PDA

View Full Version : சின்ன கருப்பு



Ravee
31-08-2009, 07:34 PM
சின்ன கருப்பு




நடுநிசியை நெருங்கி கொண்டு இருந்த நேரம். அந்த இரண்டும் கெட்டான் கிராமத்தில் ஒதுக்கு புறமாக இருந்த மருத்துவமனையின் பின் பகுதியில் இருந்த என் அறைக்கு வந்து கொண்டு இருந்தேன்.பேய் , குறி , சாமியாடி காத்து , கருப்பு என்று இருந்து கொண்டு இருக்கும் அந்த கிராமத்தில் டாக்டர் தொழில் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. பேய் பிசாசுகள் மேல் நம்பிக்கை இல்லாவிட்டலும் அந்த கும்மிருட்டும் மங்கலான முகப்பு விளக்கும் வேப்பமரமும் சுழட்டி அடித்த ஊதல் காற்றும் முதுகு தண்டை சிலிர்க்க வைத்தது.

அப்போது, சற்றும் எதிர் பாராமல் மரத்தின் பின் நின்றிருந்த அந்த உருவம் என் மேல் ஊளை இட்டவாறு பாய்ந்து வந்து கட்டியது அதன் கைகள் என் தோளில் விழுந்து என் இதயத்தை கடந்து வெளி வந்தது. உறைபனி மொத்தமும் என் மேல் கொட்டியதை போல் மேனி சில்லிட்டு போனது. வாய் பேச வரவில்லை. பேய் என்றால் இதுதானா. தடுமாறிய நான் தவறி விழுந்தேன் .

அந்த உருவம் ஒருகணம் என்னை பார்த்து தென்புறம் காட்டி ஓலம் இட்டவாறு ஓடியது . என் கூக்குரல் கேட்ட அக்கம்பக்கம் எல்லாம் வந்தனர். அப்போதுதான் எனக்கு புரிந்தது வந்தவள் சின்ன கருப்பு .

என் மருத்துவமனையில் கூட்டி பெருக்கி வேலை பார்க்கும் ஊமை , சற்று மனநலம் குன்றிப்போனவள் ,ஒன்றும் புரிய வில்லை கருப்பு, கருப்பு என கத்திக்கொண்டே உருவம் போன திசையில் ஓடினேன் . ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் என்னுடன் ஓடி வந்தனர் தோப்புக்கரை தாண்டி அந்த ஓலம் கேட்டது .அதை மட்டுமே குறியாய் கொண்டு ஓடிக்கொண்டு இருந்தேன்.ஆத்துக்கரை ஓரம் வந்த போது ஓலம் நின்று போனது . கூட்டம் முழுவதும் புதர்களை அலசினர் . ஒன்றும் தென்படவில்லை .நான் மட்டும் கருப்பு கருப்பு என்று குளறிக்கொண்டு இருந்தேன் அவள் கண்கள் மட்டும் எனக்கெதிரே குத்திட்டு நின்றது . என் கைகள் என்னை அறியாமல் ஆத்து மணலை அள்ளி விசிக்கொண்டு இருந்தது .

அப்போது ..... என கைகளில் ஒரு சேலை தலைப்பு .கூட்டம் முழுதும் என்னை விலக்கினார். மணலை தோண்டிப் பார்த்தால் கருப்பு பிணமாக.

காது செவிடாகும் வண்ணம் எனக்கு அந்த ஊமை பெண்ணின் ஓலம் மீண்டும் கேட்டது. தள்ளுங்க தள்ளுங்க என்று கருப்புவின் நாடி பார்த்தேன் . எங்கோ தொலை தூரத்தில் அது துடித்தது .நம்பிக்கை வர அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம். அவள் வாயில் ரத்தம் கசிந்து இருந்ந்தது. அவளுக்கு விஷம் கொடுத்து இருந்தனர் படு பாவிகள் . 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவள் நாடி சீர் ஆனது.

அக்கா அக்கா உன் வாழ்க்கையை கெடுத்து எனக்கு ஒரு வாழ்க்கைவேனக்கா என்று அலறியவாறு வந்த கருப்புவின் தங்கை சொல்லிதான் தெரியும் அவள் திருமணம் நடக்க தடையாய் கருப்பு இருப்பதாக சொல்லி தந்தையும் மாமனும் சேர்ந்து விஷம் வைத்த சேதி.

நான்கு மாதத்திற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது அரசாங்கம். கருப்புவின் அம்மா என் வாசல் வந்து மண்வாரி தூத்தி விட்டு போனாள். உள்ளே சென்றேன் கருப்பு அமைதியாய் அறையை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

இறந்த பிறகும் கூட என் மேல் நம்பிக்கை வைத்த அந்த பெண்ணை என்னால் கைவிட முடியவில்லை

ஓவியன்
01-09-2009, 04:55 AM
வாழ்க்கையின் எத்தனையோ விடயங்கள் நமக்கு இன்னுமும் புரிந்த பாடில்லை...
இறந்த பின்னும் நம்பிக்கை வைத்த கறுப்பு போலவே...!!

நம்பிக்கை தானே வாழ்க்கை,
தன் மீது நம்பிக்கை கொண்டவளையே,
வாழ்க்கையாக்கிய கதை நாயகன் நெஞ்சத்தைத் தொடுகிறார்...!!

சில விடயங்களைச் சொல்லியும்,
சில விடயங்களைச் சொல்லாமலும்
கதை சொல்லும் உங்கள் பாங்கு அருமை ரவி..!!

என் வாழ்துகளும் பாராட்டுகளும் ..!!

சிவா.ஜி
01-09-2009, 05:10 AM
பிணமான கருப்புக்கு நாடி இருந்தது, அது மீண்டும் வந்தது, பின் மறுப்டி இறந்தாளா, பின் மீண்டும் பெருக்கினாளா?

தெளிவில்லாத கதை குழப்புகிறது. ஆனாலும் கதையினூடே தென்படும் அந்த ஊமைப்பெண்ணின் தியாக மனம் அவளை உயர்த்திப் பிடிக்கிறது.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
01-09-2009, 05:19 AM
கதையின் ஆரம்ப வர்ணனைகள் அசத்தல். படிப்பவரை சிலநேரம் உலர வைக்கும் உறைய வைக்கும் நம்பிக்கை துளிர் விடும் கதை

Ravee
01-09-2009, 01:33 PM
சிவா அவர்களே மரணம் எனபது இயற்கையாய் நிகழ விட்டால் அவர்கள் உயிர் அவர்களை சேர்ந்தவர்களை சுற்றி வரும் எனபது ஒரு நம்பிக்கை. இதை போன்று பலபேர் இறந்து விட்டார்கள் என்று சொன்ன பின் உயிருடன் எழுந்ததாக சில நிகழ்வுகள் சொல்வதுண்டு . இயேசு கூட இதே போலதான் 2 நாட்கள் கழித்து உயிர் பெற்றார் என்ற கருத்தும் உண்டு.
இறந்த பின் தன் உதவி தேடி வந்து உயிர் பெற்ற அபலைக்கு டாக்டர் அடைக்கலம் கொடுத்துள்ளார் என்றே முடித்திருக்கிறேன்.

சிவா.ஜி
01-09-2009, 01:42 PM
விளக்கத்துக்கு மிக்க நன்றி ரவீ. உங்கள் விளக்கத்துக்குப் பிறகு மீண்டும் வாசித்துப் பார்த்தால் விளங்குகிறது.

Ravee
02-09-2009, 12:29 AM
நண்பர்களே , அடுத்து வரும் படைப்புக்களை இன்னும் தெளிவு ஆக கொடுக்க முயற்சிக்கிறேன்

கா.ரமேஷ்
02-09-2009, 11:55 AM
நம்பிக்கை யை பறை சாற்றுகிறது கதை களம்.... வாழ்த்துக்கள்