்+நிரை = தேமாங்கனி வருகிறது.

உங்கள் கூற்றுப்படி ஐ குறிலாக இருக்கும் பட்சத்தில் அதே தேமாங்கனிதானே வருகிறது??

"களை" என்றுமே நேர் ஆகாது...

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்!!

சொல்கிறேன்.

கீழ்மைகளை- கீழ்/மைக/ளை என்று அலகிட வேண்டும்.

கீழ் - நெடில் ஒற்றடுத்தது, எனவே நேர்.

மைக - இருகுறில், (ஏனென்றால் சீரின் இடையில் வரும் 'மை' குறிலாகும்) எனவே நிரை.

ளை - (சீரின் இறுதியில் வரும் ஐகார எழுத்து) குறில், எனவே நேர்.

இப்போது, நேர்நிரைநேர் - கூவிளங்காய்.

தமிழநம்பி
03-09-2009, 04:12 PM
கீழ்மைகள் தளை தட்டாது ஒப்பு கொள்கிறேன்

கீழ்மைகளை தளை தட்டதானே செய்யும்

விளக்கியுள்ளேன்.

பார்த்தீர்களானால் புரியும்.
________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஆதவா
03-09-2009, 05:21 PM
சொல்கிறேன்.

கீழ்மைகளை- கீழ்/மைக/ளை என்று அலகிட வேண்டும்.

கீழ் - நெடில் ஒற்றடுத்தது, எனவே நேர்.

மைக - இருகுறில், (ஏனென்றால் சீரின் இடையில் வரும் 'மை' குறிலாகும்) எனவே நிரை.

ளை - (சீரின் இறுதியில் வரும் ஐகார எழுத்து) குறில், எனவே நேர்.

இப்போது, நேர்நிரைநேர் - கூவிளங்காய்.

மிக்க நன்றி தமிழநம்பி...

ஐகார குறுக்கத்தை மறந்து போனது குறித்து வருத்தப்படுகிறேன்!!

தமிழநம்பி
04-09-2009, 06:00 PM
மறதி இயல்பே.

எனக்கும் இப்படிப்பட்ட பட்டறிவு உண்டு.

நன்றி ஆதவன்.
________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே!- பாவலரேறு பெருஞ்சித்திரனார்