PDA

View Full Version : வானதி கவிதைகள் - 2



வானதிதேவி
01-09-2009, 01:03 PM
ஒரு நாள் மாலை
உன்னருகில் அமா்ந்து
உன்னை பார்த்துக்
ஒரு கவிதை சொல்லேன் என்றேன்
மெதுவாய் இமை முடினாய்
ஒரு நொடியில்
உலகமே இருளாகிப் போனதொரு
பிரம்மை எனக்கு
அந்தொ! இமை திறந்தாய்
ஈராயிரம் கவிதைகள் உன்னில்
அன்பே
உயிர் வாழ இவை போதும்...

சிவா.ஜி
01-09-2009, 01:13 PM
வானதி சகோதரி, உங்கள் கவிதைகளை தனித்திரிகளாக பதிவிடுங்கள். பார்வையிட வசதியாக இருக்கும்.

அதே போல கவிதையை கவிதை வடிவில் தந்தால் வாசிக்க இனிமையாக இருக்கும்.

நன்றி.

ஆதி
01-09-2009, 01:16 PM
நன்று வானதி.. வாழ்த்துக்கள்..

கவிதை வடிவத்திற்கு மாற்றி இருக்கிறேன்..

உங்களின் இரு கவிதைகளும் பெண் பாடுவது போல் இருந்தாலும் ஆண் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் போலே அமைந்துள்ளது..

பாரதி
05-09-2009, 02:22 PM
விழியீர்ப்புவிசை என்று கவிஞர்கள் உவமை கூறுவதில் தவறில்லைதான் போலும். ஈராயிரம் கவிதைகளும் இமைகளை அல்ல, இதயங்களை ஈரமாக்கட்டும்.

தொடருங்கள் நண்பரே.

அமரன்
25-09-2009, 08:04 AM
என் இதயச் சூரியன்
என்னில் வரைந்த ஓவியங்களே
கண்ணில் காணும் கவிதைகள்.....!

வெயில் வேளையில் இதமான இளநீர்.

பாராட்டுக*ள் வானதி

மஞ்சுபாஷிணி
25-09-2009, 10:33 AM
அழகான கவிதைகள் வானதி... வாழ்த்துக்கள்...

கா.ரமேஷ்
26-09-2009, 10:01 AM
நல்ல கற்பனை வானதி... வாழ்த்துக்கள்

வானதிதேவி
26-09-2009, 02:34 PM
நன்றிகள் பல நண்பர்களே.