PDA

View Full Version : பழைய காற்று/புதிய சூறாவளி-திலகரட்ண டில்ஷான்..!!



ஓவியன்
23-08-2009, 12:44 PM
டி, எம் டில்ஷான், டி. எம் டில்ஷான்..!!


இலங்கை கிரிக்கட் அணி ரசிகர்கள் தற்போது அடிக்கடி கூறிக்கொண்டிருக்கும் பெயர் இதுதான். திறமைகள் இருந்தால் மாத்திரம் போதாது, வாய்ப்புக்களும் நன்றாக அமையவேண்டுமென்பதற்கு மீண்டுமொரு நல்ல உதாரணமாக திகழுகிறார் டி, எம் டில்ஷான் என்ற திலகரட்ண டில்ஷான்.

இலங்கை கிரிக்கட் அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் நீண்ட நாட்களாக டில்ஷான் விளையாடி வந்தாலும், ஆனால் இதுவரை பெரும்பாலும் இவர் இலங்கை டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையின் அங்கிகரிக்கப்பட்ட துடுப்பாட்ட வீரர்களுள் இறுதியாக துடுப்பெடுத்தாடுவதே வழமை (ஆறாவது துடுப்பாட்டக் காரராக..). ஆனால் அண்மைக்காலத்தில் நன்கு வெளிப்பட்ட டில்ஷானின் துடுப்பாட்டத் திறமையினாலும் இலங்கை டெஸ்ட் அணிக்கான ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களுக்கான தேவையின் நிமித்தமாகவும் முதல் தடவையாக அண்மையில் காலியில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களில் ஒருவராகக் களமிறங்கியிருந்தார்.

தான் டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கெதிராக சாதனை ஒன்றை நிகழ்த்தியிருப்பதே டில்ஷானின் சிறப்பு. ஏறத்தாழ 23 வருடங்களாக முறியடிக்கப்ப்டாதிருந்த இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் ஆகக் குறைந்த பந்தில் டெஸ்ட் போட்டியொன்றில் அரைச்சதமடித்த இலங்கையர் என்ற சாதனையை டில்ஷான் முறியடித்திருக்கிறார். 1986 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கெதிராக அர்ஜூன ரணதுங்க 31 பந்துகளில் குவித்த அரைச்சதத்தினை டில்ஷான் 30 பந்துகளை மாத்திரம் சந்தித்து பெற்றதன் மூலம் இதுவரை டெஸ்ட் போட்டியொன்றில் வேகமாக அரைச்சதமீட்டிய இலங்கையர் என்ற சாதனையைத் தனதாக்கியுள்ளார். தங்களது உடைமாற்றம் செய்யும் அறைக்கு தான் வரும் வரையில் அர்ஜூனவின் சாதனையை முறியடித்ததை உணரவில்லையென கூறும் டில்ஷான், தன் பெயரும் சாதானைப் பட்டியலில் இடம் பெறுவதில் பெருமையடைவதாகக் கூறியுள்ளார்.

காலியில் நடந்த நியூசிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிக்ஸில் 16 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து நின்ற இலங்கை அணியினை அன்று உச்சபட்ச ஓட்ட எண்ணிக்கையை நோக்கி அழைத்து வந்த முதன்மையாளார் டில்ஷான். ஒரு நேரத்தில் 16 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்த அணி 72 பந்துகளில் 92 ஓட்டங்களைக் குவித்து டில்ஷான் ஆட்டமிழக்கையில் 134 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளென்ற வலுவான நிலையில் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டு போட்டியின் நாயகனாகியுள்ளார்.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/107298.jpg

துடுப்பாட்டத்தில் அண்மைய காலங்களில் பட்டையைக் கிளப்பும் டில்ஷான், தன் சுழற்பந்து வீச்சினாலும் அணிக்கு பல முறை கைகொடுத்துள்ளார், அத்துடன் இவர் விக்கெட் காப்பாளராகவும் செயற்படவல்லவரென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணியினருடான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை டெஸ்ட் அணியின் சிறப்பு விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்த்தனவின் விரலில் காயமேற்பட டில்ஷான் விக்கெட் காப்பாளராக விளையாடி மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தார். அத்துடன் அண்மையில் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டிகளில் கணிசமான ஓட்டங்களைக் குவித்திருக்கும் டில்ஷான் கடந்த 20-20 உலக கிண்ணப் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்து தொடர் நாயகன் விருதினைப் பெற்றவரென்பது குறிப்பிடத் தக்கது.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/103458.jpg

சுருக்கமாகக் கூறின் நடப்புக் காலப் போட்டிகளில் கிரிக்கட்டின் அத்தனை பரிமாணங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகள்) அசத்தி வருகிறார் டில்ஷான்.

டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோசமாகத் துடுப்பெடுத்தாடுவோரில் முதன்மையிடத்திலிருந்த அவுஸ்திரேலிய ‘கில்லி’யின் ஓய்வுக்குப் பின்னர் அந்த இடத்தினை நிரப்பக் கூடியவர்களாக கருதப்படுபவர்கள் ஷேவக்கும் டில்ஷானுமே. ஏனெனின் டேஸ்ட் ஆட்டங்களில் நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கும் துடுப்பாட்ட வீரர்களுள் இவர்களிருவரும் முன்னிலை வகிக்கின்றனர் (இருவரும் சராசரி தத்தம் ஸ்டிரைக் ரேட் 48.-- ஆக பேணி வருகின்றனர்).

கிரிகின்ஃபோ இணையத்தளத்தினால் வெளியிடப்பட்ட ஷேவக் மற்றும் டில்ஷான் ஓட்டங்களைக் குவிக்கும் விதங்களின் ஒப்பீட்டின் படி இருவரது துடுப்பாட்ட விதமும் ஒரே சாயலில் இருப்பதுடன், டில்ஷான் ஒற்றை ஓட்டங்களை அதிகம் குவிப்பவராகவும் ஷேவக் சிக்சர்களை அதிகம் விளாசுபவராகவும் காணப்படுகின்றனர். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது, டெஸ்ட் போட்டிகளில் ஷேவக் இதுவரை துடுப்பெடுத்தாடும் வரிசையும் தொடர்ந்து பல வருடங்கள் டில்ஷான் துடுப்பெடுத்தாடி வரும் வரிசையுமே.

தொடர்ந்தும் ஷேவக் ஆரம்ப ஆட்டக்காரராக விளையாடி வரும் அதே வேளை டில்ஷான் இதுவரை ஆறாவது ஆட்டக்காரராகவே ஆடி வந்துள்ளார். ஆனால் நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் இந்த நிலை மாறி ஆரம்ப துடுப்பாட்டக் காரராக களமிறங்கியுள்ளார். ஆறாவதாக ஆடுவதிலும் ஆரம்ப ஆட்டக் காரராக களமிறங்கினால் அழுத்தங்களின்று இலகுவாக என் ஆட்டத் திறனை வெளிப்படுத்தலாமென கூறும் டில்ஷான் தொடர்ந்தும் ஆரம்ப துடுப்பாட்டக் காராக விளையாடினால் இந்த கணிப்புக்கள் மாற்றம் பெறக்கூடும்.


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/105084.jpg

ஒருகாலத்தில் இலங்கை அணியின் பத்தொடு பதினொராவது வீரராக மட்டுமே அறியப்பட்ட டில்ஷான், இன்றைய இலங்கை துடுப்பாட்டத்தின் மையப் புள்ளிகளில் ஒருவராக மாறுவதற்கு அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சரி வர பயன்படுத்தியமையும் முக்கிய காரணியெனலாம். உள்ளூர் போட்டிகளில் அசத்தியும் தேசிய அணிகளில் ஓரம் கட்டப்பட்டமை, முஸ்லிம் மதத்தினைச் சார்ந்திருந்த ‘டுவான் முகமட் டில்சான்’ பெளத்த மதத்தினைத் தழுவி ‘திலகரட்ண முடியன்சிலகே டில்ஷான்’ ஆக மாறியமையால் ஏற்பட்ட சர்ச்சைகளென பல பிரச்சினைகளைக் கடந்தே இன்றைய நிலமையை அடைந்துள்ளார்.

இன்றைய கிரிக்கட் உலகிலுள்ள துடுப்பாட்டக் காரர்களில் 360 டிகிரி கோணத்திலும் பந்துகளை பறக்க விடும் வல்லமை வாய்ந்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் திலகரட்ண டில்ஷானின் சாதனைகள் இன்னமும் தொடருமென நாமும் எதிர்பார்க்கலாம்.







பி.கு - டில்ஷான் பிறந்தது அக்டோபர் 14, ஷேவக் பிறந்தது அக்டோபர் 20, இருவரது பிறந்த நாட்களுமிடையே ‘ஆறு’ நாட்கள் தான் அதாவது ஒரு ‘சிக்சர்’ தான் வித்தியாசம், இதனால்தான் ஷேவக் அதிகமாக சிக்சர் அடிக்கிறார் போல...!!:D:D:D

அமரன்
23-08-2009, 09:55 PM
டில்ஷானின் துடியாட்டம் துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் தெறிப்பதைக் கண்டு மகிழ்ந்து ஏற்றபடி ஆட இடங்கிடைக்கலையே என்று மருகிய காலம் உண்டு. எந்நேரமும் அழுத்தமில்லா முகத்துடன் இன்னகத்துடன் இருக்கும் வீரர்களில் ஒருவர். இன்னும் சாதிக்க வேண்டும் தில்ஷான்.

மதி
24-08-2009, 12:30 AM
ஆட்டத்திறமையால் தற்போது அதிகம் அறியப்படும் துடுப்பாட்டக்காரர் தில்ஷான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு விளாசித் தள்ளுகிறார்.
மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்

பரஞ்சோதி
24-08-2009, 08:57 AM
அருமையான கட்டுரை தம்பி.

எதிர்காலத்தில் இலங்கை அணித்தலைவராக செயல்பட இவர் தகுதியானவர்.

சமீப காலங்களில் இவரது ஆட்டத்தை வைத்து ஜெயசூரியாவுக்கு முழுமையாக ஓய்வு கொடுத்திடலாம் என்று தோன்றுகிறது.

இவரால் மேலும் சாதிக்க முடியும், என் வாழ்த்துகள்.

ஓவியன்
24-08-2009, 09:24 AM
நன்றி அண்ணா, சங்கார சிறப்பாக செயற்படுவதனால் டில்ஷான் அணித்தலைவராகும் வாய்ப்பு குறைவாகவே இருக்குமென நான் நினைக்கிறேன், ஆனால் 20-20 போட்டிகளில் டில்ஷான் தொடர்ந்தும் தலமைப் பொறுப்பில் விளையாடும் நிலை வரலாம்...

பரஞ்சோதி
24-08-2009, 11:38 AM
உண்மை தான் தம்பி, சங்ககாராவுக்கு பின்னர் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு தலைமை வாய்ப்பு கிடைக்கலாம், அதற்குள் இவரும் தன்னை திடப்படுத்திக் கொள்வார்.

நேசம்
24-08-2009, 03:57 PM
தில்சானுக்கு வாழ்த்துகள்.சில வித்தியசமான அடித்து விளையாடுவது முலம் கவனிக்க பட்டார்.தொடர்ந்து இப்படி விளையாடினால் பரம்ஸ் அண்ணா சொல்வது போல் ஜயெசுரியாவுக்கு கல்தா கொடுக்க படலாம் (இப்படிதான் சத்தமில்லமால் சாதனை என்று ஒரு திரி ஆரம்பித்து ஒரு விரரை பாரட்டினார்.ஆனால் அதற்கு பிறகு.....)

ஓவியன்
26-08-2009, 06:20 AM
இப்படிதான் சத்தமில்லமால் சாதனை என்று ஒரு திரி ஆரம்பித்து ஒரு விரரை பாரட்டினார்.ஆனால் அதற்கு பிறகு.....)

இப்படித்தாங்க நல்ல விசயங்களை செய்யவே விட மாட்டேங்கிறாங்க.........!! :D:D:D

நேசம்
26-08-2009, 06:22 AM
இப்படித்தாங்க நல்ல விசயங்களை செய்யவே விட மாட்டேங்கிறாங்க.........!! :D:D:D
அவங்களுக்கு நல்ல விசயமாக இருக்கட்டும் என்ற நல்லெண்ணம்தான் ஒவியன்:D:D

ஓவியன்
26-08-2009, 06:37 AM
அவங்களுக்கு நல்ல விசயமாக இருக்கட்டும் என்ற நல்லெண்ணம்தான் ஒவியன்:D:D

ஹீ, ஹீ..!!

இப்போது டில்சான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கிறார், நான் செய்வது நன்மையோ தீமையோ என்பது இன்று தெரிந்து விடும்... :D:icon_rollout::D

ஜாக்
05-09-2009, 04:54 AM
முதல் இவர் வந்தால் மனதுக்கு கொஞ்ச ஆறுதலாக இருக்கும் சீக்கரம் அவரே அவுட் ஆகி போய்விடுவார் என்று. :D
இப்போ இவர் களத்தில் இறங்கினாலே கதி கலங்குது எப்படா மனுஷன் அவுட் ஆகி போவார் என்று:fragend005:

ஓவியன்
05-09-2009, 05:04 AM
முதல் இவர் வந்தால் மனதுக்கு கொஞ்ச ஆறுதலாக இருக்கும் சீக்கரம் அவரே அவுட் ஆகி போய்விடுவார் என்று. :D
இப்போ இவர் களத்தில் இறங்கினாலே கதி கலங்குது எப்படா மனுஷன் அவுட் ஆகி போவார் என்று:fragend005:

அதனால்தானே பழைய காற்று, புதிய சூறாவளினு இந்த திரிக்கே தலைப்பிட்டேன் ஜாக்..!! :)

arun
05-09-2009, 08:30 AM
ஆம் தாங்கள் சொல்வது சரியே தற்போது தில்ஷானின் ஆட்டத்தில் ஏகப்பட்ட மாறுதல்கள் சிக்சர் பவுன்ட்ரி அதிகம் அடிக்காமல் சிங்கிள் டபுள்ஸ் எடுத்தே அதிக ரன்களை குவித்து விடுகிறார்

அவரது ஆட்ட முறைகளில் சில பலவீனங்கள் இருந்தாலும் வரும் காலங்களில் இலங்கை அணியில் நம்பிக்கை நட்சத்திரம் என்று சொன்னால் அது மிகையில்லை :icon_b:

ஜாக்
05-09-2009, 03:47 PM
அதனால்தானே பழைய காற்று, புதிய சூறாவளினு இந்த திரிக்கே தலைப்பிட்டேன் ஜாக்..!! :)
ரொம்ப சரியாத்தான் வச்சு இருக்கிங்க*:icon_b: