PDA

View Full Version : என் அன்பு மனைவிக்காக



Ravee
29-08-2009, 02:45 PM
என் அன்பு மனைவிக்காக.....


என் இணையே

நம் இருமனம் கலந்த பின்

ஒன்றானோம் வாழ்வில்

இந்த சூரியனின் வாழ்வில் உதயமும் நீயே

மாலையின் அஸ்தமனமும் நீயே

வெற்றி பெற்ற மனிதனின் வாழ்வில்

பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள்

உன்னை பின்னுக்கு தள்ள மனம் இல்லை

எனவே என் பக்கத்திலே வைத்தேன் உன்னை

வா வாழ்ந்து பார்ப்போம் வரும் காலம் முழுதும்

மஞ்சுபாஷிணி
29-08-2009, 02:52 PM
அன்பு மனைவிக்கான இந்த கவிதை மிக மிக அழகு ரவி... வாழ்த்துக்கள்

சிவா.ஜி
29-08-2009, 04:35 PM
வசன நடையில் ஒரு கவிதை. நல்லாருக்கு. வாழ்த்துகள் ரவீ.

வானதிதேவி
29-08-2009, 04:41 PM
அன்பு நண்பரின் கவிதை நயம் பாராட்டுக்குரியது.
பெண் இனத்தை பெருமிதம் கொள்ள வைக்கிறது தொடரட்டும் மேலும்...



anbu nanbarin kavithy nayam paratukuriyathu.pen inathy perumitham kolla vaikirathu thodaratum melum...

தூயவன்
29-08-2009, 05:06 PM
anbu nanbarin kavithy nayam paratukuriyathu.pen inathy perumitham kolla vaikirathu thodaratum melum...

தமிழ் தமிழ் தமிழ்

Ravee
29-08-2009, 05:09 PM
என் கல்லூரிக்காலங்களுடன் பல நல்ல நண்பர்களை இழந்ததாக வருத்தப்பட்டது உண்டு . அதை பொய்யாகிய தங்கை கவிதாவை வாழ்நாளில் மறக்க முடியாது. நன்றி கவிமா.
என் புதிய நட்புகளை வணங்குகிறேன்.

இன்பக்கவி
29-08-2009, 05:43 PM
அண்ணா,
நான் இங்கு தனியாக யார் அறிமுகமும் இல்லாமல் வந்தேன்..
இன்று சந்தோஷமாக இருக்கிறேன்...
நீங்களும் இங்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி...
நன்றி சொல்ல வேண்டாம்...உங்கள் சேவை தொடரட்டும்...

ஓவியன்
30-08-2009, 04:40 AM
இரு மனமிணைந்து
ஒரு மனமாகிய
தம்பதிகள் வாழ்க்கையை
வெல்ல, ஏது தடை...??

மனதார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் ரவீ, அண்ணிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவியுங்க..!!