PDA

View Full Version : எதார்த்த உலகம்



சுகந்தப்ரீதன்
02-09-2009, 11:32 AM
எல்லோரையும் போலத்தான்
எனக்குள்ளும்....
ஏதேதோ எண்ணங்கள்..!!

கண்ணுக்குள் தினந்தோறும்
திரண்டோடும்....
கணக்கற்ற கனவுகள்..!!

உண்மைநிலை உணராது
உதிக்கும்....
ஊமையான உணர்வுகள்..!!

கண்ணெதிரே காண்பது
கானல் நீரென்பதறியாது
களிக்கும்....
கற்பனையில் நினைவுகள்..!!

இப்படியே தொடர்ந்தன
எதிர்ப்பில்லா எதிர்பார்ப்பில்லா
என் இளந்தளிர் காலங்கள்...!!

சிட்டுப்போல சுற்றித்திரிந்த
என் சின்னஞ்சிறு பருவங்கள்
மெல்லமெல்ல சிக்கிக்கொண்டு
சிதைய தொடங்கின.....
காலத்தின் அகோரத்தில்..!!

காலத்தின் அலங்கோலத்தால்
அன்று காட்டுப்பறவையாய்
கவலையின்றி பறந்த நான்...

இன்று சிறுவன்கையில்
சிக்குண்ட சிறுதும்பியாய்
சிறைப்பட்டுப்போனேன் - இந்த
சின்னஞ்சிறு எதார்த்த உலகில்..!!

கா.ரமேஷ்
02-09-2009, 12:21 PM
பால்ய பருவம் எல்லோருக்கும் மிகுந்த சந்தோசத்தை தரும்... நாம் வளர்ந்ததை போலவே நமது எண்ணங்களும்,தேவைகளும் பயமும் தொற்றிகொண்டதனால்தான் இத்தனை பிரச்சனைகள்... குழந்தை மனம் கொண்டால் மற்றவை வெளிதெரியாது என நினைக்கிறேன்.... நல்லதொரு படைப்புக்கு வாழ்த்துக்கள் தோழரே...

நாகரா
02-09-2009, 12:51 PM
காலச் சிறையில் ஞானத் தவத்தால்
மாயைத் திரையைக் கிழி

ஞாலக் கைவிரி ஞானத் தும்பி
வானில் பறக்கும் பார்

எதார்த்த உலகின் மூலப் பதார்த்தம்
ஏகாக் கரமே அறி

கூண்டுக் கிளிநீ காட்டுப் பறவையாய்
மீண்டும் பறக்க முடியும்

கண்திறந்த உறக்கங் கலையவேக் கண்மூடி
உள்ளிறங்கும் விழிப்புத் தவம்

உண்மைநிலை உணர உன்மெய்யுள் ஆழ்ந்து
அன்பூதனை நுகர உயிர்ப்பூ

கால அகோரம் பாவ விகாரம்
யாவுங் கரைக்குஞ் ஞானம்

சிந்தனையைப் பல விதங்களில் உரசிய உமது நற்கவிக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சுகந்தப்ரீதன்

நேசம்
03-09-2009, 09:42 AM
யதார்த்ததை அழகாக பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை ப்ரிதன்.வாழ்க்கை உணரும் போது இப்படிதான் சிக்க வேண்டும் போலிருக்கு.பாரட்டுகள்

மன்மதன்
03-09-2009, 11:03 AM
உங்களுக்கு திருமண வயது வந்து விட்டதை நாசூக்காக சொல்றீங்க..

அழகிய கவிதை சுகு..

தாமரை
03-09-2009, 11:19 AM
உங்களுக்கு திருமண வயது வந்து விட்டதை நாசூக்காக சொல்றீங்க..

அழகிய கவிதை சுகு..

தப்பு... தப்பு... திருமணமாகி விட்டது என்பதை நாசூக்கா சொல்றார்..:icon_rollout:

சிவா.ஜி
03-09-2009, 11:58 AM
பொறுப்புகளும், கடமைகளும் கழுத்தை நெரிக்கும்போது பாவம் பறந்து திரிந்த பறவை என்ன செய்யும்...?

ஆனாலும் சுமக்கவேண்டிய சிலுவைகளே இவை. இன்பமாய் சுமக்கும் சூத்திரம் அறிந்தால்....இப்போதும் சந்தோஷமாய் பறக்கலாம்.

வாழ்த்துகள் சுபி.

பாரதி
05-09-2009, 12:29 PM
இதுதான் எதார்த்தமானது!
எளிய வரிகளில் வாழ்க்கை குறித்த உங்கள் பார்வைக்கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே.

அமரன்
05-09-2009, 06:00 PM
சின்னவயதில் பள்ளிப்பை வண்ணப்பூச்சியின் சிறகுகள்..
இந்தவயதில் பொறுப்புகள் முறிந்த சிறகுகள்....???!!

பறவைகளுக்கும் இயந்திரப் பறவைகளுக்கும் இடையிலான தூரம்தான் இழந்ததாகக் கருதுபவை. பெற்றதாகக் கருதுபவை.

தளும்பும் எதார்த்ததுக்குப் பாராட்டுக*ள் சுகந்தா.

மஞ்சுபாஷிணி
05-09-2009, 07:16 PM
எதார்த்த உலகிற்கு ஏற்ற எதார்த்த கவிதை.. மிக அழகு.. நன்றி சுகந்தப்ரீதன்...

கலைவேந்தன்
05-09-2009, 09:29 PM
வானம்பாடியாய் வெறும்பாடியுடன் சுற்றிவரும் காலத்தின் சுகமே தனி..

காலவேடனின் கழுகுக்கண்களில் பட்டு அடிபட்டு சுருண்டு வீழ்ந்து துடிக்கும் முதிர்ந்த வயது ...... ஹூம் என்னத்தை சொல்ல..?

அருமையான பசுமை நிறைந்த வரிகள்.... வாழ்த்துகள் சுப்ரீ....!