PDA

View Full Version : இடைத்தங்கல் முகாம்...



அமரன்
24-08-2009, 03:03 PM
போர்வைப் போர்க்களத்துள்
நித்திரையுடன் யுத்தம் செய்து
வென்று வெளிவந்து,

வாசல் தெளித்துக் கோலமிடும்
இளங்காலைச் சூரியனை
உண்டு உழைத்த அந்த நாட்கள்
அடைபட்டுக் கிடக்கின்றன
அலாரம் அடித்து ஓய்ந்த
மணிக் கூடுகளில்...

இளசு
24-08-2009, 09:38 PM
இதுவும் கடந்துபோகும்... அமரா!

ஏக்கமுள்ளாடும் ஒப்பீட்டுக் கவிதை அருமை!

தீபா
29-08-2009, 03:12 PM
:) :)

பாரதி
05-09-2009, 02:00 PM
இப்போது பெரும்பாலான பெருநகரங்களில் நடக்கும் விடயம் போல தோன்றுகிறது. இடைத்தங்கல் என்பதால் விரைவில் கடந்து போகக்கூடும்.
எளிய கவரும் ஒப்பீடுகள் மிகவும் அருமை. பாராட்டுகிறேன் அமரன்.