PDA

View Full Version : பிசினஸ்ஐரேனிபுரம் பால்ராசய்யா
26-08-2009, 08:55 AM
ஓய்வு பெற்ற தனது தந்தை வீட்டில் சும்மா இருந்தால் மனதளவில் சோர்ந்து விடுவார் என நினைத்து அவருக்கென்று பர்னிச்சர் மார்ட் என்ற வியாபாரத்தை தனது சொந்த முதலீட்டில் ஏற்படுத்தி தந்தான் ரமேஷ்.

முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வியாபாரமும் நடக்காமல் வாடகைப்பணமும் அலுவலகச் செலவும் சேர்ந்து நஷ்டத்தில் நடப்பதாக பகுதி நேர கணக்காளர் சொன்னபோது ரமேஷ் எந்தவித கவலையும் அடையவில்லை.

“ சும்மா இருந்தா அப்பாவுக்கு பொழுது போகாதுன்னுதான் பிசினஸ் வச்சுக்கொடுத்தேன் போகப் போக சரியாயிடும்!” தனக்கு ஆதரவாகப் பேசிய தனது மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.

ரமேஷ் படிப்பு முடிந்து வேலை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கம்பியூட்டர் சென்டர் ஆரம்பித்து தந்தபோது அவன் சரிவர கவனிக்கவில்லையென்று 'இவன் எதுக்குமே லாயக்கில்லை, தண்டம்' என்று காட்டுகத்தலாய் திட்டியது நினைவுக்குவர ஒருகணம்தன்னைத்தானே நொந்துகொண்டார், மகன் அதுபோல் திட்டாமல் பெருந்தன்மையோடு நடந்துகொண்டதை நினைத்து.

கா.ரமேஷ்
26-08-2009, 10:48 AM
நல்லதொரு நிமிடக்கதை... தந்தை செய்தது மகன் வேலையில்லாமல் இருக்க கூடாது,முன்னேறவேண்டும் என்ற அக்கரையோடு, மகன் செய்தது கடைசி காலத்தில் வேலை இல்லையே என்ற கவலை இருக்ககூடாது என்ற அக்கரையோடு. ஆக இரண்டும் ஒரே நேர்கோடுதான் சிறிய வித்தியாசத்துடன்... வாழ்த்துக்கள் தோழரே..

பா.ராஜேஷ்
26-08-2009, 04:31 PM
நல்லதொரு நிமிட கதையை தந்த நண்பருக்கு நன்றி.

த.ஜார்ஜ்
27-08-2009, 08:24 AM
நமது அனுபவங்கள்தானே நமக்கு நல்ல பாடங்களாக அமைகின்றன.

அமரன்
27-08-2009, 08:50 AM
நல்லதை மட்டுமல்ல கெட்டதையும் கூர்ந்து கவனி.

எப்படி நடக்க வேண்டும் என்று நல்லன சொல்லும்.

எப்படி நடக்கக் கூடாது என்று கெட்டன சொல்லும்.

நிமிடத்தில் மாற்றம் ஏற்படுத்தும் அற்புதம் நிகழ்த்திய கதைக்கு பாராட்டு ஐபாரா.

சரியோ தவறோ.. தனயன் முன்னேற வேண்டும் என்பதே தந்தையின் எண்ணமாக இருக்கும். வயசான காலத்தில் தந்தை திருப்தியாக, சந்தோசமாக இருக்க வேண்டும் என்றே மகனின் எண்ணம் இருக்கும்.

தாமரை
27-08-2009, 08:53 AM
சரியோ தவறோ.. தனயன் முன்னேற வேண்டும் என்பதே தந்தையின் எண்ணமாக இருக்கும். வயசான காலத்தில் தந்தை திருப்தியாக, சந்தோசமாக இருக்க வேண்டும் என்றே மகனின் எண்ணம் இருக்கும்.

தந்தையின் அக்கால கோபத்திற்கும் தனயனின் இக்கால வாஞ்சைக்கும் இதுதான் ஆதாரம். இல்லையா?

அமரன்
27-08-2009, 08:55 AM
தந்தையின் அக்கால கோபத்திற்கும் தனயனின் இக்கால வாஞ்சைக்கும் இதுதான் ஆதாரம். இல்லையா?

நிச்சயமாய்..

பாரதி
27-08-2009, 11:17 AM
சிந்திக்க வைக்கும் நிமிடக்கதை.
தந்ததற்கு நன்றி இராசையா.

மஞ்சுபாஷிணி
30-08-2009, 05:29 PM
இந்த காலத்து பிள்ளைகள் எதையுமே சமயோசிதமாய் அணுகுவது மனதுக்கு மிகவும் சந்தோஷம் தரும் விஷயமே...

அப்பா மகனை கண்டித்தது பொறுப்பினால்.. நம்ம குழந்தை இப்படி இருக்கானேன்னு...

அதற்காக மகனும் அப்பாவை கண்டிக்கனும்னு என்னப்பா இருக்கு? என்ன அழகா அந்த குழந்தை தன் அப்பாவுக்கு பொழுது போக தான் கடை வைத்து கொடுத்தேன்னு சொல்றது.. கேட்கவே நல்லா இருக்குப்பா.. எல்லா குழந்தைகளும் இப்படி அம்மா அப்பாவை படுத்தாமல் இருந்தால் எத்தனை சந்தோஷம்... மிக அருமையான ஒரு நொடிக்கதை பால்ராசய்யா... மிக்க நன்றி...

கீதம்
30-08-2009, 11:54 PM
அப்பா அன்று காட்டுக்கத்தலாய் கத்தித் திட்டியதால் தான், மகன் வீறு கொண்டு எழுந்து வாழ்வில் முன்னேறி இன்று அப்பாவுக்கு வியாபார நிறுவனம் வைத்துத் தரும் நிலையில் இருக்கிறான் அல்லவா? நல்ல அப்பா; நல்ல மகன்; நல்ல கதை. நன்றி பால்ராசய்யா அவர்களே!

aren
31-08-2009, 03:43 AM
அருமையான படிப்பினை.

ஒருவர் நன்றாக உழைத்துக்கொண்டு இருந்துவிட்டு ஓய்வு பெற்றவுடன் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிப்பார்கள். அவர்களால் சும்மா இருக்கவே முடியாது.

தொடருங்கள். இன்னும் கொடுங்கள்.

சிவா.ஜி
31-08-2009, 05:17 AM
'தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு'

இந்தக் கூற்றைப் பொய்யாக்கிய தனயன். ஆதுரமான அரவணைப்பு இருந்தால், முதுமையும் வரம்தான்.

நல்ல குறுங்கதை. வாழ்த்துகள் ஐ.பா.ரா ஐயா.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
31-08-2009, 05:40 AM
நல்ல பாராட்டைபொழிந்து என்னை பாராட்டு மழையில் நனையவைத்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றி.

மதுரை மைந்தன்
31-08-2009, 09:38 AM
நல்ல கருத்துள்ள கதை. கதை சிறிதாக இருந்தாலும் பெரிய விஷயத்தை கூறுகிறது. பாராட்டுக்கள் அய்யா