PDA

View Full Version : மாமன் அடியும் அத்தை அடியும்!

தமிழநம்பி
29-08-2009, 05:56 AM
மாமன் அடியும் அத்தை அடியும்!

மக்களின் நுட்பமான மனவுணர்வுகளைப் பலவாறான கூறுகளில் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வெளிப்படுத்தும் வாய்மொழி இலக்கியங்களாக விளங்குவன நாட்டுப்புறப் பாடல்கள்.

இவை, பெரும்பான்மையும் கல்வி பயிலா மக்களாலேயே உருவாக்கப் படுகின்றன எனலாம். இப்பாடல்களில் காணப்படும் எதுகை மோனை எழிலும், உவமை முதலான அணிநயங்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுவனவாக இருக்கும்.

இப்பாடல்களில் காணப்படும் எள்ளல்களும், காதலுணர்வுகளும் அன்புருக்கங்களும், அவலச்சுவையும் எண்ணி எண்ணி மகிழத் தக்கனவாக இருப்பதைக்காணலாம்.

நாட்டுப்புறப் பாடல்களில், தாலாட்டுப் பாடல்கள் சிறப்பு மிக்கனவாக விளங்குகின்றன.

தால் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு நாக்கு என்று பொருள். நாக்கை ஆட்டிப் பாடுகின்ற பாடல்வகை, தாலாட்டு என்றழைக்கப்பட்டது.

ஆராரோ ஆரிரோ..., ராராராரா...., வாவாவாஓ..., போலும் ஒலி எழுப்பல்களின் போது நாக்கு இயங்கும் நிலைகள் தாலாட்டு என்னும் பெயர்ப் பொருத்தத்தைக் கூறுகின்றன.

தாலாட்டுப் பாடும் தாய், தன் நுட்பமான மனஉணர்வுகளை வெளிப்படுத்தும் உத்தி வியப்பளிப்பதாகவும் மகிழ்வுறுத்திச் சுவையூட்டுவதாகவும் உள்ளது.

இந்தப்பாடலைப்பாருங்கள்:

ஆராரோ ஆரிரரோ...
ஆரிரரோ ஆராரோ...
கண்ணே..
யாரடிச்சு நீயழுத...
அடிச்சாரைச் சொல்லியழு...
மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூச் செண்டாலே!
அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே!

கவனியுங்கள்!

தாயின் உடன்பிறப்பான மாமன் அடித்தால் மல்லிகைப்பூச் செண்டால் அடிப்பானாம்!

தந்தையின் உடன்பிறப்பான அத்தை அடித்தால் அரளிபூச் செண்டால் அடிப்பாளாம்!

அத் தாய், தன்னுடன் பிறந்தவன் - அவன்தான் குழந்தையின் மாமன் - உயர்வானவன் எனபதைக் கூறக் கையாளும் உத்தியைப் பாருங்கள்!

மல்லிகைப் பூ, மல்லிகைப் பூச் செண்டு - அரளிப் பூ, அரளிப்பூச் செண்டினும் உயர்ந்ததல்லவா?

இவ்வாறே, தாலாட்டிலும் பிற நாட்டுப்புறப் பாடல்களிலும் நுட்பமான உத்திகள் அமைந்துள்ளதையும் இசையுடன் நுண்ணிய உணர்வு வெளிப்பாடுகள் இருப்பதையும் அறிந்து மகிழலாம்!

ஓவியன்
29-08-2009, 06:07 AM
நாட்டுப் புறப் பாடல்களை, நாட்டுப் புற இலக்கியமென்றே கூறுவார்கள். தத்தம் தொழில் பண்பாடு போன்றவற்றுடன் கலந்து நிறைந்த பாடல்களென்பதனால் இந்தப் பெயர் கனகச்சிதம்.

தாலாட்டுப் பாடுவது தாயாக இருக்காது தந்தையாக இருந்திருந்தால் இந்த மல்லிகைப் பூச்செண்டும் அறளிப் பூச்செண்டும் இடம் மாறியிருக்கும் போல...

விளக்கப் பதிவுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும் தமிழநம்பி..!!

தமிழநம்பி
29-08-2009, 06:30 AM
நன்றி ஓவியன்.

______________________________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கா.ரமேஷ்
29-08-2009, 07:17 AM
////மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூச் செண்டாலே!
அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே!////

எவ்வளவு உள் அர்த்தங்கள்... மிக அருமை தோழரே... ஒவ்வொரு கிராமத்து வரிகளுமே அர்த்தமுடையவைதான் ஆழ்ந்து உணரும்போதுதான் எல்லாவற்றையும் புரிய முடிகின்றது... பகிர்தலுக்கு நன்றி தோழரே...

கீதம்
29-08-2009, 07:34 AM
பூச்செண்டு கொண்டு அடிப்பதிலும் வேறுபாடு காணும் தாயின் தாலாட்டு அசரவைக்கிறது. சுவையான தகவல்களுக்கு நன்றி.

கண்மணி
29-08-2009, 07:45 AM
அது சரி மல்லிப்பூ, அரளிப்பூவுக்கும் வித்தியாசம் இருக்கே..

மல்லிப் பூ மணக்கும் தான் ஆனால் அந்த வாச்னைக்கு பாம்பு வருமாம்

அரளிப்பூ மணக்காது ஆனா பூச்சிகளைக் கட்டுபடுத்துமாம்

பாவம் பாடின அம்மா.. இது தெரியாம பாடிப்புட்டாங்க...

:D :D :D

தமிழநம்பி
29-08-2009, 07:59 AM
நன்றி கீதம்.

நன்றி கண்மணி.

_________________________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

சிவா.ஜி
29-08-2009, 08:03 AM
தாலாட்டு பாடும் வரிகளில் அந்த தாயின் மன உணர்வை வெளிப்படுத்தும் உத்தி கிராமத்துக்கே உரிய சாமர்த்தியம்.

அழகான வரிகளைத் தேடிப்பிடித்து அதற்கு தெளிவான வரிகளில் விளக்கம் கொடுக்கும் தமிழ்நம்பிக்கு நன்றிகள். தொடர்ந்து தாருங்கள்....சுவைக்க காத்திருக்கிறோம்.

தமிழநம்பி
29-08-2009, 08:20 AM
////மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூச் செண்டாலே!
அத்தை அடிச்சாளோ அரளிப்பூச் செண்டாலே!////

எவ்வளவு உள் அர்த்தங்கள்... மிக அருமை தோழரே... ஒவ்வொரு கிராமத்து வரிகளுமே அர்த்தமுடையவைதான் ஆழ்ந்து உணரும்போதுதான் எல்லாவற்றையும் புரிய முடிகின்றது... பகிர்தலுக்கு நன்றி தோழரே...

எளிய மக்கள் பாடும் தாலாட்டில், பலவறு வகையான உணர்வுகள் வெளிப்படும் சிறப்பு சுவை மிக்கதே!

நன்றி தோழரே
_______________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
29-08-2009, 08:22 AM
தாலாட்டு பாடும் வரிகளில் அந்த தாயின் மன உணர்வை வெளிப்படுத்தும் உத்தி கிராமத்துக்கே உரிய சாமர்த்தியம்.

அழகான வரிகளைத் தேடிப்பிடித்து அதற்கு தெளிவான வரிகளில் விளக்கம் கொடுக்கும் தமிழ்நம்பிக்கு நன்றிகள். தொடர்ந்து தாருங்கள்....சுவைக்க காத்திருக்கிறோம்.

நன்றி சிவா.

____________________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

சுகந்தப்ரீதன்
29-08-2009, 10:32 AM
மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியாத அல்லது இயலாத கோபத்தையும் சோகத்தையும் தாலாட்டாய் தன் குழந்தையிடம் இசைத்து பகிர்ந்துக்கொள்ள முடியும் என்பதுதான் தாலாட்டின் தனிமகிமை..!! ஆனால் அத்தகைய தாலாட்டை இப்போதெல்லாம் கிரமாத்தில்கூட கேட்கமுடிவதில்லை...!!
இதற்கு காரணம் இந்தகால குழந்தைகளுக்கு தாலாட்டு பிடிக்கலையா இல்லை தாய்களுக்கு தாலாட்ட பிடிக்கலையா..?? எனக்கு பதில் தெரியலை.. உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க தமிழநம்பி..!!

மஸாகி
29-08-2009, 10:43 AM
அது சரி மல்லிப்பூ, அரளிப்பூவுக்கும் வித்தியாசம் இருக்கே..

மல்லிப் பூ மணக்கும் தான் ஆனால் அந்த வாச்னைக்கு பாம்பு வருமாம்

அரளிப்பூ மணக்காது ஆனா பூச்சிகளைக் கட்டுபடுத்துமாம்

பாவம் பாடின அம்மா.. இது தெரியாம பாடிப்புட்டாங்க...

:D :D :D

கவலைப் படாதீங்க - உங்களுக்கு அந்த சான்ஸ் இருக்கு - பாடுறதுக்கு..

நட்புக்கு-மஸாகி
29082009

தமிழநம்பி
29-08-2009, 12:26 PM
மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியாத அல்லது இயலாத கோபத்தையும் சோகத்தையும் தாலாட்டாய் தன் குழந்தையிடம் இசைத்து பகிர்ந்துக்கொள்ள முடியும் என்பதுதான் தாலாட்டின் தனிமகிமை..!! ஆனால் அத்தகைய தாலாட்டை இப்போதெல்லாம் கிரமாத்தில்கூட கேட்கமுடிவதில்லை...!!
இதற்கு காரணம் இந்தகால குழந்தைகளுக்கு தாலாட்டு பிடிக்கலையா இல்லை தாய்களுக்கு தாலாட்ட பிடிக்கலையா..?? எனக்கு பதில் தெரியலை.. உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க தமிழநம்பி..!!

இன்றும் கூட தாலாட்டுப் பாடும் பழக்கம் இருக்கிறது.

ஊர்ப்புறங்களில் முழுமையாகப் பாடுகிறார்கள்.

நகரத்திலும் கூட பாடுகிறார்கள் - தெரிந்தவரை... மற்றவர்க்குத் தெரிந்தும் தெரியாமலும்!

நன்றி தோழரே!
_______________________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஆதி
01-09-2009, 12:07 PM
அது சரி மல்லிப்பூ, அரளிப்பூவுக்கும் வித்தியாசம் இருக்கே..

மல்லிப் பூ மணக்கும் தான் ஆனால் அந்த வாச்னைக்கு பாம்பு வருமாம்

அரளிப்பூ மணக்காது ஆனா பூச்சிகளைக் கட்டுபடுத்துமாம்

பாவம் பாடின அம்மா.. இது தெரியாம பாடிப்புட்டாங்க...

:D :D :D

அக்கா அரளிப்பூக்கும் மணமிருக்கே.. அது போல் அரளிக்காட்டில் பாம்புகள் உலவும்..

அரளிப்பூவெடுப்பதால் அதிகமா கண் பாதிக்கப்படும் என்பார்..

ஊர்ல எங்க காட்டுல அரளி தான் ஒரு காலத்தில் போடுவோம்.. தண்ணி கொஞ்சம் பாச்சுனாலே போதும்..

மல்லி எங்க அத்தவீட்டு தோட்டத்தில் போடுவாங்க.. போட்டிருக்காங்க இப்பவும்..

த.ஜார்ஜ்
01-09-2009, 01:29 PM
தமிழ் நம்பி
நாட்டுப்புற பாடல்களை மையமாக வைத்து இந்த திரியை இன்னும் கொஞ்சம் தொடரலாமே.
முயற்சியுங்கள்.

தமிழநம்பி
01-09-2009, 03:02 PM
///அக்கா அரளிப்பூக்கும் மணமிருக்கே.. அது போல் அரளிக்காட்டில் பாம்புகள் உலவும்..
அரளிப்பூவெடுப்பதால் அதிகமா கண் பாதிக்கப்படும் என்பார்..

ஊர்ல எங்க காட்டுல அரளி தான் ஒரு காலத்தில் போடுவோம்.. தண்ணி கொஞ்சம் பாச்சுனாலே போதும்..

மல்லி எங்க அத்தவீட்டு தோட்டத்தில் போடுவாங்க.. போட்டிருக்காங்க இப்பவும்.. ///

ஆதி,

மல்லிகை மணத்திற்குப் பாம்பு வரும் எனபார்கள்!
அரளிக்கும் அப்படியா?
மக்கள் தம் பட்டறிவால் மல்லிகையை மேலாகவும் அரளியை மல்லிகையுடன் ஒப்பிடும் போதுத் தாழ்வாகவும் கருதியிருக்கின்றனர்.
____________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பா.ராஜேஷ்
01-09-2009, 05:05 PM
நல்லதொரு தொகுப்பும் பகிர்வும். நன்றி நம்பி!

தமிழநம்பி
01-09-2009, 05:17 PM
தமிழ் நம்பி
நாட்டுப்புற பாடல்களை மையமாக வைத்து இந்த திரியை இன்னும் கொஞ்சம் தொடரலாமே.
முயற்சியுங்கள்.

கருத்துக்கு நன்றி.

தொடர்கின்றேன்.
_____________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழநம்பி
01-09-2009, 05:21 PM
நல்லதொரு தொகுப்பும் பகிர்வும். நன்றி நம்பி!

நன்றி பா.ரா.