PDA

View Full Version : மிஸ்ட் கால்.....



இன்பக்கவி
25-08-2009, 08:15 PM
http://rlv.zcache.com/i_heart_love_my_cell_phone_sticker-p217114394595239230qjcl_400.jpg
http://www.dreamstime.com/cell-phone-love-messages-thumb2079390.jpg
உன்னை நினைத்து
தவிக்கிறேன் என்று நீயும்
உன் நிலைதான் இங்கு
எனக்கும் என்று நானும்
பேசும் மௌன மொழி.....
பேசவில்லை என்றாலும்
பேசிய திருப்தி மனதுள்...
சில நேரங்களில்
தூக்கத்தில் கைபேசி
ஓலித்தாலும்..
உனக்கு பதில் தர
தவறுவதில்லை நான்...
உயிரை கரைய வைக்கும் ஓலி...
என் இதயம் வேகமாய் துடிக்கும் நேரம்....
ஒரு கணம் பதில் தர தவறினால்
எல்லாம் போனதாய் ஒரு தவிப்பு....
காலையில் எழுப்பும் உன் குறுஞ்செய்தி...
இரவில் தாலாட்ட தவறுவதில்லை..
கைப்பேசியே இன்று நம் உலகமாய்
போனது ஏனோ...

அறிஞர்
25-08-2009, 09:04 PM
கைபேசி... இன்று வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது...
காலையில் எழுப்பி..
இரவில் தாலாட்டி...
காதலுக்கு... துணைவனாகிவிட்டது.....

அருமை கவிதா

அமரன்
26-08-2009, 08:11 AM
அருகில் இருக்கையில்
நீ கைபேசி...
தூரத்தில் இருக்கையில்
கைபேசி நீ..

அவசரங்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று.
அபஸ்வரங்களுக்கும் ஆதாராமாகி விட்டது - அறிவிலிகள் கையில் அறிவியல்.


பாராட்டுகள் கவிதா.

ஓவியன்
26-08-2009, 09:40 AM
உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும்
நம் வாழ்வின் உலகினை நம்மோடு இணைப்பதால்
கைபேசி நம் உலகமானதோ.....??

வாழ்துகள் கவிதாம் கவிதையின் தலைப்பு கொஞ்சம் கவிக் கருவுடன் அந்நியப்படுவதாக உணருகிறேன்....