PDA

View Full Version : குடல்வால் - தேவையற்ற ஒன்றா?



தாமரை
26-08-2009, 05:03 AM
குடல் வால்,, பரிமாண வளர்ச்சியில் மனிதனின் சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் மத்தியில் எஞ்சி இருக்கும் எச்சம். தாவர உண்ணிகளாய் இருந்த விலங்கினங்களில் இது ஜீரணத்திற்கு உதவியது.

மனித உடலியலில் இதற்கு ஒருவேலையும் இல்லை, சும்மா தொங்கிக் கொண்டிருக்கிறது.

குடல்வால் வீக்கம் வந்தால் இதை நீக்கி விடலாம். இதனால் பாதிப்பு ஒன்றுமில்லை..

டார்வின் ஆரம்பிக்க சிலகாலம் முன்பு வரை மருத்துவ உலகம் இதைத்தான் சொல்லி வந்திருக்கிறது..

ஆனால் இப்பொழுது?

1. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இங்கே ரிசர்வ் போலீஸ் படை போல இருக்கின்றன. வயிற்றுக் கோளாறுகள் வந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மீளும் காலங்களில் இந்தப் பாக்டீரியாக்கள் குடலை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வர உதவுகின்றன.

2. இரத்த வெள்ளை அணுக்களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. இரத்த வெள்ளை அணுக்கள் எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என வழிகாட்டவும் செய்கிறது.

இவை இரண்டும் சமீபத்தியக் கண்ட்டு பிடிப்புகள் ஆகும். நார்த் கரோலினா ட்யூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் பார்க்கர் தன் ஆராய்ட்சி மூலம் இதைக் கூறியிருக்கிறார். இவர் நோய்தடுப்பியல் வல்லுனர் ஆவார்.


கடைசியில் பார்த்தா

சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்ற பழமொழி சரியாத்தான் இருக்கும் போல இருக்கு.

பரஞ்சோதி
26-08-2009, 07:11 AM
குடல் வாலும் தலை நிமிர வைக்கும்.

நல்லதொரு கட்டுரை.

anna
26-08-2009, 11:56 AM
ஐய்யயோ!!! இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்களே? எனக்கு குடல் வால் அறுவைசிகிச்சை செய்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லையே?

smartsukumar
31-08-2009, 10:05 AM
அருமையான செய்தி...


:) arumaiyana seithi

ஓவியன்
31-08-2009, 10:16 AM
வாருங்கள் குமார், தமிழிலே தட்டச்சப் பழகி மன்றத்தின் புதியவர்கள் அறிமுகப் பகுதியில் தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்து மன்றத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்...

பின்வரும் திரிகள் உங்களுக்கு உதவி புரியும்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410

தாமரை
31-08-2009, 10:33 AM
ஐய்யயோ!!! இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்களே? எனக்கு குடல் வால் அறுவைசிகிச்சை செய்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லையே?

எதிர்ப்புச் சக்தி உடலில் நீண்டகாலத்திற்கு இருக்க இது பயன்படுகிறது என்பதுதான் இப்போதைக்குச் சொல்லி இருக்கிறார்கள்..

இன்னும் ஆராய வேண்டியது நிறைய இருக்கிறது.

anna
30-09-2009, 01:46 PM
எதிர்ப்புச் சக்தி உடலில் நீண்டகாலத்திற்கு இருக்க இது பயன்படுகிறது என்பதுதான் இப்போதைக்குச் சொல்லி இருக்கிறார்கள்..

இன்னும் ஆராய வேண்டியது நிறைய இருக்கிறது.

மிக்க நன்றி . நானும் ரொம்ப பயந்தே போயிட்டேன். ஆனாலும் மனதை தேற்றி க்கொண்டேன்.

அன்புரசிகன்
01-10-2009, 06:41 AM
முன்பு குடல்வால் தேவையற்றஒரு உறுப்பு என்றும் சமிபாடு அடையாத பதார்த்தங்கள் அங்கு சென்று அடைவதாகவும் தான் ஒரு கட்டுரையில் படித்தேன்.

அப்போது யோசித்தது இறைவன் ஏன் தேவையின்றி ஒரு உறுப்பினை வைத்து அதை அறுத்தெடுக்கும் நிலைக்கு தள்ளுகிறான் என்று... இப்போது புரிகிறது...

அப்போ எனக்கு இன்னும் நீண்ட காலத்திற்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது...:sport-smiley-003:

பூமகள்
06-10-2009, 07:25 AM
தகவலுக்கு நன்றி தாமரை அண்ணா..

எங்க வீட்டு அருகில் ஒரு சிறு குழந்தைக்கு குடல் வால் பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு உடனே அதனை நீக்கி விட்டார்கள்..

இத்தனை நன்மைகளா குடல் வால் செய்கிறது??

குடல் வால் பிரச்சனை வந்தால் நீக்காமல் சரி செய்ய முடியாதா?? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.

aren
07-10-2009, 01:23 PM
இதன் பெயர் ஆங்கிலத்தில் என்ன. தெரிந்தால் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்.

தாமரை
08-10-2009, 08:19 AM
குடல் வால் - அப்பெண்டிக்ஸ் - Appendix
குடல்வால் அழற்சி - அப்பெண்டிசைடிஸ் - Appendicitis

அக்னி
09-10-2009, 06:08 AM
அப்போ,
வாலில்லாக் குரங்கு என்று மனிதரைத் திட்டுறதும் தப்பாச்சே...


ஐய்யயோ!!! இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்களே? எனக்கு குடல் வால் அறுவைசிகிச்சை செய்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லையே?
என்னா... குடல்வால் இல்லயா...
அதுவும் 15 வருசமா இல்லாம இருக்கிறீங்களா...
அப்போ கஷ்டம்தான்...

-தாமரை மருத்துவச் சங்கம்

இளந்தமிழ்ச்செல்வன்
02-11-2009, 07:51 PM
தகவலுக்கு நன்றி தாமரை அண்ணா..

எங்க வீட்டு அருகில் ஒரு சிறு குழந்தைக்கு குடல் வால் பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு உடனே அதனை நீக்கி விட்டார்கள்..

இத்தனை நன்மைகளா குடல் வால் செய்கிறது??

குடல் வால் பிரச்சனை வந்தால் நீக்காமல் சரி செய்ய முடியாதா?? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.

பயப்படாதீர்கள்.. நம்ம நாட்டில் அனைத்திற்க்கும் எளிய வழிமுறைகள் உண்டு.

ஆரம்ப காலத்தில் சர்வாங்காசனம் சிறந்தது என்று யோகாசார்யா சுந்தரம் அவர்கள் கூறியுள்ளார்.

அவருடைய சுந்தர யோக சிகிச்சை என்ற நூலில் இதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார்.

செய்யக் கூடாத ஆசனங்கள்:


தனுராசனம்
சலபாசனம் (ஆறு வாரங்களுக்குப் பிரகு சேர்த்துக் கொள்ளலாம்)
மயூராசனம்
உட்டியாணா (எட்டு வாரங்களுக்குப் பிறகு)
நெளலி (எட்டு வாரங்களுக்குப் பிறகு)


பயிலும் போது வயிற்றுனுள் இறூக்கம், உறுத்தல் உண்டானால் ஆசனஙககளை விலக்கு, பிறகு ஆரம்பிக்கவும்.

மற்றும் விலக்க வேண்டியவை

ஓட்டம், மிதிவண்டி, குதிரைச்சவாரி நிறுத்தப்பட வேண்டும். முக்கியமாய் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வறுத்தல், தாளித்தல், கடலைகள், கிழங்குகள் விலக்குதல் நல்லது.

பால், கீரைகள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, ரசமுள்ள பழங்கள் நன்மை தரும்.

நன்றி: சுந்தரயோக சிகிச்சை - யோகாசார்யா சுந்தரம்.

aravinthan21st
05-11-2009, 02:37 PM
செந்தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டது போல் பின்பற்றினால் குடல்வால் அழற்சி வராமல் தடுக்கலாம் என்றே எண்ணுகிறேன்.
மொத்தத்தில் அனைத்து வகை சத்துக்களையும் கொண்ட நிறை உணவை சத்துக் கெடாமல் ஆரோக்கியமாக சமைத்து,நன்கு மென்று உண்டு,அளவான தேக அப்பியாசங்களுடன் வாழ்ந்தால் அநேக நோய்கள் அண்டா!!!

பால்ராஜ்
11-11-2009, 10:26 PM
தலை முடியும் நகமும் தேவையற்ற உறுப்புக்கள் என்று கேட்டிருக்கிறேன். இவற்றைப் பேணிக்காக்க கோடிக்கணக்கான வர்த்தக இயந்திரமே ஓடுகிறது..

பாவம் குடல்வால்.. உள்ளே இருப்பதால் யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் போல இருக்கிறது!