PDA

View Full Version : காமெடித்தாத்தா ஞாநி



சுஜா
26-08-2009, 01:16 PM
இந்த வார குமுதத்தில் ஞாநியின் ஓ பக்கத்தில் மூன்று செய்திகள் சொல்லப்பட்டிருந்தது .அதில் இரண்டாவது செய்தியில்வழக்கறிஞர்கள், நீதிபதிகள் - ஆகியவர்கள் மீது உள்ள ஊழல் ,லஞ்ச புகார்களை சுட்டிகாட்டி ,அதை
ஒழிக்க, ஒரு வழி சொன்னார் பாருங்க...ஆகா என்ன அருமையான யோசனை .
அதாவது, சட்ட கல்லூரியில் ,மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு தரமான கட்-ஆஃப் உள்ளதைபோல் சீர்திருத்தம்/சட்டம் கொண்டு வர வேண்டுமாம் .சரி...அப்படி கொண்டு வந்தால் ,தரமான கட்-ஆஃப் ல் படித்து வருபவன் மட்டும் ஊழல் பண்ணமாட்டான் என்பது எப்படி சாத்தியம்.அவரின் லாஜிக் படி பார்த்தால் கட்-ஆஃப் குறைவாய் எடுப்பவர்கள்தான் லஞ்சம் ,ஊழல் செய்பவர்கள்...என்ன ஒரு புத்திசாலிதனம்.அதனால் இந்த வார திட்டு ஞாநிக்கே.ரிபீட்டு .

கண்மணி
26-08-2009, 01:40 PM
என்ன சுஜா தப்பாவே புரிந்து கொள்கிறீர்களே!!!

சட்டக்கல்லூரியில் கட் ஆஃப் மார்க் கொண்டுவந்தால் என்ன நடக்கும்..

சட்டம் படிக்கும் மாணவர்கள் புத்திசாலியா இருப்பார்கள்..

அப்படி புத்திசாலியா இருந்தால் என்ன நடக்கும்?

புகாரே எழாதபடி "விஞ்ஞான" முறையில் (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?) ஊழல் செய்வாங்க..

அப்ப இதுமாதிரி ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட முடியாது... நீதித் துறையின் கண்ணியம் காக்கப்படும்.

சரி லொள்ளை விட்டு உண்மையைப் பார்ப்போம்.

மதிப்பெண் அடிப்படையில் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தால் நிறைய முன்னேறத் துடிக்கும் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் நல்லது நடக்கும் என்று நம்பலாம். உண்மையாகவே தகுதி அடிப்படையில் இருப்பது, சாதிக்க துடிப்பவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும்.

அமரன்
26-08-2009, 01:40 PM
எதனடிபப்டையில் கட் ஓஃப் என்று சொல்லையேப்பா.

சுஜா
26-08-2009, 01:55 PM
புகாரே எழாதபடி "விஞ்ஞான" முறையில் (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?) ஊழல் செய்வாங்க..



இல்ல, எனக்கு கேட்டமாதிரி தெரியல...


மதிப்பெண் அடிப்படையில் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தால் நிறைய முன்னேறத் துடிக்கும் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் நல்லது நடக்கும் என்று நம்பலாம். உண்மையாகவே தகுதி அடிப்படையில் இருப்பது, சாதிக்க துடிப்பவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும்.

நம்பலாமே தவிர , உறுதியாக அவன் யோக்கியாமாக இருப்பான் என்று சொல்லமுடியாது .

சுஜா
26-08-2009, 01:56 PM
எதனடிபப்டையில் கட் ஓஃப் என்று சொல்லையேப்பா.

அதை அவரும் சொல்லவில்லை .

கண்மணி
26-08-2009, 02:09 PM
உலகில் யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ உறுதியாச் சொல்ல முடியாது...

அப்படி இருக்கும் பொழுது கஷ்டப்பட்டு படித்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை,


கட் ஆஃப் என்றால் என்ன என்று இன்று எல்லா மாணவர்களுக்கும் அவர்களோட தந்தைகளுக்கும் தெரிந்ததுதான்.

பனிரெண்டாம் வகுப்பில் சில முக்கிய பாடங்களில் பெற்ற மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் இவற்றின் கலவையில்

உதாரணமாக பொறியியலுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல்
கணிதம் 100(200 மதிப்பெண்கள் என்பதால் இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்), இயற்பியல் 50 ( 200 மதிப்பெண்கள் என்பதால் நான்கால் வகுத்துக் கொள்ள வேண்டும்) வேதியியல் 50 ( 200 மதிப்பெண்கள் என்பதால் நான்கால் வகுத்துக் கொள்ள வேண்டும்). நுழைவுத்தேர்வு 50

உதாரணமாக் கணக்கில் 190, இயற்பியலில் 184, வேதியியலில் 176, நுழைவுத்தேர்வு 35 எனக் கொள்வோம்.

கணக்கிற்கு 95, இயற்பியலுக்கு 46 வேதியியலுக்கு 44 மற்றும் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் 35..

ஆக மொத்தம் 220.

அனைத்து மாணவர்களுக்கும் இது போன்ற மதிப்பெண்கள் இருக்குமல்லவா? இட ஒதுக்கீடு

பொது முறையில் உள்ளவ்ர்களுக்கு தமிழகத்திலேயே யார் முதல் இடம் பெறுகிறார்களோ அதிலிருந்து ஆரம்பிக்கும்..

மொத்தம் ஆயிரம் சீட்டுகள் என்றால், ஆயிரமாவது இடத்தில் இருக்கும் மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண் ஆகும்.

இதே போல் பிற்பட்டோர், பழங்குடியினர் இவர்களுக்கும் மதிப்பெண் வரிசையில் இடம் ஒதுக்குவதே கட் ஆஃப் ஆகும்.

சுஜா
26-08-2009, 02:28 PM
உதாரணமாக பொறியியலுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல்
கணிதம் 100(200 மதிப்பெண்கள் என்பதால் இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்), இயற்பியல் 50 ( 200 மதிப்பெண்கள் என்பதால் நான்கால் வகுத்துக் கொள்ள வேண்டும்) வேதியியல் 50 ( 200 மதிப்பெண்கள் என்பதால் நான்கால் வகுத்துக் கொள்ள வேண்டும்). நுழைவுத்தேர்வு 50

உதாரணமாக் கணக்கில் 190, இயற்பியலில் 184, வேதியியலில் 176, நுழைவுத்தேர்வு 35 எனக் கொள்வோம்.

கணக்கிற்கு 95, இயற்பியலுக்கு 46 வேதியியலுக்கு 44 மற்றும் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் 35..

ஆக மொத்தம் 220.

அனைத்து மாணவர்களுக்கும் இது போன்ற மதிப்பெண்கள் இருக்குமல்லவா? இட ஒதுக்கீடு

பொது முறையில் உள்ளவ்ர்களுக்கு தமிழகத்திலேயே யார் முதல் இடம் பெறுகிறார்களோ அதிலிருந்து ஆரம்பிக்கும்..

மொத்தம் ஆயிரம் சீட்டுகள் என்றால், ஆயிரமாவது இடத்தில் இருக்கும் மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண் ஆகும்.

இதே போல் பிற்பட்டோர், பழன்ங்குடியினர் இவர்களுக்கும் மதிப்பெண் வரிசையில் இடம் ஒதுக்குவதே கட் ஆஃப் ஆகும்.

தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தபட்டோர்,பழங்குடி...இப்படி இடங்களை நிர்ணயம் செய்வதோடு அரசின் கடமை முடிந்துவிடுகிறது.ஆனால், அதன் பிறகு வரப்போகும் ஒவ்வொரு வினைகளையும் இந்த 'நிர்ணயம்' தீர்மானிப்பதில்லை.ஆகவே, கட்-அப் சம்பிரதாயத்திற்கு பிறகு சில கடமைகள் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

சட்ட கல்லூரியில் சட்ட ஒழுங்கைதான் கற்றுகொடுக்கிறார்கள்.ஆனால்,தவறுகள் நடப்பது
சட்டத்திற்கு எதிரான வழியில் தான்.எனவே,இ.பி.கோ. சட்ட பிரிவுகளை கற்றுகொடுப்பதோடு நிற்று விடாமல் மனிதனாக மாற்றும் பொறுப்பு கல்வித்துறைக்கு உண்டு என்பதை வலியுறுத்த வேண்டும்.

கண்மணி
26-08-2009, 02:35 PM
அதற்காக கஷ்டப்பட்டு படித்து வரும் மாணவர்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,,,

மனிதனாக வாழ வேண்டியதை சட்டக்கல்லூரியில் மட்டும் கற்றுக் கொடுத்தால் பிரயோசனம் இல்லை. அது ஆரம்பப்பள்ளியிலேயே செய்யப்பட வேண்டியது ஆகும்.

பிறக்கும் மனிதன் நல்லவனாக இருந்து கெட்டவன் ஆகிறானா? இல்லைக் கெட்டவனாக இருந்து நல்லவனாகிறானா?

ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவ்ர்களும் அயோக்கியர்கள். அவர்களுக்கு நேர்வழியைப் பாடம் சொல்லித்தான் திருத்த வேண்டும் என்ற ரீதியில் இருக்கிறது உங்கள் வாதம்..

தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கில் இப்படி தரவரிசைப் பட்டியலின் படி வாய்ப்பு பெற்று கற்று, நல்ல குடிமக்களாக வாழும் மாணவர்களை யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக அவமதிக்காதீர்கள்.

இந்தத் திரியும் உங்கள் சிந்தனையைத் தூண்டட்டும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17452

சுஜா
28-08-2009, 01:12 PM
ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவ்ர்களும் அயோக்கியர்கள். அவர்களுக்கு நேர்வழியைப் பாடம் சொல்லித்தான் திருத்த வேண்டும் என்ற ரீதியில் இருக்கிறது உங்கள் வாதம்..





கண்மணி அக்கா, நான் மாணவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்ன்று ஒருபோதும் சொல்ல வில்லை. ஏன், நான்கூட ஒரு மாணவன்தான்.நீங்கள் பிழையாக எடுத்துகொண்டால் எப்படி?மாணவர்களுக்கு நல்வழி சொன்னால்தான் திருந்துவார்கள் என்பது என்வாதமல்ல.நல்வழி சொன்னால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை.






தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கில் இப்படி தரவரிசைப் பட்டியலின் படி வாய்ப்பு பெற்று கற்று, நல்ல குடிமக்களாக வாழும் மாணவர்களை யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்காக அவமதிக்காதீர்கள்.


நீங்கள் சொல்வது சரிதான்.தரமான மதிபெண்கள் பெற்று உள்ளேவருபவர்கள் சிறந்த மாணவனாக ,நல்ல குடிமகன்களாக வருவார்கள் என்ன்பது 95% தீர்க்கமே.ஆனால், அவர்களின் சமுதாயம்,சூழ்நிலைகள் அவர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி போடலாம்.இந்த ஆழ்ந்த உண்மையைதான் நான் கூறவருகிறேன்.
உதாரணத்திற்கு மருத்துவர்களை எடுத்து கொள்ளுங்கள் .ஞாநி சொல்வதை போல், இவர்கள் தரமான கட்-ஆப் ல் வருபவர்கள்தான் .ஆனால், இவர்கள் கடைவிரித்தது , சாதாரண காய்சல் தலைவலிக்கு கூட 700 ரூபாய்க்கு மேல் மருந்து மாத்திரைகள் எழுதுகிறார்கள்.இங்கே அவர்கள் எடுத்த கட்-ஆஃப்பும் தரவரிசை நிர்ணயமும் வந்து கேள்வி கேட்பதில்லை .ஆகவே, நல்லகுடிமகன்களை தீர்மானிப்பதில் ,மதிபென்களுக்கு முழுமையான வீரியமில்லை என்பதே என்னுடய கருத்து.நன்றி.

கண்மணி
28-08-2009, 02:43 PM
மதிப்பெண்களுக்கு வீரியமில்லை என்றால் எம்முறைப்படி? என்பதைச் சொல்லி இருக்க வேண்டும்..

ஒரு துறையில் ஒருவர் சாதிக்க அவர் நல்லவராய் இருத்தல் மட்டும் போதாது. வல்லவராயும் இருக்க வேண்டும். அந்த வல்லமையை அந்த படிக்கும் தாகத்தை அந்த அறிவுக் கூர்மையைக் காட்டுவது மதிப்பெண்கள். இப்போதைக்கு இது ஒன்றுதான் நம்மிடம் இருக்கும் அளவுகோல்.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் யாருக்குமே கல்லூரியில் இடம் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் எல்லோருமே கெட்டுப் போகக் கூடிய சாத்தியம் இருக்கிறது. அதனால் சட்டக் கல்லூரியை இழுத்து மூடி விடலாம் என்று சொல்வது போல இருக்கிறது..

மாற்று வழி சொல்லாமல், முன் வைக்கப் பட்ட முறையை இகழ்வதில் பயன் என்ன? இதனால் இப்போது இருப்பதை விட இழிவான நிலைக்குச் சென்றுவிடுவோம் என்று வேண்டுமானால் ஆதாரப்பூர்வமாகச் சொல்லலாம்.

இப்பொழுது இருப்பதை விட சற்றாவது தரம் உயரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்று பொய் சொல்லாதீர்கள்.

எது சரி என்று தெரியாமல், இது தவறு என்று சிறிதளவாவது நன்மை உள்ள ஒன்றைச் சாடுதல் எவ்வளவு தவறு தெரியுமா?

இதுதான் ஒரே வழி என்று ஞானியும் சொல்லவில்லை நானும் சொல்லவில்லை. ஞானி அவருக்குத் தெரிந்த ஒரு சிறந்த வழியைச் சொல்லி இருக்கிறார், அதை அனுபவப் பூர்வமாக அறிந்திருப்பதால் இது சரிதான் என நான் சொல்கிறேன்.

மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம். மரியாதை கொடுக்கலாம்.

ஒருபக்கம் மாணவர்கள் நல்லவர்கள் என்கிறீர்கள். சமூகம் கெடுக்கிறது என்கிறீர்கள்.

மாணவனைக் கெடுத்த சமூகம் தானே மாணவனால் துன்பப்படுகிறது.

பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்.

உங்க கணக்குப் படி உலகத்தில் எல்லோருமே கெட்டுப் போக வாய்ப்புள்ளவர்கள்.

அதனால் உலகத்தில் யாருமே நல்லவர்கள் கிடையாது..

அப்புறம் யார்தான் யாருக்குதான் நல்வழி சொல்றது?

நான் அப்படிச் சொல்லவில்லை நான் இப்படிச் சொல்லவில்லை எனச் சப்பைக் கட்டு கட்டுவதை விட...

ஞானி சொல்லி இருப்பதை விட சிறப்பானது என நினைக்கும் ஒரு நல்ல யோசனையைத் தாருங்கள் பலனிருக்கும்.

அதுமட்டும்தான் நான் எதிர்பார்ப்பதாகும்..

இதைப் பற்றி ஒரு மனிதன் சிந்தித்திருக்கிறானே எனப் பெருமைப் படுவோம்..

குறை சொல்ல வேண்டாம்..

இனி பொதுவா இது எல்லோருக்கும்...

அடுத்தவரை நீங்க திட்டாதீங்க என்று சொல்வதற்கே வருத்தப்பட்டா,
திட்டு வாங்கறவங்க இதைப் பார்த்தா எவ்வளவு வருத்தப் படுவாங்க தெரியுமா?


நமக்கு யாரையும் திட்ட உரிமை இல்லை என்பதே நான் கொஞ்சம் அழுத்தமா சொல்வது.

ஒரு கருத்துக்கு மாற்று கருத்து வைத்து இது சிறந்தது என்று சொல்லுங்கள்..

ஒரு கருத்தில் உள்ள நன்மைகளை தீமைகளை அலசுங்கள். அதைத்தான் இப்போ செய்கிறேன்

இது வேண்டும் இது வேண்டாம் என்று சொல்லுங்கள்

இவையெல்லாம் ஆக்கப் பூர்வமானவை.

சிலர் இதுக்கே மனசு புண்பட்டுப் போவார்கள்.

ஆனால்

காமெடித் தாத்தா
அவன் இவன்
எல்லாம் அயோக்கியன் தான்

இப்படி அறிஞர், இளசு இல்லை இல்லை இந்த மன்றத்தில யார் திட்டித் திட்டி எழுதினாலும் என்னிடம் இருந்து இதே அறிவுரைதான் வரும்.

ஆனால் மக்கள் நான் நீங்கள் திட்டுவதைத்தான் தவறுன்னு சொல்றேன் என்று புரிஞ்சிக்காம நான் அவங்களை கண்டிப்பதா நினைச்சுக்குவாங்க..

அப்படித் தவறா நினைக்காதீங்க..

ஒரு நல்ல சமுதாயம் இங்க இருக்கணும் என்கிற ஆசையில்தான் இவ்வளவையும் சொல்றேன்..

மனிதர்களை திட்டாதீர்கள்.. நல்லது எது கெட்டது எது என்று மட்டும் சொல்லுங்கள்.. மனிதர்களை எப்போ திட்டணும் தெரியுமா? அவர் வேண்டுமென்றே சமுதாயத்திற்கு பெருந்தீங்கு இழைக்கும் பொழுது மட்டும்தான்.

பால்ராஜ்
31-08-2009, 11:21 AM
ஞாநியாக இருந்தாலும் சரி ... வேறு யாராக இருந்தாலும் சரி....வாசிப்ப்போம்... விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுவோம்..

அவ்வளவுதானே..!!

சுகந்தப்ரீதன்
31-08-2009, 12:27 PM
கண்மணி அக்கா கலக்கிட்டீங்க... உங்கக்கிட்ட இன்னும் நிறைய கத்துக்கலாம் போலிருக்கு... கண்டிப்பா சுஜாவுக்கும் நீங்க சொல்வது முழுசா புரிஞ்சிருக்கும்.. அந்த அளவுக்கு தெளிவா சொல்லியிருக்கீங்க...!! உங்களை சொல்லவைத்த சுஜாவுக்கு என் நன்றிகள்..!!

ஓவியன்
31-08-2009, 01:12 PM
ஞாநியாக இருந்தாலும் சரி ... வேறு யாராக இருந்தாலும் சரி....வாசிப்ப்போம்... விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுவோம்..

அவ்வளவுதானே..!!

சத்தியமான வார்த்தை பரா அவர்களே, ஆமோதிக்கிறேன். :)

arun
04-09-2009, 07:51 AM
உலகத்தில் நல்லவர்களாக இருப்பதும் கெட்டவர்களாக மாறுவதும் சூழல் தான் காரணம்

என்னை பொறுத்த வரை யாருமே அடுத்தவரது கோணத்தில் நல்லவர்கள் கிடையாது

முடிந்த வரை நல்லவராக இருக்க முயற்சிப்போம்

ஞாநி உண்மையில் அறிவாளி தான் :D

சிவா.ஜி
04-09-2009, 01:15 PM
திரு சேவியர் ராஜா...அவர் என்னதான் உங்களுக்குப் பிடிக்காத கருத்தை சொல்லியிருந்தாலும், உங்கள் எழுத்துக்களில் தயவுசெய்து கண்ணியத்தை கடைபிடியுங்கள்.

தமிழ்பாதி ஆங்கிலம் பாதி எழுதிக்குழப்பும் உங்கள் எழுத்தை எந்தரகத்தில் சேர்ப்பது?

ஓவியன்
04-09-2009, 01:30 PM
சிவா, திரு சேவியர் ராஜா அவர்களின் பதிவினை நீக்கி விட்டேன், இது போல ஏக வசனத்தில் பேசுவதும் திட்டுவதும் மன்ற விதிகளுக்கு முரணானதென்பதால் பதிவினை நீக்கி மன்ற நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.

சிவா.ஜி
04-09-2009, 04:19 PM
நல்லது ஓவியன். என்னுடைய பதிவையும் நீக்கிவிடுங்கள்.

பால்ராஜ்
05-09-2009, 06:21 AM
ஓரு கோணத்தில் இருந்து பார்க்கும்போது
திரியின் தலைப்பு பலரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தாலும்
மாற்றப் பட வேண்டியதோ என்ற ஐயமும் எழுகிறது.

கருத்துக்களை எவ்வளவு வேண்டுமானலும் விமரிசக்கலாம்...
தனி நபர்களை அல்ல..

சிவா.ஜி
05-09-2009, 06:58 AM
மிகவும் சரி பால்ராஜ்.