PDA

View Full Version : விப்ரோ மற்றும் ஹெச் சி எல் - பொறியாளர்கள் தற்கொலைதாமரை
28-08-2009, 06:36 AM
http://www.siliconindia.com/shownews/Wipro_HCL_engineers_commit_suicide-nid-60720.htmlஒரு விப்ரோ பொறியாளரும்(பெங்களூர்) ஒரு ஹெச்.சி.எல் பொறியாளரும் (நொய்டா,டெல்லி) அவர்களின் அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வந்துள்ளன.

பல விவரங்கள் வெளிப்படவில்லை. அடிப்படைக் காரணம் வேலையிழப்பு என்பது போலத் தெரிகிறது.

அமரன்
28-08-2009, 07:37 AM
உயிரிழப்பு கவலை தந்தாலும் இவர்களின் செயலால் ஆத்திரமும் அதிகம். ஆழ்ந்த அநுதாபங்கள்.

aren
28-08-2009, 07:50 AM
இது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றே தெரிகிறது.

praveen
28-08-2009, 07:55 AM
ஒரு நிறுவனத்தில் வேலை பறி போனதால் வாழ்க்கையே முடிந்து போனதா என்ன?. இவர்கள் பிறக்கும் போதே அந்த நிறுவனத்தில் வேலைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கி கொண்டா வந்தார்கள்.

எத்தனை காரணம் இருந்தாலும் வாழ்க்கையை எதிர்நோக்காமல் தற்கொலை செய்து கொண்டது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

தாமரை
28-08-2009, 10:33 AM
படிப்பும் அனுபவமும் கொண்டவர்கள் இப்படிப்பட்ட முடிவு எடுப்பது இவர்கள் போலி முகமூடியோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது..

மதி
28-08-2009, 10:48 AM
யோசிக்கவே முடியாத அளவுக்கு மூளை மழுங்கடிக்கப்படுகிறதா என்ன?? வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியமே அற்றுப் போயினரே.! என்ன இருந்தாலும் தற்கொலை கண்டிக்கத்தக்கது தான்.

தாமரை
28-08-2009, 11:26 AM
இதில் விப்ரோவைச் சேர்ந்தவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராம்...

umakarthick
28-08-2009, 12:16 PM
என்னையா நடக்குது

நேசம்
28-08-2009, 12:59 PM
ஆழ்ந்த அனுதாபங்கல்.அனால் இவர்களுக்கு கிடைத்த கல்வி பணம் சம்பாதிக்கும் இயந்திரமா ஆக்கியுள்ளது.வாழ்க்கையில்லை.என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

பால்ராஜ்
31-08-2009, 11:25 AM
மென்பொருள் பொறியிலாளர்கள் கடுமையான மன உழைச்சலில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது..

வெளியில் காட்டும் பகட்டும் வசதியும் பலர் வாழ்க்கையிலும் போலியாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.

பரஞ்சோதி
31-08-2009, 02:45 PM
ஒரு நிறுவனத்தில் வேலை பறி போனதால் வாழ்க்கையே முடிந்து போனதா என்ன?. இவர்கள் பிறக்கும் போதே அந்த நிறுவனத்தில் வேலைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கி கொண்டா வந்தார்கள்.

எத்தனை காரணம் இருந்தாலும் வாழ்க்கையை எதிர்நோக்காமல் தற்கொலை செய்து கொண்டது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

மிகச் சரியாக சொன்னீங்க பிரவீண்.

நான் கூட இங்கே பேசும் போது சொல்வேன், இவங்களை நம்பியா நாம் பிறந்தோம், பாஸ்போர்ட் எடுத்தோம், இந்த வேலை இல்லைன்னா வேற வேலை.

பைத்தியக்காரத் தனத்தின் உச்சக்கட்டம் இது.

மஸாகி
01-09-2009, 06:00 AM
சும்மா சொல்லக்கூடாது ''சூப்பர் - முட்டாள்தனம்..''

நட்புடன்-மஸாகி
01092009

மஸாகி
01-09-2009, 06:03 AM
என்னையா நடக்குது

சின்னப்புள்ளதனமால இருக்கு..

நட்புடன்-மஸாகி
01092009

சிவா.ஜி
01-09-2009, 01:19 PM
அய்யோ பாவம்ன்னுகூட சொல்லத்தோணலை. ஒரு வேலையிழப்புக்கே இந்த முடிவு என்றால்.....வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ சோதனைகளைத் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் அநேகரை நினைத்து பெருமையாக இருக்கிறது.

படித்த முட்டாள்கள் எனச் சொல்வதா? பயந்தாங்கொள்ளிகள் எனச் சொல்வதா?

தமிழநம்பி
01-09-2009, 02:46 PM
மனவலிவையும் தன்னம்பிக்கையையும் தராத கல்வியின் கேடு!

குரு
01-09-2009, 04:01 PM
ஒரு விப்ரோ பொறியாளரும்(பெங்களூர்) ஒரு ஹெச்.சி.எல் பொறியாளரும் (நொய்டா,டெல்லி) அவர்களின் அலுவலகத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வந்துள்ளன.

பல விவரங்கள் வெளிப்படவில்லை. அடிப்படைக் காரணம் வேலையிழப்பு என்பது போலத் தெரிகிறது.

இதெல்லாம் தேவையில்லாத மடச்செயல்...
இந்த வேலை இல்லையென்றால் , அடுத்த வேலை ....

சிறுபிள்ளை
02-09-2009, 12:22 PM
இவங்கள நினைச்சா பாவமாத்தான் இருக்கு.. இவங்களுக்கு இவங்க மேலயே ஒரு நம்பிக்கை இல்ல அதான் இப்படி செஞ்சிருக்காங்க... ஒரு புது மொழி சொல்வாங்க.

"லவ் யுவர் ஜாப் நாட் யுவர் கம்பனி"

Ranjitham
02-09-2009, 04:40 PM
மென்பொருள் பொறியிலாளர்கள் கடுமையான மன உழைச்சலில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது..

வெளியில் காட்டும் பகட்டும் வசதியும் பலர் வாழ்க்கையிலும் போலியாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. முரையான ‘கவுன்சிலிங்’ இவர்களக்கு கிடைகின்றதா? இதற்க்கு நிர்வாகத்தினர் சரியான வழிகாட்டுதல் கொடுக்கவிள்ளையெனில் விளைவுகள் மோசமாக இருக்கும்.