PDA

View Full Version : மேலாண்மையில் தமிழ்!தமிழநம்பி
31-08-2009, 02:19 AM
மேலாண்மையில் தமிழ்!

விழுப்புரம் ‘மருதம்’விழாப் பாட்டரங்கில் கலந்துகொண்டு பாடிய அறுசீர்மண்டிலப் பதிகம்

பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்

பெரும்பா வாண!

அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!

அன்பு நண்பீர்!

இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!

இளமை யோரே!

தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்

தெளிந்த அன்பால்!விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!

விளக்க மாக

செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்

சிறப்பு மிக்க

எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற

இவ்வி ழாவின்

கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்

கிளத்த வந்தேன்!மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்

மேலி ருக்க

ஏலாத மொழியிங்கு எமையாள ஏற்றமிகு

எம்த மிழ்த்தாய்க்(கு)

ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்

அதையு ணர்ந்தால்

மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை

மிகவி ளங்கும்!வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்

வடிவே லுக்கும்

பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்

பட்ட ணத்தில்

உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்

உரைசெய் கின்றார்!

கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்

கலங்கி நிற்பார்!சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை

சிறுகு டிற்கு

கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!

கூறும் செய்தி

கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!

காணீர் ஈதே

உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்

உணர்வாள் அன்றோ?ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்

ஆழத் தூங்கும்!

மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத

மயக்க மூட்டும்

வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை

விடுப்ப தெல்லாம்

ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்

இதுவா ஞாயம்?அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்

அவற்றை மெய்யாய்

அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்

அதனால் மக்கள்

அரசாளும் முறைபுரிந்து அதன்நிறைகள் குறைகளையும்

அறியக் கூடும்!

அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற

ஆகும் யார்க்கும்!அதிகாரம் மக்களளித்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்

அச்சம் இன்றி

அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே

அறுத்துச் சொல்வீர்!

மதியாதார் ஒதுக்கிதமிழ் மக்களுக்கு விளங்குவகை

மாண்பில் ஆள்வீர்!

புதியமொழி குழப்பமற பொருத்தமுற மக்களுக்குப்

புரியும் அன்றோ?அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்

அவர்கை யொப்பம்

பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்

புரியும் வண்ணம்

சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்

சட்ட திட்டம்

புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்

பொல்லாப் பில்லை!

அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே

அளிக்க வேண்டும்!

மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்

மன்ற வேண்டும்!

நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி

நாளும் வேண்டும்!

வலிவோடு இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்

வாழ்வும் ஓங்கும்!

--------------------------------

நாகரா
31-08-2009, 03:05 PM
ஆட்சிமொழித் தாய்த்தமிழாய்
ஆக்கவழி செய்வோமென
நீர் பாடிய பதிகம் நம் நெஞ்சில்
வேரோடிப் பதிய நமக்கு ஏற்றம்!

உம் அறுசீர் மண்டிலப் பதிகம்
எம் அயல்மொழி மோகம் அறுக்க உதவும்!

வாழ்த்துக்களும் நன்றியும் திரு. தமிழநம்பி

இளசு
01-09-2009, 06:37 AM
பாராட்டுகள் தமிழநம்பி...

நீதிமன்றங்களில் தமிழ் - விரைவில் வரும்..

மற்றவையும் நிகழட்டும்.

வடிவேலு,பச்சையப்பன், சின்னத்தாயி - இவர்களும்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

நல்லவை பெருகட்டும். வாழ்த்துகள்!

மஞ்சுபாஷிணி
01-09-2009, 06:39 AM
படிக்கவே சந்தோஷமா இருக்கு.. நன்றி தமிழ்நம்பி...

சிவா.ஜி
01-09-2009, 05:09 PM
வெறும் பேச்சளவிலும், ஏட்டளவிலும் இல்லாது, அரசு எடுக்கும் முயற்சியால் மட்டுமல்லாது, அனைவரது ஈடுபாட்டாலும் எம் தமிழ் எங்கும் கோலோச்ச வேண்டும்.

தங்கள் அருசீர் மண்டலப் பதிகம் பகர்ந்ததைப் போல பாரெங்கும் பட்டொளி வீச வேண்டும். வாழ்த்துகள் தமிழ்நம்பி.

தமிழநம்பி
01-09-2009, 05:37 PM
நன்றி நாகரா!
______________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
01-09-2009, 05:38 PM
பாராட்டுகள் தமிழநம்பி...

நீதிமன்றங்களில் தமிழ் - விரைவில் வரும்..

மற்றவையும் நிகழட்டும்.

வடிவேலு,பச்சையப்பன், சின்னத்தாயி - இவர்களும்
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

நல்லவை பெருகட்டும். வாழ்த்துகள்!

நன்றி இளசு.
________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
01-09-2009, 05:41 PM
படிக்கவே சந்தோஷமா இருக்கு.. நன்றி தமிழ்நம்பி...

அனபுப் பாராட்டுக்கு நன்றி!
_______________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
01-09-2009, 05:43 PM
வெறும் பேச்சளவிலும், ஏட்டளவிலும் இல்லாது, அரசு எடுக்கும் முயற்சியால் மட்டுமல்லாது, அனைவரது ஈடுபாட்டாலும் எம் தமிழ் எங்கும் கோலோச்ச வேண்டும்.

தங்கள் அருசீர் மண்டலப் பதிகம் பகர்ந்ததைப் போல பாரெங்கும் பட்டொளி வீச வேண்டும். வாழ்த்துகள் தமிழ்நம்பி.

நன்றி சிவா.
__________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாரதி
05-09-2009, 12:50 PM
அருமையான கவிதை நம்பி!
தமிழின் அவசியம் குறித்து, பாமரரின் தேவை குறித்து தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.
”எழுச்சிமிகு சுறவவிழா” - சற்று விளக்குங்களேன். நன்றி.

தலைப்பில் விழுப்புரம் வழுவியிருக்கிறது; மாற்றி விடுங்கள்.

அமரன்
05-09-2009, 05:49 PM
உள்ளூரில் தமிழ் தடையின்றிப் புழங்க
உள்ளூறுமே தமிழ் மோகம்.

படிக்க இனிக்குது தமிழைப் போலவே..

தமிழ்நாடு தாண்டினால் தமிழ் செல்லாக்காசு.

தமிழ்நாட்ட்டில்..?

சிந்திக்க வேண்டிய விசயம்.

சந்ததிகள் தமிழைக் கண்டு தந்திபோல் அஞ்சுவது ஒரு புறமிருக்க.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்.. இந்தியாவுக்கு இந்தி.. உலகுக்கு ஆங்கிலம் என இருப்பது எல்லாருக்கும் வசதியானது..

அதை விட முக்கியமானது எழுத வாசிக்கத் தெரிவது.

தமிழநம்பி
05-09-2009, 06:27 PM
அருமையான கவிதை நம்பி!
தமிழின் அவசியம் குறித்து, பாமரரின் தேவை குறித்து தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.
”எழுச்சிமிகு சுறவவிழா” - சற்று விளக்குங்களேன். நன்றி.

தலைப்பில் விழுப்புரம் வழுவியிருக்கிறது; மாற்றி விடுங்கள்.

பொங்கல் விழாவே சுறவவிழா!

தை - மாதத்தில் வானில் உடுக்கள் (விண்மீன்கள்) சுறாமீன் (சுறவம்) உருவந் தோன்றுகிற அமைப்பில் இருக்குமாம். அதனால் தை -மாதத்தைச் சுறவமாதம் என்றும் பொங்கல் விழா சுறவவிழா என்றும் குறிப்பிடப்படுகின்றன.

நன்றி பாரதி.
_________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
05-09-2009, 06:30 PM
கருத்துரைக்கு நன்றி பாரதி.
_____________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்