PDA

View Full Version : இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு இதோ இன்னுமொரு ஆதாரம்! - வன்முறை நிறைந்த படக்கோவை கொண்டது.Honeytamil
26-08-2009, 05:22 AM
வன்னியில் தமிழர்களுக்கு எதிரான கடுமையான channel_4தாக்குதல்களை மேற்கொண்ட இலங்கை ராணுவம், மனித குலமே வெறுக்கும் வகையிலான கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

கையில் சிக்கிய தமிழர்களை எல்லாம் ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் கொடூரமான காட்சிகளை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ‘சேனல் -4′ செய்தியாளர் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். (இந்த வீடியோ காட்சிகள் பலவீனமான இதயமுள்ளவர்களால் பார்க்கத் தகுந்ததல்ல!)

‘இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்’ (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு செய்தியாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை இலங்கை அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் ‘சேனல் - 4′ தெரிவித்துள்ளது.

இந்தக் காட்சிகளை உலகின் முன் வைத்துள்ள ஜொனதன் மில்லர் , “இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இன்னும் என்ன ஆதாரங்கள் வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இதனை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மறுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் என தூதரகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் போலியானதாக இருக்கும் என்றும் கூசாமல் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை. ஆனால் இதனை சோதித்துப் பார்த்த செய்தியாளர்கள் மற்றும் நிபுணர்கள் இது நிஜமான காட்சிப் பதிவுகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சேனல் 4 நிர்வாகமும் இந்த வீடியோ உண்மையானது என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே உலகின் கவனத்துக்கு அதை ஒளிபரப்பியதாக தெரிவித்துள்ளது.

அந்த வீடியோ… (தயவு செய்து பலவீனமான இதயமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!)

http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=35256686001

நன்றி : என்வழி

ஓவியன்
26-08-2009, 05:59 AM
இலங்கையரசும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை, அவர்கள் சொல்லும் செய்திகள் சரியென வாதாடிக் கொண்டிருப்பவர்களும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை...

நேசம்
26-08-2009, 06:16 AM
பார்க்கும் போது மனம் கனக்கிறது.இத்தகைய கொடுர செய்ல் புரிபவர்களுக்கு இதை மறப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை

அமரன்
26-08-2009, 02:06 PM
எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலமை.

காலக்காற்றில் கரைந்து விடும் புதினம். கொடூரத்தின் உச்சம். கல் நெஞ்சுகளையும் அசைக்க வல்லது.

தலைப்பில் இணைப்பு செய்யப்பட்டது.

பரஞ்சோதி
26-08-2009, 02:07 PM
வேதனையாக இருக்குது.

எவன் செத்தா எனக்கென்ன, என் வயிறு நிறைஞ்சா போதும் என்று நினைக்கும் உலகில் இவர்களின் படுகொலைகள் எங்கே மனதை தொடும்.

இனப்படுகொலையை திட்டமிட்டு செய்து வரும் சிங்கள இனவாதிகளுக்கு ஒத்தூதும் அயோக்கியர்களுக்கு நரகத்தில் தான் இடம் கிடைக்கும்.

பரஞ்சோதி
26-08-2009, 02:10 PM
எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலமை.

கல் நெஞ்சுகளையும் அசைக்க வல்லது.அப்படி சொல்ல முடியாது தம்பி.

எதிரியை இதே பாணியில் அடிச்சா தான் அவனுக்கு வலி புரிய வரும்.

அதே போல் கல் நெஞ்சுகள் ஒன்றும் கண்ணீர் வடிக்காது, வடிச்சாலும் அது நீலிக்கண்ணீராக தான் இருக்கும்.

அப்பாவி மக்களுக்கு ஆறுதல் கொடுப்பதாக இருக்காது.

கடவுள் மட்டும் என்னிடம் தோன்றி ஒரு வரம் கேட்கட்டும், அப்போ இருக்குது...

என்னால் இதை மட்டுமே சொல்ல முடியும் நிலையில் இருக்கிறேன், என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.:mad:

தூயவன்
26-08-2009, 05:10 PM
இவங்க மனுசங்களா இல்ல .. ச்சி

அமரன்
26-08-2009, 09:27 PM
அப்படி சொல்ல முடியாது தம்பி.

எதிரியை இதே பாணியில் அடிச்சா தான் அவனுக்கு வலி புரிய வரும்.

அதே போல் கல் நெஞ்சுகள் ஒன்றும் கண்ணீர் வடிக்காது, வடிச்சாலும் அது நீலிக்கண்ணீராக தான் இருக்கும்.

அப்பாவி மக்களுக்கு ஆறுதல் கொடுப்பதாக இருக்காது.

கடவுள் மட்டும் என்னிடம் தோன்றி ஒரு வரம் கேட்கட்டும், அப்போ இருக்குது...

என்னால் இதை மட்டுமே சொல்ல முடியும் நிலையில் இருக்கிறேன், என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.:mad:


உங்கள் வழியிலேயே வருகிறேன் அண்ணா. இந்த அவலத்தை யாருக்குத் திருப்பிக் கொடுப்பது. சிங்கள மக்களுக்கா.. சிங்களச் சிப்பாய்களுக்கா.. அவர்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரிகளுக்கா.. அதிகாரிகளை கட்டி அவுக்கும் அரசியல்வாதிகளுக்கா.. அரசியல்வாதிகளுக்கு வேப்பிலை அடிக்கும் மதவாதிகளுக்கா.. அல்லது இவர்களின் அடிவருடிகளுக்கா.. ஈழ வரலாறைத் திரும்பிப் பார்த்தால் எதுவுமே முடியாதுண்ணா. அதான் வள்ளுவனை துணைக்கழைக வேண்டியதாயிற்று. இன்னா செய்தாரை... நீங்கள் மட்டுமல்ல பலரும் இப்போது அழும் மீனின் நிலையில்தான்..

இறைநேசன்
27-08-2009, 03:57 AM
இத்தனை கொடூரங்களுக்கும் அடிப்படை காரணம் இதயமே இல்லாத அந்த கொடிய அரக்கன் ராஜபக்ஷே அண்ட் சகோதரர்கள்தான்.

அதைவிட கொடூரம் அந்த பிஞ்சுகளையும் பூக்களையும் உதிரவைக்க கரம் கொடுத்து உதவிய நமது ஆளும் வர்க்கத்தினர்

இந்த பாவ பழியிலிருந்து அவர்கள் நிச்சயம் தப்பிக்கவே முடியாது.

கொடுத்ததை திரும்ப பெறாமல் அவர்கள் எங்கும் ஓடிவிட முடியாது! ஒரு நாள் வரும், அன்று நிச்சயம் அவர்கள் ஒவ்வொருவர் செய்ததற்க்கான பலனும் அவர்கள் தலைமேல் வந்து இறங்கும்.

praveen
27-08-2009, 04:19 AM
"துன்பம் செய்தவனுக்கு அதையே திருப்பி கொடு" என்பது தான் தேசியத்தலைவரின் கூற்று.

விரைவில் பெறுவார்கள், துன்பம் பெற்றவர்கள் கொடுக்க முடியாவிட்டாலும், இறைவன் இயற்கை சீரழிப்பிலாவது தருவான். என்ன இறைவன் நின்று கொள்வான், அதுவரை அவர்கள் ஆட்டம் ஆடட்டும்.

கா.ரமேஷ்
27-08-2009, 05:16 AM
எதுவும் பதிவிடகூடிய மன நிலை இல்லாமல்தான் நேற்று பார்த்துவிட்டு மட்டும் சென்று விட்டேன்.ஒரு சில காட்சிகள் மட்டுமே உலகத்திற்க்கு தெரிய வந்துள்ளன உலகத்திற்க்கு தெரியாமல் எவ்வளவு கொடுமைகள் நடக்கும் என இறைவனுக்குதான் தெரியும்.

அந்த ஆதாரத்தை மறுத்துள்ள இனவெறி அரசை நினைக்கையில் தக்ஸ் ஒரு பதிவில் சக அலுவலர் கூறியதாய் சொன்ன

“ஓநாயின் வயிற்றுக்குள் முயலின் நிலை கூட மிக அமைதியான நிலை தான்” நினைவுக்கு வருகின்றது.

"ஓநாய்கள் ஊழையிடுவதும் ஒன்றும் புதிய விசயமில்லைதானே...?"

தனது பத்திரிக்கை சுதந்திரத்தை தைரியமாய் நிலைநாட்டிய சானல்-4 நிறுவனத்திற்கு நன்றிகள்.

pathman
30-08-2009, 03:56 PM
எனக்கும் இதை பார்த்தும் இரத்தம் எல்லாம் கொதித்தது எம்மால் வேதனை பட மட்டுமே முடியும்....

எமக்கும் ஒரு காலம் வரும் அதுவரை நீறு பூத நெருப்பாக மனதை வைத்திருப்போம்....