PDA

View Full Version : எதாவது மென்பொருள் இருக்கின்றதா ??



pathman
30-08-2009, 03:39 PM
நண்பர்களே நம் கைபேசியின் ஊடக சில இணையதளங்களுக்கு செல்லும் போது அங்கு தமிழில் இருக்கும் விடயங்கள் தெரிவதில்லை இதை மாற்ற எதாவது மென்பொருள் இருக்கின்றதா ??

என் கைபேசி வகை - சோனி எரிக்சன் K770i

praveen
31-08-2009, 05:16 AM
நண்பரே தமிழன் என்றொரு இனமுன்டு தனிமே அவருக்கென குனமுண்டு, அதாவது ஊரோடு ஒத்துப்போகதது, எல்லோரும் யுனிகோடில் தளம் அல்லது ஒரு குறிப்பிட்ட பாண்ட் வைத்து தளம் வைத்திருக்காமல் ஆளாளுக்கு ஒவ்வொரு எழுத்துருவில் தளம் வைத்திருப்பதால் தான் இந்த நிலைமை.

முதலில் குமுதம், தினமலர், ஆனந்தவிகடன் இப்படி படிப்படியாக வேறு பாண்ட் வைத்திருந்தவர்கள் யுனிகோடிற்கு மாறினார்கள். இன்னும் சிலர் மாறாமல் இருக்கிறார்கள். அந்த தளமே உங்களுக்கு தோன்றியிருக்கும். அந்த தள அட்மின், வெப்மாஸ்டருக்கு ஒரு மடல் இட்டு உங்கள் சிரமத்தை தெரிவியுங்கள். இப்படி பலர் பார்க்கமுடியவில்லை என்றால் தான் அவர்களும் எல்லோருக்கும் பொதுவான தளத்தை உருவாக்குவார்கள்.

குறிப்பிட்ட ஒரு தளம் என்றால் தளம் பெயர் சொல்லுங்கள், நான் மாற்று வழி சொல்கிறேன்.

pathman
01-09-2009, 02:10 PM
உங்கள் பதிலுக்கு எனது நன்றிகள் எனக்கு facebook பாவிப்பதற்கு தான் வேண்டும்...
ஏதேனும் மென்பொருள் உள்ளதா ?

leomohan
02-09-2009, 01:46 PM
newshunt.com தளத்திற்கு மென்பொருள் நிறுவினால் தமிழ் செய்தி தளங்களை காணலாம்.

இன்னொரு பதிவில் ஷீநிசி Opera Mini Browser பயன்படுத்தி எவ்வாறு தமிழ் தளத்தை காணலாம் என்பதை விளக்கியுள்ளார் நண்பரே.

பாரதி
02-09-2009, 02:02 PM
நண்பரே, இந்த சுட்டி உதவுமா என்று பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20729

praveen
02-09-2009, 02:09 PM
லியோமோகன் அவர்கள் உங்களுக்கு உதவுவதற்காக பதில் அளித்துள்ளார், ஆனால் அவர் சொன்னதில் முதல் நியூஸ்ஹண்டு என்ற தளம் அதில் லிஸ்ட் செய்திருப்பது தவிர மற்ற தளம் பார்க்க உதவாது, ஏனென்றால் அது தனியாக பிறதள செய்திகளை எடுத்து புள்ளிவடிவ முறையில் மாற்றி பதிந்து வைத்திருந்து தருவதால் கூடுதல் மென்பொருள் இல்லாமல் பார்க்க அனைத்து வகை மொபைல் போன்களிலும் புள்ளிவடிவத்தில் காண முடிகிறது. இதன் மூலம்(ஊடாக) சென்று நாம் வேறு தளம் காண முடியாது.

ஆனால் மினி ஒபேரா பிரவுசர் + ஒரு அட்வான்ஸ்டு செட்டிங்ஸ் உதவலாம். யுனிகோடு என்றமட்டிலே தான் இதுவும் சரியாக இருக்குமே அன்றி தனிப்பட்ட தமிழ் பாண்ட் என்றால் பாமினி, வள்ளுவன், இளங்கோ இப்படி பாண்ட் பயன்படுத்தியிருந்தால் எந்த பிரவுசரில் சென்றாலும் தெரியாது. அதற்கு பதில் அதிகம் நாம் காணவிரும்பும் மற்றும் அந்த தள பாண்ட் தேடி நம் செல்பேசியில்(விண்டோஸ் மொபைல் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை) பதிப்பதே சிறந்தது. ஆனால் இதனால் மொபைல் போனில் மற்ற எழுத்துக்கள் தெரியாமல் போகும் சிக்கலும் உள்ளது.

pathman
02-09-2009, 02:18 PM
எனக்கு தமிழ் மன்றத்தில் மிக பிடித்த விடயம் இதுதான் எதாவது தேவை என்று கேட்டால் நம் நண்பர்கள் உடனே உதவிடுவார்கள்.

நீங்கள் சொன்னபடியே செய்து பார்த்ததில் என்ன ஆர்ச்சரியம் என்ன கை பேசியில் தமிழ் வருகின்றது...

நண்பர்களான பிரவீன், லியோமோகன் மற்றும் பாரதிக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும்.