PDA

View Full Version : HANG OVER.



ரங்கராஜன்
30-08-2009, 06:04 PM
HANG OVER.

சமீபத்தில் இந்த படத்தை நான் பார்த்தேன், நம் நாட்டில் ஒரே கதைகளை புதுசாயம் போட்டு எடுத்துக் கொண்டு இருக்கும் இந்த வேலையில் மேலை நாடுகளில், புதுசு புதுசாக கதைகளை யோசித்து
உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சரி விடுங்க நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல, இந்த படம் ஆஹா ஓஹோ ரகம் கிடையாது. ஆனால் குடித்துவிட்டு தன்னிலை மறந்து இருக்கும் மூன்று நபர்களை
பற்றிய கதை. அந்த தன்னிலை மறந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது தான் கதை. மறுபடியும் மறுபடியும் நான் படத்தை பற்றியே போறேன் இல்ல, சரி இனிமேல் போகமாட்டேன். விஷயத்திற்கு வருகிறேன்.

என்னுடைய வேண்டப்பட்ட எதிரி ஒருவனின் கல்யாணத்திற்கு போகவேண்டிய கட்டாயம், காரணம் எதிரியே போன் செய்து என்னை அழைத்தான். அதனால் போனேன், ஏற்கனவே ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம் போய்ட்டு வந்தேன், அதனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருக்கட்டுமே என்று சுற்றத்தாரை நான் கவனிக்க வில்லை, என்னை கவனித்துக் கொள்ள முடிவு செய்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக தண்ணி அடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இதை எத்தனைப் பேர் நம்புவீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் உண்மை அதான். இதற்கு முன் எத்தனை முறை இந்த வாய்ப்பு வந்தும் நான் அதை உபயோகப்படுத்திக் கொண்டது கிடையாது. அதற்கு நான் சொல்லும் காரணங்கள் நிறைய மூடுக்கு ஏற்றார் போல.....

எங்க அப்பா தண்ணி அடிப்பார், அதனால் அந்த வாடை பிடிக்காது. (எங்க அப்பா தம்மு கூட தான் அடிப்பார், ...........)

என்னுடைய சொந்த காசில் தான் நான் தண்ணி அடிப்பேன்.

இந்த கருமத்தை எப்படி தான் குடிக்கிறீங்களோ.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது (என் நண்பன் ஒருவன், அப்ப புலியை ஒரு குவாட்டராவது அடிக்க சொல்லு என்பான்.)

இப்படி நிறைய சினிமா வசனங்களை நான் பேசி இருக்கேன், பல விதமான மனநிலைகளிலும், வயதுக்கு மீறி கஷ்டத்தை அனுபவித்த போது எனக்கு இந்த பழக்கம் வந்தது இல்லை. ஆனான் இப்போ எனக்கு தண்ணி அடிக்கனும் போல இருந்தது, என்னிடம் எதுக்காக என்ற வேலிட் ரிசன் கூட இல்லை, மனசும் சந்தோஷமாக தான் இருக்கு, சொல்லுபடியாக எந்த கஷ்டமும் இல்லை, சோகமும் இல்லை. ஆனால் அடிக்க வேண்டும் என்பது போல இருந்தது அதற்கான காரணம் இந்த HANG OVER படம் தான் காரணம், அதில் தன்னிலை மறந்து அவர்கள் செய்யும் செயல்கள், அதன் பின் அவைகளை மறந்து அவர்கள் படும் அவஸ்தைகள் காமெடியாக சொல்லி இருப்பார்கள். இந்த படம்
பார்த்ததில் இருந்து, அது எப்படி நாம் தன்னிலை மறப்போம், அப்ப நான் எப்படி நடந்துக் கொள்வேன் என்று தெரிந்துக் கொள்ளும் ஒரு ஆசை வந்தது, அதனால் சீக்கிரம் சீக்கிரமாக இரவு உணவை முடித்துக் கொண்டு, ரூமில் சில அனுபவம் உள்ள நண்பர்களுடன் ஆஜர் ஆனேன்.

என்னை சுற்றி பத்து நபர்கள், அதில் 5 பேர் குடிப்பதில் Ph.D வாங்கியவர்கள், 2 பேர் PG க்கு அப்ளை செய்து இருப்பவர்கள் (பீரில் இருந்து, ஹாட்டுக்கு மாறப்போறவங்க), ஒருத்தன் ஹரியர்ஸ் வாங்கி படிப்பை ரொம்ப நாள் கழித்து தொடங்குகிறவன்( குடியை விட்டு ரொம்ப நாள் கழித்து எங்களுடன் இப்போ அடிக்க போறான்.), 1 ருத்தன் வேறு ஆடியன்ஸ், மீதி நான் இப்போ தான் உள்ளே போக அப்ளிகேஷனுடன் வாசலில் இருக்கிறேன்.

அனுபவஸ்தர்கள் பல விதமான அட்வைஸ் சொன்னார்கள், குடிப்பதற்கு முன் பல்லை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் சொல்லில் கடுப்பேத்தினார்கள். எனக்கா கை பரபரவென்று இருந்தது, எனக்கு முன் பாட்டிலை வைத்து விட்டு, இப்படி அட்வைஸ் செய்தார்கள். என் காதில் எதுவுமே விழவில்லை, எனக்கே அசிங்கமா கூட இருந்தது என்னடா இது இப்படி ஏன் அலைகிறோன் என்று, எதோ ஒருவிதமான புது அனுபவம் கிடைக்கும் என்ற ஆசையில் தான் அப்படி. பாட்டிலை திறந்தார்கள் ஊற்றினார்கள், பெப்ஸி ஊற்றினான், தொட்டுக்க சிப்ஸ், சிக்கன், மட்டன், பீப் இவை எதுவுமே இல்லாமல் வேறும் ஊறுகாயும், வாழைப்பழமும்?????, இதை பார்த்தவுடன் எனக்கு கடுப்பாகி விட்டது, ஏண்டா வாழைப்பழத்தை யாராவது தொட்டுப்பாங்களா??. அந்த ஆடியன்ஸ் பையன் ஒருத்தனை போய் வாங்கின வரச்சொன்னதன் விளைவு தான் இந்த வாழைப்பழமும் ஊறுகாயும், காரணம் அவன் ஐயர் வீட்டு பையனாம்.( பூவும், ஊதிவத்தியும் வங்கிக் கொண்டு வராமல் விட்டானே.)

நாசமா போச்சு என்று சொல்லிக் கொண்டே, கிளாஸை எடுத்து கடவுளை வேண்டிக் கொண்டு குடிக்கப்போனவனை தடுத்தான் என் நண்பன்,

“டேய் இரு டா, இருடா, சீயர்ஸ் சொல்லனும்டா, சொல்லாம குடித்தால் வாந்தி வந்துவிடும்”

“டேய் அப்படி எல்லாம் இல்லை சும்மா சொல்லாதே”

“டேய் இதுக்குனு சில ரூல்ஸ் இருக்குடா, படிச்ச பசங்கன்னா தெரியும் உனக்கு எங்க தெரியப்போவுது”

“டேய் மூடு, சரி சொல்லு”

“ON BEHAVE OF OUR LOVELY FRIENDS MARRIAGE, WE ALL GOING TO CELE......."

“ALL INDIANS ARE MY BROTHERS AND SISTERS, நிராடு கடலுடத்த ............. டேய் என்னடா இது ஸ்கூல் பிரேயராடா நடக்குது, சீக்கிரம் சொல்லித்தொல டா சனியனே”

அனைவரும் சீயர்ஸ் என்று சொன்னார்கள், கிளாஸை எடுத்து வாயில் வைத்தேன், கொஞ்சம் விழுங்கினேன் கசப்பாக இருந்தது, கொஞ்சம் எரிஞ்சது.

“டேய் என்னடா கசக்குது, இனிக்காதா??”

“இது என்ன கருப்பு ஜூஸா என்ன இனிக்கிறதுக்கு”

“தொண்டை எரியுதுடா”

“கொஞ்சம் சண்டூபாம் கலந்து இருக்கோம் அதனால் எரியும் ................. மூடிக்குனு குடிடா, உயிரை எடுக்காதே”

முதல் ரவுண்டுக்கே சிப்ஸ் எல்லாம் காலி, எல்லாரும் சாப்பாட்டுக்கு பொறியல் எடுத்துக் கொள்வதை போல கை நிறைய கால் நிறைய எடுத்துக் கொண்டார்கள், 2 ரவுண்ட் 3 ரவுண்ட் என்று மொத்தம் 5 ரவுண்ட் போனது. 10 பேரில் 4 பேர் பிளாட்டு, அதில் முதல் முதலில் பிளாட் ஆனவன் எனக்கு ஆரம்பத்தில் தண்ணியை எப்படி அடிக்க வேண்டும் என்று கத்துக் கொடுத்தவன். மீதி இருந்த 7 பேரும் எதோ பேச ஆரம்பித்தோம், ஆனால் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை, அவர்கள் எல்லாரும் எதோ எதோ உளற எனக்கு அந்த மாதிரி உளற வரவில்லை, நான் தெளிவாக இருக்கேனா என்று அடிக்கடி என்னை நான் செக் செய்துக் கொண்டேன். எழுந்து நின்று பார்த்தேன் ஸ்டடியாக நின்னேன், வாய் எதாவது குளறுகிறதா? என்று டெஸ்டு செய்ய “யார் தெச்ச சட்டை இது எங்க தாத்தா தெச்ச சட்டை” “ஒரு கட்டை சுள்ளியில் முதல் சுள்ளி கோண சுள்ளி” போன்ற வாக்கியங்களை
சொல்லிப்பார்த்தேன். எல்லாம் அழகாக வந்தது (நியூஸ் ரூமில் காமிரா முன்னாடி தான் தமிழ் வரமாட்டுது).

ஐய்யய்யோ நமக்கு போதை ஏறவில்லையே என்று வருத்தமாக இருந்தேன், எனக்கு மட்டும் தான் ஏறவில்லையா இல்லை யாருக்கும் ஏறவில்லையா? எதிரில் இருந்த என் நண்பனை பார்த்து.

“டேய் மச்சான் நான் சொல்றதை சொல்லேன்” என்றேன், அவன் சிவந்த கண்களுடன் என்னை பார்த்து

“வாட் டெல் மீ மச்சி”

“யார் தெச்ச சட்டை இது எங்க தாத்தா தெச்ச சட்டை” இதை சொல்லு மச்சி”

“யாழ் தெஞ், தென் வாட் டா”

“கிழிஞ்சது, மச்சி நீ சொல்லுடா, அத”

“நீ ந்ன சொல்றன்னே என் காதில விழலடா” என்றான் இன்னொருவன்.

“மச்சி நீயாவது சொல்லேண்டா” என்று மற்றவனை பார்த்தேன், அவனுக்கு ஓவர் ஆகி வாழைமரத்தை அடியில் வெட்டினால் எப்படி சாயிமோ அப்படி வேரோ பொத்துனு கட்டிலில் சாய்ந்தான்.

“என்னடா இது இப்படி விழறான், விஸ்கியில் விஷம் எதாவது கலந்து கொடுத்திட்டீங்களாடா” என்று நான் கேட்டேன், எல்லாரும் சத்தமா சிரித்தார்கள்.

“மச்சான் இன்னும் மாறவே இல்லடா, அப்படியே தாண்டா இருக்கான், தமாஷா”

“டேய் நான் சீரியஸா பேசினு இருக்கேன், என்னை ஏண்டா சிரிப்பு போலீஸ் ஆக்குறீங்க” என்றேன், அதற்கும் சிரித்தார்கள். அவர்கள் தள்ளாடுவதை நான் பார்த்தேன், உடனே நான் போய் கண்ணாடியில் என்னை பார்த்தேன் நான் தள்ளாடுகிறேனா என்று, ஆனால் நான் ஸ்டடியாக நின்றுக் கொண்டு இருந்தேன், தள்ளாடவில்லை. முகம் மட்டும் பார்க்கும் அளவில் இருக்கும் கண்ணாடியில் அது தெரியவில்லை.

எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக மட்டையாக ஆரம்பித்தார்கள், நாங்கள் மூன்று பேர் மட்டும் இருந்தோம், இன்னும் கொஞ்சம் ரவுண்ட் போகலாம் என்று முடிவு செய்தோம், ஆனால் சைட் டிஸ் இல்லாமல் எப்படி அடிப்பது, வெளியே போய் வாங்கி வரலாம் என்று முடிவு செய்தோம். மணி 1 ஆகி இருந்தது, நானும் இன்னொரு நண்பனும் போவதாக முடிவு செய்தோம், மூன்றாவது நபர் வருவதாக இல்லை, வரும் நிலையிலும் இல்லை. போலீஸ் ரவுண்ட் வருவார்கள் என்று அவன் பயந்தது ரூமிலே இருந்தான். நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். நான் சரியாக நடக்கிறேனே என்று என் கால்களை பார்த்தேன், என் கால்கள் நான் சொல்லும் இடத்தில் நடந்தது, ஆனால் என் நண்பன், குடியரசு தினவிழாவில் மார்ச் பாஸ்டு போகும் ஒட்டகத்தை போல நடந்து வந்தான், எனக்கு மட்டும் ஏன் அப்படி ஆகவில்லை யோசித்தேன், வருத்தமாக இருந்தது. கீழே இறங்கினோம். இரவு அமைதியான இரவு இப்படி அமைதினான இரவை எத்தனை பேர் ரசித்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் நான் நிறைய ரசித்து இருக்கிறேன், நான் எழுதுவதும் எல்லாமே நள்ளிரவு நேரங்களில் தான். வெளியே வந்ததும் குளித்து விட்டு வந்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்குமே அதுபோல இருந்தது, என் நண்பன் எதோ ஒரு தமிழ் பாடலை ஆங்கிலத்தில் பாடிக் கொண்டு வந்தான், எல்லா கடையும் மூடி இருந்தது. திடீர் என்று என் நண்பன்

“டேய் மச்சி, நம்ம விக்கியை (ரூமில் இருக்கும் 3வது நண்பன்) செருப்பாலே அடிக்கனும் டா” என்றான்

“ஏண்டா”

“சனியன் போகும் போதே வாயை வச்சிது”

“கடை இருக்காதுன்னா”

“இல்லை போலீஸ்ல மாட்டுவோம்னு”

“இன்னும் மாட்டலையே”

“எதோ மாட்டப்போறோமே, எதிர்ல பாரு”

போலீஸ் ஜீப் வந்தது, ரவுண்ட்ஸ்க்கு வர ஜீப் அது, எங்களை பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்டார்கள்.

“எங்கடா போய்டு வரீங்க”

போதையில் இருக்கும் நண்பன் போலீஸை நோக்கி “போய்டுவாங்க போய்டுவாங்க”

நான் அவனை அதட்டி வாயை மூடுடா. “இல்ல சார் சும்மா ப்ரண்டு கல்யாணம் அதான், கொஞ்சமா”

போலீஸ் எங்களை மேலும் கீழுமாக பார்த்தான். உடனே என் நண்பன்

“சார் சும்மா மிரட்டாதீங்க, எங்க ஆளு ப்ரஸ்ல வேலை செய்றாரு”

“எந்த ப்ரஸ்” என்றா போலீஸ்.

“கல்யாண பத்திரிக்கை எல்லாம் அடிப்பாங்கல்ல அந்த ப்ரஸ், ஹா ஹா ஹா” என்று அவன் போதையில் சிரிக்க,

போலீஸ் அவனை முறைக்க, ஆஹா கண்டிப்பா இன்னைக்கு அடி இருக்கு என்று நினைத்தேன். என்னுடைய பாக்கெட்டில் இருக்கு ஐடி கார்டு எங்களை காப்பாற்றியது என்னுடைய கம்பெனியின் ஐடியை காட்டினேன், விட்டு விட்டார்கள், ஐம்பது ரூபாயுடன்.

மறுபடியும் மேலே வந்தோம் பெப்ஸி இல்லாமல் வெறும் கையோடு, தண்ணீரை ஊற்றிக் கொண்டு கொஞ்சம் ரவுண்டுகள் போனது மொத்தமாக 9 ரவுண்ட் ஆச்சு, எழுந்து நின்று பார்த்தேன், நான் ஆடவில்லை, மறுபடியும் “யார் தெச்ச சட்டை இது எங்க தாத்தா தெச்ச சட்டை” நாக்கு குளறவில்லை. எனக்கு எதோ பிராபளம் போதையே ஏற மாட்டுது என்று நினைத்து என் நண்பர்களிடம் கேட்டேன், பதில் சொல்ல யாருமே முழித்துக் கொண்டு இல்லை, எல்லாரும் பன்னி குட்டிகள் போல ஒருவர் மீது ஒரு படுத்துக் கொண்டு இருந்தார்கள்.

காலையில் சரியாக ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டு முகூர்த்தம் போய்டு வந்தேன், அவர்கள் அனைவரும் முகூர்த்ததிற்கு வரவில்லை எல்லாரும் மட்டையாக இருந்தார்கள், நான் வந்ததும் அந்த 10 பேரும் கேட்ட முதல் கேள்வி

“சத்தியமா சொல்லு, உனக்கு இதுதான் முதல் தடவையா” என்று கேட்டனர்.

ஹா ஹா ஆண்டவன் சத்தியமா எனக்கு இதுதான் முதல் தடவை என்றேன், செல்லாது செல்லாது என்று கூறிவிட்டு போய் விட்டார்கள்.

ஆமா HANG OVER ன்னா என்ன???????:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

HANG OVER பார்த்ததால் இந்த முயற்சி செய்தேன், இப்ப தான் கந்தசாமி படம் பார்த்தேன் அடுத்து போய் எதாவது பணக்காரனிடம் கொள்ளை அடிக்கனும்

Mano.G.
31-08-2009, 02:48 AM
ஏன் டாப்பா , அவன் அவன் இதை பார்த்து கெட்டுபோனேன் , அதை பார்த்து கெட்டுபோனேன்னு செஞ்ச தப்புக்கு காரணம் சொல்லுவானுங்க,

அதுக்காக "களவும் கற்று மற" கற்றதோட நிறுத்திக்கோடா,
இன்னும் எங் ஓவர் வரலயேன்னு தொடராத,

இது கதையா மட்டுமே இருக்கோனும்னு வேண்டிக்கிரேன்

மனோ.ஜி

கா.ரமேஷ்
31-08-2009, 05:25 AM
நல்ல வேளை அதோட நிறுத்திக்கிட்டீங்க.... இல்லைனா "TANK OVER" ஆயிருக்கும்...

இதோட விபரீதத்தைலாம் நிறுத்திகோங்க...

சுவைபட எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்...

நேசம்
31-08-2009, 06:44 AM
படித்து கொண்டு இருக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை.கேங்க் ஒவர் எப்போ வரும் பார்ப்பதற்காக தொடர வேண்டாம் என்று

மதி
31-08-2009, 12:49 PM
அட... என்ன பாஸ் இது..? அதான் பாத்தவுடனேயே தெரியுமே.. எதையும் தாங்கும் உடம்பு அது.. ஹிஹி...

ஆனாலும் ஹேங் ஓவர் படம் நல்ல டைம் பாஸ். வீட்டிலே சத்தமா பாத்து சிரிச்சுட்டு இருந்தேன் நடுராத்திரி. அடுத்த நாள் அப்பா டோஸ் விட்டார், பகல் நேரத்துல பாக்க மாட்டியான்னு.

எஞ்சாய் பண்ணு... மாமே..!

ரங்கராஜன்
31-08-2009, 03:13 PM
அன்பு மனோ அண்ணா, ரமேஷ், மற்றும் நேசம்

உங்கள் அன்பை கண்டு மகிழ்ந்தேன், இது சும்மா விளையாட்டுக்கு செய்தது, எனக்கு அதில் ஆர்வம் எல்லாம் இல்லை, இருந்தாலும் ஒரு வித சோதிக்கும் மனோபாவம் உடையவன் என்பதால் இப்படி செய்து விட்டேன். மனோ அண்ணா சொல்வது போல இது சும்மா ஒரு சாக்கு தான். இனிமேல் அப்படி செய்யமாட்டேன், இது மதி மேல் சத்தியம்.............

தாமரை
03-09-2009, 04:31 AM
தக்ஸ், பாருங்க நீங்க இந்தப் பதிவைப் போட்டாலும் போட்டீங்க, மஞ்சுபாஷிணி ஊறுகாய், இறால் இப்படி சைட் டிஷ்ஷா சமையல் குறிப்புல போட்டுத் தாக்கறாங்க...

ஆதவா
03-09-2009, 04:51 AM
அட... என்ன பாஸ் இது..? அதான் பாத்தவுடனேயே தெரியுமே.. எதையும் தாங்கும் உடம்பு அது.. ஹிஹி...

ஆனாலும் ஹேங் ஓவர் படம் நல்ல டைம் பாஸ். வீட்டிலே சத்தமா பாத்து சிரிச்சுட்டு இருந்தேன் நடுராத்திரி. அடுத்த நாள் அப்பா டோஸ் விட்டார், பகல் நேரத்துல பாக்க மாட்டியான்னு.

எஞ்சாய் பண்ணு... மாமே..!

நீங்க சொல்லியிருக்கலாமே... இது பகல்ல பார்க்கறாப்படியான படமில்லைன்னு!!

(நைட் ஓவரா தண்ணியடிக்காதீங்கன்னு சொன்னா கேட்கிறீங்களா?)

மன்மதன்
03-09-2009, 11:52 AM
‘வரிக்கு வரி’ சிரித்தேன்..

சரக்கு , சைட் டிஸ்ல ஆரம்பிச்சு, போலிஸ் வரைக்கும் ஒரே ரகளையா பண்ணியிருக்கீங்க.. இது மாதிரி காரைக்காலில் என் கல்லூரி நண்பனின் அண்ணன் திருமணத்திற்கு போயிருந்த எங்களுக்கு, இரவில் 2 ரூம் புக் பண்ணி பசங்களுக்கு கொடுத்தான்..அடுத்த நாள் திருமணத்திற்கு சென்று நண்பனின் அண்ணன் கையை பிடித்து ஆளாளுக்கு நல்லாவே வாழ்த்தினாங்க..அதில் ஒரு நண்பன் ‘ மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ்’னு சொல்லி சீரியஸா வாழ்த்தினான்...

அப்புறம், பாஸ், உங்களுக்கு 9 ரவுண்டு அடிச்சும் ஏறவில்லை என்று சொன்னீர்கள்.. சரி உங்களுக்கு வெறும் பெப்ஸியை கொடுத்து ஏமாத்தி இருப்பார்கள் என்று நினைத்தால்... ‘கசந்தது..எரிந்தது’ என்று வேறு சொல்லிட்டீங்க..

இதை இப்படியே விட்டுட கூடாது.. என்ன ஏதுன்னு பார்க்கனும்.. கொஞ்சம் பொறுங்க தக்ஸ்.. இந்த மாதம் 20 சென்னை வர்ரேன்.. டாக்டர்ஸ் பார்த்து என்ன ஏதுன்னு டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்..

’யார் தெச்ச சட்டை இது எங்க தாத்தா தெச்ச சட்டை’ இந்த வாக்கியம் வரக்கூடாது அவ்வளவுதானே...:D:rolleyes:

Mano.G.
03-09-2009, 02:05 PM
மன்மதன் 20ம் தேதி வந்து என்று டில்லி திரும்புரீங்க?
என்னா எனக்கும் சென்னைக்கு ஒரு ட்ரிப் இருக்கு
23ம் தேதியிலருந்து

மனோ.ஜி

மன்மதன்
04-09-2009, 07:29 AM
20-28 சென்னைல இருப்பேன்.. சந்திக்கலாம் அண்ணா..

arun
04-09-2009, 07:35 AM
தக்ஸ்

உண்மையில் நல்ல அழகான அனுபவம் அதனை தங்களுக்கே உரிய பாணியில் கொடுத்துள்ளீர்கள் மெல்லிய புன்னைகையுடன் படித்து கொண்டிருக்கிறேன் அது மட்டும் இல்லை நண்பர்களின் அலும்பல்களை அப்படியே ஜெராக்ஸ் பதிவு போல கொடுத்துள்ளீர்கள் கலக்கிட்டிங்க

விகடன்
29-12-2009, 04:10 AM
போற போது புறத்தால சொன்ன ஒன்று நடப்பது போல தோன்றினாலும் ஆபத்துத்தான். திரும்பி வைந்து அந்த நபரை போட்டுத்தாக்காது வீட்டீர்களே...
சிரித்து ரசித்து, ரசித்து சிரிச்சு படித்தேன்.

ஆமா... HANG OVER ன்னா என்னா? எனக்கும் அதற்கான விடை தெரியாதுதான். எதற்கும் நம்ம வீட்டுப் பார்க்கம் வாங்க. இருவரும் சேர்ந்து ஒருதடவை ஆராய்ச்சியில் இறங்கிப் பார்ப்போம் :D

aren
29-12-2009, 05:58 AM
இப்போ நிஜமாவே ஹாங் ஓவர் உங்களுக்கு இருக்குதுன்னு பட்சி சொல்கிறதே.