PDA

View Full Version : ஒருவர் முடிவெட்டி கொள்ள ரூபாய் 12 லட்சம்



anna
28-08-2009, 12:21 PM
http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_79485285283.jpg


லண்டன் : புருனே நாட்டு சுல்தானுக்கு முடி வெட்டுவதற்கு 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியா(63). இவர் லண்டனில் உள்ள கென் மாடஸ்டோ என்ற சிகையலங்கார நிபுணரிடம் தான் கடந்த 16 ஆண்டு காலமாக முடி வெட்டிக் கொள்கிறார். சாதாரணமாக தனது வாடிக்கையாளருக்கு முடிவெட்ட கென் மாடஸ்டோ இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வாங்குவார். புருனே சுல்தானுக்கு முடி வெட்டுவதற்காக சொகுசு விமானத்தில் புருனே செல்வார் கென் மாடஸ்டோ. புருனே நாட்டின் நட்சத்திர ஓட்டலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து சுல்தானுக்கு நேரம் கிடைக்கும் போது முடிவெட்டி விட்டுக் கணிசமான பணத்துடன் லண்டன் திரும்புவார். இப்படி மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது மூன்று வாரத்துக்கு ஒரு முறையோ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புருனேக்கு பறந்து சென்று முடி வெட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் கென். சொகுசு விமானத்தில் பயணிக்கும் செலவு, நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, இவருக்கு முடிவெட்ட கணிசமாகக் கட்டணம் என ஒரு முறை சுல்தானுக்கு முடிவெட்ட 12 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது.

நன்றி - தினமலர்

நேசம்
28-08-2009, 12:33 PM
அந்த நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.அதனால் இந்த விசயமெல்லாம் பெரிதாக இருக்காது

அறிஞர்
28-08-2009, 01:45 PM
விரலுக்கு தகுந்த வீக்கம்.....

இது ஒரு பெரிய பணம் இல்லை.. சுல்தானுக்கு..

இளசு
28-08-2009, 05:19 PM
தமிழக நடிகர் ஒருவர் மும்பையிலிருந்து ஒருவரை வரவைத்து
இப்படி சிரமேற்பணி செய்துகொள்ள இலட்சம் வரை செலவழிப்பதை
முன்னர் படித்திருக்கிறேன்..

நாயாய்ப் பிறந்தாலும் நல்ல வீட்டில் வளரணும் என்பார்கள்..
முடியாய் முளைத்தாலும் கோடீஸ்வரர் தலையில் முளைக்கணும் போல...

மஸாகி
29-08-2009, 10:35 AM
இதைதான் ''முடி'' ஆட்சி என்பதோ..

நட்புக்கு-மஸாகி
29082009

மஞ்சுபாஷிணி
29-08-2009, 10:47 AM
12 லட்சம் கொஞ்சம் ஜாஸ்தியா தாம்பா தெரியுது...

ஆனா படம் தான் எனக்கு தெரியவே இல்லை...

praveen
29-08-2009, 12:26 PM
ஒருவர் என்ற தலைப்பே தவறானாது :). அவர் ஒரு நாட்டுக்கே மன்னர் என்னும் போது இந்த செலவு கணக்கு ரெம்ப கம்மி, இதே போல அவர் வைத்திருக்கும் கார், உடைகள், பங்களாக்கள் இதையெல்லாம் குறிப்பிட்டு ஒருவர் என்று குறிப்பிடுவோமா?. இல்லையே.

எனவே இந்த செய்தி சாதாரணமானதே. மக்கள் அடுத்த வேளை சோற்றுக்கு சிரமப்படுகிறார்கள் என்ற போது அவர்களை ரொட்டி சாப்பிடச்சொல்லுங்கள் என்று சொன்ன மன்னர்கள் வாழ்ந்த பூமி இது.

///

ஒருவேளை மன்னர் தலைமுடி பற்றிய ரகசியம் காப்பதற்கு கூட கொடுத்திருக்கலாம், அதாவது தலை முக்கால் வழுக்கையாக இருந்து அது வேறு யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே ஆளையே வரவழைக்க செய்யும் செலவாகவும் இருந்திருக்கலாம்.

தமிழநம்பி
30-08-2009, 12:19 PM
நீக்கப்பட்டது.

தமிழநம்பி
30-08-2009, 12:28 PM
நீக்கப்பட்டது.

தமிழநம்பி
30-08-2009, 12:33 PM
புருனோ மக்கள் புரிந்து கொள்ளாதவரை, இந்த வகை விந்தைச்செய்திகள் வந்துகொண்டுதானே இருக்கும்!

_______________________________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடா தே,நீ
இறந்தபின்பும் உலகம்இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.