PDA

View Full Version : எதிலும் அடங்கா கவிதைகள்

umakarthick
25-08-2009, 09:51 AM
இன்னமும் அப்படியே
-------------------

அழகு நிலையங்களும்
அலைபேசி கடைகளும் பெருகி விட்டன

பாயாச கடையும் சைக்கிள் கடையும்
இடிக்க பட்டு மல்டி காம்ப்ளக்ஸ் ஆக்கப்பட்டது

ஸ்லீவ்ல்ஸ் சுடிதார்களுடனும்
லிப்ஸ்டிக் தீற்றல்களுடனும் பெண்கள்

ஊர் கூடி இழுத்த தேர்
புல்டவுஸர் துணையுடன் நிலைக்கு வருகிறது

தாழ்தள சொகுசு பேருந்துகள்
மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது

அரசு மருத்துவமனையும்
பால்வாடி பள்ளியும் மட்டும் அப்படியே!!

நேசம்
25-08-2009, 10:04 AM
இது என்ன முன்னேற்றம் என்று யோசிக்க வைக்கும் கவிதை.உண்மையான முன்னேற்றம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் அடைய வெண்டும்.பாரட்டுகள் கார்த்திக்

umakarthick
26-08-2009, 08:14 AM
இது என்ன முன்னேற்றம் என்று யோசிக்க வைக்கும் கவிதை.உண்மையான முன்னேற்றம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் அடைய வெண்டும்.பாரட்டுகள் கார்த்திக்

நன்றி நண்பரே

umakarthick
26-08-2009, 08:18 AM
ஒளிந்திருந்த கடவுள்
------------------------

தங்களின் பாரத்தை கடவுளிடன்
இறக்கி வைத்து விட்டு பக்தர்களும்

கோவிலை பூட்டி விட்டு பூசாரியும்
கிளம்பிய பின்னர் யாருமில்லை
என்று உறுதிப்படுத்தி கொண்ட

மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த கடவுள்
பெருமூச்சுடன் கோவிலுக்குள் புகுந்து கொண்டார்

கா.ரமேஷ்
26-08-2009, 09:27 AM
இரண்டு கவிதைகளுமே தனித்துவமாக இருக்கிறது... வாழ்த்துக்கள்..

தமிழநம்பி
27-08-2009, 03:40 AM
இன்னமும் அப்படியே
-------------------

அழகு நிலையங்களும்
அலைபேசி கடைகளும் பெருகி விட்டன

பாயாச கடையும் சைக்கிள் கடையும்
இடிக்கப் பட்டு மல்டி காம்ப்ளக்ஸ் ஆக்கப்பட்டது

ஸ்லீவ்ல்ஸ் சுடிதார்களுடனும்
லிப்ஸ்டிக் தீற்றல்களுடனும் பெண்கள்

ஊர் கூடி இழுத்த தேர்
புல்டவுஸர் துணையுடன் நிலைக்கு வருகிறது

தாழ்தள சொகுசு பேருந்துகள்
மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது

அரசு மருத்துவமனையும்
பால்வாடி பள்ளியும் மட்டும் அப்படியே!!

உமா!,

அழகாக அடுக்கிக்கொண்டு வந்தீர்கள்.

அரசு மருத்துவ மனை, பால்வாடிப் பள்ளியைக் குறிப்பிட்டீர்கள்,

என்ன சொல்ல வந்தீர்கள் என்று சரியாகப் புரியவில்லை.

நல்ல வீச்சோடு வந்து கடைசியில் முழுமையாக அழுத்தமாகச் சொல்ல வந்ததைத் திடுமென முடித்ததைப் போன்று நினைக்கிறேன்.

ஒருவேளை, எனக்குத்தான் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லையா என்றும் அறியேன்.

கொஞ்சம் விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு சிறு கருத்து -

முடிந்தவரை அயற்சொற்களை விலக்கி எழுத முயலலாம் என்று
எண்ணுகிறேன்.
வற்புறுத்தவில்லை.
என் பணிந்த கருத்தாகக் கொள்ளவும்.
நன்றி.

umakarthick
28-08-2009, 09:03 AM
இரண்டு கவிதைகளுமே தனித்துவமாக இருக்கிறது... வாழ்த்துக்கள்..

நன்றிகள் பல

umakarthick
28-08-2009, 09:04 AM
உமா!,

அழகாக அடுக்கிக்கொண்டு வந்தீர்கள்.

அரசு மருத்துவ மனை, பால்வாடிப் பள்ளியைக் குறிப்பிட்டீர்கள்,

என்ன சொல்ல வந்தீர்கள் என்று சரியாகப் புரியவில்லை.

நல்ல வீச்சோடு வந்து கடைசியில் முழுமையாக அழுத்தமாகச் சொல்ல வந்ததைத் திடுமென முடித்ததைப் போன்று நினைக்கிறேன்.

ஒருவேளை, எனக்குத்தான் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லையா என்றும் அறியேன்.

கொஞ்சம் விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு சிறு கருத்து -

முடிந்தவரை அயற்சொற்களை விலக்கி எழுத முயலலாம் என்று
எண்ணுகிறேன்.
வற்புறுத்தவில்லை.
என் பணிந்த கருத்தாகக் கொள்ளவும்.
நன்றி.

இன்னும் முன்னேற விள்ளலை என்று சொல்ல வந்தனே

தீபா
28-08-2009, 09:59 AM
ஒளிந்திருந்த கடவுள்!!!
மிக அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

umakarthick
28-08-2009, 12:15 PM
ஒளிந்திருந்த கடவுள்!!!
மிக அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

நன்றி தீபா

த.ஜார்ஜ்
28-08-2009, 01:44 PM
ஒளிந்திருந்த கடவுள்
------------------------

தங்களின் பாரத்தை கடவுளிடன்
இறக்கி வைத்து விட்டு பக்தர்களும்

கோவிலை பூட்டி விட்டு பூசாரியும்
கிளம்பிய பின்னர் யாருமில்லை
என்று உறுதிப்படுத்தி கொண்ட

மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த கடவுள்
பெருமூச்சுடன் கோவிலுக்குள் புகுந்து கொண்டார்

சிலரை பார்த்தவுடன் பிடித்துவிடும்.
சிலரை பழகியபின்தான் பிடிக்கும்.

என்னமோ தெரியவில்லை உங்கள் இந்த கவிதையும் எனக்கு பார்த்த மாத்திரத்திலே பிடித்து போனது
படித்ததும் இன்னும் பிடித்தது.

எளிமையாய் இருப்பதே அது இன்னும் பலருக்கு பிடிக்கலாம்.

அப்படியே தொடருங்கள்.

umakarthick
31-08-2009, 10:02 AM
சக்கரை பொங்கலையும் பஞ்சாம்பிரதத்தையும்
படைக்கப்பட்ட சுருட்டையும் சாராயத்தையும்
அகிலம் காக்கும் கடவுள் சாப்பிட ஆரம்பிக்கும்
நாட்களில் கோவில்கள் பெரிய பூட்டு போட்டு பூட்டப்படும்